கடவுள்களில் கூட தமிழ்நாட்டை புறக்கணித்து.. விஜயகாந்த் ஆந்திரவிற்கும் ,ஜெயலலிதா கர்நாடகத்திற்கும் சென்று தமிழ்நாட்டு மக்களின் ஆதரவிற்காக தன் சொந்த மாநிலத்திற்கு சென்று வேண்டிவிட்டு வந்து தங்களின் இனபற்றை நிருபித்துவிடார்கள் ...
"தனது பிறந்த நாளையொட்டி தேர்தலுக்காக மைசூர் சாமுண்டீசுவரி கோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறப்புப் பூஜை நடத்தினார்.இதற்காக தனி விமானத்தில் அவர் தோழி சசிகலாவுடன் சென்றுவந்தார் ."
"தனது உறவினர்களுடன் கூட்டணிக்காக திருப்பதிக்குச் சென்று தரிசனம் செய்து வந்திருந்தார் விஜயகாந்த்"
''தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா'' என்றெல்லாம் மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லிக் கொண்டிருக்கும் விஜயகாந்த் நிஜத்தில் ஒரு பச்சை தெலுங்கர், அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதும், கட்சி நடத்தப் பண உதவிகள் செய்வதும் தெலுங்குத் தொழிலதிபர்கள்தான் .
தெற்கில் தமிழ் பேசுபவர்கள் தெலுங்கு பேசும் “மனவாடு”களைக் கண்டு கடுப்படைவதற்கு காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
பிள்ளைகளை தெலுங்கு பேசச் சொல்வது – பேசுவதோ தெலுங்கு. வீட்டில் தமிழ் பேசாதே என்று அறிவுரை. நம்மெல்லாம் தெலுங்கு என்று தனி அடையாளம் தேடுவது / பிரித்து பார்ப்பது ரெட்டி,நாயக்கர் ஜாதிக் காரர்கள் தாங்களாகவே செய்து கொள்வது தான். cultural identity என்று வரும் போது நான் தனி, எனக்கு தனி தொகுதி கொடு என்றெல்லாம் மாநாடு போடுகிறார்கள். அதையே தமிழ் பேசுறவன்... உன்ன தமிழ் நாட்டு சிஎம் ஆக விட மாட்டேன்னு சொன்னா discrimination ன்னு சொல்ல வேண்டியது.
இவர்களுக்கு “தெலுங்கு” என்ற அடையாளம் வேணும், அதை வைத்து அரசியலும் செய்யணும், ஆனா அதையே வச்சு தமிழ் காரன் எதிர் அரசியல் செஞ்சா ஏன் கசக்குது?. அதோட இந்த தமிழ் / தெலுங்கு; நாயக்கர் / மறவர் அரசியல் ஒண்ணும் புதிது இல்லை .கட்டபொம்ம்னும், பூலித்தேவனும் அடிச்சுகிட்ட காலத்தில் இருந்தே நடந்துகிட்டுதான் இருக்கு.
வார்த்தைக்கு வார்த்தை, மேடைக்கு மேடை, ''நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டைப் புரட்டிப் போடுவேன், முதல் மாநிலம் ஆக்குவேன்''என்று சூளுரைக்கிறாரே விஜயகாந்த்! இவருக்கு கிடைச்ச ஒரே தொகுதியான விருத்தாச்சலத்தில் என்ன பண்ணியிருக்கிறார்? அந்த ஊர் மக்கள்கிட்ட போய் கேட்டா இவரோட வண்டவாளத்தைச் சொல்லுவாங்க!
கொஞ்சம் கூட தமிழ் உணர்வே இல்லாததால்தான் அனைத்துக்கட்சிக் கூட்டம் உட்பட முதல்வர் ஈழப் பிரச்னையில் எடுக்கும் எல்லா முடிவுகளையும் கொச்சைப்படுத்திக் கேவலமாய் பேசினார் விஜயகாந்த.ஈழப் பிரச்னையில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து எனக்கும் சில கருத்து முரண்பாடுகள் உண்டு. மத்திய அரசிடம் நமது சில உரிமைகளை வலியுறுத்துவதில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்பது எனது கருத்து. ஆனாலும், லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தமிழக அரசு எந்த முடிவு, முயற்சி எடுத்தாலும் நாம் நம் நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பது நம் தார்மீகக் கடமை.
ஒரு கட்சித் தலைவரா அந்தக் கூட்டத்துக்குப் போய் தனது ஆலோசனையையோ, எதிர்ப்பையோ வெளிப்படுத்தலாம் விஜயகாந்த, ஆனா, அனைத்துக்கட்சிக் கூட்டம் எதையும் சாதிக்காது, அது தேவையில்லாதது, அது நாடகம் என்றெல்லாம் அறிக்கை விடும் விஜயகாந்த் மட்டும் அதனால என்ன சாதிக்கப்போறார்.
முதவரை பார்த்து "திருவள்ளுவரைப் பற்றி புகழ்கிறீர்களே, அவர் எந்தக் கல்லூரியில் படித்தவர் ?"என்று கருணாநிதிக்கு எதிராக கேள்வி எழுப்பியதில் இருந்து இவருக்கு இதிகாச புராண கதைகளில் வரும் பாத்திரங்களுக்கும், ஒப்பற்றவர்களாக வாழ்ந்து மறைந்த திருவள்ளுவர் போன்றவர்களுக்கு முடிச்சு போடுவதில் இருந்து இவரின் இந்திய / தமிழக வரலாற்றின் அறியாமையும் வெளிப்பட்டுவிட்டது. எந்த ஒருதமிழனும் கேள்வி எழுப்ப துணியாத திருவள்ளுவரை, கற்பனை பாத்திரம் போல் திருவள்ளுவர் காலேஜில் படித்தாரா ? என்று கேள்வி எழுப்பியதில் இருந்தும், திருவள்ளுவரை தாம் புகழந்ததில்லை/மதிக்கவில்லை என்றும் மறைமுகமாக சொல்லி இருப்பதன் மூலம், தமிழகத்தில் பிறந்து, தமிழர்களால் புகழடைந்திருந்தாலும் தெலுங்கை தாய்மொழியாக கொண்ட தமக்கு இருப்பது தமிழுணர்வு இல்லை என்று வெட்ட வெளிச்சமாக்க்கிக் கொண்டுள்ளார்.
அடுத்து இவர் கூட்டணி போட்டு தமிழக மக்களை ஏமாத்தறதுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் குரல்தான உண்மையில் நாடகம். அந்த நாடகத்தில் ஒரு நடிகரா தன் பங்கை மிகச்சிறப்பா செய்துகிட்டிருக்கார் விஜயகாந்த. இவரால் எந்த தமிழனுக்கும் நல்லது செய்ய முடியாது, செய்யவும் மாட்டார் அவர். அன்று காசுக்காக நடிச்சவர், இன்னைக்கு நாற்காலிக்காக திறமையா நடிச்சிகிட்டிருக்கார்.
இதாச்சு பரவாயில்ல கர்நாடகாகாரங்க இம்சை இன்னும் கொடுமை . தமிழ் நாட்டுக்கு தண்ணி தரமாட்டேன்னு சொன்ன தேவகவுடாவுக்கே வொக்கலிக ஜாதி மாநாட்டுல மேடையில ஏத்தி பாராட்டுராங்க. இந்த கூத்த என்ன சொல்றது?
அறுவைசிகிச்சை செய்யும் போது வலிக்கத்தான் செய்யும். வலிக்கும் என்பதற்காக சிகிச்சை செய்யாமல் இருக்கமுடியாது. எல்லோரையும் ஓர்தாய் மக்களாய் தமிழினினம் நினைத்தது போதும். காடு மேடென்று பார்க்காமல் அனைத்தும் நம் நிலமே, நம் உறவே என்று பார்த்ததால் இந்தத் தமிழினம் இழந்தது ஏராளம். தமிழினம் தன்னை தற்காத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆந்திராவிலோ, கேரளாவிலோ, கர்நாடகத்திலோ தமிழன் முதலமைச்சராக முடியுமா? ஒருபோதும் முடியாது. அப்படி நடக்கவும் கூடாது. தமிழ் நாட்டின் நிலமை என்ன என்பதை தாங்கள் சிந்திக்கவேண்டும். அவரவர் மண்ணை அவரவர் ஆளவேண்டும். இதுபற்றி நியாய உணர்வுடன் அனைவரும் சிந்திக்கவேண்டும்
தமிழர்களுக்கு உண்மையாக இல்லாமல், அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கிற யாராக இருந்தாலும் தழிழ்நாட்டு மக்கள் அவங்களுக்கு வர்ற தேர்தல்ல சத்யமா பாடம் புகட்டுவாங்க. நடிகனா மட்டும் இங்க நடிச்சு தமிழனை ஏமத்தல . பல அரசியல் கட்சித் தலைவர்களும் இங்கு மிகத் திறமையா நடித்து மக்களை ஏமாத்திகிட்டுதான் இருக்காங்க. எல்லா அரிதாரமும், சிங்க வேஷம் போட்டு மழையில் நனைந்த நரி, அம்பலமான மாதிரி ஓட ஓட தமிழர்கள் துரத்தும் நாள் வெகு தூரத்தில் இல்லை....
தி.மு.க. கூட்டணிக்குக் கண்களுக்குத் தெரியாத மிகப்பெரும் வலிமை இருக்கிறது. அந்த வலிமைதான் மக்கள் செல்வாக்கு. கடந்த ஐந்து ஆண்டுகளில் கலைஞர் அரசு செய்த மக்கள் நலப்பணிகள் அரசியல், கட்சி எல்லைகளை உடைத்துக் கொண்டு அந்த மகத்தான செல்வாக்கை தி.மு.கவுக்கு தேடித் தந்திருக்கிறது. தமிழக அரசு செயல்பாட்டில் 10 சதவிகித பணிகளைத்தான் பிகாரில் நிதிஷ்குமார் நிறைவேற்றியது. அவருடைய கூட்டணியே மகத்தான வெற்றி பெற்றபோது தமிழகத்தில் தி.மு.க. அணி எத்தகைய வெற்றி பெறும் என்று சொல்லத் தேவையில்லை.