ஆ.இராசா வீழ்ச்சி தற்காலிகம்தான்!
இராசா வீழ்ச்சி தற்காலிக வீழ்ச்சிதான். தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அவர்கள் ஒத்திகை பார்த்திருக் கிறார்கள். அரசியல் சட்டம் 151ஆவது பிரிவில் தெளிவாக சட்ட விதிமுறைகள் தெரிவிக்கப்பட் டுள்ளன.
நீங்கள் எங்களிடம் வாதாட எந்த அரங்கத்திற்கு வந்தாலும் உங்களை சட்டரீதியாக நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம். சு.சாமி போன்ற சாமிகள், அவாள்கள் எல்லாம் ஆட்டம் போடு வார்கள்.
அறிக்கை எப்படி கசிந்தது?
அரசியல் சட்டம் 151 ஆவது சட்டப் பிரிவில் சொல்லப்பட்டிருக்கிறபடி மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கை முதலில் குடியரசுத் தலை வருக்குக் கொடுக்கப்பட வேண்டும். உடனே நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதுதான் நடைமுறை. இது சட்டப்படி நடந்ததா? நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே ஊடகத்துறைக்கு இந்த அறிக்கை எப்படிக் கசிந்தது? எப்படி வெளியே வந்தது?
விசாரணைக் கமிசன்மூலம்...
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று எப்படிச் சொன்னார்கள்? எனவே, இதைப்பற்றி ஒரு பெரிய விசாரணை கமிசன் வைத்தால்தான் உண்மைகள் வெளியே வரும். பால் கமிசன் அறிக்கை வெளியானது என்று அன்றைக்கு கலைஞர் மீதும், அவருடைய செயலாளர் சண்முக நாதன் மீதும் எம்.ஜி.ஆர். வழக்குப் போட்டாரே!
பிரதமர் மறைமுகமாக சொன்ன செய்தி
டில்லியில் முரசொலி மாறன் படத்திற்கு மலர் தூவி விட்டுச் செல்லும் பொழுது பிரதமர் மன் மோகன் சிங் அங்கே நின்று கொண்டிருந்த இராசா முதுகை தட்டிக்கொடுத்ததை தொலைக்காட்சியினர் திரும்பத் திரும்பக் காட்டினர்கள்.
இராசா நீ குற்றமற்றவன் என்பதை நானே உணருகிறேன் என்று சொல்லாமல் சொல்லி விட்டுச் சென்று விட்டாரே.
ஜூனியர் விகடன்
ஜூனியர் விகடன் ஏடு (28.11.2010) இராசா மீது எப்படி சதிவலைப் பின்னப்பட்டிருக்கிறது என்ற உண்மைச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ள செய்தியை உங்களுக்குச் சொல்லுகின்றேன். இந்த அடிப்படையில் இந்திய அஞ்சல் மற்றும் தொலைபேசித் துறையின் ஆடிட்டர் இயக்குநர் ஜெனரல் ஆர்.பி.சிங்கை சந்தித்தோம்.
பொதுமக்கள், பத்திரிகைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசு சார்பற்ற அமைப் புகள் எல்லாம் எங்களிடம் வந்து, இந்த முறைகேடு தொடர்பான பல தகவல்களைச் சொன்னார்கள். இதன் அடிப்படையில்தான் எங்களது விசார ணையே நடந்தது. எங்களால் அறிக்கை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால் சி.பி.அய் போன்ற அமைப்புகளே தவறு செய்தவர்கள் மீது சட்டபூர்வ மான நடவடிக்கை எடுக்க முடியும். அந்த நட வடிக்கைக்கு இந்த அறிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
இராசாமீது திட்டமிட்டே குற்றம் சுமத்தப்பட்டி ருக்கிறது என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் போதாதா? இப்பொழுது பூனைக்குட்டி வெளியே வந்ததா இல்லையா?
யாரிடம் முறையிடுவது?
ஒரு பிரச்சினை, ஒரு மனு என்றால் பிரதமரிடம் கொடுப்பார்கள். அல்லது முதலமைச்சரிடம் கொடுப்பார்கள். ஆனால் பத்திரிகைகள், ஊடகத் துறையினர் ஆடிட்டர் ஜெனரலிடம் தகவல்களை கூறுவானேன்?
ஆடிட்டர் ஜெனரல் தாக்கல் செய்தது வெறும் அறிக்கைதானே! இதில் இவ்வளவு பரபரப்பு ஏன் காட்டப்பட வேண்டும்? காரணம், இவர்கள் முகத்திலே பிறந்த ஜாதி.
எளிய மக்கள் கைகளில் எல்லாம் செல்ஃபோன் 21 ஆம் நூற்றாண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம், 3ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் தந்தை பெரியாரின் கனவை, நிறைவேற்றியிருக்கிறாரே இராசா. அதனால் தான் இன்றைக்கு சாதாரண குப்பன், சுப்பன், முனியம்மாள் கைகளில் எல்லாம் செல்ஃபோன் இருக்கிறது.
செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனையா?
செய்யாத குற்றத்திற்கு ஜென்ம தண்டனையா? என்று அறிக்கை எழுதினோம்.
உலகத்திலேயே இவ்வளவு மலிவாக செல்போன் எந்த நாட்டு மக்களின் கையில் இருக்கிறது.
பார்ப்பன சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளத்தான் எல்லோரும் ஞான சூரியன் புத்தகத்தைப் படியுங்கள் என்று கலைஞர் சொன்னார்.
சூத்திரனுக்கொரு நீதி- பார்ப்பானுக்கு ஒரு நீதியா!
பார்ப்பனர் குற்றம் செய்தால் உச்சிக்குடுமியில் இரண்டு முடியை வெட்ட வேண்டும் அவ்வளவு தான். சூத்திரன் தவறு செய்தால் அவனுக்கு கொலை குற்றத்தண்டனை கொடுத்து கொல்ல வேண்டும். மரண தண்டனை விதிக்க வேண்டும்.
இதுதானே உங்களுடைய மனுதர்மச் சட்டம்? சூத்திரனுக்கு ஒரு நீதி; பார்ப்பானுக்கு ஒரு நீதி.
வழக்கு போடப்படும்
இந்தப் புகாரை நாங்கள்தான் கொடுத்தோம் என்று சொல்லுகின்ற வீரர்களை கேட்கிறோம். 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் 60 ஆயிரம் கோடி ரூபாய் புழங்கியிருக்கிறது என்று சந்தேகப்படுகிறோம் என்று சொல்லுகிறார்களே! அப்படியானால் யார் வாங்கினார்கள் எப்படி கொடுத்தார்கள் என்பதை நீங்கள் சொல்லியாக வேண்டும். வழக்கு வரும்.
மந்திரியாக இல்லாவிட்டாலும், ராஜா ராஜாதான்!
எனவே இராசா தனி மனிதரல்ல; திராவிட இனத்தின் தலை சிறந்த தளபதி; திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற கொள்கை பரப்புச் செயலாளர். மந்திரியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராஜா ராஜா தான்!
ஒவ்வொருவரும் நூறு பேருக்குச் சொல்லுங்கள்
ஆகவே மக்களுக்குப் புரியும் படியாக இங்கு வந்திருக்கிறவர்கள் ஒவ்வொருவரும் நூறு பேருக்கு இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்தப் பார்ப்பன ஊடக சதி வலையைப் பற்றி.
அரசாங்கம் பொது மக்களுக்கு நன்மை செய்யும் பொழுது நட்டங்கள் வரும்; அதைப்பற்றி அரசாங்கம் கவலைப்படாது.
அரசுக்கு நட்டம் மக்களுக்கு லாபமாயிற்றே
போக்குவரத்துத் துறையில் கல்வித் துறையில், உணவுத் துறையில் அரசுக்கு நட்டம் ஏற்படத்தான் செய்யும்; ஆனால் மக்களுக்கு லாபம் அல்லவா?
இன்றைக்கு ஏழை, எளிய மக்கள் கையில் எவ் வளவு காலம் தொலைபேசி இருக்கிறதோ அவ்வளவு காலத்திற்கும் மக்களும் இராசாவை நினைத்துக் கொண்டிருப்பார்கள். தி.மு.க. ஆட்சியை நினைத்துக் கொண்டிருப்பார்கள். கலைஞரை நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
தமிழர்களுக்கு எதிரான பத்திரிகையை வாங்காதீர்!
எனவே, தேர்தல் வரப்போகிறது, நாம் எச்சரிக் கையாக இருக்கவேண்டும். தமிழர்களுக்கு எதிரான ஊடகத்தை புறக்கணியுங்கள்; தமிழர்களுக்கு எதி ரான செய்தித் தாள்களை வாங்காதீர்கள். புறக் கணியுங்கள். தி.மு.க. ஆட்சிக்கு நாம் காவலர்களாக இருப்போம்.
இராசா பெயர் எந்த இடத்தில் இருக்கிறது?
இராசாவை கைது செய்ய வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவை புரிந்து கொள்ளுங்கள். ராசா குற்றம் செய்தார் பணம் வாங்கினார் என்று எந்த இடத்திலாவது இருக்கிறதா? ஆதாரம் எங்கே என்று அட்டர்னி ஜெனரல் அந்தியார்ஜுனா கேள்வி கேட்டாரே. உச்சநீதிமன்றத்தில் இதற்கு என்ன பதில்?
மீண்டும் கலைஞர் ஆட்சியே! உணர்ச்சி பெறுங்கள் மக்களே!
சிலர் தமிழர் ஆட்சியை திராவிடர் ஆட்சியை வீழ்த்த இதை ஒரு சாக்காகப் பயன்படுத்த நினைத்தார்கள்.
இனி ஒருபோதும் அது நடக்காது. தமிழர்களே விழிப்பாக இருக்கவேண்டும். கலைஞர் ஆட்சியைக் காப்பாற்றி, மீண்டும் கலைஞர் ஆட்சியை மலரச் செய்வது ஒன்றுதான் நமது கடமை.
நன்றி -தமிழ்
ஆமாம் நண்பர்களே! பார்ப்பனர்களுக்கு எதிராக ஒன்று சேருவோம். தி மு க வை பலப்படுத்தி பார்ப்பண ஆதரவு கட்சியும் திராவிட எதிர்ப்பு கட்சியுமான காங்கிரஸுடன் கை கோர்ப்போம். வாருங்கள். தமிழன் எப்போதும் இளிச்ச வாயந்தான். நம்முடைய பலவீனமே மெத்த படித்தவர்கள்தான்.
ReplyDeletemakkalin vari panaththai kollai adikkum dmk raja karunanithi koottaththai ozhippom. anthakk kollaiyil un panamum irukkuya dmk anuthabiye.
ReplyDeletevendam..namaku vendam congress namaku vendam....pirinthu nindru thanmanam kappom...namake appa vaipom central govtku appu...vaikovai kuda sethukol sekathe congressai..neruku ner mothravan manupumigu ethri pinnal irunthu thakupavan pacha throgi...
ReplyDeleteசீ சீ .. தெரியாம இந்த பதிவ படிச்சிட்டேன்.
ReplyDeleteadengappa... evlo peria vilakkam.... unganala mattumthan ippadi vilakkam kodukka mudiyum...
ReplyDeletemansatchi enru onru irukiratha..."
makkal muttalkal alla nanbare
ReplyDeletemakkal ellam muttalkal alla
ReplyDeletesema comedy. unakku evvalavu kedaichathu Adichathula
ReplyDelete5 ரூபாய் க்கு பேச சொன்ன , 10 ரூபாய் க்கு பேசுறான் , கொய்யால
ReplyDeleteBull shit... Just tell me that the scam is happened or not.. Dont tell Raja is the Head for Tamils... I feel ashamed of it..
ReplyDeleteஉதவாத பதிவு.....
ReplyDeleteஇதெல்லாம் தேர்தலுக்கு முன்னான கண் துடைப்பு என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.
ReplyDelete