“போதையில் மிதக்கிறார்” என்று விஜயகாந்த் பற்றி விமர்சித்தவர் ஜெ. அதற்குப் பதிலடியாக, “இவரா ஊற்றிக் கொடுத்தார்?” என்று விஜயகாந்த் கேட்டார். இவையெல்லாம் பழைய விமர்சனங்கள். இதுவரை ரகசியமாக, அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திவந்த தே.மு.தி.க. செல்வி.ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ந் தேதியன்று அதிகாரப்பூர்வமாகப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது.
இது போன வருஷம்
சென்ற பாராளமன்றதேர்தல் பிரசாரத்தின் பொது அவர் திருச்செந்தூர் கூட்டத்தில் பேசுகையில்...................
திருச்செந்தூர் சூரனை வதம் செய்த ஊர். அதைபோன்று தி.மு.க.- அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் வதம் செய்யுங்கள். தே.மு.தி.க. வின் முரசு சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். ஒரு தடவை கொடுத்து பாருங்கள். நான் மாறாமல் இருக்கிறேன்.
மற்றவர்கள் மாட்டு சந்தையை போன்று பேரம் பேசுகிறார்கள். நான் உங்களை மட்டும் நம்பி வந்திருக்கிறேன். எதிர்கால சந்ததிக்கு நல்ல கட்சியை அடையாளம் காட்டுங்கள். அல்லது நீங்கள் நல்லது செய்யுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன் என்றார் விஜயகாந்த்.
அதே போல் தூத்துக்குடி தேமுதிக வேட்பாளர் எம்.எஸ்.சுந்தரை ஆதரித்து பேசுகையில் ...........
தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் முதன்முதலில் அடியெடுத்து வைக்கிறது. தூத்துக்குடி தொகுதிக்கு வேட்பாளர் சுந்தர் முதன்முதலாக களம் இறங்கி உள்ளார். உங்கள் ஆதரவு எங்களுக்கு நிச்சயம் வேண்டும்.
கூட்டணி வைத்துக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாது என்பதால் நான் மக்களோடும், தெய்வத்தோடும் மட்டும் கூட்டணி வைத்துள்ளேன். நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்புங்கள்.
மூப்பனார் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் அவர் சொல்லை நான் கேட்டிருப்பேன். காலையில் 'டிவி' பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அம்மா (ஜெ.,) முன்பாக ஒருவர் விரைப்பாக நின்றுகொண்டிருந்தார்.
அவர், ஐந்து ஆண்டுகள் வேட்டி துவைப்பார்; அடுத்த ஐந்து ஆண்டுகள் சேலை துவைப்பார். அவரது பெயரை நான் சொல்லாமலே உங்களுக்குப் புரியும். அந்த அளவுக்கு எல்லாம் நான் தன்மானத்தையும், சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.
அவரைப்போல நான் யார் முன்னும் நிற்க விரும்பவில்லை; மக்களாகிய உங்கள் முன் நிற்கிறேன். கருணாநிதியின் பின் நின்றுகொண்டு காங்கிரசார் எப்படி காமராஜர் ஆட்சியை ஏற்படுத்தமுடியும்.
ஆண்டாண்டாக பதவி வகிப்பவர்கள் வறுமையை ஒழிக்க என்ன செய்தார்கள்? ஜெயலலிதா தன்னை ஒரு துறவி என்று கூறுகிறார். அப்படியானால் அவருக்கு பதவி எதற்கு? வீட்டுக்குப் போக வேண்டியதுதானே? டாஸ்மாக் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஜெயலலிதாதான்.
எனது வேட்பாளர்கள் படித்தவர்கள். அவர்கள் தவறு செய்தால் நானே அடிப்பேன். தமிழக மக்கள் சொல்பவரே பிரதமராக இருக்க வேண்டும். அப்போதுதான் தமிழகம் வளம் பெறும்.
நான் குடும்ப அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். எனது மைத்துனர் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய சினிமா கால்ஷீட்டை கவனித்து வந்தார். கட்சி தொடங்கிய பின்னரும் எனக்கு உதவியாக இருந்து வருகிறார். விவசாயம் செய்யும் விவசாயிக்கு உதவியாக அவரது மனைவி, மக்கள் வரக் கூடாதா?
நான் தேர்தலில் நான்கைந்து சீட்டு கேட்டதாக கூறினார். நான் யாரிடமும் கூட்டணிக்காக போகவில்லை. நான் நினைத்திருந்தால் எப்போதோ கோடீஸ்வரன் ஆகியிருக்க முடியும். ஆனால் நான் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும், அவர்களை அழகுப்படுத்தி பார்க்க வேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்.
எம்.ஜி.ஆரைப் பற்றி பேச எனக்கு அருகதை இல்லை என்று ஒரு நடிகர் கூறியுள்ளார். எம்.ஜி.ஆரைப் பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
எம்.ஜி.ஆரை தனது சினிமா படத்தில் காட்டினால்தான் அவருக்கு விசுவாசம் என்றில்லை. வேண்டும் என்றால் அந்த நடிகர் அவரது தலைவியிடம் சென்று எம்.ஜி.ஆர் படங்களை ஏன் சிறியதாக போடுகிறீர்கள் என்று கேட்கலாமே.
காங்கிரசை விமர்சிக்காதே என்கிறார்கள். தங்க ஊசி என்பதற்காக அதை எடுத்து கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?
தே.மு.தி.க தொண்டர்கள் புற்றில் இருந்து வரும் ஈசல் போல வந்து கொண்டே இருப்பார்கள். தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தொண்டர்கள் இரவு-பகல் பாராமல் சுறுசுறுப்பாக செயல்பட்டு கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் விஜயகாந்த்.
இது இந்த வருஷம்
தற்போது 41 சீட் என்றும் 46 சீட் என்றும் 1 ராஜ்யசபா சீட் என்றும் கணக்குகள் வெளிப்படுகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் (அநேகமாக அஷ்டமி, நவமி முடிந்தபிறகு)உண்மைக் கணக்கு, ஜெ.வும் விஜயகாந்த்தும் கேமராக்களுக்கு போஸ் கொடுக்கும்போதுதெரிந்துவிடும்.
அதன்பின், உலகத் தலைவர்கள் பாணியில் ஒருவர் ஊற்றிக் கொடுக்க, இன்னொருவர் வாங்கிக் குடிக்கலாம்.
விஜயகாந்த் முதலில் நான் முதல்வர் வேட்பாளர் என்றார் ,தேசிய கட்சியுடன் கூட்டணி என்றார். பின்னர் மக்களோடும், தெய்வத்தோடும் கூட்டணி என்றார். நான் கை காட்டுபவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றார். இப்போது அந்த தெய்வமே ஜெயா தான் என்கிறார் .
என் அன்பு மக்களே புரிந்துகொள்ளுங்கள் ..................
What about Ramadoss and Karunanidhi?
ReplyDeleteச/நான் உங்களை மட்டும் நம்பி வந்திருக்கிறேன். எதிர்கால ந்ததிக்கு நல்ல கட்சியை அடையாளம் காட்டுங்கள். அல்லது நீங்கள் நல்லது செய்யுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன் என்றார் விஜயகாந்த்./
ReplyDeleteஇங்கே மக்களே திருடர்கள் விஜயகாந்த்யை குறை சொல்லி தகுதி யாருக்கும் கிடையது.காசு வாங்கி ஒட்டும் நாய்கள் இங்கே அதிகம்
அன்று இந்திராவின் அது, இன்று சோனியாவின் அது, வெட்கமில்லாமல் பிழைக்கும் கருணாநி என்ற நபருக்கு ஓட்டுப்போடாமல் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடலாம்.
ReplyDeleteஅப்படியா ? அப்ப திமுகவுக்கே ஒட்டு போட்டுடுவோம். 50 ஆண்டுகள் கொள்கைக்காக மன்னிக்கவும் கொள்ளைக்காகவே காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவுக்கே ஒட்டு போட்டுடுவோம்.
ReplyDeleteஅம்மாவிற்கு இன்னொரு "அடிமை" கிடத்துள்ளார் என்பதை தவிர வேறு என்ன சொல்ல முடியும்.......
ReplyDeleteசோனியா ஊற்றி கொடுக்க கலைஞர் குடிப்பது பற்றியும் எழுதி இருக்கலாமே. கலைஞர் கூடவே கூட்டணி அமைத்துக்கொண்டு கலைங்கருக்கே ஆப்பு வைக்கும் விஷத்தை பற்றியும் அதை தெரிந்தும் அரசியலில் நமக்கு வேறு எந்த துணையும் இல்லாததால் காலில் விழுந்தாலும் கூட்டணி அமைத்து விட வேண்டும் என்று நினைக்கும் மக்கள் விரோத கருணாநிதியின் வீரத்தையும் எழுதி இருக்கலாம். உங்களுக்கும் ரோசம் இல்லாமல் இருக்குமா அடுத்த பதிவில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
ReplyDeleteIyoooo pavam TN ppl.Now jj can offer the whisky glass and V kantha can enjoy the drink.Now jj has come closer to v kanth.So taskmark shop in TN A joint venture by JJ and v kanth.At last t nadu ppl r made fools.
ReplyDeletetamilnaatu arasiyavathigalil pathodu onnu vijaykanthodu serthu 11...ore kuttaiyil ooriya mattaigal...jeyalalitha jeyithalum 3 maathathirku mel vijaykantha avarudan irukka povathillai..athe samayam thottralum irukka povathillai...epadi ellam asinga pattu than arasiyalil irupen endru adam pidipavarai naam enna seiyya mudiyum...anubavithu vittu varattum...
ReplyDeleteஇணையத்தில் பிரசாரம் செய்யும் அளவுக்கு நீங்கள் (தமிழக அரசியல் கட்சிகள்) வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் இன்னமும் எதிர்க் கட்சியை குற்றம் சொல்லியே அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது. இந்திராவையும், சோனியாவையும் வசைபாடிய நீங்கள் காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொண்டதுக்கும், விஜயகாந்து - அதிமுக கூட்டணி வைத்துக்கொண்டதுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. "அரசியல் அநாதை" ஆகப்போகிறார் என்று உங்கள் கவிதாயினி கனிமொழியால் விமர்சிக்கப்பட்டவருக்கு தான் நீங்கள் 31 தொகுதிகள் கொடுத்திருக்கிறீர்கள் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். இதையெல்லாம் சொல்லும் நான் எந்த கேவலமான் தமிழக அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. அதிமுக ஆட்சிக்கு வரவெண்டும் என விரும்புபவனும் இல்லை. உங்களுடைய சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேளுங்கள். குறை சொன்னால் மக்கள் உங்கள் குறையயும் சுட்டிக்காட்டத்தான் செய்வோம்.
ReplyDelete- சலித்துப்போன பொதுஜனம்
இணையத்தில் பிரசாரம் செய்யும் அளவுக்கு நீங்கள் (தமிழக அரசியல் கட்சிகள்) வளர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் இன்னமும் எதிர் கட்சியை குற்றம் சொல்லியே அரசியல் செய்வது வருத்தமளிக்கிறது. இந்திராவையும், சோனியாவையும் வசைபாடிய நீங்கள் காங்கிரசுடன் கூட்டு வைத்துக்கொண்டதுக்கும், விஜயகாந்து - அதிமுக கூட்டணி வைத்துக்கொண்டதுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை. "அரசியல் அநாதை" ஆகப்போகிறார் என்று உங்கள் கவிதாயினி கனிமொழியால் விமர்சிக்கப்பட்டவருக்கு தான் நீங்கள் 31 தொகுதிகள் கொடுத்திருக்கிறீர்கள் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். இதையெல்லாம் சொல்லும் நான் எந்த கேவலமான் தமிழக அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. அதிமுக ஆட்சிக்கு வரவெண்டும் என விரும்புபவனும் இல்லை. உங்களுடைய சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேளுங்கள். குறை சொன்னால் மக்கள் உங்கள் குறையயும் சுட்டிக்காட்டத்தான் செய்வோம்.
ReplyDelete- சலித்துப்போன பொதுஜனம்
முதலில் உங்கள் உண்மையான திமுக தன்மைக்கு பாராட்டுக்கள் எதற்கு என்றால் உங்களை விமர்சித்து வரும் கருத்துக்களை அப்படியே வெளியிடுவதால் இந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteஎவ்வளவு அடித்தாலும் வலிக்காத மாதிரி நடிக்கும் நீங்கள் உங்கள் கூட்டணியில் இணைந்து இருப்பவர்கள் உங்களை விமர்சித்து இருப்பதை மறந்து விட்டிர்களா? ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் அம்மையார் எதிர்த்தாலும் ஆதரித்தாலும் முழு மூச்சுடன் அதை செய்வார். ஆனால் இப்போது உள்ள உங்கள் கூட்டணியில் பாமக உள்ளடி வேலை செய்து சிறுத்தைகளை தோற்கடிக்கும், காங்கிரஸ் திமுகவை தோற்கடிக்கும், திமுக பாமகவை தோற்கடிக்க தயாராக உள்ளது.
இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது, அதிமுக அணியில் மதிமுக மனதளவில் கலைஞரை எதிர்க்க தன் கட்சியையே கரைத்துவிட்டது. சீமான் காங்கிரஸை எதிர்க்க போகிறார். புதிய நண்பர் விஜயகாந்த் கண்டிப்பாக இணக்கமாக செயல்படுவார். தோழர்கள் இறுதி மூச்சு உள்ளவரை எதிர்பார்கள் கலைஞரை. தோழர்களுக்கு யார் வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில்தான் அவர்கள் தெளிவாக உள்ளார்கள்.
இதை எல்லாம் வைத்து பார்த்தால் வேணாம் விடுங்க... எதாவது காசு சேர்த்து வைத்து இருந்தீர்கள் என்றால் இந்த தேர்தலில் செலவழிக்க வேண்டாம். அதாவது மிஞ்சும். 50 வருசமாக திமுக கட்சியில் இருப்பவனே காசு செலவு பண்ண போறதும் இல்லை திமுகவிற்க்கு ஓட்டளிக்க போவதும் இல்லை.