தொகுப்புகள்

Search This Blog

Tuesday, February 8, 2011

செல்வி ,புரட்சி புயல்,போராளி சீமான் அவர்களே

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் விளையாட்டு தன்மை கொண்டவை இல்லை.அவற்றுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன என்று சென்னையில் அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Teresita Schaffer கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளை எடுக்க தவறின் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.வன்னி போரின் இறுதி நாட்கள் மிகவும் பயங்கரமானவை என்பதற்கு ஆதாரங்கள் உண்டு எனவும் நீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மஹிந்தா அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிகாவின் நடவடிக்கை இப்படி இறுக்க நம் அரசியலையும் சற்று அலசுவோம் .

‘ஜெயலலிதா ஈழப் போராட்டத்துக்காக செய்தது என்ன, செய்யப் போவதுதான் என்ன? அவர்தானே இந்த அழிவுக்கு ஆரம்ப அஸ்திவாரத்தைப் போட்டவர்? அவர்தானே சோனியாவை விட அதிகமாக விடுதலைப் புலிகளை எதிர்த்தவர்? 2009, மே 16-ம் தேதிக்குப் பிறகு அவரது ஈழப் பாசம் எங்கே போனது? ஒரு தடவையாவது ஈழத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்திருப்பாரா? இப்படிப்பட்ட ஒருவரை ஆதரிக்கவா இந்த ஈழத் தமிழ்ப் ‘போர்வை’?’

ஈழத்தை பற்றி மட்டுமே சீமான் கருத்தில் கொண்டு செயல்படுபவராக இருந்தால் அதற்கு ஜெயல்லிதாவுக்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கத்தேவையில்லையே ! ஈழம் நான் பெற்றுத்தருவேன் என்று கூறும் கட்சிக்குத்தான் என் ஆதரவு என்று அறிவுத்திருக்கலாமே….அப்போதும் ஜெயலலிதாவிடம் இருந்து சீமானுக்கு அழைப்பு வராது…எல்லாம் சீமானுக்கு தெரியும்…அழையா விருந்தாளியாக நூழைந்திருப்பவர் சீமான் தான்…இனிமேல் தான் அரசியலை கற்க ஆரம்பித்திருக்கிறார்…

இவர் ஆதரவு கொடுத்தாலும் ஈழத்தை அவர் (ஜெயலலிதா) வாங்கித்தர சிறு முயற்சிகள் கூட எடுக்கப்போவதில்லை. (பொதுவுடமை கட்சிகள் கூட இந்த கருத்துகளில் தேசிய அளவில் மாறுபடுகிறார்கள் என்பதை இந்திய அரசியல் வாதிகள் அனைவருக்கும் அத்துப்படி)…முதலில் அவருக்கு (ஜெயல்லிதாவுக்கு) துளிகூட விருப்பமில்லை…இது சீமானுக்கும் தெரியும்…தெரிந்தும் ஆதரவு என்றால் இது தான் காரணம்…எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாணியில் செயல்படும் சிறுபிள்ளை அரசியல் தான்…இந்த செயல்….மீண்டும் மீண்டும் ஈழப்பிரச்சினையை இங்கு அரசியலாக்குமேத் தவிர வேறு எந்த ஒருபயனும், விளையப்போவதில்லை.

ஈழ ஜனநாயக மக்கள் கட்சியே இலங்கையில் ஆளுங்கட்சியாக உள்ளபோது…அதில் உள்ளவர்களே மந்திரிகளாக, எம்.பிக்களாகவும் (டக்ளஸ் தேவனந்தா) இருக்கும் பொழுது…இங்கிருந்து என்ன ஆதரவு கிட்டும் என நினைக்கிறார். தனித்த செல்வாக்கும் சீமானுக்கு இல்லை…நெடுநாள் அரசியலில் இருந்தவரும் இல்லை…அட நடிகராகவாவது இருந்தாரா…இல்லையே…..

பிபிசி ஏற்கனவே ஈழம் பற்றி மக்களிடையே கருத்து கணிப்பு கேட்டு கடந்த தேர்தலிலேயே கருத்து வெளியிட்டுள்ளதை சீமான் படித்திருக்கமாட்டார். ஈழப்பிரச்சினை இந்திய அரசியலை பாதிப்பதில்லை, இது தான் உண்மை. இது என்றைக்கும் மாறாது,

இன்றுவரை தமிழகத்தமிழர்களுக்கு ஒரு சந்தேகம்…இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் யாருமே இலங்கை அரசாங்கத்தில் பணிபுரியவில்லையா? இலங்கை ராணுவத்தில் காவல் துறையில் தமிழர்கள் இல்லையா?…சிங்களவரும்…தமிழரும் காதலிப்பது கல்யாணம் புரிந்து கொள்வது கிடையாதா? இந்த கேள்விக்கு பதில் எல்லாம் உண்டு….அப்படி என்றால் இதை பிரிவினையாக..மிகத்தீவிரமாக எழுப்புகிறவர்கள் யார்…? நூற்றுக்கு நூறு தமிழ் சமுதாயத்தினரா…? அப்படியென்றால் தேர்தலை புறக்கணித்திருப்பாரகளே!….அங்கேயே மக்கள் தீர்மானிக்கும் நிலையில் இருக்கும் பொழுது…இங்கு சீமான் என்னத்தை தீர்மானிக்கப்போகிறார்…அவர்களுக்கு தெரியாததா?

ஈழம் பற்றிய எண்ணம் கனவு அங்கேயும் உள்ளது…அதை அவர்கள் வாழ்வாதாரத்தோடு அரசியலோடு அராசங்கத்தோடும் போராடிப் பெறவே விரும்புகின்றனர்…பட்டினி கிடந்து போராட விரும்பமாட்டார்கள். அதே போலத் தான் இங்கேயும்…இங்குள்ள பிரச்சினைக்கு பிறகுதான் ஈழம். இதை சீமான் புரிந்தும் புரியாமல் இருப்பது தான் வேடிக்கை. ஒருவேளை மக்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று நினைத்துவிட்டாரோ?

இது இன்னும் இரண்டு சாதிகளாக மாற்றப்படுவது தான் இன்னும் புரியாத புதிராக உள்ளது.

அங்கேயே (இலங்கையிலேயே) இதற்கு முழு அளவில் ஆதரவில்லாதபொழுது…இங்கு முயற்சித்து என்ன பயன்..முதலில் அங்குள்ள மக்களை ஒன்று சேர்க்க ஏதாவது முயற்சிமேற்கொள்ளட்டும் எல்லாமே ஈழ ஆதரவு தளமான(BBC TAMILOSAI) பிபிசி தமிழோசையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் ஆதரப்பூர்வமாக காணலாம்.. இதை வெளியிடுவீர்களோ என்னவோ தெரியாது. ஏதோ எழுதிவிட்டேன் என்று ,.திரு ஜாஸ்மின் என்பவர் என்வழி இணையத்தில் பின்னூட்டம்
எழுதி இருந்தார் அவருக்காக இதை இங்கு பதிவிடுகிறோம். 
 நன்றி - ஜாஸ்மின் 

இங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த உண்மை புரியாமல் இல்லை. ஆனால், முதன்முதலில் கலைஞரும் எம்.ஜி.ஆறும் தான் அஸ்திவாரம் போட ஆரம்பித்தனர். அதன்பின், ஒருவர்பின் ஒருவராக, தான் மட்டும் பேசாமல் இருந்தால் தன்னைக் தமிழ்த் துரோகி என்று தூற்றி மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் போய் விடுமோ என்று பயந்து எல்லா அரசியல் வாதிகளுமே தமது போலித் தனத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். ஈழத் தமிழர்கள் விஷயத்தில் ஏதாவது ஒரு சுமுகநிலையை உண்டாக்க முதன் முதலாக முனைப்புக் காட்டியவர்கள் இம்மூவரும்தான். இந்திய தேசத்தின் இணையில்லாத ஒரு பிரதமரையே அதற்காகக் காவு கொடுத்த பிறகுதான் ஈழப் பிரச்சினைக்கு இந்தியாவின் ஆதரவு கேள்விக் குரியானதொடு மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகளின் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். சீமானோ வைகோவோ எல்லாம் போலி வேஷம் போட்டு ஊரை ஏமாறி உயரப் பறக்க ஆசைப் படுகிறார்களே தவிர, உண்மை அவர்களுக்குத் தெரியாமலில்லை.

9 comments:

  1. இதெல்லாம் ஒரு உடான்ஸ்தான் அரசியல் பண்ணியாகனுமே. இதற்கு சில ஈழத் தமிழர்களும் துணை போகிறார்களே அதுதான் வேதனை. தமிழன் எங்கிருந்தாலும் அடி முட்டாள்தான் என்பதற்க்கு சீமான் போன்ற உப்பு சப்பில்லாத சினிமாக் காரங்களை அவர்கள் நம்புவதே சான்று.

    ReplyDelete
  2. தமிழின் வலைப்பதிவுகள் எல்லாமே ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருக்க மாற்றுக் கருத்துக்களை முன்நிறுத்த நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். தங்களின் சில கருத்துக்களிலும் எனக்கு மாறுபாடான சிந்தனைகள் உண்டு எனினும் பொதுவாக கலைஞரை மிக மோசமாக தரம் தாழ்ந்து நக்கலடிக்கும் நிறைய வலைப்பதிவர்களின் எண்ணங்களுக்கு மாறான வாதங்களை முன்வைக்கும் பதிவுகள் இணையதளத்திற்கு வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  3. இந்திய தேசத்தின் இணையில்லாத ஒரு பிரதமரையே அதற்காகக் காவு கொடுத்த பிறகுதான் ஈழப் பிரச்சினைக்கு இந்தியாவின் ஆதரவு கேள்விக் குரியானதொடு மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகளின் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம்.

    -Well said....

    ReplyDelete
  4. இலங்கை யில் தமிழர்கள் பதிக்கப்பட்டது விடுதலை புலிகளால்தான் என்பதை அங்கே வாழ்ந்துவரும் தமிழர்களின் எண்ணம் தமிழகத்தில் உள்ள சில புலி புரோக்கர்கள் வேறுவிதமாக பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள் புலிகளை விரட்டிய பின் கமிசன் கிடக்காமல் கஷ்ட பட்டவர்கள் வரும் தேர்தலை வைத்து பிழைப்பு நடத்த முயன்று வருகிறார்கள் அவர்கள் எண்ணம் பலிக்காது ...........

    ReplyDelete
  5. நீ என்ன சொல்ல வர்ர? தெளிவா சொல்லு? ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தில் ஆதரவு வேண்டுமா? இல்லையா?

    இந்தியாவின் பிரதமரை யார் காவு கொண்டது? அவர் இறக்கும் போது எதிர்கட்சி தலைவர். என்னா அறிவு உனக்கு?

    சிங்களனுக்கு உருவிப்பிழைக்கும் உன்னைப் போன்றவர்களுக்கு சீமானும் வைக்கோவும் மற்ற பல தமிழகத் தலைவர்களும் வேஷம் போட்டு பிழைப்பவர்கள்.சிங்களவனுக்குப் பிறந்த நீ அதை சொல்லாவிட்டால் ஆச்சரியமே?

    உன்னைப் போன்றவர்களை பார்த்து சில இந்திய நாய்களும் குரைக்கின்றார்கள்.

    நீ உண்மையான தமிழனாக இருந்தால் மூடிக்கொண்டு இரு?

    ReplyDelete
  6. நாங்கள் பக்கா திமுக காரர்கள் என்றும்,

    பக்காவாக காங்கிரசை அண்டிப்பிழைக்கிறோம் என்றும்,

    தங்கள் முகத்தை தெளிவாக வெளிப்படுத்தி வரும் சாந்தி மற்றும் பாபு உங்களை புரிந்து கொண்டோம்

    தங்களை வெளிப்படுத்திக்கொண்டமைக்கு நன்றி.

    உங்கள் கட்சி பின்னூட்டக்காரர்கள் சொல்வது போன்று இதே போன்று மாற்று கருத்து வலைப்பதிவராக தொடர்ந்து செயல்படவும்.

    ReplyDelete
  7. நாங்கள் பக்கா திமுக காரர்கள் என்றும்,

    பக்காவாக காங்கிரசை அண்டிப்பிழைக்கிறோம் என்றும்,

    தங்கள் முகத்தை தெளிவாக வெளிப்படுத்தி வரும் சாந்தி மற்றும் பாபு உங்களை புரிந்து கொண்டோம்

    தங்களை வெளிப்படுத்திக்கொண்டமைக்கு நன்றி.

    உங்கள் கட்சி பின்னூட்டக்காரர்கள் சொல்வது போன்று இதே போன்று மாற்று கருத்து வலைப்பதிவராக தொடர்ந்து செயல்படவும்.

    ReplyDelete
  8. இந்தக் கணத்தில், என்னை நோக்கிய சில விமர்சனங்​களுக்கும் நான் விடை சொல்லவேண்டி இருக்கிறது. முதல் விமர்சனம்... 'சீமான் பெட்டி வாங்கிவிட்டார்!’ அது வாங்கிப் பழகியவர்களின் வார்த்தை! இந்தப் பிரபாகரனின் தம்பி பிச்சை எடுத்து செத்தாலும் சாவானே தவிர, வருமானத்துக்காக இனமானத்தை அடமானம் வைப்பவனாக ஒருபோதும் இருக்க மாட்டான்!

    அடுத்த விமர்சனம்...'சீமான், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கலாமா?’ இந்தத் தேர்தலில் நமக்கு இருப்பது மூன்றே மூன்று வழிகள்தான் தம்பிகளே... கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் எனச் சொல்லி இருவரையும் புறக்கணிக்கவைப்பது முதல் வழி. 'இதைச் செய்யாதே?’ எனச் சொன்னால் 'எதைச் செய்வது?’ என்கிற கேள்வி எழுவது மனித இயல்பு. அதனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லித்தான் ஆகவேண்டுமே தவிர, 'யாருக்கோ போடுங்கள்’ என என்னால் குடுகுடுப்பை அடிக்க முடியாது.

    அடுத்து, தனித்து நிற்பது... அது யானைகளின் காலடிகளில் சிக்கிய குழந்தைக்குச் சமமானது! இல்லையேல், 'தேர்தலைப் புறக்கணியுங்கள்!’ எனச் சொல்வது. அது தற்கொலைக்குச் சமமான கோழைத்தனம்! குடுகுடுப்பைத்தனமோ, கோழைத்தனமோ கூடாது என்பதால்தான், காங்கிரஸை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்பேன் எனச் சொன்னேன்.

    கிடைக்கிற ஆயுதத்தைக்கொண்டு எதிரியைக் கிழிப்பதுதான் சாமர்த்தியம். இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லரிடமே ராணுவ உதவி கேட்டாரே... 'உலகக் கொடுங்கோலனிடம் உதவி கேட்கலாமா?’ என நேதாஜியிடம் கேட்க முடியுமா?

    இந்திய அமைதிப் படை இலங்கையில் அட்டூழியம் செய்தபோது, பிரேமதாசாவின் துணையோடு தலைவர் பிரபாகரன் விரட்டினாரே... எதிரியையும் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தும் போர்க் குணம் அல்லவா அது! 'காங்கிரஸை வீழ்த்துவதற்காக எதையும் ஆதரிப்பேன்’ என நான் சொன்ன வார்த்தைகளை வைத்து, 'அவர்போல் ஆகிவிடுவார்... இவர்போல் ஆகிவிடுவார்... சுண்ணாம்புச் சுவர்போல் ஆகிவிடுவார்’ என எவரும் கவலைப்பட வேண்டாம். அப்படி உறைந்தும் கரைந்தும் போவதற்கு நான் ஒன்றும் பனிக் கட்டி அல்ல; புலிக் குட்டி!

    அலை எழுத்தில் ஓய்ந்தது! எண்ணத்தில் ஓயாது!

    ReplyDelete
  9. இந்தக் கணத்தில், என்னை நோக்கிய சில விமர்சனங்​களுக்கும் நான் விடை சொல்லவேண்டி இருக்கிறது. முதல் விமர்சனம்... 'சீமான் பெட்டி வாங்கிவிட்டார்!’ அது வாங்கிப் பழகியவர்களின் வார்த்தை! இந்தப் பிரபாகரனின் தம்பி பிச்சை எடுத்து செத்தாலும் சாவானே தவிர, வருமானத்துக்காக இனமானத்தை அடமானம் வைப்பவனாக ஒருபோதும் இருக்க மாட்டான்!

    அடுத்த விமர்சனம்...'சீமான், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கலாமா?’ இந்தத் தேர்தலில் நமக்கு இருப்பது மூன்றே மூன்று வழிகள்தான் தம்பிகளே... கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் எனச் சொல்லி இருவரையும் புறக்கணிக்கவைப்பது முதல் வழி. 'இதைச் செய்யாதே?’ எனச் சொன்னால் 'எதைச் செய்வது?’ என்கிற கேள்வி எழுவது மனித இயல்பு. அதனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லித்தான் ஆகவேண்டுமே தவிர, 'யாருக்கோ போடுங்கள்’ என என்னால் குடுகுடுப்பை அடிக்க முடியாது.

    அடுத்து, தனித்து நிற்பது... அது யானைகளின் காலடிகளில் சிக்கிய குழந்தைக்குச் சமமானது! இல்லையேல், 'தேர்தலைப் புறக்கணியுங்கள்!’ எனச் சொல்வது. அது தற்கொலைக்குச் சமமான கோழைத்தனம்! குடுகுடுப்பைத்தனமோ, கோழைத்தனமோ கூடாது என்பதால்தான், காங்கிரஸை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்பேன் எனச் சொன்னேன்.

    கிடைக்கிற ஆயுதத்தைக்கொண்டு எதிரியைக் கிழிப்பதுதான் சாமர்த்தியம். இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லரிடமே ராணுவ உதவி கேட்டாரே... 'உலகக் கொடுங்கோலனிடம் உதவி கேட்கலாமா?’ என நேதாஜியிடம் கேட்க முடியுமா?

    இந்திய அமைதிப் படை இலங்கையில் அட்டூழியம் செய்தபோது, பிரேமதாசாவின் துணையோடு தலைவர் பிரபாகரன் விரட்டினாரே... எதிரியையும் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தும் போர்க் குணம் அல்லவா அது! 'காங்கிரஸை வீழ்த்துவதற்காக எதையும் ஆதரிப்பேன்’ என நான் சொன்ன வார்த்தைகளை வைத்து, 'அவர்போல் ஆகிவிடுவார்... இவர்போல் ஆகிவிடுவார்... சுண்ணாம்புச் சுவர்போல் ஆகிவிடுவார்’ என எவரும் கவலைப்பட வேண்டாம். அப்படி உறைந்தும் கரைந்தும் போவதற்கு நான் ஒன்றும் பனிக் கட்டி அல்ல; புலிக் குட்டி!

    அலை எழுத்தில் ஓய்ந்தது! எண்ணத்தில் ஓயாது! SEEMAN

    ReplyDelete