Monday, March 7, 2011

மகளிர் தின வாழ்த்துக்கள்


2011 மகளிர் தினம் 101 வது ஆண்டாகிறது , இதை உத்வேகப்படுத்தும் வகையிலும் பெண்கள் என்ற ரீதியிலும் சர்வதேச பெண்கள் தினத்தை நாம் அடையாளப்படுத்தியபடி இருப்போம். மரபுகளையும் கலாச்சாங்களையும் உருவாக்கி ஆணதிகாரத்தை காப்பாற்றிய படி நகரும் உலகில் 101வது மகளிர் தினமும் தாண்டப்படுகிறது

ஆண்கள் பறவையை நேசிக்கின்றனர்
பறவைகள் கூட்டினுள் வாழ்கின்றன
காலம் காலமாய் அவர்கள் எமை
இப்படி ஆக்கினர்
இரண்டாம் தரத்தில் இருத்தினர்
இந்தக் கூட்டை நொருக்குவோம்
வாருங்கள் தோழியரே
பெண்விடுதலை ஏந்தி
இணைவோம்.
எழுந்து வாருங்கள் 
அணிதிரளுங்கள்
(1972)

இந்தப் புகழ்மிக்கப் பாடல் 1972ம் ஆண்டு சிட்னி நகர வீதியை நிறைத்த பாடல். சுமார் 5000பெண்களின் அணிதிரளுக்குள் மூச்சாய் ஒலித்த பாடல் இன்னும் அந்தப் பாடலின் ஓசை பெண்விடுதலையை தழுவியபடி வாழ்ந்து ஒலிக்கத்தான் செய்கிறது.

மார்ச் 8.
உலகெங்கிலும் அடிமை விலங்கைச் சுமந்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் இத்தினம் அர்த்தம் கொண்ட தினமாகும். காலங்காலமாக பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றது. பெண்கள் மார்ச் 8 இல் தங்களது குரலை ஓங்கச் செய்து தமது உரிமைகளை வலியுறுத்துகின்றனர். ஆணாதிக்க கருத்தியலை கேள்வி கேட்கின்றனர். வாழ்க்கைக்காய் போராடும் மனித இனத்தில் வாழ்க்கையோடு போராடும் பெண் இனத்திற்காய் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் திகதியை உலகப் பெண்கள் தினமாக பெண்கள் அமைப்புக்கள் கொண்டாடி வருகின்றனர்.

1909 ஆண்டு அமெரிக்காவின் நியுயோர்க்கில் உள்ள நெசவுத் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்த பெண்கள் தமக்கான உரிமைகளைக் கோரி வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொண்டனர். அதன்போது திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட தீ விபத்தில் பல நூற்றுக் கணக்கான பெண்கள் பலியாகினர்.


1910

1910 ஆண்டு 17 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் சர்வதேச சோசலிச பெண்கள் மகாநாட்டை டென்மார்க்கில் உள்ள கொப்பன்காகன் நகரில் நடத்தினார்கள். அப்பொழுது சர்வதேச மகளிர் தினம் பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஜேர்மனியின் சோசலிச பெண்ணிலைவாதியான கிளாரா செக்கினால் முன் வைக்கப்பட்டது.

1911ம் ஆண்டு முதன்முதலாக ஜேர்மனி, சுவிற்சலாந்து, ஒஸ்றியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இணைந்து சர்வதேச மகளிர் தினமாக மார்ச்19 இனை கொண்டாடினர்.

1917ம் ஆண்டு மார்ச் 8ம் திகதி ரஷ்யாவில் உள்ள சென் பீற்றர்ஸ்நகரில் நடாத்தப்பட்ட போராட்டத்தையடுத்து 1921ன் மார்ச் 8ம்திகதியே சர்வதேச பெண்கள் தினம் உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்யப்பட்டது. ரஷ்யப் பெண்ணிலைவாதியான அலெக்சான்றிடா கொலன்ராயாவும் இப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அன்று முதல் சர்வதேசப் பெண்கள் சம உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். அதாவது சமஉரிமை, வேலை நேரம், சம ஊதியம், வாக்குரிமை, தொழில் வாய்ப்பில் பாராபட்சமின்மை, பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்பு என்பவற்றை முன்வைத்து போராடினர். பெண்களை விபச்சாரங்களில் ஈடுபடுத்தல், சிறுவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தல், போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடுகளில் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படல் போன்ற பல விடயங்களை முன்வைத்து அவற்றிற்கெதிராக காலத்திற்குக் காலம் போராட்டங்களை நடத்தினர்.

1945 காலப்பகுதியில் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் வாக்குரிமை பெண்களுக்கு வழங்கப்பட்டு அவர்களின் அரசியல் சமஉரிமை அங்கீகரிக்கப்பட்டாலும் சுவிற்சலாந்தில் உள்ள பெண்களுக்கு இவ்உரிமை மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் 1959ம் ஆண்டு 1ம் திகதி பெப்ருவரி மாதம் சுவிஸில் பெண்களுக்கு வாக்குரிமை கோரிக்கையின் மீது நடாத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் 66.9வீதமான ஆண்கள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என வாக்களித்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர்ச்சியாக 1975இல் அயர்லாந்தில் சம்பள உயர்வுக்காக நடாத்திய வேலைநிறுத்தப் போராட்டமானது வெற்றியளித்தது. தொடர்ந்து 1981இல் தேர்தல் வாக்குரிமைக்காகச் செய்த போராட்டம் சட்டத்தையே மாற்றியமைக்கச் செய்தது. 1991 யூன் மாதத்தில் சுவிஸில் உள்ள பேர்ண் மாநகரத்தில் ~~பெண்விரும்பினால் எல்லாம் ஸ்தம்பிதம் அடையும்|| என்ற கோசத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் கிட்டதட்ட 5லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர். 15000க்கும் மேற்பட்ட பெண்கள் பாராளுமன்றத்திற்கு முன்னால் அணிதிரண்டனர். பின்னர் முதலாவது சுவிற்சலாந்துப் பெண் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஜேர்மனியின் பல பெண்கள் அமைப்புகள் இவ் ஊர்வலத்திற்கு ஆதரவாக இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 80 ஆண்டுகாலமாக பெண்கள் போராடியதன் விளைவாக ஆண்கள் தமது கரங்களில் மட்டும் வைத்திருந்த வாக்களிக்கும் உரிமையை பெண்களும் பெற்றுக் கொண்டனர்.

சர்வதேச பெண்கள் தினத்தின் 50வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதத்தில் 1960ம் ஆண்டு கோப்பன்காகனில் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. 73நாடுகளைச் சேர்ந்த 729 மாநாட்டாளர்கள் இதில் பங்குபற்றினர். அரசியல் பொருளாதார சமூக உரிமைகளுக்கான பிரகடனங்களை இம்மாநாடு வலியுறுத்தியது.

1975ம் ஆண்டுதான் ஐ.நா இனால் உத்தியோகபூர்வமாக சர்வதேச பெண்கள் தினம் அங்கீகரிக்கப்பட்டது. இதன் முன்னரே கியூபா அரசினால் இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்க விடயம். இதன் ஒருபகுதியாக 1975இல் கியூபா வீட்டுவேலைகளில் ஆண் பெண் இருபாலாருக்குமான பங்கேற்பு சம்பந்தமான திருமண சட்டவிதிகளையும் கொண்டு வந்தது.

இந்தப் போராட்டங்களின் இன்னொரு பக்கத்தை சார்ந்த பெண்கள் யுத்தங்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்தனர். யுத்தப் பிரதேசங்களில் பெண்கள் மீதான் வன்முறைக்கும் மக்களுக்கான மருத்துவ வசதிகளுக்காகவும் குரல் கொடுத்தனர். 1943இலேயே ஜேர்மனியின் பாசிசத்திற்கு எதிராகவும் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தமது எதிர்ப்பை காட்டினர்.

“ஆண்கள் போர் வீரர்கள், நாட்டின் சேவகர்கள்
பெண்கள் தாய்மார்கள், ஆண்களின் சேவகர்கள்”
என்ற கிட்லரின் ஆணாதிக்கக் குரலை நொருக்கி எறிந்தார்கள்.

பாசிசத்திற்கு எதிராக குரல் கொடுத்த காரணத்தால் பல பெண் செயற்பாட்டாளர்கள் அன்றைய சோவியத் யூனியனின் சோசலிச சார்பானவர்கள் என்றுகூட அரசியல் சாயம் பூசப்பட்டனர்.

இவ்வாறு பெண்களின் உரிமைகளுக்காக இடைவிடாது போராடி, ஆண் அதிகாரத்தின் மீது தொடர்ச்சியாக தாக்குதல் தொடுத்து சர்வதேசப் பெண்கள் அமைப்பினர் அணிதிரல்கள் மூலம் உரிமைகள் பலவற்றை வென்றனர்.

இந்தப் போர்க்குணாம்சமான குரலானது,
- பெண்களின் உரிமைக் குரலாக ஒலித்தது, பல உரிமைகளை வென்றது.
- ஆண் அதிகாரங்களை கேள்வி கேட்டது, அதிகார உயர் நிறுவனமான பாராளுமன்றம் வரை பெண்களை பங்கேற்க வைத்தது.
- ஆண் உலக எழுத்துக்களை தாண்டி இன்றைய பெண்ணிய கோட்பாடுகள் வரை பெண் எழுத்து உலகை உருவாக்கும் முயற்சிகள் முன்னேறிவருகின்றன.

நாம் பறவையை நேசிக்கிறோம்
அதன் பறப்பில் சுதந்திரத்தைக் காண்கிறோம்,
கூட்டை நொருக்கி நாமும் பறப்போம் -அதில்
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்.

நன்றி - CSED

Tuesday, March 1, 2011

திமுக மீது மொக்கை காரணங்கள்


என்னவோ தெரியவில்லை தி மு க , கலைஞர் , என்றாலே இங்கு சிலருக்கு வேம்பாய் கசக்கிறது , அவர்களின் வாதம் அனைத்தும் ஊழல் , குடும்ப அரசியல் ,ஈழதமிழர் விரோதம் , இலவசம் ,87 வயதிலும் பதவியாசை என்று மொக்கை காரணங்களாகவே இருக்கிறது . மேலும் சில அரை வேக்காடுகள்  தனிப்பட்ட தாக்குதல்களையும் நடத்துகின்றன .
தயவு செய்து இப்பதிவை முழுவதுமாக படித்துவிட்டு தங்களின் தாக்குதல்களைத் தொடரவும். 

நமது நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு அமைதி தவழும் மாநிலமாக விளங்கி வருகிறது.

மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் எவையும் நடைபெறாவண்ணம் இந்த அரசு தொடர்ந்து விழிப்புடன் கண்காணித்து வருகிறது. அண்டை மாநிலங்களிலிருந்து நமது மாநிலத்திற்குள் தீவிரவாதம் ஊடுருவதற்கான முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் கூலிப்படையினருக்கு எதிராக இந்த அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்றத்தாழ்வற்ற சமுதாய வளர்ச்சி காண்பதும், வறுமையை ஒழிப்பதுமே சாதிப் பூசல்களுக்கும், தீவிரவாதத் திற்கும் நிரந்தரத் தீர்வுகளாகும் என்று இந்த அரசு உறுதியாக நம்புகிறது.

மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கலாம்

நதிநீர்ப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வான தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை மத் திய அரசு செயல்படுத்தவேண் டுமென்றும், அதன் முதற்கட் டமாக, தீபகற்ப நதிகளை இணைக்கும் திட்டத்தை உட னடியாகச் செயல்படுத்தவேண் டுமென்றும் இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் கூட, மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து எதுவும் எட் டப்படாத நிலையே உள்ளது. எனவேதான், மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக் கும் திட்டத்தையாவது செயல் படுத்திட, மத்திய அரசு பதினொன்றாவது அய்ந்தாண்டுத் திட்ட காலத்தில் நிதியுதவி வழங்கவேண்டுமென்று தமிழக அரசு கோரியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை யில், மேலும் தாமதமின்றி இந்தத் திட்டத்தைச் செயல் படுத்துவதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை இந்த அரசு விரைந்து மேற்கொள்ளும். மேலும், பருவகாலங்களில் தமிழக நதிகளின் உபரி நீர் கடலில் கலந்து வீணாவதைத் தடுத்து, வறட்சியான பகுதிகள் வளம் பெறும் வகையில் நிலத் தடியில் சேமித்துப் பயன் படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய, இந்த அரசு ஒரு வல்லுநர் குழுவை அமைக்கும். நமது மாநிலத்தின் நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில், ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஓடைகளில் வீணாகும் நீரைத் தடுப்பணைகள் மூல மாகச் சேமித்து, ஆண்டு முழு வதும் வேளாண்மை மற்றும் குடிநீர் வசதிக்குப் பயன்படுத்து வதற்கான பெருந்திட்டம் ஒன்று வரும் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படும்.

சேதுக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும்

தமிழக மக்களின் நீண்ட காலக்கனவாக விளங்குவதும் – 1860 ஆம் ஆண்டுமுதல் ஆங்கிலேயர் ஆட்சியிலேயே ஆய்வு நடத்திடத்தொடங்கப் பெற்று, பொறியியல் மேதைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சாத்தியக் கூறுகள் கண் டறியப்பட்டு, சான்றோர்கள் ஆன்றோர்களால் வரவேற்கப் பட்டதுமான – உலகத் தொடர் புகள், வணிகத் தொடர்புகள் விரிவாக்கப்பட்டு நம் நாடு மேலும் வளமும், வலிவும் பெறுவதற்குப் பயன்படக் கூடியதுமான சேதுக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றிடத் தொடங்கி, தற்போது அரசியல் ஆதாயத்திற்காக ஒரு சிலர் முன்னுக்குப் பின் முரணாக எழுப்புகிற வாதங்களுக்கு செவிசாய்த்து திட்டத்தின் செயலாக்கத்தை நிறுத்தி விடாமல் தமிழக மக்களின் எதிர் காலத்தை, ஏற்றமும் வளமும் மிக்க காலமாக மாற்றிடுவதிலிருந்து பின்வாங்காமல் – அந்த அரிய ஆக்கப்பூர்வமான திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று மத்திய அரசினை இந்த அரசு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

240 சமத்துவபுரங்களிலும் பெரியார் சிலை

தந்தை பெரியார் சிலை ஒன்றினை 95 அடி உயரத்தில் அமைக்கவேண்டும் என்ற திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களின் வேண்டுகோளினை முதலமைச்சர் அவர்கள் ஏற்றுள்ள நிலையில், ஓரிடத்தில் சிலை அமைப்பதைக் காட்டிலும், பெரியார் பெயரால் மேலும் 95 சமத்துவ புரங்களை அமைத்து; அனைத்து சமூகத்தினரும் சகோதரபாசத்துடன் ஒருமித்து வாழ்கின்ற அந்த ஒவ்வொரு சமத்துவபுரக் குடியிருப்பு முகப்பிலும் தந்தை பெரியார் அவர்களின் சிலையை அமைப்பதால், அவருடைய தலையாய கொள்கையான சமுதாயச் சமத்துவக் கொள்கை பரவுவதற்கு வழி ஏற்படும் என்பதற்காக அந்தப் பணியை இந்த அரசு தொடங்க முடிவு செய்துளள்து. ஏற்கெனவே இவ்வரசு அமைத்துள்ள 145 சமத்துவபுரங்களுடன் சேர்த்து, இப்பணி முடிவுற்ற பின் பெரியார் சிலையுடன் கூடிய 240 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமையும்.

தைத்திங்களே தமிழ்ப் புத்தாண்டு

பெரும்புலவரும், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்று வித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில், அய்ந்நூறுக்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள், 1921 ஆம் ஆண்டு சென்னை – பச்சையப்பன் கல்லூரியில் ஒன்று கூடி, தமிழர்களுக்கென்று ஒரு தனி ஆண்டு தேவை என்று கருதி, அய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவதென்றும், அதையே தமிழ் ஆண்டு என்று கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் முடிவு எடுத் தார்கள். அந்தக் கருத்தினை, முப்பத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பே மாண்புமிகு முதல மைச்சர் கலைஞர் அவர்கள் ஏற்றுக் கொண்டு, 1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திடஆணை பிறப்பித்தார். திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டு மொத்தமாக எல்லாத் தமிழ் அறிஞர் களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால், தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடை முறைப்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி – தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச் சியுடன் கொண்டாடும் வகை யில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்க ளிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட; புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன் மானம் போற்றிப் பாடியும் ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச் சியால் அன்பை அள்ளிப் பொழிவர்.

திட்ட ஒதுக்கீடு இரு மடங்கு

கடந்த பத்தாவது அய்ந்தாண்டுத் திட்டகாலத்தின் திட்டஒதுக்கீடான ரூபாய் 40,000 கோடியை இருமடங்குக்கும் மேலாக உயர்த்தி, ரூபாய் 85,344 கோடி அளவில், வரும் பதினொன்றாவது அய்ந்தாண்டுத் திட்டக் காலத்தில் திட்டப் பணிகளை மேற் கொள்ள ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இத்திட்டக் காலத்தில், வேளாண்மைத் துறைக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதோடு, சமூகநீதியை உறுதி செய்யும் வகையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல் படுத்தப்படும்.

மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் தமிழும்!

இந்த அரசின் இடைவிடாத முயற்சியின் காரணமாக மய்ய அரசு தமிழைச் செம்மொழி யாக அறிவித்துப் பெருமைப் படுத்தியது மட்டுமன்றி, மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தையும் சென்னையில் அமைத்து வருகிறது. தமிழ் நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு, அனைவரும் தமிழ் பயில இவ்வரசு வழிவகுத்துள் ளது. தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்கச் செய்யவும், சென்னை உயர்நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளில் தமிழையும் வழக்கு மொழியாக்கவும், இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.

விவசாயிகளின் நலன்

வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்கள் மூலமாக, விவசாயிகளின் வருவாயைப் பெருக்க இவ்வரசு முனைப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கால்நடை மற்றும் மீனளம் வாயிலாகக் கூடுதல் வருவாயை ஈட்டுதல் ஆகியவை மூலமாகவே இது சாத்திய மாகும். உலக வங்கியின் உத வியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்வள நிலவளத் திட்டத்தின்கீழ், பொதுப்பணித் துறை, வேளாண் துறை, கால் நடைத் துறை, மீனளத்துறை போன்ற பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து திட்டப் பணிகள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயக் கூட்டுறவுக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தன் வாயிலாக, தமிழக விவசாயிகள் மீண்டும் கடன் பெற வழிவகுக்கப்பட் டுள்ளது. தற்போது அதிகரித்துள்ள உற்பத்திச் செலவுகளுக்கு ஏற்ப, விவசாயிகள் சாகுபடி செய்யும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகை யில், மத்திய அரசு அறிவித்த 100 ரூபாய் ஊக்கத் தொகையோடு சேர்த்து, மாநில அரசின் கூடுதல் ஊக்கத் தொகையாக 50 ரூபாய் வழங்கி, இந்த அரசு சன்னரக நெல்லுக்கான கொள் முதல் விலையை குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 825 ஆக உயர்த்தியுள்ளது.

மூன்று லட்சம் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்

தரிசு நிலங்களைப் பண்படுத்தி, அவற்றை நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக அளிக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை ஒரு இலட்சத்து 38 ஆயிரம் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 61 ஆயிரம் ஏக்கர் நிலத்தை இந்த அரசு இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், குடியிருக்க இடமற்ற ஏழை எளியவர்களுக்கு 3 லட்சம் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் புறம்போக்கு நிலங்களில் பத்து ஆண்டுகளாக வீடுகள் கட்டிக் குடியிருப் போருக்குப் பட்டா வழங்கப்படும் என்பதைத் தளர்த்தி, வருமான வரம்பையும் விலக்கி, அய்ந்தாண்டுகளுக்கு மேலாகக் குடியிருக்கும் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா கிடைத்திட இந்த அரசு வழிவகுத் துள்ளது.

மின் உற்பத்தி

மத்திய மின் உற்பத்தி நிலை யங்களிலிருந்து பெறப்படும் மின் சக்தியின் அளவு குறைந் ததால், நமது மாநிலத்தில் மின் விநியோகத்தில் அண்மையில் சில இடர்ப்பாடுகள் ஏற்பட் டன. பழுப்பு நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக, நெய் வேலி மின் உற்பத்தி நிலையம் ஒப்புக்கொண்ட அளவிற்கு மின் சக்தியை அளிக்க இயல வில்லை. இதேபோன்று, கல் பாக்கம் மற்றும் கைகா அணு மின் உற்பத்தி நிலையங்களும் எரிபொருள் பற்றாக்குறையால் அவற்றின் உற்பத்தித்திறனுக் கேற்ப மின் உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. தகுந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, மத்திய மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியை அதிகப்படுத்துமாறு சம்பந்தப் பட்ட துறைகளை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் ரூபாய் 925 கோடி மதிப்பீட் டில் 185 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும்.

இவை 18 மாதங்களுக் குள் இயங்கத் தொடங்கும். இதுதவிர, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க இந்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வட சென்னை, மேட்டூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் கூடுதல் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான ஆயத்தப் பணி களை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது. மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, மய்ய அரசு தமிழ்நாட்டிற்கு மத்தியத் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரத்தை ஒதுக்கீடு செய்து வழங்கி வருகிறது.

கல்வியில் கணினிமயம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கடந்த தி.மு. கழக ஆட்சிக் காலத்தின்போதுதான், 1999-2000 ஆம் ஆண்டில் கணினிப் பாடம் அறிமுகப்படுத்தப்பட் டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள 1,880 அரசு மேல்நிலைப் பள்ளி களுக்கும், 1,525 அரசு உயர் நிலைப் பள்ளிகளுக்கும் கணி னிகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நிதியாண்டில், எஞ்சி யுள்ள 100 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 606 உயர் நிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் வழங்கப்படும். மேலும், பதினொன்றாவது அய்ந்தாண்டுத் திட்டக் காலத்திற்குள், மாநிலத்தில் உள்ள 6,650 அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நடுநிலைப் பள்ளிகளுக்கும் கணினிகள் அளிக்கப்பட இந்த அரசு ஆவன செய்யும். இதுமட்டுமன்றி, தமிழ்வழிக் கல்வியில் பயின்று 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் முதல் 1,000 மாணவ மாணவியருக்கு ஊக்கப் பரிசாக கணினிகள் அளிப்பதற்கான திட்டம் ஒன்றையும் இந்த அரசு செயல்படுத்தும்.

திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்

கோயம்புத்தூரில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறு வனம் ஒன்றையும் (அய்.அய். எம்.), மதுரையில் இந்திய தொழில்நுட்பவியல் நிறுவனம் (அய்.அய்.டி.), திருச்சியில் அறி வியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (அய்.அய்.எஸ். இ.ஆர்.) ஒன்றையும் அமைக் குமாறு, மத்திய அரசை, தமிழக அரசு கோரியுள்ளது. தமிழ் நாட்டில் தற்போது ஒரு மத்தியப் பல்கலைக் கழகம் கூட இல்லாத குறையை நீக்க, மாநிலத்தில் மத்திய பல்கலைக் கழகம் ஒன்றை அமைக்கு மாறும் மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களை, முதல மைச்சர் அவர்கள் இதுகுறித்து சந்தித்துப் பேசியுள்ளார்கள். முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோள் குறித்து நம் பிக்கையூட்டும் வகையில் மத்திய அமைச்சர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள். இந்த மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது .

மருத்துவத் துறை

அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெற இய லும். இதை மனதில் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் தேவையான பணியாளர்களும், அனைத்து வசதிகளும் கிடைக் கச் செய்ய இந்த அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், அரசு மருத்துவமனைகளில் காலியாக இருந்த பணியிடங் களில் 2,167 மருத்துவர்கள் மற்றும் 2,341 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதோடு, 468 புதிய மருத்துவப் பணி யிடங்களும், 1,059 புதிய செவிலியர் பணியிடங்களும் தோற் றுவிக்கப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. கிராமப்புறத்தில் உள்ள மகளிருக்கு 24 மணி நேரமும் மகப்பேறு சிகிச்சைக் கான வசதி கிடைக்கும் வகை யில், 1,000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று செவிலியர்கள் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமன்றி, ரூபாய் 597 கோடி ரூபாய் மதிப்பீட்டி லான உலகவங்கி உதவியுடன் கூடிய தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டத்தின்கீழ், மாநிலத்தில் உள்ள அனைத்து வட்ட மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு நமது மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதற்குச்சான்றாக, தனியார் மருத்துவ மனைகளில் நடைபெறும் பிள்ளைப் பேறுகளின் எண் ணிக்கை குறைந்து, அரசு மருத் துவமனைகளில் பிள்ளைப் பேறுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் இது வரை நடத்தப்பட்டுள்ள 4,872 முகாம்களில் 51 இலட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்த அரசு பொறுப்பேற்ற பின், மோட்டரோலா, டெல் கம்ப்யூட்டர்ஸ், சாம்சங், ரெனோ-நிஸ்ஸான் போன்ற பல பெரும் தொழில் நிறுவனங் களுடன் ரூபாய் 15,083 கோடி மதிப்பீட்டிலான 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, அவற்றில் நான்கு தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனால் 1,37,140 பேர் களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக் கிடைக்கும்.

தொழிற்கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி

The Saint-Gobain World Glass Complex at Sriperumbudur, TN
Tamil Nadu is a leading industrial state of India

ரூபாய், 4,000 கோடி மதிப்பீட்டில் ஹூண்டாய் கார் தொழிற்சாலை ஆண் டொன்றுக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு விரிவாக்கப்பட்டு வருகிறது. மேலும் ரூபாய், 1800 கோடி மதிப்பீட்டில் போர்டு கார் தொழிற்சாலை ஆண்டொன்றுக்கு கூடுதலாக இரண்டு இலட்சம் கார்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கெனவே அமைந்துள்ள இவ்விரு தொழிற்சாலைகளும், தங்களது பெரும் விரிவாக்கத் தையும் நமது மாநிலத்திலேயே மேற்கொள்வதானது, இந்த அரசின் தொழிற்கொள்கைக்குக் கிடைத்த நற்சான்றிதழாகும்.

கப்பல் கட்டும் தளங்கள்

கடந்த வரவு – செலவு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போன்று, சென்னையை அடுத்துள்ள எண்ணூரில் ரூபாய் 3,068 கோடி முதலீட்டில் லார்சன் அண்டு ட்யூப்ரோ நிறுவனம் கப்பல் கட்டும் தளம் ஒன்றினை அமைக்கும். இதன் மூலமாக சுமார் பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்புப் பெறு வார்கள். கடலூர் மாவட்டத் தில், இன்னொரு கப்பல் கட்டும் தளம் அமைப்பதற் கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

24,58,411 வண்ணத் தொலைக்கட்சிப் பெட்டிகள் இலவசம்

தி.மு.க., தேர்தல் அறிக்கை யில் அறிவிக்கப்பட்டவாறே, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாதோர் அனைவருக்கும் அவற்றை வழங்கும் திட்டம் இவ்வரசால் செயல்படுத்தப்பட்டு, இது வரை 24,58,411 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றா வது கட்டமாக, 34 இலட்சத்து 25 ஆயிரம் வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளைக் கொள்முதல் செய்வதற்கான ஆணைகள் அளிக்கப்பட்டுள் ளன. சர்வதேச ஒப்பந்தப் புள்ளி வாயிலாக சட்டமன்ற கட்சி களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் ஒப்புதல் பெற்று, ஒளிவு மறைவற்ற முறையில் கொள்முதல் செய்யப்பட்டு, எவ்விதப் பாகுபாடுமின்றி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட குழுக்கள் மூலமாக, ஏழை எளிய குடும்பங்களுக்கு இவை வழங்கப்பட்டு வருவது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, இந்தியாவிலேயே வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அனைத்து வீடுகளிலும் உள்ள ஒரே மாநிலம் தமிழகம்தான் என்றசாத னையை விரைவில் எட்டுவோம்.

மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை – மாநகர்ப் பகுதி தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகின்றது. இப்பகுதியின் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்கு உடனடியான மற்றும் நிலையான தீர்வுகள் தேவைப்படுகின்றன. இந்த முக்கியப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, ரூபாய் 9,757 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த இந்த அரசு முனைந்துள்ளது. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை டில்லி மெட்ரோ இரயில் கழகத்தால் தயாரிக்கப்பட்டு, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு வங்கியின் நிதியுதவி பெறுவதற்காக மத்திய அரசிற்கு அனுப்பப் பட்டுள்ளது. இத்திட்டத்திற் கான ஆரம்பக் கட்டப் பணி கள் நடைபெற்று வருகின்றன.

ஒரு லட்சம் புதிய வீடுகள்

குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் ஆகியோருக்கு, நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டு வசதி அளிப்பதற்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். பல்வேறு நகர்ப்புற மேம் பாட்டுத் திட்டங்களின்கீழ், மாநிலத்தில் உள்ள நகரங்களில் ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் வாழும் மக்களின் வீட்டு வசதித் தேவையைக் கருத்தில் கொண்டு, பொதுத் துறை – தனியார் துறை கூட்டு முயற்சியின் வாயிலாக மாநகராட்சி களுக்கு அருகில் உள்ள பகுதி களில் வீட்டு வசதித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதுமட்டுமன்றி, வீட்டு வசதித் திட்டங்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியை குறைந்த வருவாயுடைய மக்களுக்காக ஒதுக்க வேண்டும் என்ற நிபந்தனையின்படி, திட்டங்களைச் செயல்படுத்தும் கட்டட அமைப்பாளர்களுக்கு, அதிக தரைப்பரப்புக் குறியீட்டளவிற்கு இந்த அரசு அனுமதியளிக்கவுள்ளது .

தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்

மத்திய அரசின் மிகப் பெரும் சாதனைத் திட்டமான தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டத்தின் செயல்பாட்டை சமூக ஆய்வு வாயிலாக ஆய்ந்து வரும் குழுவினர், தமிழகத்தில் இத்திட்டம் மிகச் சிறப்பாகச் செயல் படுத்தப்படுவதாகவும், இத் திட்டத்தின்கீழ் பணிபுரிவோருக்கு நாளொன்றுக்கு எண்பது ரூபாய் ஊதியமாக வழங்கப் பட்டு வருவதாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் இத்திட்டத்தின்கீழ் பெண்களே 82 சதவிகிதம் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளனர். இத்திட்டத்தை, மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தியுள்ளதையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது .

நாங்குநேரியில் சிறப்புப் பொருளாதாரப் பகுதி

தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியே- அப்பகுதியில் சமுதாயப் பூசல் கள் எழாமல் இருக்க உதவும் அடிப்படையில், இம்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கான பல முயற்சிகளை இந்த அரசு தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. நாங்கு நேரியில் சிறப்புப் பொருளாதாரப் பகுதி அமைப்பதற்கு குறுக்கிட்டதடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், 2,500 ஏக்கர் பரப்பளவில் தொழில் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்று விரைவில் அமைக்கப்படவுள்ளது .

இதைப் போன்றே, கங்கை கொண்டானில் தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை ஏற்படுத்தவும், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்கவும் எல்காட் நிறுவனம் நட வடிக்கை எடுத்து வருகிறது. அண்மையில், கங்கைகொண்டான் மற்றும் மதுரையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் உள்ள படித்த வேலையற்ற இளைஞர்கள் பெருமளவில் வேலை வாய்ப்புப் பெறவும், இப்பகுதிகள் பொருளாதார வளர்ச்சி அடையவும் இந்த நடவடிக்கைகள் பெரி தும் உதவும் என நம்புகிறேன்.

மகளிர் நலன்

நமது சமுதாயத்தில் பெண்கள் தமது முழு உரிமைகளைப் பெறவும், உரிய பங்கினை ஆற்றவும் இந்த அரசு எப்பொழுதுமே உறுதுணையாக இருந்துள்ளது. பெண்களுக்கு சமச் சொத்துரிமையையும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டையும் வழங்கி பெண்ணுரிமை காத்தது இந்த அரசுதான் என்பதை அனைவரும் அறிவர். இந்த வகையில், சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வழி வகுக்கும் சட்டத்தை, திருமதி சோனியா காந்தி அவர்களின் சீரிய வழிகாட்டுதலுடன், மாண்புமிகு பிரதமர் மன் மோகன்சிங் அவர்கள் தலை மையில் நடைபெறும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விரைவில் நிறைவேற்றிடும் என நம்புவோம்.

சுய உதவிக் குழுத் திட்டம்

1989 ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் இந்த அரசால் தொடங்கப் பெற்ற சுய உதவிக் குழுத் திட்டம், இன்று நமது மாநிலத்தில் உள்ள மகளிருக்கு சமூகப் பொருளாதாரச் சுதந் திரம் அளிக்கும் மாபெரும் மக்கள் இயக்கமாக உரு வெடுத்துள்ளது. இதுவரை கிராமப் பகுதிகளில் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த சுழல் நிதி உதவியை, முதன்முறையாக மாநிலத்தின் நகரப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கும் இந்த அரசு வழங்கத் தொடங்கியுள்ளது. தற்போது மாநிலத்தில் சுமார் 58 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மூன்று இலட்சத்து அறுபதாயிரம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் ரூபாய் 1,639 கோடி சேமித்துள்ள தோடு மட்டுமன்றி, ரூபாய் 2,566 கோடி வங்கிகளிடமிருந்து கடனுதவி பெற்றுள்ளன.

இந்த இளைஞர்களுக்கான பல்வேறு பயிற்சித் திட்டங் களை இந்த அரசு செயல் படுத்தி வருகிறது. மேலும், பொது அறிவு, கணினி அறிவு, ஆங்கிலத்தில் நன்றாகப் பேசும் திறன் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்கும் திறன் ஆகியவற்றை இளைஞர்கள் பெற இந்த அரசு ஆவன செய்யும். பயிற்சி பெற்ற கனரக வாகன ஓட்டுநர்கள் அதிக அளவில் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, அரசுப் போக்கு வரத்துக் கழகங்கள் பெருமளவில் கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிப்பதற்கான திட்டம் ஒன்று இந்த அரசு செயல்படுத்படவுள்ளது .

மாதாந்திர ஓய்வு உதவி

தி.மு.க. தேர்தல் அறிக்கை யில் அளிக்கப்பட்ட வாக்குறு தியை நிறைவேற்றும் வகையில், 2006-07 ஆம் ஆண்டில் முதியோர், ஆதரவற்றோர் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு அளிக்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத் தொகையை ரூ 200 லிருந்து ரூ 400 ஆக இந்த அரசு உயர்த்தியது. தற்போது வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து முதியோருக்கும் ஓய்வூதியம் அளிக்கும் இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. மறைந்த பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மை யாரின் பிறந்த நாளான 19-11-2007 அன்று இந்தத் திட்டம் நமது மாநிலத்தில் முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, ஆண் வாரிசுகளின் ஆதரவுள்ளவர்கள், இல்லாதவர்கள் என்ற பாகுபாடின்றி, 65 வயதுக்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள சுமார் 10 இலட்சம் முதியோர்கள் பயன் அடைவார்கள்.

ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் உதவித் தொகையை ரூ 200 -லிருந்து ரூ 400- ஆகவும், கடும் ஊனமுற்றோருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ரூ 200-லிருந்து ரூபாய் 500-ஆகவும் இந்த அரசு கடந்த ஆண்டு உயர்த்தியுள்ளது. தங்களைத் தாங்களே பராமரித்துக் கொள்ளக்கூட இயலாத மன வளர்ச்சி குன்றியோருக்கு, முன் எப்போதும் இல்லாத வகையில், வருமான வரம்பு மற்றும் எண்ணிக்கை வரையறை யின்றி, மாதாந்திர உதவித் தொகையாக 500 ரூபாய் வழங்க இந்த அரசு ஆணையிட்டது. இதன் அடிப்படையில், இதுவரை 30,000 பேருக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளதோடு, இவர்களுக்கு சிறப்புக் கல்வி மற்றும் தொழிற் பயிற்சி வசதிகளும் கிடைத்திட இந்த அரசு ஆவன செய்துள்ளது.

ஒரு வகையில் ஊனமுற்றோர் என்றே கருதப்பட்டு, சமுதாயத்தின் ஓரத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அரவாணிகளின் நலனில் எப்பொழுதுமே இந்த அரசு அக்கறை கொண்டுள்ளது. சமூக அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இவர்கள் எதிர் கொள்வதைக் கருத்தில் கொண்டு, குடும்ப அட்டைகளை வழங்குதல், அரசு மருத்துவமனைகளில் இலவச அறுவை சிகிச்சை அளித்தல் போன்ற பல்வேறு திட்டங் களை இந்த அரசு செயல் படுத்தி வருகிறது. இவர்களின் மீது இந்த அரசு கொண்டுள்ள பரிவின் காரணமாக இவர் களுக்கென புதிய நல வாரியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது .

நமது மாநிலத்தில், ஏன் நமது நாட்டிலேயே, எங்கும் முன்னர் எப்போதும் வழங்கப் படாத அளவில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த தாய்க் குலத்திற்கு திருமணம் மற்றும் மகப்பேறு உதவிகளை இந்த அரசு வழங்கி வருகிறது. இந்த உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும்போது, அதில் குறுக்கே புகுந்து ஆதாயம் தேடும் நோக்கத்தோடு, சில இடைத் தரகர்களும் அலுவலர்களும் தவறான செயல்களில் ஈடுபட இந்த அரசு ஒரு போதும் அனுமதிக்காது. இத்தகைய கயவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுதுள்ளது .

அமைப்பு சாராத் தொழிலாளர்கள்

அமைப்பு சாராத் தொழிலாளர்களின் நலனுக்கு இந்த அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வந்துள்ளது. 1996-2001 ஆண்டு காலத்தில், இந்த அரசு தான் அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரியங்களை அமைத்து நலத்திட்ட உதவி களை வழங்கியது. இடையில் கலைக்கப்பட்ட இந்த வாரியங்களை இந்த அரசு மீண்டும் அமைத்துள்ளது. இந்த வாரியங்களின் மூலமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில், 2,20,043 அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சுமார் ரூபாய் 56 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுள்ளனர்.

சென்னை சங்கமம் கலை விழா

நாட்டுப்புறக் கலைஞர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காக தனி நல வாரியம் ஒன்றை இந்த அரசு அமைத்துள்ளது. நமது தொன்மையான கலைகளை வாழவைக்கும் அரும்பணியாக, நாட்டுப் புறக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் ஆர்வத்திற்கு ஆதரவு நல்கிடும் வகையிலும், சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழ் மையம் – சென்னை சங்கமம் கலை விழா, மாநகர் முழுவதும் வெற்றிகரமாகவும், மக்களின் பேராதரவுடனும் நடைபெற்றதை யொட்டி; வரும் ஆண்டுகளிலும் படிப்படியாக தமிழகம் முழுவதும் இவ்விழாவை நடத்துவதற்கு இந்த அரசு ஒத்துழைப்பு வழங்கும்.

தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிவோரின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் களைய, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் மாநில அளவிலான உயர்நிலை ஆலோசனைக் குழு ஒன்றை இந்த அரசு அமைதுள்ளது .

இலங்கைத் தமிழர்கள் சந்தித்து வரும் இன்னல்கள் தொடர்வதைக் கருத்தில் கொண்டு, பல ஆண்டுகளாக நிலவிவரும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் சுமுகமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்த அரசு, மைய அரசைக் கேட்டுக்கொள்கிறது.

நெசவாளர்களின் நலன் காக்கும் வகையில், அவர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தியும், இலவச மின்சாரம் அளித்தும் பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. ரூபாய் 256 கோடி செலவில், மாநிலத்தில் உள்ள 3 கோடியே 28 இலட்சம் ஏழை எளிய மக் களுக்கு இலவச வேட்டி, சேலைகள் அளிக்கும் திட்டம், நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுத்தப் படும்.

என்றும் மீனவர் நலனுக்கு உயர் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கென தனி நல வாரியம் அமைத்துள்ளதோடு, கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது காணாமல் போகும் மீனவர்களுடைய குடும்பங்களுக்கு உதவுவதற்கான திட்டம் ஒன்றையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்களுக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களைக்களையத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து எடுதுவந்துள்ளது .

துப்புரவுப் பணியாளர்களின் நலம்

துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் மனிதக் கழிவை எடுத்துச் செல்லும் தொழிலில் ஈடு பட்டு இருந்தோரின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும். இந்த நோக்குடனேயே, இவர்களின் நலனுக்காக தனி நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், மாற்றுத் தொழில்களை மேற்கொள்ள உதவவும் தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அருந்ததியர் வகுப்பினர் சமூகப் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் இருப்பதால், அவர்தம் முன்னேற்றத் திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியம் எனக் கருதி, தற்போது ஆதிதிராவிடருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் இவர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்குவது பற்றி, அனைத்துக் கட்சிகளையும் கலந்தாலோ சித்து முடிவு செய்ய இந்த அரசு கருதியுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவர் சமூகப் பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைவதற்கு, இப்பிரிவுகளைச் சேர்ந்தோர் அனைத்துத் துறைகளிலும் உயர் வேலை வாய்ப்புகளைப் பெறுவது அவசியம் என்பதை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. இதனையொட்டி, தற்போது மாநிலத்தில் பெருமளவில் உருவாகிவரும் வேலை வாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பெறும் வகையில், 2007-08 ஆம் ஆண்டிற்கான சிறப்பு மாநில உதவி ரூபாய் 25 கோடி தொகையையும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதற்கே இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கல்வி அறிவிலும், சமுதாய முன்னேற்றத்திலும் சிறுபான்மையினர் பின்தங்கியுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு கிடைத்திட இந்த அரசு வழி வகுத்துள்ளது. மேலும், அவர்களது முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்து வதற்காக இந்த அரசு ஒரு தனி இயக்குநரகத்தையும் அமைத்துள்ளது.

தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு

இந்த அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனைத்தும் எப்போதும் சமூக நீதி என்ற குறிக்கோளை மையப்படுத்தியே செயல்படுத்தப் பட்டு வந்துள்ளன. நீதிக்கட்சியின் வழி வந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு, சமூக நீதியை நிலை நாட்டுவதில் இந்த நாட்டிற்கே முன்னோடியாகத் திகழ்ந்து வந்துள்ளதை அனைவரும் அறிவர். இந்த வகையில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் தனி யார் துறை வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது .

இன்று தமிழகம் கண்டுவரும் ஒப்பற்ற வளர்ச்சியின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையச் செய்யவும், நலிவுற்றோர் நலம் பேணவும், ஜனநாயக ஒளி பரவிடவும், மத நல்லிணக்கம் வலுப்பெறவும், சமூகநீதியை நிலைநாட்டவும் மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலை மையிலயான இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

இந்த அரசின் சில கொள்கைகள், செயல்பாடுகள், சாதனைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றை உங்கள் முன்விரிவாக எடுத்துரைத்து உள்ளேன்.
ஒரு உண்மையை சொல்லப்போனால் அணைத்து முக்கிய துறைகளிலும்  தமிழகம் முனேற்றம் கண்டுள்ளது . உடனே லஞ்சத்தை ஒருவராலும் ஒழித்துவிடமுடியாது, அதே சமயத்தில், நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன செய்தார்கள், எவ்வளவு செய்தார்கள் என்பதுவே முக்கியம். பலர் இங்கு இலவசங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள்தான் , ஏன் எதிர்ப்பவர்கள் கூட உண்டு . ஆனால் அது தேவைபடுவர்களை கேட்டுபாருங்கள் டிவி, காஸ் அடுப்பு, ஒரு ரூபாய் அரிசியை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கிறது கிராமங்களை போய் பார்க்கவேண்டும் . எனக்கு தெரிந்து கடந்த 5 ஆண்டுகளில் பலர் அரசு வேளைகளில் சேர்த்திருக்கிறார்கள், இன்னும் எவ்வளவோ....

அங்கொன்றும் இங்கொன்றும் சில குறைகள் இருந்தாலும் பொதுவாக .இந்த ஐந்தாண்டு காலத் திமுக ஆட்சியில், தமிழகத்தின் எல்லாத் தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரமும், பொருளாதாரமும் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதென்பதைக் கண்ணுடையோர் எவரும் மறுக்கவியலாது. இந்த ஆட்சியினால்தமிழகம் பெற்றுள்ள இக்தகைய வளர்ச்சியினை, தமிழகத்திலுள்ளோர் ஒவ்வொருவரும் உளமாற உணர்ந்தேயுள்ளனர்

நீங்களே சொல்லுங்க 



1,மின் தட்டுப்பாடிற்கு காரணம் பதிவை முழுவதுமாக படித்தால் தெரியும் .

2,விலைவாசி :- உலகம் முழுவதும் பொருளாதார விழ்ச்சி அடையும்பொழுது இந்தியா தப்பித்தது , அதிலும் தமிழநாடு , மிகவும் குறைவாகத்தான் பாதிக்கப்பட்டது .

3,ஊழல் :- தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் .

4,பெட்ரோல் :- அது சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், பெட்ரோல், டீசல், கெரசின் மற்றும் சமையல் எரிவாயு விலைககள் அமைகின்றன .

5,சினிமா :- குடும்பம் குடுப்பமாக எத்தனை பேர் சினிமாவில் உள்ளார்கள் என்பதை சற்று எண்ணி பார்க்கவும் ..

6,கட்டிடப்பொருட்கள் :-உலகளாவிய திட்டங்கள் அறிவிக்கின்ற போது , சில வர்க்கத்தினரின் சில மாதங்களுக்கு பாதிக்கபடுவது உண்மைதான் ,தற்போது விலை குறைய துவங்கியுள்ளது. 

ஊழல் , குடும்ப அரசியல் ,ஈழதமிழர் விரோதம் , இலவசம் ,87 வயதிலும் பதவியாசை என்று மொக்கை காரணங்கள் சொல்லாமல் மனசாட்சியுடன் ஆக்கபூர்வமாக, தொலைநோக்கு சிந்தனையுடன், திட்டங்களில் எதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் ...