சமுக உறவில் தேடுங்கள்

Loading

Monday, October 2, 2017

காமராஜர் நல்லவரா கெட்டவரா?

காமராஜர் நல்லவரா கெட்டவரா?

ஒன்பது ஆண்டு காலம் தமிழ்நாட்டை .. மன்னிக்க மெட்ராஸ் மாநிலத்தை ஆண்டவர் திரு.கு.காம்ராஜ்.
தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு பதிவு செய்தவரும், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தின் போது அமைதி காத்தவரும், தேவிகுளத்தையும், பீர்மேட்டையும் கேரளாவிற்கு தாரை வார்த்தவரும், மேடாவது குளமாவது எல்லாம் இந்தியா வில் தானே இருக்கிறது என நக்கல் அடித்தவரும், நைசாக நாடார் வாழும் குமரியை மட்டும் தமிழக்கத்தில் சேர்த்தவரும், அரை காப்படி அரிசிக்கு மக்களை ரேசன் கடையில் தேவுடு காக்கவைத்தவரும், கச்சத்தீவு தாரைவார்ப்பின் முக்கியபுள்ளியும்,
தில்லிக்கு காவடி தூக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டுமான திரு. கு. காமராஜை ஏன் கொண்டாட வேண்டுமென திராவிட இயக்கத் தோழர்கள் கேட்கலாம்?

நீதிகட்சியின் பி.டி.ராஜனுக்கு பிறகு, சுதந்திர(?) மெட்ராஸின் பிரதமரான முதல் தமிழர் என்ற முறையில் காம்ராஜைக் கொண்டாடுவது நமது கடமையாகவும் நமக்கே உரித்தான உரிமையாகவும் இருக்கிறது.
சமூகநீதியை மட்டுமே மூச்சாக கொண்டு செயல்பட்டுவந்த செயல்பட்டுவருகின்ற திராவிட இயக்கம், மாராப்பு கூட அணிய தடை விதிக்கப்பட்ட மேலாடை இல்லாத, தாலிக்கு வரி செலுத்திய, பெண்களின் முலைகளுக்கும் காம்புகளுக்கும் கூட வரி செலுத்திய ஒடுக்கப்பட்ட சமுதாயமான நாடார் இனத்தில் இருந்து ஒருவர் முதல்வராக வந்ததில் காங்கிரஸைக் காட்டிலும் நமக்கே பங்கு அதிகம்.  
"இந்த சாணாப்பய்ய காமராசு ராமர் ஆட்சி நடத்துவானு இவன கோட்டைல உக்கார வச்சா.. இவன் இராம்சாமி நடத்துறான்" னு சனாதன பிராமண கால்நக்கி முத்துராமலிங்கம் வயித்தெறிச்சலும் பொச்செறிச்சலும் கொண்டு கூட்டம் போட்டு கத்தியதில் காம்ராஜ் நடத்தியது வைதீக எதிர்ப்பு ஆட்சி என உங்களுக்கு மீண்டும் இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
குலகல்வித்திட்டத்தை ரத்துசெய்தது, ராஜாஜி மூடிய பள்ளிகளை மீண்டும் திறந்தது, நீதிகட்சி நிறுவனர் சர் பி.டி.தியாகராயரின் மதிய உணவுத்திட்டத்தை தமிழகமெங்கும் விரிவுப்படுத்தியது அதன் மூலம் பள்ளிக்கு வரும்
பிள்ளைகளின் எண்ணிக்கை பெருக்கியது என திராவிட சிந்தாந்தங்களுக்கு காம்ராஜ் உயிரூட்டினார்.
"மாற்றான் வீட்டு மல்லிகை" என அண்ணா வியந்து பாராட்டும் அளவுக்கு வைதீக காங்கிரசில் பகுத்தறிவு சொத்தாக காம்ராஜ் இருந்தார் என பதிவு செய்வது கடமையாகிறது.
தி.கவினர் சேர்ந்துக்கொண்டு அண்ணா வை சிறுமைப்படுத்த காம்ராஜ் க்கு புனித பிம்பம் பூசினாலும்,
எந்த பா.ஜ.க காம்ராஜைக் கொள்ள முயன்றதோ அதே பா.ஜ.க வில் இன்று நாடார்கள் சேர்ந்துக்கொண்டு லூட்டி அடித்தாலும் அந்த சிவகாமி மகனை நாம் மறக்கலாகாது.
பதவிகள் ஏதும் இன்றி சாதா ப்ரஜையாக மறைந்த காம்ராஜ்க்கு அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்தவர் காம்ராஜரின் அந்திம கால அரசியல் வாரிசான கலைஞர் கருணாநிதி.
அவர் வாழ்ந்ததும் , வாழ்ந்து முடிந்ததும், முடிந்த பின்பு இன்று வரை நினைவில் வாழ்வதும் திராவிடத்தால் தான்! 

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தலும்
ஆலயம் பதினாயிரம் நாட்டலும்
அன்னயாவினும் புன்னியங்கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே ! "

இர.பார்த்திபன்

No comments:

Post a Comment