Tuesday, May 29, 2012

ஹசாரேவிற்காக - நிர்வாணமாக ஆட தயார்






அன்னாஹசாரேவிற்கு மேலாடை இன்றி உடலில் எழுதி ஆதரவு அளித்த யோகிதா..
ஜன லோக்பால் மசோதா நிறைவேற்றியது என்றால் நிர்வாணமாக நடனமாடுவேன் என தற்பெருமையுடன் யோகிதா தனடேகரை சொல்ல வைத்த அண்ணா ஹசாரே மீண்டும் இன்றைய ஊடகங்களின்தலைப்புச் செய்தியைப்பிடித்திருக்கிறார் . ஒரு காந்தியவாதியின் ஊழலுக்குஎதிரான போராட்டம் என்பது இவரது நடவடிக்கைக்குக் கொடுக்கப்படும் விளம்பரம்.

இவரது போராட்டம் குறித்து பல்வேறு கருத்துநிலைகள் எழுந்துள்ளன.

அவைகளில் சில :-
ஊழலுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத நிலையில்,ஒரு துருப்புச் சீட்டாக அவரைப் பயன்படுத்தி அரசின்அராஜகத் தன்மைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் என்கின்ற வாதப்பிரதிவாதங்களும் சமஅளவில் எழுந்தவண்ணமிருக்கின்றன.

அவர் முக்கியமல்ல அவர் முன்னெடுத்திருக்கும்போராட்டம் முக்கியமானது என்பது வரையில் எழும்கருத்துக்கள் எதுவும் நிராகரிக்கப்படக் கூடியதல்ல.

காந்திக் குல்லாயுடன் போராட வந்திருக்கும்அன்னாஹசாரே ஒரு நேர்மையான காந்தியவாதி அல்ல.இவர் ஒரு போலிக்காந்தியவாதி என்பது முதல்,அவருக்குப் பின்னால் அணிதிரளும் மக்கள்ஏமாற்றப்பட்டு விடுவார்கள் என்ற எச்சசரிக்கைக்குரல்களும் உண்டு .

யார் சார் அவரு நல்லவரா இல்ல கெட்டவரா 
கடவுளா ? அரக்கனா ?

அன்னா ஹசாரே யார் ?

கிஷன் பாபுராவ் ஹசாரே இதுத்தான் அவரது முழு பெயர் .அன்னா ஹசாரே, முன்னாள் ராணுவ வீரராம்.அங்கிருக்கும் போதுதான் அவர் மகாத்மா காந்தி, வினோபா பாவே, விவேகானந்தரையெல்லாம்படித்தாராம்! அவரது கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை ஒழித்தாரம். தீண்டாமையை இல்லாமல் ஆக்கினாராம். பசுமைப் புரட்சி செய்தாராம். இப்படி அவரது புராணங்கள் நீள்கின்றன.

இந்த தேசத்தில் மதக் கலவரங்கள் தாண்டவமாடியபோது, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலைசெய்து கொண்ட போது, நம் நாட்டில் அந்நியநிறுவனங்கள் நுழைந்து நம் வளங்களைச் சுரண்டுகிறபோதெல்லாம் அன்னா ஹசாரே எங்கிருந்தார் என்ற குறிப்புகளைக் காணோம். அப்போதெல்லாம் மௌனவிரதம் கடைப்பிடித்த இந்த அன்னா ஹசாரேதிடுமென சிலிர்த்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக மட்டும் ஏன் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.

இவரது ராலேகாவ் சித்தி கிராமத்தை எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்பது நிஜம். அந்த சிறியகிராமத்தில் தன்னிறைவு ஏற்பட்டு உள்ளதா ? அண்ணாஹசாரே நிறைய பாடுபட்டிருக்கிறார் என்பது நிஜமா?. ராலேகாவ் சித்தியின் இன்னொரு பக்கத்தை சில ஊடகங்கள் ஏன் வெளியிடாமல் இருக்கின்றன?

அன்னா ஹசாரே எப்படிபட்டவர் ?
ராலேகாவ் சித்தியின் வளர்ச்சிக்கு அண்ணா ஹசாரே ஒருவர் மட்டும் காரணமல்ல. புஷ்பா பாவே, பாபாஆதவ், கோவிந்த்பாய் ஷ்ரோப், மோஹன் தாரியா, அவினாஷ் தர்மாதிகாரி என்று பலரும்இருந்திருக்கிறார்கள். மேலும் வளர்ச்சிக்கு நிதியளித்தவை மத்திய மாநில அரசுகள்!

யாராவது குடித்துவிட்டு வந்தால், அவர்களை தூணில் கட்டிப்போட்டு, ராணுவ பெல்ட்டால் அடிப்பாராம்அண்ணா ஹசாரே! "இப்படிச் சொன்னால்தான் இவர்கள்திருந்துவார்கள்," என்பது இவரது வாதம். என்று; ரீடர்ஸ்டைஜஸ்ட் பத்திரிகை சொல்கிறது.

இவரது கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன; நல்லது. அத்துடன் அசைவ உணவும் தடை செய்யப்பட்டிருக்கிறது எத்தனைபேருக்குத் தெரியும்?

ஆடு, மாடுகளை மேய்ப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இவ்வளவு ஏன் முட்டாள் தனமான ஒன்றும் உண்டு , ஊருக்குள் ஒருத்தரும் வீட்டில் கோடாரி வைத்திருக்கக்கூடாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

அட, கேபிள் டிவி தடை செய்யப்பட்டிருப்பது எத்தனைபேருக்குத் தெரியும்?

கிராமத்தில் இவரிடம் பணிபுரிபவர்களுக்கு அடிமாட்டுக்கூலி கொடுத்து வேலை வாங்குகிறார்.கிராமத்து மக்கள் யாரும் இடம்பெயர்ந்து நகரத்துக்குச்செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறார்.

தன்னிறைவு, விவசாய வளர்ச்சி என்ற கவர்ச்சியான வார்த்தைகளுக்குப் பின்னால், உலகம் தெரியாத கிணற்றுத் தவளைகளாய் தம் கிராமத்து மக்களை இவர்வைத்திருக்கிறார். அங்கிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டஇளைஞர்களை மேற்படிப்புக்கே வாய்ப்பில்லாமல்குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்திருக்கிறார்.

காங்கிரசுக்கும் ஷரத்பவாருக்கும் இடையே ஏற்பட்டகருத்து வேறுபாட்டைப் பயன்படுத்தி, தனக்குத்தேவையான நிதியைப் பெற்றிருக்கிறார். ஷரத் பவார்ஒதுக்கியதும், சிவசேனாவுக்கு ஆதரவு; பிறகு மீண்டும்ஷரத் பவாருக்கு ஆதரவு என்று பச்சோந்தித்தனம் செய்துகாரியங்களைச் சாதித்திருக்கிறார். இன்றுவரையிலும், அவரது உறவினர்கள் பல அரசியல் கட்சிகளில் முக்கியப்பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியுமா?

அண்ணா ஹசாரேயின் ஒரு தம்பிடி கூடசெலவழிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆரம்பப்பள்ளிக்கென்று வழங்கப்பட்ட நிதியை, தான்தங்கியிருக்கும் கோவிலைப் புதுப்பிக்க அண்ணாஹசாரேதான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இதுவா காந்தீயவாதம்? பெல்ட்டால் அடிக்கிறவராஅஹிம்சாவாதி?

ராலேகாவ் சித்தி கிராமத்திலிருக்கும் மக்கள் இவரதுபிடியிலிருந்து விடுபடத் துடிப்பதாக, பல மராட்டியப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள்; இன்னும் எழுதிவருகிறார்கள்.

மகாராஷ்டிராவில், ராஜ் தாக்கரேவின் கொள்கைகள்எனக்குப் பிடிக்கும், அவரது வழிமுறைகள் (violence) தான்எனக்கு ஒத்துவராது என தெரிவித்தார். violenceஇல்லையென்றால் அது காந்தீயம் போலும் அவருக்கு.

‘மண்ணின் மக்கள்’ என்ற கோஷத்தோடு தமிழ், பீகாரி, இந்தி பேசும் பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடும் அவரது எந்தக் கொள்கைகள் அன்னாஹசாரேவுக்குப் பிடித்துத் போனது ?

இனத் துவேஷம், மொழித் துவேஷம் கொண்டு அரசியல்நடத்தும் ராஜ்தாக்கரேவிடம் என்ன காந்தீயத்தை கண்டார் ?

பின்னாளில் நரேந்திர மோடியைப் பாராட்டி கடிதம்எழுதினார். "நரேந்திர மோடியைப் பாராட்டினால் உங்கள்போராட்டத்திற்கு எங்களது ஆதரவு இல்லை," என்று மல்லிகா சாராபாய் ஒரு கடிதம் எழுதியதும்ஆடிபோய்விட்டார் .

மெனக்கெட்டு அஹமதாபாத் சென்று, மெனக்கெட்டு நரேந்திர மோடியின் ஆட்சியை விமர்சித்து "நான் ரொம்பநல்லவன்," என்று எல்லாரையும் நம்ப வைக்கமுயன்றவர் அல்லவா இந்த காந்தீயவாதி?

"ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தூக்கில்போட வேண்டும்," இது அண்ணா ஹசாரே என்ற காந்தீயவாதி உதிர்த்த இன்னொரு முத்து.

அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்ல, மனிதாபிமானஅடிப்படையிலே கூட தூக்குத்தண்டனை என்பதேகூடாது என்று வாதாடுகிற மனித உரிமைக் காவலர்கள் அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொள்வார்களா?

அருந்ததி ராய், மேதா பாட்கர், தீஸ்தா சேத்தல்வாட்,மல்லிகா சாராபாய், நீதிபதி.வி.ஆர்.கிருஷ்ண ஐயர் ஒப்புக்கொள்வார்களா?

அன்னா ஹசாரே நான் காந்தீயவாதிதான். ஆனால்,அப்பப்போ சத்ரபதி சிவாஜியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன்," என்று இதற்கு ஒரு விளக்கம் வேறு!

அன்னா ஹசாரேதான் ஊழல் பூனைகளுக்கு மணி கட்டப்போகிறார் என்கிறார்கள். ஆனால் அவரோ காந்தியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன் ,சிவாஜியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன் என்று அவரே இப்போது மதில் மேல் பூனையாகி இருக்கிறாரே....!

இவரை எப்படி காந்தீயவாதி என்கிறார்கள்?  இவரைஎப்படி இந்த நாடு கொண்டாடுகிறது? மந்திரம்தான்.

ஊழல் பற்றி :-
மத்தியில் இருக்கிற காங்கிரஸ் ஆட்சி ஊழலில் புதியவரலாறு படைத்தது என்பது நமக்கு தெரிந்த விஷயம்.

ஊழல், இந்த தேசத்தின் பெரும் நோய். சகலஇடங்களிலும், மட்டங்களிலும் ஊடுருவி நிற்கிறது. எதைத் தொட்டாலும் அங்கு அழுகிப்போன தார்மீகநெறிகளின் நாற்றமடிக்கிறது.

ஊழலுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதிலோ, அவ்வாறான போராட்டங்களை நடத்துவதிலோதவறில்லை.

ஆனால் அதனை முன்னெடுக்கும் தலைவராக அறியப்படுபவர் நியாயமானவராக இருக்க வேண்டும்.அவரது செயல் சரியானதாக இருக்க வேண்டும்.

இல்லையெனில், அவர் பின்னால் திரளும் மக்கள் ஏமாற்றப்பட்டுவிடுவார்கள். போராட்டங்களுக்கானமுறையான தீர்வு எட்டப்படாமல், சந்தர்பவாதச் சமரசங்களுக்குள் முடக்கப்படுவார்கள், இதனால் மக்கள்போராட்டத்தின் மீதான நம்பிக்கை அற்றுப் போய்விடும்என்பது கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் .

ஊழல் அரக்கனின் உயிரையெடுக்கும் ஆயுதமாக ஒருசட்டம் தேவை என்பதில் மாற்றுக் கருத்துஇல்லை.ஆனால் லோக்பால் மசோதாதான் சரியானது என்பதாகச் சித்திரம் தீட்டப்படுகின்றன.

சட்டங்கள் தேவையென்றாலும், அவற்றை உறுதியோடுஅமல்படுத்துகிற அரசு வேண்டும்.

இன்னொரு புறம். "இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்"நிதியிலிருந்து பணம் கையாடல் செய்ததாக பி.பி.சாவந்த்கமிட்டியால் குற்றம் சாட்டப்பட்ட அண்ணா ஹசாரே.

அண்ணா ஹசாரேவும் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்று மணீஷ் திவாரி குறிப்பிட்டதும், ஹசாரேவுக்கு வந்ததே கோபம் உடனே .

"எனது பெயரை நீக்கும்வரை உண்ணாவிரதம்இருப்பேன்," என்று தன் சுயலாபதிற்க்காக போராட்டம் அறிவித்தார் ..

அடுத்த சில நிமிடங்களில் எல்லா தொலைக்காட்சிகளுக்கும் பேட்டியளித்தநீதிபதி.பி.பி.சாவந்த், "ஆமாம், அண்ணா ஹசாரே ஊழல்செய்ததை நான் குறிப்பிட்டிருக்கிறேன்.(I have indicted Anna Hazare for corruption) என்று அழுத்தம் திருத்தமாகச்சொன்னதும், ஹசாரேவின் வாய் மௌனித்து போனது ஏன் ?.

பி.பி.சாவந்த் அறிக்கை 2003-ல் சமர்ப்பிக்கப்பட்டது. எட்டுவருடமாக அதுபற்றி வாயே திறக்காமல் மவுனம் சாதித்தஅண்ணா ஹசாரேவுக்கு இப்போது ஏன் கோபம்?

இவர்கள்தாம் இந்தச் சட்டத்தை அமல்படுத்தப்போகிறவர்கள் ரொம்ப நல்லவங்க ?

பி.பி.சாவந்த் அறிக்கையினால் பதவியிழந்த முன்னாள்மகாராஷ்டிர அமைச்சர் சுரேஷ் ஜெயின், அண்ணாஹசாரே மீது தொடர்ந்த மானநஷ்ட வழக்கில்அண்ணாவுக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்தது

"சுரேஷ் ஜெயின் போன்ற வசதிபடைத்தவர்களால் நீதிபதிகளை விலைக்கு வாங்கி சாதகமானதீர்ப்புக்களைப் பெற முடியும்," என்று அப்போது அண்ணாதெரிவித்த கருத்துக்களால், அவர்மீது வழக்குதொடரப்பட்டு மிக அண்மையில்தான் அவர்நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார். (ஜூலை2011 -ல் இன்னொரு வழக்கை சமரசமாகப் பேசி, திரும்பப்பெற வைத்திருக்கிறார் )

சுரேஷ் ஜெயின் தொடுத்த மானநஷ்ட வழக்கில் இரண்டுமாதங்கள் சிறைத்தண்டனை பெற்று, சிவசேனாவின் மனோகர் ஜோஷியின் தலையிட்டால் ஒரே நாளில்விடுதலையானவர் அல்லவா காந்தீயவாதி அண்ணாஹசாரே?

இவர்களுக்கு அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேச என்னயோக்யதை இருக்கிறது? அதைமதிப்பவர்களாயிருந்தால், இப்போது இவர்கள் செய்துகொண்டிருப்பது என்ன? அரசியல் சட்டத்தை மதிக்காதவர்களுக்கும், பாராளுமன்ற ஜனநாயகத்தைஏளனம் செய்பவர்களுக்கும் உரிமை கேட்க என்ன தகுதி இருக்கிறது?

னி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் இவர் அவரு நல்லவரா இல்ல கெட்டவரா என்று ?


நன்றி 
திரு.ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV

Monday, May 28, 2012

8 வயதில் கெஞ்சும் பிஞ்சுகள் - பாலிஷ் போட

என் நண்பர் துணை இயக்குனர் P. ரவி நலங்கிள்ளி பாரதி வாசனின் status கொடுத்த பதில் அவர் அனுமதியுடன் ...

*********# (நம் மக்கள் பால்காவடி, உண்ணாவிரதம், கோவில் பிரார்த்தனையெல்லாம் செய்து எப்படியோ மாவோக்களிடமிருந்து அவரை விடுவித்து விட்டார்கள்) ??????????????????????????????????????????????????????

உடன்பாடற்ற வார்த்தைகள் மேற்கண்டவை. போகட்டும்.ஒரு உண்மை தெரியுமா உங்களுக்கு...? கடந்த மாதம் நான் இயக்கவிருக்கும் திரைப்படத்தின் தயாரிப்பாளரைத்தேடி ஒடிசா சென்றிருந்தேன். அந்த வேளையில்தான் அலெக்ஸை கடத்தினார்கள். ஒடிசா தலைநகர் புவனேஷ்வரிலிருந்து கட்டாக், கட்டாகிலிருந்து 83 கி.மீ ( ரயிலில் ) தூரத்தில் பரடீப் ( தாலுக்கா ) நகரம்.அங்கே தான் என் அலுவல்.கிட்டத்தட்ட திருப்பூர் மாவட்டம் அவிநாசி போன்ற ஒரு நகரம் எத்தனை அரசுப்பள்ளிகள் இருக்கவேண்டும் என்பதை கணக்கிட்டுப்பாருங்கள். குறைந்த பட்சம் ஒரு பத்து...? ஒரே பள்ளி கூட இல்லை.!!!!! நம்ப முடியாமல் தீர விசாரித்தேன்.முடிவு அதிர்ச்சி மட்டுமே. சீறுடை அணிந்த பணக்கார வீட்டு குழந்தைகள் மட்டுமே இருக்கும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.கட்டாக் ரயில் நிலையத்தில் நான் காத்திருக்கையில் 8 வயது முதல் 16 வயது வரை உள்ள படிக்கவேண்டிய பருவமுடையவர்கள் ஷூ விற்கு பாலீஷ் போட்டுக்கொள்ளும்படி கெஞ்சுகின்றனர்.



பெங்காலிகளாலும், மராத்தியர்களாலும், ராஜ்புத்திரர்களாலும், மார்வாடிகளாலும் ஒரியாவின் பூர்வக்குடிகளென்னப்படும் பத்ரா இனத்தவர்கள் நகரத்தில் இருந்து உரிமைகளையும் உடமைகளையும் இழந்து அடித்து விரட்டப்பட்டு சாக்குபைகளில் சட்டிப்பானைகளை சுமந்தபடி நாடோடிகளாகிவிட்டார்கள்.காட்டில் மீதமுள்ள பூர்வக்குடிகளை மானங்கெட்ட மத்திய அரசு அக்காடுகளில் உள்ள கனிமங்களை அந்நியருக்கு தாரைவார்க்க அப்பாவிகளுக்கு தீவிரவாத சாயத்தை பூசி வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. அலெக்ஸை கடத்தியவுடன் சுக்மா நகரத்தில் உள்ள போராட்டக்கார்களுக்கு ஆதரவான பெரியோர்களிடமிருந்து கடத்தியவர்களுக்கு சென்ற முதல் தகவலே " நீங்கள் தவறு செய்து விட்டீர்கள்.இந்த மண்ணில் நாம் இழந்துபோன உரிமைகளை மீட்டெடுக்க நமக்கு என்ன தேவையோ அந்தக்கல்வியை நம் மக்களுக்கு உண்மையாக புகட்டவந்த ஒரு உன்னதமானவரை நீங்கள் கடத்தியிருக்கிறீர்கள்.நம் இனம் மீண்டும் இழந்ததை பெறவேண்டுமெனில் நமக்கு கல்வி வேண்டும். அந்த கல்வியைப்பெற அலெக்ஸ் போல அதிகாரிகள் வேண்டும்.விட்டுவிடுங்கள் அவரை "- ( நான் அங்கே இருந்ததால் உள்ளூரில் பேசிக்கொண்டதில் நான் அறிந்துகொண்டது.) என்பதுதான்.சட்டீஸ்கர் ஒடிஸாவை இணைக்கும் ஒரு காட்டில் அவர் விடுவிக்கப்பட்ட விதம் இதுதான் என்பது என் கருத்து.மத்திய , மாநில அரசுகள் அங்கே வெறியாட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றன.போய்ப்பாருங்கள் புரியும்.


Saturday, May 26, 2012

சந்தோஷ் சிவனின் - உறுமி


வாஸ்கோடகாமாவின் மரணத்தின் பின்னணியில் சந்தோஷ் சிவன் உருவாக்கியிருக்கும் ச‌ரித்திரப் படமான இதில் ஆரியா பிருத்விரா‌ஜ், ஜெனிலியா, பிரபுதேவா, பிந்து மாதவி, வித்யாபாலன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

வாஸ்கோ மூன்று முறை இந்திய வந்துசென்ற உண்மை நிகழ்வுகளை வைத்துக்கொண்டு கதை பின்னியிருக்கிறார் சந்தோஷ் சிவன்.வாஸ்கோவிடம் நம்பூதிரி தூதுக்குப் போகும்போது, அரசரின் மகன் ஒருவனும் கூடப் போகிறான். அரசன் என்றால் பெரிய அரசனெல்லாம் இல்லை. குறு மன்னன் போல. அந்த மன்னன் தன் மகனையும் நம்பூதிரியையும் காப்பாற்ற கப்பலுக்குச் செல்கிறான். அங்கேயே வாஸ்கோடகாமாவால் கொல்லப்படுகிறான். அவனது மகன் தப்பித்துவிடுகிறான். தப்பி கரைக்கு வரும்போது, கப்பலில் செத்துப் போனவர்களுக்கு இடையே ஒரே ஒருத்தி மட்டும் தங்கள் நகைகளை எல்லாம் கைகளில் ஏந்தி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள். அந்த நகைகளை வாங்கி அவற்றை உருக்கி ஓர் உறுமியாகச் செய்துகொள்கிறான். அது உறுமி மட்டும் அல்ல. அனைத்து மக்களின் உயிர் மூச்சு. அவனுக்கு உணவும் தங்க இடமும் அளித்து உதவுகிறான் ஒரு இஸ்லாமியத் தமிழ்ச் சிறுவன். இருவரும் வளர்ந்து எப்படி வாஸ்கோடகாமாவை எதிர்கொண்டார்கள் என்பது கதை.

இதன் விமசனம் அட்ராசக்க எழுத்துவார் என்று நினைத்தேன் ,, ஆனால் அவர் MIB க்கு எழுதிவிட்டார் ,
திராவிடத்தில் எனக்கு எப்பவுமே ஒரு ஆவல் உண்டு.
திராவிடத்தை பெருமையாக ட்ரைலரில் காட்டியதால் முதல் நாள் பார்த்தேன். மற்றபடி எனக்கு பெரிய சினிமா அறிவெல்லாம் கிடையாது ,

படம் நல்லாருக்கு நல்லா இல்ல என்றெல்லாம் எனக்கு சொல்லத்தெரியல ...முடிந்தால் படம் பாருங்க இல்லான வரும் நாட்களில் நம்ம தினத்தந்தி ,விகடன்,குமுதம்,விமர்சனகளை, அட அதைவிட நம்ம பதிவர்களின் விமர்சனங்கள் அருமையாக இருக்கும் படித்துகொள்ளுங்கள் .அம்புட்டுத்தான் ...


நன்றி வணக்கம் ........

Thursday, May 24, 2012

மருத்துவம் , பொறியியல் கல்லூரிகளில் சீட் வேண்டுமா ......?


மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சீட் கிடைக்க நீங்கள் செய்ய வேண்டியவை .....
1. உங்கள் மதிப்பெண் பட்டியலை ஒரு ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள் ,

2.அதை நீங்கள் விரும்பும் கல்லூரிக்கு எடுத்து செல்லுங்கள் ,

3.கல்லூரியின் முன்னே போனதும் உரியவரிடம் அதை கொடுங்கள் ,

4.அவரே உங்களுக்கு சீட் கிடைக்குமா கிடைக்காதா என்று சொல்வார் ....

5.கிடைக்கவில்லை என்றால் வேறு கல்லூரிக்கு செல்லவும் ( " கிடைக்காகததுக்கு ஆசை படுறதை விட கிடைச்சத வெச்சு வாழு அப்பதான்  வாழ்க்க நல்லா இருக்குன்னு" எத்தன தமிழ் படத்துல பாத்து இருப்பிங்க )

இன்று தமிழ் நாட்டில் கல்வி ஒரு மிகப் பெரிய வியாபாரம்.
கல்லூரிகள் வசூலிக்கும் பணத்தை விட இடைத்தரகர்கள் வசூலிப்பது இமாலய அளவாக இருக்கிறது .. இன்றும் நிறைய பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மருத்துவராகவும் பொறியியல் வல்லுனராகவும் மட்டுமே வரவேண்டும் என்று நினைக்கின்றனர் ஆனால் தற்போது நம் நாட்டில் பிச்சைகாரங்கள் எண்ணிக்கையைவிட பொறியியல் படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது ,,,கலை , ஊடகம் ,,விவசாயம் போன்ற கல்வி பயின்றவர்களின் தேவை அதிகமாகிக்கொண்டே போகிறது ,,,பல லகரங்களை கொட்டி வாழ்க்கையை வீண் அடிக்காமல் நல்ல கல்வியை படித்து பயன் அடைய +2 வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ,,, ( தோல்வி பெற்ற என் மாணவ செல்வங்களே இன்னும் எத்தனையோ வழி இருக்கு உலகத்தோட ஒண்ணாம் நம்பர் பணக்காரர் நம்ம கம்ப்யூட்டர் கம்பெனி அண்ணன் பில்கேட்ஸ் பெயில் ஆனவரு இங்க மாங்கு மாங்குன்னு படுச்ச நம்ம இஞ்சினியர் தம்பி அவருகிட்ட வேலை செய்யரவரு  புருஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் )

நன்றி ...

Saturday, May 19, 2012

உடனே கையை நீட்டி விடுவார்கள் தமிழர்கள்!





இங்கு ஜோதிடம் பார்க்கப்படும், என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டி விடுவார்கள் தமிழர்கள்!
எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு!
வாழ்க்கையில் ஏற்படும் ஆசையும், அச்சமுமே ஜோதிடத்திற்குக் காரணம். ஜோதிடம் அறிவியல் பூர்வமானது என இந்து மதத்தினர் கூறுவார்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் போலவே இருக்கும். ஆனால் அது அறிவியல் இல்லை.

வள்ளுவர் சொன்னார், கயவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் அவர்களும் மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள் என்றும் அதைப் போலத்தான் இந்த ஜோதிடமும்.

ஜோதிடத்தைப் பலரும் நம்புகிறார்கள் என்றால் என்ன பொருள்? எங்களை நாங்கள் நம்பவில்லை, அறிவியலை நாங்கள் நம்பவில்லை, அறிவை நாங்கள் நம்பவில்லை என்றே பொருள். சரி! ஒருவர் ஜாதகம் பார்க்கிறார்,அவருக்கு ஜோதிடர் சொன்னது போல நடக்க வில்லை,உடனே அவர் என்ன கருத வேண்டும்?

ஜோதிடர் சொன்னது நடக்கவில்லை, அதனால் அது உண்மையல்ல என்ற முடிவுக்குத் தானே அவர் வரவேண்டும்?
ஒரு செய்தியைப் பகுத்தறிந்து தெரிந்து கொள்வதில் சில சிரமங்கள் உண்டு. அதையே பட்டறிந்தும் தெரியாமல் இருந்தால் அது அறியாமை இல்லையா?

இதோ அதுபோன்ற அறியாமையின் அண்மைக்காலச் சில நிகழ்வுகளை வாசித்துப் பாருங்கள்.திருச்சி,திருவெறும்பூரில் வசிப்பவர் அரசெழிலன். இவர் தம் வீட்டில் கணினி வைத்திருக்கிறார்.
இவருக்கு இயல்பிலேயே ஜோதிடத்தின் மோசடிகளை அறிவதில் ஆர்வம்.

அந்த வகையில் ஒரு நண்பரின் மூலம் ஜாதகம் குறித்த ஒரு மென் பொருளை (Software) வாங்கியுள்ளார். அந்த மென் பொருளின் பெயர் லைப் ஷைன் (Life sign)..

இந்த ஜாதக மென்பொருளை புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திலுள்ள தமிழ்நாடு கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் தயார் செய்து வருகிறது. இதன் விலை ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறதாம்.


இந்த மென்பொருளைக் கணினியில் பொருத்தினால் யார் வேண்டுமானாலும் ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம். ஒருவரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோரின் பெயர், ஊர் ஆகியவற்றை கணினியில் பதிவு செய்தால், 36பக்கங்களைக் கொண்ட ஜோதிடப் பலன்கள்(?) உடனடியாக வெளிவருகின்றன.

அதை வைத்துதான் பலரின் பிழைப்பும் இங்கு ஓடிக் கொண்டிருக்கிறது.
இதில் சகித்துக் கொள்ள முடியாத கொடுமை என்ன வென்றால், நாங்கள் கணினித் துறையில் புலியாக்கும்,சிங்கமாக்கும் எனப் பீற்றிக் கொள்பவர்களும் இதற்குப் பலியாகிறார்கள்.

இந்த நிலையில் அரசெழிலன் தம் விவரத்தைக் கணினியில் பதிவு செய்துள்ளார். வழக்கம் போலவே 36பக்கங்கள் வந்து விழுந்து விட்டன.

பிறகு மீண்டும் புதிய விவரம் ஒன்றைப் பதிவு செய்துள்ளார். அதில் தன் பெயர், பெற்றோர் பெயர், ஊர் எல்லாம் சரியாகப் பதிந்து, பிறந்த தேதி என்ற இடத்தில்31.10.2025 எனக் குறிப்பிட்டுள்ளார்.

உடனே 36 பக்கங்கள் வந்துவிட்டனவாம். 2025 ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் 15 ஆண்டுகள் உள்ளன. அதற்கும் ஜோதிட பலன்கள் வந்து விட்டது.

அதேபோல திருச்சி தொடர் வண்டி மைதானத்தில் (ஜி கார்னர்) அண்மையில் ஒரு பொருள்காட்சி நடைபெற்றது. அதில் காகபுஜண்டர் கம்ப் யூட்டர் ஜோதிடம் எனும் பெயரில் ஒருவர் கணினியுடன் ஜோதிடம் பார்த்துள்ளார். நம்மவர்கள்தான் ஏமாறுவதில் கில்லாடிகளாச்சே!

ஏராளமான பேர் வரிசையில் நின்றுள்ளனர். அப்போது இராஜா, மூர்த்தி, சுரேஷ் எனும் மூன்று குறும்புக்கார இளைஞர்களும் கூட்டாக வந்துள்ளனர்.

அந்த காகபுஜண்டர் கம்ப்யூட்டர் ஜோதிடத்தின் ஏமாற்று வேலை என்ன தெரியுமா?

முதலில் இரண்டு கைகளையும் தண்ணீரில் மூழ்க வேண்டும். அப்படியே ஈரத்துடன் ஸ்கேனர் போன்ற ஒரு கருவியில் வைக்க வேண்டும். உடனே கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, அதற்குரிய பலன்கள் கணினி மூலம் வெளியாகின்றன.

அந்தக் குறும்புக்கார இளைஞர்களும் அதேபோன்று செய்து விட்டு, பொருள்காட்சியின் மற்ற பகுதிகளுக்குச் சென்று விட்டனர். மீண்டும் 30 நிமிடம் கழித்து அவ்விடத்திற்கு வந்து, திரும்பவும் ஜாதகம் பார்த்துள்ளனர்.

முதலில் வெளியான பலனும் ( print out) அடுத்து வந்த பலனும் முற்றிலும் வெவ்வேறாக இருந்துள்ளன. ஜாதகம் உண்மையானால் எத்தனை முறை கைரேகையைப் பதித்தாலும், ஒரே மாதிரி அல்லவா வரவேண்டும்?

அந்த இளைஞர்களும் காகபுஜண்டரிடம் தகராறு செய்துவிட்டு, தலையில் அடித்துக் கொண்டே சென்று விட்டனர். கணினியை மனிதன்தான் கண்டுபிடித்தான். அதுவும் ஆறாவது அறிவான, பகுத்தறிவைக் கொண்டு கண்டுபிடித்தான். மற்றபடி கணினிக்கு என்று தனிஅறிவு கிடையாது.

வெளிநாட்டுக்காரன் கண்டுபிடிக்கும் விஞ்ஞானத்தை அறிவுக்கும் பயன் படுத்தலாம்; அழிவுக்கும் பயன் படுத்தலாம். நம்மவர்களுக்கு இரண்டாவதுதான் சாத்தியமாகிறது. மகா வெட்கம்!

நன்றி :- குறும்பன் 

Thursday, May 17, 2012

வாழ்க ராசா - வளர்க தி.மு.க ....




எத்தனையோ அரசியல் வழக்குகளை பார்திருக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றங்களும், டெல்லி உயர் நீதிமன்றமும், டெல்லி உச்ச நீதிமன்றமும். ஒரு அரசியல் வழக்கை கவனிக்க, அதன் தீர்ப்பை ஆவலுடன் அதாவது நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்கிற மாதிரியான ஒரு உணர்விலேஅதே அரசியல்வாதியின் தொகுதியை சேர்ந்த மக்கள் இத்தனை நூறு மைல்கள் அப்பால் இந்திய கடைக்கோடியில் இருந்து வந்து நிற்கும் காட்சியை அந்த நீதிமன்ற வாசல்படிகள் இதுவரை கண்டதுண்டா? அந்த நீதிபதிகள் கண்டதுண்டா? அங்கு வந்து செல்லும் வழக்கறிஞர்கள் கண்டதுண்டா? ஏன் இத்தனை கூட்டம்? நினைத்துப்பாருங்கள் நீதிபதிகளே! உங்களுக்கே உண்மை புரியும். தான் அரசியல்வாதி என்பதை விட, தன் தொகுதிக்கு அருமையாக உழைக்கும் ஒரு எம்.பி என்பதையும் விட, தன் திராவிட இன சிங்கத்தை காண வந்த கூட்டமாய் தான் அந்த கூட்டம் தெரிகின்றது.
என்றார் அபி அப்பா ....

ஒரு வார்த்தையின் வீரியம் என்று அண்ணன் சிவ சங்கர் சொன்னது ..

பாட்ஷா திரைப்படத்தில் , ரஜினியின் தங்கை மருத்துவக் கல்லூரியில் எப்படி இடம் கிடைத்தது எனக் கேட்கும்போது , ரஜினி சொல்லும் பதில் " உண்மையைச் சொன்னேன் ".

அன்று காலை, 2ஜி -க்கான சி.பி.அய் சிறப்பு நீதிமன்றத்தில், வந்தவுடன் நீதிபதி ஒ.பி.ஷைனி கேட்டக் கேள்வி, " where is Mr.Raja ? "
ஆனால் அண்ணன் ராசா, பிணை கிடைப்பது சிரமம் என நேற்றிலிருந்தே எங்களை எந்த முடிவுக்கும் தயார் படுத்தி வந்தார்.
நண்பகல் 12.40. தீர்ப்புக்கான நேரம். நீதிபதி தீர்ப்பு நகலை கையிலெடுத்து சொல்லத் துவங்கினார். சொல்லுமுன்பே, வழக்கறிஞர் வட்டாரத்திலிருந்து கைத்தட்டல் கிளம்பிவிட்டது.
வாயிலுக்கு வெளியில் நின்ற கழகத் தோழர்களிடமிருந்து மகிழ்ச்சிக் குரல் வெடித்துக் கிளம்பியது. திரும்பியப் பக்கமெல்லாம் கைக்குலுக்கல், கட்டியணைப்பு, ஆனந்தக்கண்ணீர்.
கலங்கியக் கண்களோடு வழக்கறிஞரைக் கேட்கிறேன்," ஷைனி என்ன சொன்னார் ",
# application ALLOWED .......


பொள்ளாச்சியில் இருந்து சென்றிருந்த எங்கள் உடன்பிறப்பு நவநீதக்ருஷ்ண ராமசாமி தன் பதிவில் ...

அண்ணன் ராசாவை சந்திக்க பாட்டியால வளாக சிறப்பு நீதிமன்றத்திற்கு எங்கள் பொள்ளாச்சி நகர செயலாளர் தென்றல் செல்வராஜுடன் செல்லும் வாய்ப்பு கிட்டியது..சரியாக காலை 9.30 மணிக்கு நாங்கள் நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்தோம்.பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் இருந்து தொண்டர்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருந்தனர்.அதிலும் குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள தொண்டர்கள் அவரை பார்க்க குவிந்து இருந்தனர்.ஒரு சிலர் ரயில்நிலையத்தில் இருந்து நேரடியாக அங்கே வந்திருந்தனர்.நீதி மன்ற வளாகமே எதோ தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.சரியாய் பத்து மணிக்கு கனிமொழி எம் பி ,மானமிகு அண்ணன் ராசா எம் பி வந்தனர்.நீதிபதி சைனி முன்பு ஆஜராகிவிட்டு வரவேற்பு அறையில் காத்திருந்த தொண்டர்களை சந்திக்க வந்தவர் கேட்ட முதல் கேள்வி அனைவரும் சாப்பிடீர்களா.....கேட்டவர்தன்னை பார்க்க வந்த பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட தோழர்களை ஒவ்வோருவரையும் பெயர் சொல்லி அழைத்து தனது பெஞ்சில் உட்காரவைத்து அவர்கள் தோளில் கை வைத்து உள்ளாட்சி தேர்தலில் என்ன நடந்தது....ஏன் தோற்றோம் என்று வினவியவர் அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி இவ்வளவு தொலைவு ஏன் வந்தீர்களை என்று கூறினார்..எங்கள் அனைவரையும் எங்கள் மாவட்ட பற்றி வினவியவர் மதிய உணவை வந்திருந்த அனைவருக்கும் தனது இல்லத்திலேயே தனது உதவியாளரிடம் சொல்லி ஏற்பாடு செய்தார்.ஒரு முழு தலைவனை, அருகில் இருந்த பார்த்த திருப்தி.அவரை கைது செய்த போது அவர் ndtv கொடுத்த பேட்டியில் அவர் உச்சரித்த கடைசி மூன்று வரிகள் நினைவில் நின்றது...
I DID IT FOR MY PEOPLE,
FOR MY COUNTRY,
AND FOR MY LEADER....



ஆனால் இன்று ...
பொது ஜனங்கள் தேசத்தின் உண்மை நிலையை உணருவதற்கு ஆதாரமாயிருப்பது வர்த்தமானப் பத்திரிகைகள் என்று சொல்லுவார்கள். ஆனால், அவை நமது நாட்டின் உண்மை நிலையை மறைத்துப் பொய்யைச்சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி, ஒருவரைக் கெடுத்து ஒருவர் பிழைப்பதற்குத்தான் அவை முழுவதும் ஆதாரமாயிருந்து வருகிறது.






நன்றி-குமார்

Monday, May 14, 2012

காம சாமிகள் - மாமிகள் ஜாக்ரத்தை











''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டு இருக்கும் அற்புத விளம்பர ஜோடனைதான் இதற்குக் காரணம்'' என்று சொல்லும் மனநல மருத்துவர் ருத்ரன், ''இவர்களுக்கான தேவை இந்தச் சமூகத்தில் உள்ளது.மெகா ஆசிரமம்,அதிகார வட்டச் செல்வாக்கு, சமூக சேவை என்ற போர்வை இவையே அந்தத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள இவர்கள் தங்களை நிறுவிக்கொள்கிறார்கள்.

இன்று இருக்கும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதாவது ஒரு சந்தேக ரேகையாவது படர்ந்தே வருகிறது. தன்னிடம் இருந்த சிறுவர்களுடன் ஹோமோ செக்ஸில் ஈடுபட்டார், அதைப் பார்த்த மற்ற பையன்களைக் கொன்றுவிட்டார்... கொலை வழக்கில் இருந்து தப்பிக்க சாமியார் ஆனார்... தனது சகோதரியையே பாலியலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்... பெரிய சாமியாரைக் கொல்ல சின்ன சாமியார் மருந்துவைத்தார்... தனக்குப் பிறந்த பையனையே அடுத்த வாரிசாக ஆக்கி, பிறகு பிரச்னை வந்ததும் போலீஸில் புகார் சொன்னார்... என்று இன்று இருக்கும் கோடீஸ்வர சாமியார்கள் அத்தனை பேர் மீதும் புகார்க் கதைகள் உண்டு. தான் எடுத்து வளர்த்த சிறுமிகள் வயதுக்கு வந்ததும் அவர்களைத் தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், கொலை வரைக்கும் போய் சிக்கிய பிரேமானந்தா, இரட்டை ஆயுள் தண்டனை வாங்கி உள்ளேஇருந்தார் . ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீதான கொலை வழக்கின் விசாரணை பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. கல்கி சாமியார் பற்றி ஏராளமான புகார்கள். தியானம், யோகா, ஹீலிங், பிரசங்கம், மெடிடேஷன் என்று பக்தர்களை வளைப்பதாகக் பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இது போன்ற வகுப்புகளை நடத்துவதால் சாமியார்களிடம் கோடிக் கணக்கான பணம் சேர்ந்துவிடுவது இல்லை. பணம் சேருவது பகீர் வழியாக இருக்கிறது.

தன்னைப்பற்றியும் தனது மடத்தைப்பற்றியும் கதைகளை முதலில் உருவாக்கிக்கொள்கிறார்கள் இந்தச் சாமியார்கள். ஆன்மிகம் என்றால் யாரும் முதலில் வரத் தயங்குவார்கள் என்பதால், சமூக சேவை, மருத்துவத் தொண்டு என்று காரணம் சொல்லி அதிகார மைய ஆட்களை அழைப்பார்கள். மடங்களுக்குள் வரும் தொழிலதிபர்களுக்கு இந்த அதிகார மைய ஆட்களுடன் சாதாரணமாக நெருக்கம் ஏற்பட்டுவிடுகிறது. பெரும்பாலான வங்கிக் கடன்களை வாங்கித் தருவதும் பரிந்துரை செய்வதும் இந்தச் சாமியார்களே. முதலில் மடத்தின் வளர்ச்சிக் காக நன்கொடைகள் தருபவர்களிடம் சில புரோக்கர்கள் மூலமாகப் பேரம் பேசப்படுகிறது. 'உங்கள் பணத்தை சாமியிடம் கொடுத்துவைக்கலாம். உங்களுக்கு எப்போது தேவையோ, அப்ப தந்திருவார். சாமியே உங்களிடம் கேட்கச் சொன்னார்' என்று சொல்லப்படும். சாமியிடம் நல்ல பெயரை வாங்குவதற்காக தொழிலதிபர்களும் பெரும் தொகைகளைக் கொடுத்துவைக்கிறார்கள். அறக்கட்டளைக்குப் பணம் கொடுத்தால், வருமான வரிவிலக்கு இருக்கும் என்பதால் பணம் குவிகிறது. சாமியார்களது எல்லைகள் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் இருப்பதால், இங்கு இருந்து அங்கும், அங்கு இருந்து இங்கும் பணத்தை மாற்றிக்கொள்ள ஹவாலா வேலைகள் சாமியார்கள் மூலமாகப் பார்க்கப்படுகிறது. முக்கியமானவர்கள் தங்களது லாக்கராக இந்த சாமியார்களைப் பயன்படுத்துகிறார்கள்.
‘பாலியல் சுதந்திரம்’ என்ற பெயரில் கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளை வளர்க்கக் கோருகிறது உலகமயம். இதன் மூலம், குடும்ப உறவுகளை சிதைத்து, மனிதர்களை உதிரிகளாக்கி இலாபம் கொழுக்கவும் அது திட்டமிடுகிறது. இதனையே வழிமொழிந்து, ‘உன்னை மட்டும் யோசி, உன்னிலிருந்து தான் எல்லாம் பிறக்கிறது’’ என்று போதிக்கிறார்கள் நவீன சாமியார்கள். ”இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்; மாற்ற முயலாதே” என்பதும் சிறீ சிறீ ரவிசங்கரின் உபதேசம்.

பெருமளவில் நிதிக்குவிந்து நிறுவனமயமான காரணத்தால் இந்த நவீன சாமியார்களுக்கு எளிதில் அரசியல் செல்வாக்கும் வந்து சேர்கிறது. சந்திராசாமி, ஜெயேந்திரர் போன்ற மோசடி சாமியார்கள் ஒரு நாட்டிற்குள் உள்ள அரசியல்வாதிகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலை மாறி, இன்று சிறீ சிறீ ரவிசங்கர் போல பல நாடுகளுக்கு இடையே தரகு வேலை பார்க்கும் நிலையாக இந்த நவீன சாமியார்களின் நிலை முன்னேறியுள்ளது.

மதங்களைக் கடந்த ஆன்மிகம் என இந்த நவீனச் சாமியார்கள் கூறினாலும், அவர்கள் மூழ்கிக் கிடப்பதென்னவோ இந்துத்துவ அரசியலில் தான். இதனை அவர்களது, இந்துமத சார்பு - வடமொழி சார்பு நிலையை மட்டும் வைத்து உணர்த்தவில்லை. நேரடியான அரசியல் நடவடிக்கையின் மூலமாகவே உணர்த்தியிருக்கின்றனர்.

“அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் நீயும் நானும் தோழர்களே! என்று கூறிய சேகுவேராவின் கருத்து மிகவும் மோசமான கருத்து. அவரை இளைஞர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடாது’’ என ஒரு நூல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே பேசினார் ஜக்கி வாசுதேவ்.

‘புவி வெப்பமயமாதலிலிருந்து உலகைக் காக்க மரம் நடுங்கள்’ என்று, மரங்கள் நடுவதற்கான திட்டம் தீட்டிய ஜக்கி வாசுதேவ், முதலாளிகளின் இலாப வேட்டைக்காக உலகெங்கும் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டதன் விளைவு தான் புவி வெப்பமயமாதல் என்ற உண்மையை பேசுவதில்லை. அதற்கெதிராகப் போராடுவதும் அவரைப் பொறுத்தவரை “வன்முறை கருத்து”.


அதாவது, ‘போராட்டம் என்பதே கூடாது. ஒவ்வொரு தனிமனிதரும் அவரவர் வாழ்க்கையை ஒழுங்காய் நடத்தினால் போதும்” என்று கூறி, மனிதர்களை குழுவாக இயங்க விடாமல் செய்து, உதிரிகளாக்கிட விரும்புகின்ற முதலாளியத்தின் குரலைத் தான் இந்த நவீன சாமியார்கள், “உள்ளுணர்வு”, “தனிமனித ஒழுக்கம்’, “தன்னிலிருந்து யோசி” என்று பல்வேறு வடிவங்களில் கூறுகிறார்கள்.
இவர்கள் சமூகநலன் வேடம் போட்டு இருப்பதால் வருமான வரி, லஞ்ச ரெய்டுகள் மடங்களில் நடத்துவது சாத்தியம் இல்லாததாகவே ஆகிவிட்டது. தென் மாவட்ட மடம் ஒன்றில் தங்கக் கட்டிகள் எடுக்கப்பட்டதும், இறந்துபோன சென்னைச் சாமியாரின் சொத்தை அவரது நண்பர் சுருட்டிக் கொண்டுபோய் தனித்தொழில் தொடங்கியதும் நாடு பார்த்த விஷயங்கள்தான். இப்படி இருண்ட பக்கங்களால் நிரம்பியிருக்கிறது சாமியார்கள் கதை.

''தவறு சமயத்தில் இல்லை. இந்து மதப் புரோகிதர்கள் பலவிதமான கொடுங்கோல் இயந்திரங் களைக் கண்டுபிடித்துள்ளனர். அதில்தான் வம்பு பொதிந்துள்ளது'' என்றார் விவேகானந்தர். இவை குறித்துக் கண்காணிக்க இந்து சமய அறநிலையச் சட்டத்தில் இறுக்கமான சரத்துகள் இருக்கின்றன. சொத்தைத் தவறாகக் கையாண்டால் மடாதிபதியாகத் தொடர முடியாது, ஒழுக்கக் கேடான வாழ்க்கை வாழ்பவராக அறியப்பட்டாலோ, தமக்குரிய கடமையைத் தவறி நெறிபிறழ்ந்தார் என்றாலோ நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சட்டம் சொல்கிறது. ஆனால், சாமியார்கள் விஷயத்தில் சட்டம் தனது கடமையைச் செய்வது இல்லை.

எனவே, இந்த நவீனச் சாமியார்களின் குற்றங்களை தனிநபர் குற்றங்களாக மட்டும் கருதாமல் அதனை சமூகப் பின்னணியுடன் தொடர்பு படுத்தி ஆராய்தலே நமக்கு உண்மைக் குற்றவாளியை அடையாளம் காட்டும்.

வரம்பற்ற வேலை நேரம், தலையை கொதிக்க வைக்கும் வேலைச்சுமை, எந்த நேரத்திலும் வெளியில் வீசப்படலாம் என்ற நிலை இவற்றுக்கிடையே உயர் ஊதியத்திற்காக பணியாற்றிக் கொண்டு, குடும்ப உறவை, மன அமைதியை, சமூக வாழ்க்கையை இழந்து தவிக்கும் உயர் நடுத்தர இளைஞர்களுக்கு உடனடி நிவாரணமாக பலவித போதைகள் வழங்கப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், இந்த உலகமய உயர்நுட்ப சாமியார்களின் உபதேசங்கள். காரணங்களைப் போக்காமல் விளைவுகள் மீது கவனத்தைத் திருப்பும் உலகமய உத்திகளில் ஒன்று தான் சாமியார்களின் வளர்ச்சி.
மூடநம்பிக்கைகளை கட்டுப்படுத்த சமூக சீர்திருத்தக் குழுவை கருணாநிதி தொடங்கினார்.மக்கள் ஆதரவும் இல்லை ஒரு மண்ணும் இல்லை





இப்படிப்பட்ட எண்ணங்களில் இருந்து மக்கள் விடுபட்டு சுயமாக சிந்திக்க வேண்டும். ‘அவரைப் பார்த்தாலே மனசுக்கு நிம்மதியா இருக்கு..', ‘அவர் கண்ணுல தனி தேஜஸ் தெரியுது', ‘அவரோட புன்னகையிலகூட ஒரு மெஸேஜ் இருக்கு' என்றெல்லாம் யாரோ சொல்வதை வைத்துக் கொண்டு, தாங்களும் செய்தி பரப்பிக் கொண்டிருக்காமல்.. ‘இவர் பார்வையே கொஞ்சம் திருட்டுத்தனமா இருக்கே..', ‘வர்றவங்களையெல்லாம் இப்படி ஓவரா தொட்டுப் பேசறாரே.. இந்த நடவடிக்கை லேசா இடிக்குதே..', என்று தங்கள் சுய சிந்தனைக்கும் கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும். அப்போதுதான் இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்கதையாகாது!தாங்கள் சொல்லி வரும் ஒழுக்கக் கோட்பாடுகளுக்கும் போட்டுவரும் பிரம்மச்சரிய வேஷத்துக்கும் விரோதமாகச் செயல்படும் சாமியார்களிடம் ஜாக்கிரதையாக இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள்தான் பகுத்தறிவு பலம் பெற வேண்டும்!

இதுக்குமேல உங்க இஷ்டம் ....

நன்றி -கருணை முகம் 

Saturday, May 12, 2012

நல்லவர்களை அடையாளம் காட்டுவோம் ?


நல்லவர்களுக்கு நாட்டில் குறைவில்லை, அரசியலில்... முடிந்தவரை பதிவர்களும் நேர்மையானவர்களை அடையாளம் காட்டுவோம்.

அய்க்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண் பாட்டு அமைப்பானது  (UNESCO), அய்க்கிய நாடுகள் சபையின் (UNO)முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந் நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே, கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது.

மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டி யெழுப்புவதான நோக்கத்தை அடை வதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது.
இது பன்னாட்டு அறிவார்ந்த கூட்டமைப்பு மற்றும் ஆணைக் குழுவின் வழித் தோன்றல் ஆகும். இது 193 உறுப்பு நாடுகளையும் 7 கலந்து கொள்ளும் உறுப்பினர்களையும் கொண்டது. இது களப்பணி அலுவலகங்கள் மூலமாகவும், 3 அல்லது அதற்கு மேலான நாடுகளின் கூட்டு அலுவலகங்கள் மூலமாகவும் செயல் படுகிறது.

கல்வி, இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், பண்பாடு, செய்தித் தொடர்பு போன்ற 5 முக்கிய நிரல்கள் மூலமாக இதன் நோக்கங்கள் நிறைவேற்றப்படு கிறது.

எழுத்து அறிவித்தல் பன்னாட்டு அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊடகங்கள், அச்சமைப்புகள் ஆகியவற்றின் சுகந்திரத்தைப் பாதுகாத்தல், அந்தந்தப் பகுதியின் பண்பாடு மற்றும் வரலாற்றுத் திட்டங்களை உயர்த்துதல் உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை இவற்றை பாதுகாக்க உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை இதன் திட்டங்கள் ஆகும். இது உலக நாடுகளின் முன்னேற்ற குழுவின் ஒரு அங்கம் ஆகும்.

இப்படிப்பட்ட ஒரு உயரிய நல்லெண்ண அமைப்பின் தெற்காசிய பசிபிக் பிரிவின் ஆலோசகராக நமது மரியாதைக்குரிய தோழர். அசேன் முகமது ஜின்னா அவர்கள் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்த ஒரு திராவிடத் தமிழர் இப்படிப் பட்ட உயரிய நிலைக்கு சென்றிருப்பதற்கு அடிப்படைக் காரணம், அவரது திறமையும் உழைப்பும் ஆகும். மேலும் அந்த திறமையும் உழைப்பும் அங்கீகரிக்கப்பட காரண மாக இருகின்ற திராவிட இயக்கமும் அதன் கொள்கைகளும் என்றால் அது மிகையாகாது.
யுனெஸ்கோ அமைப்பு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில், "நன்கு படித்த, சமூக அக்கறை கொண்ட, பெண்கள் முன்னேற்றதுக்காக பாடுபடும் இளம் அரசியல் தலைவரான ஜின்னாவின் நியமனம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு உதவும்," என்று குறிப்பிட்டுள்ளது.

நன்றி :- ரகு 

Thursday, May 3, 2012

அழகியின் அடங்காத காமம் .....

படித்து ரசியுங்கள். உலகை இருளடைய செய்த லீலைகள்.

சுவாஹாதேவியை பகவான்கள் அனுபவித்த இன்பக் கதை.
ஒரு பகவானின் அடங்கா காமாந்தகார காதலியை லவ‌ட்டிய மற்றொரு அடங்கா காம பகவான்.தட்ஷன் என்னும் மன்னனை ஞாபகம் இருக்கிறதா?... பார்வதி... தாட்சாயினியாக அவதரித்தபோது அவருக்கு அப்பனாக இருந்தவனாக்கும்.

இந்த தட்ஷன், பிரகதி என்னும் குமரியுடன் கூடிக் கொஞ்சி தழுவித்திளைத்து சந்தோஷித்ததன் விளைவாக வந்து குதித்தவள் சுவாஹாதேவி.
இவளது இளமையும் அழகும் எடுப்பும் நடையும் நளினமும் எம மகராஜனையே கொல்லத் துணிந்தன.

பார்த்தான் எமதர்மன். இவளை விட்டால் தனது அழகு என்னும் அஸ்திரத்தால் என்னையே கொன்று விடுவாள் போல, என மயங்கினான். 
சுவாஹாதேவி மீது காதல் கொண்டான் எமன். அதற்காக திட்டம் போட்டான். 
சுவாஹாதேவியை தன் சக்தியால் எலுமிச்சை பழமாக்கினான். அந்தப் பழத்தை விழுங்கி தன் வயிற்றுக்குள்ளேயே வைத்துக் கொண்டான். 

தேவைப்படும் போது வெளியே எடுத்து அவளை அனுபவிப்பான். பிறகு விழுங்கி விடுவான்.
இப்படித்தான் ஒருமுறை சுவாஹாதேவியை வெளியே எடுத்து நந்தவனத்தில் உலவவிட்டு கொஞ்சிக் குலவினான் எமன். இருவரும் காமக் களியாட்டங்களில் கரைபுரண்டனர். மோகப் போரின் முடிவில் எமனுக்கு பயங்கர களைப்பு. என்ன செய்தான்? அப்படியே நந்தவனத்திலேயே தூங்கிவிட்டான்.

சுவாஹாதேவியோ தன் செழித்த அழகோடு நந்தவனத்தில் தனித்து விடப்பட்டாள். அப்போது அந்த வழியே அக்னிதேவன் நடந்து வர அவனைப் பார்த்துவிட்டாள்.
ஏய் அக்னி இங்கே வா... என்னிடம் சுகத்தைக் குடி. எனக்குள் எரியும் மோக நெருப்பை நீதான் தணிக்க முடியும் என அழைத்து எம‌ன் விழிப்ப‌த‌ற்குள் அவனை ஆசையோடு அணைத்து தழுவி ஆலிங்க‌ன‌ம் செய்து கொண்டு ... அந்த‌ நந்த‌வ‌ன‌ மெத்தையிலே மன்ம‌த‌ ந‌ர்த்த‌ன‌மாடின‌ர். 

எம‌ன் தூங்கும் பொழுது இவ‌ர்க‌ளின் இள‌மை விழித்துக் கொண்டு விளையாடிக் க‌ளித்து தன் ஆவலை தீர்த்துக் கொண்டாள் சுவாஹாதேவி.
சுவாஹா - அக்னி - சுகானுபவம் நடந்து முடிந்ததும் அந்த எலுமிச்சை வித்தையை கையிலெடுத்தாள் சுவாஹா. 

இந்த அக்னி நமக்கு பூரண சுகம் தருகிறான். நாம் இவனை எலுமிச்சைப் பழமாக்கி விழுங்கிவிட்டால் வேண்டும்போது வெளியே எடுத்து தீண்டிக் கொள்ளலாம். ஆசைக் கோட்டை தாண்டிக் கொள்ளலாம். 
என திட்டம் போட்ட சுவாஹா அக்னியை ஒரு எலுமிச்சை பழமாக்கி விழுங்கிவிட்டாள்.

இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு ஆசுவாசமாக விழித்தான் எமதர்மன். சுவாஹாதேவி எதுவுமே நடக்காதது போல தன் கச்சைகளை சரிசெய்து கொண்டு கச்சிதமாக உட்கார்ந்திருந்தாள்.
எமன் விழித்ததும் இளமை ததும்ப நின்ற சுவாஹாதேவியை வழக்கம் போல் எலுமிச்சை பழமாக்கி விழுங்கிவிட்டான். 

சுவஹாதேவியோ அக்னியை எலுமிச்சை பழமாக்கி ஏற்கனவே விழுங்கி விட்டாள். அப்படிபட்டவளை எமன் ஒரு பழமாக்கி விழுங்கி விட்டான். 
இதனால் என்ன ஆனது?.... அக்னி தேவன் சுவாஹாதேவிக்குள் சென்று விட்டதால் உலகில் அசாதாரண நிலை ஏற்பட்டது.
தாய்மார்கள் சமைக்க முடியவில்லை. ஏனென்றால் அடுப்புக்கு அக்னியில்லை. அடுப்புக்கு அக்னியில்லை என்றால் உலகம் எப்படி இயங்கும்?

விஷ்ணுவுக்கு விவரம் தெரிந்தது.

எமன் அசந்த வேளையில்... சுவாஹா அக்னியோடு ஆனந்தக் கூத்தாடியதையும்... பிறகு எலுமிச்சம் பழமாக்கி தன் வயிற்றுக்குள் வைத்துக் கொண்டதையும் அறிந்து கொண்டார் விஷ்ணு. 

இப்போது சுவாஹாதேவி எலுமிச்சை பழமாக எமன் வயிற்றில் இருப்பதையும் அறிந்தார் விஷ்ணு.
எனவே எமனை அழைத்து... உனக்குள் எலுமிச்சை பழம் போல இருக்கும் சுவாஹாதேவியை வெளியே விடு என்றார்.

அப்படியே செய்தான்.

வெளியே வந்த சுவாஹாதேவியிடம் ‘உன் வயிற்றுக்குள் இருக்கும் அக்னிதேவனை வெளியே விடு’ என்றார் விஷ்ணு. 
சுவாஹாதேவி ஆசைப்பட்டது போல்... அக்னிதேவனை அவளுக்கே மணமுடித்து வைத்தனர். 

ஆனால்... சுவாஹாதேவியை அவள் இளமையை ருசித்த அக்னிக்கு ஆசை இன்னும் அடங்கவில்லை.
அழகுப் பதுமையாய் சதைச்சிற்பமாய் சுவாஹாதேவி காத்திருக்க... அக்னியோ சப்தரிஷி மண்டலத்தில் எப்போதும் ஜொலித்துக் கொண்டிருக்கும் ரிஷிகளின் மனைவிகளோடு குஷியாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டான்.

இதை தனது மனைவியான சுவாஹாதேவியிடமே சொன்னான்.

அடியேய்... உன்னை அனுபவித்து அனுபவித்து எனக்கு சலிப்பாகிவிட்டது. சப்தரிஷி மண்டலத்தில்என்றும் இளமையாக இருக்கும் ரிஷிகளின் மனைவிகளோடு தேக ஆனந்தம் கொள்ள துடிக்கிறேன் என்றான். 
நான் இருக்க ஏண்டா அவள்களுக்கெல்லாம் ஆசைப்படுகிறாய் என்றல்லவா சுவாஹா கேட்டிருக்கவேண்டும்? கேட்டாளா?... இல்லை. 

பிறகு?... அப்படியே ஆகட்டும்... ஆனால் ஒன்று அந்த ரிஷிகளின் மனைவிகள் போல நானே உருவம் எடுத்து வருகிறேன். நீ அனுபவித்துக் கொள் என்று யோசனை சொன்னாள் சுவாஹா.
சப்த ரிஷிகள் என்றால் ஏழுபேர். இவர்களில் ஒவ்வொரு ரிஷியின் மனைவியரை போலவும் உருவெடுத்து சுவாஹாதேவி வர... அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உயிர் நடுங்க உவகையாய் புணர்ந்து பூரித்தான் அக்னி. 

இன்னும் ஒருத்தி பாக்கியிருக்கிறாள். அவள்தான் வசிஷ்டரின் மனைவி அருந்ததி.
ஆறு ரிஷிகளின் மனைவிகளையும் அனுபவித்தவன், அடுத்து கடைசியாக அருந்ததியை அனுபவிக்க தயாராக இருந்தான்.
சுவாஹாதேவி தனது சக்தியால் அருந்ததி போல உருவம் எடுக்க முயற்சித்தாள். ம்ஹூம். முடியவில்லை. என்னென்னமோ செய்தாள். 
ஆனாலும் அருந்ததி போல் அவளால் உருவெடுக்க முடியவில்லை. ஏனென்றால்... அருந்ததி கற்புக்கு அரசி.

இதை உணர்ந்து கொண்ட சுவாஹாதேவி, அருந்ததியை பார்த்தபடி... தேவி... நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னிப்பாயாக. இனி... அக்னி முன்னிலையில் நிகழும் ஒவ்வொரு கல்யாணத்திலும்... உன்னைப் பார்த்து வணங்கினால் அந்த தம்பதிகள் சுகம், தனம், புத்திரர்களைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள் என்று கூறினாளாம்.

அதன்படிதான்... இன்னும் கல்யாணத்தின் போது அருந்ததி நட்சத்திரம் பார்க்கிறார்கள்.

அது காலை மணி 9-9.45 சூரியதேவன் எரியும் நேரமாக இருக்கும்போதும் அருந்ததி நட்சத்திரம் பார்க்கிறீர்களே எப்படி?... 

உங்கள் மனைவியைவிட அருந்ததிக்கு கற்பு அதிகம் என நீங்கள் நம்புகிறீர்களா?... 

அம்மி மிதித்தாயிற்று. அருந்ததி யாரென்று பார்த்தாயிற்று. - ---“புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்” ,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய” 


நன்றி:- இந்து மதம் எங்கே போகிறது

குறிப்பு :-என்ன கொடுமட இது 
நல்ல வேலை நான் அருந்ததிய தியேட்டர்ல மட்டும் தான் பார்த்தேன் ..
இப்படிக்கு
உங்கள் பாபுங்கோ

Tuesday, May 1, 2012

ஈழமா - ஒரு மயிரும் கிடைக்காது

தமிழீழம் , டெசோ , கொலைஞர் , செண்டமிலன் , கார்டூன் பீலா ,துரோகி,எதிரி,கருணா,கருவறுப்போம்,ஒரவுகளே,தள்ளு தள்ளு , சொம்பு ,கொசுறு ,டம்ளர்கள் , இனம், வந்தேறி ,நாதாரி ,டவுசர், ஆகிய வார்த்தைகள் இணையத்தில் அதிகம் உலாவுகிறது ...இது அனைத்தும் ஒரு பிரச்னையையும் ஒரு மனிதனையும் சுற்றியே வருகிறது ..

அந்த பிரச்சனை ஈழம் , அந்த மனிதர் கலைஞர் ,, 

சரி நாம் யார் ? இப்படி பேசுபவர்களும் ஏசுபவர்களும் நம் எதிரிகளா ? அல்லது நாம் வெவ்வேறு இனமா?இல்லை வெவ்வேறு மொழியா?

இல்லை இல்லை நம் சகோதரர்கள்தான் ஏன் இப்படி பேசிக்கொண்டிருக்கிறோம் ,இப்படி பேசிக்கொண்டிருப்பதால் என்ன பயன் , 
ஒரு மயிரும் கிடையாது,

தனி நாடாக இன்றைக்கு ஈழம் பெறுவது என்பது சாத்தியமா? உணர்ச்சிவசப்படாமல் இன்றைய யதார்த்த சூழ்நிலையை உணர்ந்து கொண்டால் இது நமக்கு புரியும். ஒரு புதிய நாடு இன்றைய உலக சூழ்நிலையில் உருவாகுவது சிரமமான ஒன்று. வல்லாதிக்க நாடுகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஒரு புதிய நாடு உருவாக முடியும். கொசாவோ, தீமோர் லெசுடே போன்ற நாடுகள் ஏதோ ஒரு வல்லரசு நாடுகளின் ஆதரவில் உருவானவைதான். இன்றைக்கு தமிழர்களுக்கு ஆதரவு தரும் அப்படியான நாடு ஒன்றும் இல்லை. பலர் ஒரு விடயத்தை இன்னும் உணரவேயில்லை. இன்று நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். தமிழர்களுக்கு இதை விட ஒரு பேரவலம் நேர்ந்து விட முடியாது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகையில் உலகமே வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கிறது.

சிங்கள அரசின் கோர இனவெறி இன்று வெளிப்பட்டு இருந்தாலும் தனி நாடு என்ற கோரிக்கையே தமிழர்களை பிற நாடுகள் ஏற்றுக் கொள்ளாமைக்கு காரணம். நம் மீதான உலகத்தின் பார்வை நியாயமற்றது தான். அதனை சரி செய்ய கூட நம்மிடம் பலம் இல்லை என்பதே உண்மை. We are Powerless. பழங்கதைகளை பேசி தமிழனின் வீரபிரதாபங்களை மேடைகளில் முழங்குவதால் எந்த மற்றமும் நம்மிடம் வந்து விடாது.

மாறாக நம்முடைய சம உரிமைக்கான அரசியல் போராட்டம் நம் போராட்டத்தின் நியாயத்தினை வெளிப்படுத்தும். சிங்கள அரசு மீது உள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும், தமிழர்களின் நியாயமான காரணங்களும் இன்றைக்கு வெளிவந்து விட்டது. சரியான அரசியல் வியூகம் நமக்கு இருக்குமானால், இலங்கையில் சமமான உரிமையும், நிம்மதியான வாழ்வையும் தமிழர்களுக்கு பெற்று தர முடியும்.

இன்றும் யாருக்கு அந்த வலிமை இருக்கிறது என்று பார்போம் ..

இந்திய விடுதலைக்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி தமிழக அரசியல் என்பது பார்பனீயம் சார்ந்த இந்திய தேசியத்திற்கும், திராவிட அரசியலுக்கும் இடையே நடக்கும் தொடர்ச்சியான போராட்டமாகவே இருந்து வந்திருக்கிறது. திராவிட நாடு கோரிய அண்ணா பிறகு அதனை கைவிட்டார். இந்திய தேசியம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல், ஹிந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் மூலம் தமிழ் சார்ந்த திராவிட அரசியல் பாதைக்கு திரும்பியது. 1967ல் தமிழ் ஆதரவு - தமிழ் எதிர்ப்பு என்ற இரண்டு அரசியல் வியூகங்களில் தான் தமிழக அரசியல் அமைந்து இருந்தது. தமிழ் ஆதரவு, திராவிட அரசியல் பார்வை வலுப்பெற்றவுடன் திமுக வெற்றி பெற்றது. அதற்கு எதிரான காங்கிரஸ் தூக்கி எறியப்பட்டது.

அடுத்த இருபது ஆண்டுகள் திராவிட தமிழ் அரசியல் சார்ந்த பாதையிலேயே தமிழக அரசியல் நகர்ந்தது. அது தமிழ் சார்ந்த அரசியலுக்கு ஒரு ஆரோக்கியமான பாதையையும் அமைத்து கொடுத்தது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் இன்றும் தனித்துவமாக தெரிய இது முக்கியமான காரணம் .சில விடயங்களில் ஆரோக்கியமற்ற சூழ்நிலையும் அமைந்தது. குறிப்பாக ஈழப் போராட்டத்தில் எம்.ஜி.ஆர் விடுதலைப் புலிகளையும், கருணாநிதி டெலோ போன்ற அமைப்புகளையும் ஆதரிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது. என்றாலும் தமிழக அரசியல் என்பது தமிழின ஆதரவு என்ற வட்டத்தில் இருக்கும் போட்டியாகவே வளர்ந்தது. இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் போட்டி போட்டு கொண்டு தமிழ் ஆதரவு அரசியலில் சுழன்றன.
இதை மாற்ற பார்ப்பன ஊடகங்கள் எப்பொழுதும் துடித்துக் கொண்டே தான் இருந்தன. எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அதற்கு பயன்படுத்தின. ஆனால் அது நிறைவேற வில்லை. அதற்கு காரணம் கருணாநிதிக்கு இருந்த வசீகரம் மற்றும் திராவிடத் தலைவர் என்ற அடையாளம். பேரறிஞர் அண்ணா காலத்தில் அண்ணாவை விட போர்க்குணம் மிக்கவராக கருணாநிதியே இருந்தார். அது தான் கருணாநிதி பல முண்ணனி தலைவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னே வர காரணம்.

எனவே பார்ப்பன ஊடகங்கள் மற்றும் அதிகாரமையத்தின் முயற்சிகள் அக் காலகட்டத்தில் எடுபடவில்லை. திராவிட அரசியல் என்பது கருணாநிதியின் அரசியல் என்பதாகவும், அதற்கு எதிரானது கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பதாகவும் அமைந்தது. கருணாநிதியை சுற்றி கருணாநிதி எதிர்ப்பு, கருணாநிதி ஆதரவு என்ற பாதையிலே திராவிட அரசியல் அமைந்தது. இந்த போக்கு 1991 வரை தொடர்ந்தது.

1991க்கு பிறகு திராவிட தமிழ் அரசியல் புறந்தள்ளப்பட்டு இந்திய தேசியத்தின் பார்வையில் தமிழக அரசியல் நகர்ந்தது. பார்ப்பன ஊடகங்கள் ராஜீவ் காந்தி மரணத்தை இதற்கு பயன்படுத்திக் கொண்டன. இந்திய தேசியத்திற்கு ஆதரவானவராக ஜெயலலிதாவும், இந்திய தேசியத்திற்கு விரோதியாக கருணாநிதியும் பார்க்கப்படும் சூழ்நிலை உருவெடுத்தது. 

கருணாநிதியை பார்ப்பன ஊடகங்களும், ஜெயலலிதாவும் தொடர்ச்சியாக இந்திய தேசிய விரோதியாக வெளிப்படுத்திய சூழ்நிலையில் இந்திய தேசியத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு கருணாநிதி தள்ளப்படுகிறார். திமுகவை தீண்டத்தகாத கட்சியாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பார்த்தன. திராவிட தமிழ் அரசியலின் அடையாளமாக, பார்ப்பனர்களை எரிச்சல்படுத்திய கருணாநிதியை தன் சதியால் சில அகில உலக பார்ப்பனர்கள் தமிழனுக்குள் குழப்பம் விளைவிக்க செய்த வன்மமான விடயம்தான் ராஜீவ் ஜெயா கூட்டணி ...


சோவின் அரசியலை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை தெரியவரும். கருணாநிதியை மையப்படுத்தி கருணாநிதி ஆதரவு, கருணாநிதி எதிர்ப்பு என்ற பாதையில் நகர்ந்து கொண்டிருந்த தமிழக அரசியல் 1991க்கு பிறகு ஜெயலலிதா ஆதரவு, ஜெயலலிதா எதிர்ப்பு என்ற பாதைக்கு மாறத் தொடங்கியது.
இவ்வாறு தமிழக அரசியலின் போக்கு மாறியதற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவின் தமிழின எதிர்ப்பு, இந்திய தேசிய ஹிந்துத்துவ ஆதரவு அரசியல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தமிழின எதிர்ப்பு அரசியல். காங்கிரசின் போக்கு ராஜாஜி, பக்தவச்சலம் காலத்தில் தொடங்கியது. அவ்வளவு சீக்கிரம் அது மாறி விடாது.

இந்த போக்கு 2008ம் ஆண்டு வரை தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. தமிழக அரசியல் கட்சிகள் மைய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சூழ்நிலையில் இந்த போக்கு வளர்ந்தது. திமுக தன்னை முழுமையாக இந்திய தேசியத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது.
1991க்கு பிறகு நேர்ந்த அரசியல் மாற்றங்களால் தமிழ்நாட்டு தமிழ்களின் வளர்ச்சிக்காக தன்னை தேசிய எதிர்ப்பு பாதையில் இருந்து விலக்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.
இவ்வாறு திமுக இந்திய தேசியம் சார்ந்த நிர்பந்தத்திற்கு பணிய தொடங்கியதும் ஒட்டு மொத்த தமிழினமும் அந்த பாதையிலே சென்றது. ஏனெனில் திமுகவை தவிர வேறு அமைப்புகளால் அதனை மாற்றக்கூடிய சக்தி இல்லை. இது ஒரு வகையில் பார்ப்பனீய அரசியலின் வெற்றி என்றும் சொல்லலாம்.


திமுகவை தொடர்ந்து பல கட்சிகள் திமுகவின் பாதையை பின்பற்ற தொடங்கின. திமுக ஏற்படுத்திய தமிழின அரசியல், தமிழ் மொழி சார்ந்த சில விடயங்களை தன் கையில் எடுத்துக் கொள்வதே இந்த கொசுறு கட்சிகளின் நோக்கமாக ஆரம்ப காலங்களில் இருந்தது..பிறகு தன் அரசியல் லாபத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் , தனித்தனியாக தமிழீழ அரசியல் செய்ய துவங்கியது ..










மீண்டும் ஜெ ஆட்சியில் 2001 க்குப் பிறகும் தனி ஈழத்திற்கு எதிரான பரப்புரைகளும், அந்த ஆதரவாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகளும் மாநில அரசால் கட்டவிழ்த்து விடப்பட்டன.இதுதான் சமயம்... இனி அங்கு என்ன நடந்தாலும் தமிழகத் தமிழர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற சதிகாரர்களுக்கான அற்புதமான சூழல் இங்குதான் ஏற்பட்டது .

தமிழகம் எப்பொழுதுமே திமுக தலைவர் கருணாநிதி அவர்களை தான் தமிழினம் சார்ந்த எல்லாப் பிரச்சனைக்கும் எதிர்நோக்கி இருந்து வந்துள்ளது. கருணாநிதி எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுத்து விடவில்லை. என்றாலும் நிராகரிப்பும் செய்ததில்லை. அதனாலேயே அவர் தமிழினத்தலைவர் என்று கொண்டாடப்ப்டுகிறார்..

இன்றும் கலைஞர் மோசம் , துரோகி என்றும் , நாம் சொல்லிக்கொண்டு இருக்கிறோமே திவிர நம்மை பிரித்தாழும் சூழ்ச்சியை செய்தது யார் ? நாம் இழப்பிற்கு காரணம் யார் என்றுகூட தெரியாமல் இன்றும் நாம் ஒருவருக்கொருவர் காட்டூன் வரைந்துகொண்டும் ,ஏசிகொண்டும் , தூற்றிகொண்டும்தான் இருக்கிறோம் ...

தனி வாழ்க்கையானாலும் பொது வாழ்க்கையானாலும ,குரோதம் என்பது மனிதர்களுடனேயே அடைந்து கிடக்க வேண்டுமே தவிர அம்பலத்திற்கு வந்து அலம்பல் செய்யக் கூடாது.

ஆதாயம் பெற்றவர்கள், ஆதாயம் பெறத் துடிப்பவர்கள் ஆயிரம் கூறலாம். ஆனால், ``அறிவார்ந்தவர்கள் எனக் கூறப்படும் திராவிடர்கள் அப்படி நடந்து கொள்ளக்கூடாது.

அவர்களின் அபிலாஷைகளுக்கு ரப்பர் ஸ்டாம்ப்ஆகக் கூடாது.

நம் ஒவ்வொரு இழப்பிற்கும் யார் காரணம்,
நாம் யார் ?
நம் வரலாறு என்ன ?
நாம் ஏன் பிளவுபட்டோம் ?
நம் பொது எதிரி யார் ?
நம்முடைய உண்மையான எதிரி யார்? 
என்பதை புரிந்துகொள்ளாமல் இருந்ததுதான் ...
இனத்தால், மொழியால், மனதால் ஒன்றுபட்டிருக்க வேண்டிய நாம் ஆரிய சதியால் பிளவுபட்டோம்!

சரி விடுங்கள் இனியும் நாம் அப்படியே இருப்பதா இல்லை என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள் ...

எவ்வளவு பட்டாலும் நமக்கு புத்திவராதா? இந்த அளவுக்கு நிலமை சென்றதெற்குக் காரணமே நம்மவர்களை நாமே புரிந்துகொள்ளாததுதான் தமிழையும் திராவிடதையும் எதிர்க்கும் இந்த இந்தியவும், பார்பனர்களும் ஒருபோதும் தமிழீழத்தை சாத்தியமாக அனுமதிக்காது; அரசியல் ரீதியிலும், ராஜதந்திர ரீதியிலும் போராட்டத்தை பரவலாக்கி இந்தியாவின் சதி வேலைகளை முறியடித்துச்செல்லும் வகையில் போராட்டத்தை செலுத்தாமல் இந்தியா உதவும் என்றிருப்பது, முதலையின் மீதேறி ஆற்றைக் கடக்கலாம் என்று நினைப்பதற்கு ஒப்பாகும்.

நம் மக்கள் ஏதோ ஒரு நிகழ்வில் ஒன்று சேர்வார்கள் என்று பார்த்தால்
மாறி மாறி அடிபட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்..
தமிழீழமே நிரந்தர தீர்வென அறிவித்து மீண்டும் டேசொவை தொடங்கி மேடைதோறும் குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கும் இந்த சூழலை உண்மையான ஈழ ஆதரவாளர்கள் யாராக இருந்தாலும் பயன்படுத்திக்கொள்வார்கள்.டெசோ என்று கலைஞர் அறிவித்த பின்பும் நாம் ஒன்று சேரவில்லை என்றால் ,மீண்டும் நம் வீழ்ச்சிக்கு முன்பு நடைபெற்றது போல நாமே காரணமாகிவிடுவோம் ...

இந்த பதிவு யார் மனதையாவது

புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் தோழர்களே ..
நான் ஒரு சாமானியன்.எழுதுவதை தவிர ஒரு சாமானியனான என்னால் எதுவும் செய்து விட முடியாது. அது தான் இன்றைய சூழ்நிலையில் எனக்கும், பலருக்கும் உள்ள இயலாமை.
என் மனதில் சரி என்று நினைக்கும் விடயங்களையே எழுதுகிறேன். அது தான் என்னுடைய எழுத்திற்கும் நியாயமாக
இருக்கும். ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதே என் விருப்பம் . அதைத் தவிர வேறு எதுவும்மில்லை. அது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பதிவை முடிக்கிறேன்.


"எதிரிகளின் படைபலத்தை எடை போடாதீர்கள். நம் கொள்கையின் மனப்பலத்தை கொண்டு எதிரிகளின் ஆயுதங்களை செயலிழக்க வைப்போம்!"

- தோழர் லெனின்