தொகுப்புகள்

Search This Blog

Thursday, May 17, 2012

வாழ்க ராசா - வளர்க தி.மு.க ....




எத்தனையோ அரசியல் வழக்குகளை பார்திருக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றங்களும், டெல்லி உயர் நீதிமன்றமும், டெல்லி உச்ச நீதிமன்றமும். ஒரு அரசியல் வழக்கை கவனிக்க, அதன் தீர்ப்பை ஆவலுடன் அதாவது நல்ல தீர்ப்பு வர வேண்டும் என்கிற மாதிரியான ஒரு உணர்விலேஅதே அரசியல்வாதியின் தொகுதியை சேர்ந்த மக்கள் இத்தனை நூறு மைல்கள் அப்பால் இந்திய கடைக்கோடியில் இருந்து வந்து நிற்கும் காட்சியை அந்த நீதிமன்ற வாசல்படிகள் இதுவரை கண்டதுண்டா? அந்த நீதிபதிகள் கண்டதுண்டா? அங்கு வந்து செல்லும் வழக்கறிஞர்கள் கண்டதுண்டா? ஏன் இத்தனை கூட்டம்? நினைத்துப்பாருங்கள் நீதிபதிகளே! உங்களுக்கே உண்மை புரியும். தான் அரசியல்வாதி என்பதை விட, தன் தொகுதிக்கு அருமையாக உழைக்கும் ஒரு எம்.பி என்பதையும் விட, தன் திராவிட இன சிங்கத்தை காண வந்த கூட்டமாய் தான் அந்த கூட்டம் தெரிகின்றது.
என்றார் அபி அப்பா ....

ஒரு வார்த்தையின் வீரியம் என்று அண்ணன் சிவ சங்கர் சொன்னது ..

பாட்ஷா திரைப்படத்தில் , ரஜினியின் தங்கை மருத்துவக் கல்லூரியில் எப்படி இடம் கிடைத்தது எனக் கேட்கும்போது , ரஜினி சொல்லும் பதில் " உண்மையைச் சொன்னேன் ".

அன்று காலை, 2ஜி -க்கான சி.பி.அய் சிறப்பு நீதிமன்றத்தில், வந்தவுடன் நீதிபதி ஒ.பி.ஷைனி கேட்டக் கேள்வி, " where is Mr.Raja ? "
ஆனால் அண்ணன் ராசா, பிணை கிடைப்பது சிரமம் என நேற்றிலிருந்தே எங்களை எந்த முடிவுக்கும் தயார் படுத்தி வந்தார்.
நண்பகல் 12.40. தீர்ப்புக்கான நேரம். நீதிபதி தீர்ப்பு நகலை கையிலெடுத்து சொல்லத் துவங்கினார். சொல்லுமுன்பே, வழக்கறிஞர் வட்டாரத்திலிருந்து கைத்தட்டல் கிளம்பிவிட்டது.
வாயிலுக்கு வெளியில் நின்ற கழகத் தோழர்களிடமிருந்து மகிழ்ச்சிக் குரல் வெடித்துக் கிளம்பியது. திரும்பியப் பக்கமெல்லாம் கைக்குலுக்கல், கட்டியணைப்பு, ஆனந்தக்கண்ணீர்.
கலங்கியக் கண்களோடு வழக்கறிஞரைக் கேட்கிறேன்," ஷைனி என்ன சொன்னார் ",
# application ALLOWED .......


பொள்ளாச்சியில் இருந்து சென்றிருந்த எங்கள் உடன்பிறப்பு நவநீதக்ருஷ்ண ராமசாமி தன் பதிவில் ...

அண்ணன் ராசாவை சந்திக்க பாட்டியால வளாக சிறப்பு நீதிமன்றத்திற்கு எங்கள் பொள்ளாச்சி நகர செயலாளர் தென்றல் செல்வராஜுடன் செல்லும் வாய்ப்பு கிட்டியது..சரியாக காலை 9.30 மணிக்கு நாங்கள் நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்தோம்.பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் இருந்து தொண்டர்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருந்தனர்.அதிலும் குறிப்பாக ஏழ்மை நிலையில் உள்ள தொண்டர்கள் அவரை பார்க்க குவிந்து இருந்தனர்.ஒரு சிலர் ரயில்நிலையத்தில் இருந்து நேரடியாக அங்கே வந்திருந்தனர்.நீதி மன்ற வளாகமே எதோ தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.சரியாய் பத்து மணிக்கு கனிமொழி எம் பி ,மானமிகு அண்ணன் ராசா எம் பி வந்தனர்.நீதிபதி சைனி முன்பு ஆஜராகிவிட்டு வரவேற்பு அறையில் காத்திருந்த தொண்டர்களை சந்திக்க வந்தவர் கேட்ட முதல் கேள்வி அனைவரும் சாப்பிடீர்களா.....கேட்டவர்தன்னை பார்க்க வந்த பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட தோழர்களை ஒவ்வோருவரையும் பெயர் சொல்லி அழைத்து தனது பெஞ்சில் உட்காரவைத்து அவர்கள் தோளில் கை வைத்து உள்ளாட்சி தேர்தலில் என்ன நடந்தது....ஏன் தோற்றோம் என்று வினவியவர் அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறி இவ்வளவு தொலைவு ஏன் வந்தீர்களை என்று கூறினார்..எங்கள் அனைவரையும் எங்கள் மாவட்ட பற்றி வினவியவர் மதிய உணவை வந்திருந்த அனைவருக்கும் தனது இல்லத்திலேயே தனது உதவியாளரிடம் சொல்லி ஏற்பாடு செய்தார்.ஒரு முழு தலைவனை, அருகில் இருந்த பார்த்த திருப்தி.அவரை கைது செய்த போது அவர் ndtv கொடுத்த பேட்டியில் அவர் உச்சரித்த கடைசி மூன்று வரிகள் நினைவில் நின்றது...
I DID IT FOR MY PEOPLE,
FOR MY COUNTRY,
AND FOR MY LEADER....



ஆனால் இன்று ...
பொது ஜனங்கள் தேசத்தின் உண்மை நிலையை உணருவதற்கு ஆதாரமாயிருப்பது வர்த்தமானப் பத்திரிகைகள் என்று சொல்லுவார்கள். ஆனால், அவை நமது நாட்டின் உண்மை நிலையை மறைத்துப் பொய்யைச்சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி, ஒருவரைக் கெடுத்து ஒருவர் பிழைப்பதற்குத்தான் அவை முழுவதும் ஆதாரமாயிருந்து வருகிறது.






நன்றி-குமார்

4 comments:

  1. நீங்கள் தமிழரில்லை எஸ்ஸியோ,பல கோடி ரூபாயை ஆட்டைய போட்ட கள்ளச் சிரிப்பழகன் தூ....தூ

    ReplyDelete
  2. ஐயைய்யோ.....!!!!!அண்ணன் இவ்ளோ நல்லவரா...??????அமாம் அந்த 17600000000000000000கோடி( சைபர் போட்டு கையை வலிக்குதப்பா ) எங்கப்பா...???அண்ணன்கிட்ட கேட்டு சொல்லுங்கப்பா...?????

    ReplyDelete
  3. உன் நிலை அறிய மானிடா உன்னை நினைத்து சிரிப்பு தான் வருது!

    அடுத்தவர் நிலை கூற நீ தாகுதியானால் சரிதான்! சிரிப்பு சிங்காரம்!

    ReplyDelete