அன்னாஹசாரேவிற்கு மேலாடை இன்றி உடலில் எழுதி ஆதரவு அளித்த யோகிதா..
ஜன லோக்பால் மசோதா நிறைவேற்றியது என்றால் நிர்வாணமாக நடனமாடுவேன் என தற்பெருமையுடன் யோகிதா தனடேகரை சொல்ல வைத்த அண்ணா ஹசாரே மீண்டும் இன்றைய ஊடகங்களின்தலைப்புச் செய்தியைப்பிடித்திருக்கிறார் . ஒரு காந்தியவாதியின் ஊழலுக்குஎதிரான போராட்டம் என்பது இவரது நடவடிக்கைக்குக் கொடுக்கப்படும் விளம்பரம்.
இவரது போராட்டம் குறித்து பல்வேறு கருத்துநிலைகள் எழுந்துள்ளன.
ஊழலுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாத நிலையில்,ஒரு துருப்புச் சீட்டாக அவரைப் பயன்படுத்தி அரசின்அராஜகத் தன்மைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முன்னெடுப்போம் என்கின்ற வாதப்பிரதிவாதங்களும் சமஅளவில் எழுந்தவண்ணமிருக்கின்றன.
அவர் முக்கியமல்ல அவர் முன்னெடுத்திருக்கும்போராட்டம் முக்கியமானது என்பது வரையில் எழும்கருத்துக்கள் எதுவும் நிராகரிக்கப்படக் கூடியதல்ல.
காந்திக் குல்லாயுடன் போராட வந்திருக்கும்அன்னாஹசாரே ஒரு நேர்மையான காந்தியவாதி அல்ல.இவர் ஒரு போலிக்காந்தியவாதி என்பது முதல்,அவருக்குப் பின்னால் அணிதிரளும் மக்கள்ஏமாற்றப்பட்டு விடுவார்கள் என்ற எச்சசரிக்கைக்குரல்களும் உண்டு .
யார் சார் அவரு நல்லவரா இல்ல கெட்டவரா
கடவுளா ? அரக்கனா ?
அன்னா ஹசாரே யார் ?
கிஷன் பாபுராவ் ஹசாரே இதுத்தான் அவரது முழு பெயர் .அன்னா ஹசாரே, முன்னாள் ராணுவ வீரராம்.அங்கிருக்கும் போதுதான் அவர் மகாத்மா காந்தி, வினோபா பாவே, விவேகானந்தரையெல்லாம்படித்தாராம்! அவரது கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதை ஒழித்தாரம். தீண்டாமையை இல்லாமல் ஆக்கினாராம். பசுமைப் புரட்சி செய்தாராம். இப்படி அவரது புராணங்கள் நீள்கின்றன.
இந்த தேசத்தில் மதக் கலவரங்கள் தாண்டவமாடியபோது, விவசாயிகள் லட்சக்கணக்கில் தற்கொலைசெய்து கொண்ட போது, நம் நாட்டில் அந்நியநிறுவனங்கள் நுழைந்து நம் வளங்களைச் சுரண்டுகிறபோதெல்லாம் அன்னா ஹசாரே எங்கிருந்தார் என்ற குறிப்புகளைக் காணோம். அப்போதெல்லாம் மௌனவிரதம் கடைப்பிடித்த இந்த அன்னா ஹசாரேதிடுமென சிலிர்த்துக்கொண்டு ஊழலுக்கு எதிராக மட்டும் ஏன் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்.
இவரது ராலேகாவ் சித்தி கிராமத்தை எல்லாரும் கொண்டாடுகிறார்கள் என்பது நிஜம். அந்த சிறியகிராமத்தில் தன்னிறைவு ஏற்பட்டு உள்ளதா ? அண்ணாஹசாரே நிறைய பாடுபட்டிருக்கிறார் என்பது நிஜமா?. ராலேகாவ் சித்தியின் இன்னொரு பக்கத்தை சில ஊடகங்கள் ஏன் வெளியிடாமல் இருக்கின்றன?
அன்னா ஹசாரே எப்படிபட்டவர் ?
ராலேகாவ் சித்தியின் வளர்ச்சிக்கு அண்ணா ஹசாரே ஒருவர் மட்டும் காரணமல்ல. புஷ்பா பாவே, பாபாஆதவ், கோவிந்த்பாய் ஷ்ரோப், மோஹன் தாரியா, அவினாஷ் தர்மாதிகாரி என்று பலரும்இருந்திருக்கிறார்கள். மேலும் வளர்ச்சிக்கு நிதியளித்தவை மத்திய மாநில அரசுகள்!
யாராவது குடித்துவிட்டு வந்தால், அவர்களை தூணில் கட்டிப்போட்டு, ராணுவ பெல்ட்டால் அடிப்பாராம்அண்ணா ஹசாரே! "இப்படிச் சொன்னால்தான் இவர்கள்திருந்துவார்கள்," என்பது இவரது வாதம். என்று; ரீடர்ஸ்டைஜஸ்ட் பத்திரிகை சொல்கிறது.
இவரது கிராமத்தில் புகையிலைப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன; நல்லது. அத்துடன் அசைவ உணவும் தடை செய்யப்பட்டிருக்கிறது எத்தனைபேருக்குத் தெரியும்?
ஆடு, மாடுகளை மேய்ப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
இவ்வளவு ஏன் முட்டாள் தனமான ஒன்றும் உண்டு , ஊருக்குள் ஒருத்தரும் வீட்டில் கோடாரி வைத்திருக்கக்கூடாது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
அட, கேபிள் டிவி தடை செய்யப்பட்டிருப்பது எத்தனைபேருக்குத் தெரியும்?
கிராமத்தில் இவரிடம் பணிபுரிபவர்களுக்கு அடிமாட்டுக்கூலி கொடுத்து வேலை வாங்குகிறார்.கிராமத்து மக்கள் யாரும் இடம்பெயர்ந்து நகரத்துக்குச்செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு விதித்திருக்கிறார்.
தன்னிறைவு, விவசாய வளர்ச்சி என்ற கவர்ச்சியான வார்த்தைகளுக்குப் பின்னால், உலகம் தெரியாத கிணற்றுத் தவளைகளாய் தம் கிராமத்து மக்களை இவர்வைத்திருக்கிறார். அங்கிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டஇளைஞர்களை மேற்படிப்புக்கே வாய்ப்பில்லாமல்குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்திருக்கிறார்.
காங்கிரசுக்கும் ஷரத்பவாருக்கும் இடையே ஏற்பட்டகருத்து வேறுபாட்டைப் பயன்படுத்தி, தனக்குத்தேவையான நிதியைப் பெற்றிருக்கிறார். ஷரத் பவார்ஒதுக்கியதும், சிவசேனாவுக்கு ஆதரவு; பிறகு மீண்டும்ஷரத் பவாருக்கு ஆதரவு என்று பச்சோந்தித்தனம் செய்துகாரியங்களைச் சாதித்திருக்கிறார். இன்றுவரையிலும், அவரது உறவினர்கள் பல அரசியல் கட்சிகளில் முக்கியப்பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பதை மறுக்கமுடியுமா?
அண்ணா ஹசாரேயின் ஒரு தம்பிடி கூடசெலவழிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஆரம்பப்பள்ளிக்கென்று வழங்கப்பட்ட நிதியை, தான்தங்கியிருக்கும் கோவிலைப் புதுப்பிக்க அண்ணாஹசாரேதான் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இதுவா காந்தீயவாதம்? பெல்ட்டால் அடிக்கிறவராஅஹிம்சாவாதி?
ராலேகாவ் சித்தி கிராமத்திலிருக்கும் மக்கள் இவரதுபிடியிலிருந்து விடுபடத் துடிப்பதாக, பல மராட்டியப் பத்திரிகைகளில் எழுதியிருக்கிறார்கள்; இன்னும் எழுதிவருகிறார்கள்.
மகாராஷ்டிராவில், ராஜ் தாக்கரேவின் கொள்கைகள்எனக்குப் பிடிக்கும், அவரது வழிமுறைகள் (violence) தான்எனக்கு ஒத்துவராது என தெரிவித்தார். violenceஇல்லையென்றால் அது காந்தீயம் போலும் அவருக்கு.
‘மண்ணின் மக்கள்’ என்ற கோஷத்தோடு தமிழ், பீகாரி, இந்தி பேசும் பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடும் அவரது எந்தக் கொள்கைகள் அன்னாஹசாரேவுக்குப் பிடித்துத் போனது ?
இனத் துவேஷம், மொழித் துவேஷம் கொண்டு அரசியல்நடத்தும் ராஜ்தாக்கரேவிடம் என்ன காந்தீயத்தை கண்டார் ?
பின்னாளில் நரேந்திர மோடியைப் பாராட்டி கடிதம்எழுதினார். "நரேந்திர மோடியைப் பாராட்டினால் உங்கள்போராட்டத்திற்கு எங்களது ஆதரவு இல்லை," என்று மல்லிகா சாராபாய் ஒரு கடிதம் எழுதியதும்ஆடிபோய்விட்டார் .
மெனக்கெட்டு அஹமதாபாத் சென்று, மெனக்கெட்டு நரேந்திர மோடியின் ஆட்சியை விமர்சித்து "நான் ரொம்பநல்லவன்," என்று எல்லாரையும் நம்ப வைக்கமுயன்றவர் அல்லவா இந்த காந்தீயவாதி?
"ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தூக்கில்போட வேண்டும்," இது அண்ணா ஹசாரே என்ற காந்தீயவாதி உதிர்த்த இன்னொரு முத்து.
அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்ல, மனிதாபிமானஅடிப்படையிலே கூட தூக்குத்தண்டனை என்பதேகூடாது என்று வாதாடுகிற மனித உரிமைக் காவலர்கள் அண்ணாவின் கருத்தை ஏற்றுக்கொள்வார்களா?
அருந்ததி ராய், மேதா பாட்கர், தீஸ்தா சேத்தல்வாட்,மல்லிகா சாராபாய், நீதிபதி.வி.ஆர்.கிருஷ்ண ஐயர் ஒப்புக்கொள்வார்களா?
அன்னா ஹசாரே நான் காந்தீயவாதிதான். ஆனால்,அப்பப்போ சத்ரபதி சிவாஜியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன்," என்று இதற்கு ஒரு விளக்கம் வேறு!
அன்னா ஹசாரேதான் ஊழல் பூனைகளுக்கு மணி கட்டப்போகிறார் என்கிறார்கள். ஆனால் அவரோ காந்தியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன் ,சிவாஜியின் கொள்கைகளையும் கடைபிடிப்பேன் என்று அவரே இப்போது மதில் மேல் பூனையாகி இருக்கிறாரே....!
இவரை எப்படி காந்தீயவாதி என்கிறார்கள்? இவரைஎப்படி இந்த நாடு கொண்டாடுகிறது? மந்திரம்தான்.
ஊழல் பற்றி :-
மத்தியில் இருக்கிற காங்கிரஸ் ஆட்சி ஊழலில் புதியவரலாறு படைத்தது என்பது நமக்கு தெரிந்த விஷயம்.
ஊழல், இந்த தேசத்தின் பெரும் நோய். சகலஇடங்களிலும், மட்டங்களிலும் ஊடுருவி நிற்கிறது. எதைத் தொட்டாலும் அங்கு அழுகிப்போன தார்மீகநெறிகளின் நாற்றமடிக்கிறது.
ஊழலுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதிலோ, அவ்வாறான போராட்டங்களை நடத்துவதிலோதவறில்லை.
ஆனால் அதனை முன்னெடுக்கும் தலைவராக அறியப்படுபவர் நியாயமானவராக இருக்க வேண்டும்.அவரது செயல் சரியானதாக இருக்க வேண்டும்.
இல்லையெனில், அவர் பின்னால் திரளும் மக்கள் ஏமாற்றப்பட்டுவிடுவார்கள். போராட்டங்களுக்கானமுறையான தீர்வு எட்டப்படாமல், சந்தர்பவாதச் சமரசங்களுக்குள் முடக்கப்படுவார்கள், இதனால் மக்கள்போராட்டத்தின் மீதான நம்பிக்கை அற்றுப் போய்விடும்என்பது கவனிக்கவேண்டிய ஒரு விஷயம் .
ஊழல் அரக்கனின் உயிரையெடுக்கும் ஆயுதமாக ஒருசட்டம் தேவை என்பதில் மாற்றுக் கருத்துஇல்லை.ஆனால் லோக்பால் மசோதாதான் சரியானது என்பதாகச் சித்திரம் தீட்டப்படுகின்றன.
சட்டங்கள் தேவையென்றாலும், அவற்றை உறுதியோடுஅமல்படுத்துகிற அரசு வேண்டும்.
இன்னொரு புறம். "இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்"நிதியிலிருந்து பணம் கையாடல் செய்ததாக பி.பி.சாவந்த்கமிட்டியால் குற்றம் சாட்டப்பட்ட அண்ணா ஹசாரே.
அண்ணா ஹசாரேவும் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் என்று மணீஷ் திவாரி குறிப்பிட்டதும், ஹசாரேவுக்கு வந்ததே கோபம் உடனே .
"எனது பெயரை நீக்கும்வரை உண்ணாவிரதம்இருப்பேன்," என்று தன் சுயலாபதிற்க்காக போராட்டம் அறிவித்தார் ..
அடுத்த சில நிமிடங்களில் எல்லா தொலைக்காட்சிகளுக்கும் பேட்டியளித்தநீதிபதி.பி.பி.சாவந்த், "ஆமாம், அண்ணா ஹசாரே ஊழல்செய்ததை நான் குறிப்பிட்டிருக்கிறேன்.(I have indicted Anna Hazare for corruption) என்று அழுத்தம் திருத்தமாகச்சொன்னதும், ஹசாரேவின் வாய் மௌனித்து போனது ஏன் ?.
பி.பி.சாவந்த் அறிக்கை 2003-ல் சமர்ப்பிக்கப்பட்டது. எட்டுவருடமாக அதுபற்றி வாயே திறக்காமல் மவுனம் சாதித்தஅண்ணா ஹசாரேவுக்கு இப்போது ஏன் கோபம்?
இவர்கள்தாம் இந்தச் சட்டத்தை அமல்படுத்தப்போகிறவர்கள் ரொம்ப நல்லவங்க ?
பி.பி.சாவந்த் அறிக்கையினால் பதவியிழந்த முன்னாள்மகாராஷ்டிர அமைச்சர் சுரேஷ் ஜெயின், அண்ணாஹசாரே மீது தொடர்ந்த மானநஷ்ட வழக்கில்அண்ணாவுக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்தது
"சுரேஷ் ஜெயின் போன்ற வசதிபடைத்தவர்களால் நீதிபதிகளை விலைக்கு வாங்கி சாதகமானதீர்ப்புக்களைப் பெற முடியும்," என்று அப்போது அண்ணாதெரிவித்த கருத்துக்களால், அவர்மீது வழக்குதொடரப்பட்டு மிக அண்மையில்தான் அவர்நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியிருக்கிறார். (ஜூலை2011 -ல் இன்னொரு வழக்கை சமரசமாகப் பேசி, திரும்பப்பெற வைத்திருக்கிறார் )
சுரேஷ் ஜெயின் தொடுத்த மானநஷ்ட வழக்கில் இரண்டுமாதங்கள் சிறைத்தண்டனை பெற்று, சிவசேனாவின் மனோகர் ஜோஷியின் தலையிட்டால் ஒரே நாளில்விடுதலையானவர் அல்லவா காந்தீயவாதி அண்ணாஹசாரே?
இவர்களுக்கு அரசியல் சட்டத்தைப் பற்றிப் பேச என்னயோக்யதை இருக்கிறது? அதைமதிப்பவர்களாயிருந்தால், இப்போது இவர்கள் செய்துகொண்டிருப்பது என்ன? அரசியல் சட்டத்தை மதிக்காதவர்களுக்கும், பாராளுமன்ற ஜனநாயகத்தைஏளனம் செய்பவர்களுக்கும் உரிமை கேட்க என்ன தகுதி இருக்கிறது?
இனி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் இவர் அவரு நல்லவரா இல்ல கெட்டவரா என்று ?
நன்றி
திரு.ஹேமந்த் ஸ்ரீ கிருஷ்ணா .SRV
ஒரு மனிதன் மீது,,
ReplyDeleteஅப்பட்டமாக சேற்றை வாரி,
இறைக்க, அரசியல்வாதிகளால்தான் முடியும்..
**
அதை நீங்கள் தெளிவாக செய்திருக்கிறீர்கள் சாந்தி மேடம்,..
சரி..
நீங்கள் சார்ந்திருந்த கட்சியில் இருப்பவர்கள்,
எல்லாரும் யோக்கியமா என்று நாங்கள் கேட்டல்,,
நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள்.. ?
நீங்கள் எல்லாம் சரியாக இருந்திருந்தால்,,
இவர் இப்படி ஒரு போராட்டத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காதே,,
****
""நாங்கள் ஊழல் செய்வோம்,,
எங்கள் வாரிசுகளுக்கெல்லாம் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்ப்போம்,,
கொஞ்சம் மக்களுக்காக போராடுவதை போலவும் நடிப்போம்,...
நீங்கள் யாரும் கண்டுக்கதீங்க..
இல்லையென்றால்..
இப்படிதான் எங்களை எதிர்த்து போராடுவோர் மீது சேற்றை வாரி இறைப்போம்.."
என்பதுதான் இன்றைய அரசியல்வாதிகள் மக்களுக்கு விடுக்கும் சேதி..
**
இதை தெளிவாக நீங்களும் சொன்னதற்கு நன்றி..