Saturday, August 27, 2011

3 - உயிர் குடிக்க துடிக்கும் ஓர் கும்பல்


கொஞ்ச நாளா ஊழலுக்கு எதிரான போர் என்று பத்திரிக்கை ஊடங்கங்களால் விளம்பரப்படுத்தப்படும் அண்ணா கசாரே என்ற காந்தியவாதியின் ... அவரு திரைமறைவில் என்னவென்ன சத்திய பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கிறாரோ அது அவரை சுற்றி இருக்கும் காற்றுக்கே வெளிச்சம்...... 

   ஆனால் போலியாக முனையப்பெற்ற குற்ற சாட்டுகளால் தூக்கு கயிற்றின் முன்னால்  நிற்கும் வருங்கால இளைய பாரதத்தின் ஊற்று கண் எது என்றும் பார்க்க வேண்டியது அவசியம். கட்டி இழுத்து சென்று தூக்குகயிறு முன்   நிறுத்தப்படுவதற்கும்,அதற்கு பின்னால்  இயங்கும் இந்திய வல்லாதிக்கத்தினாலும் அதன் பார்ப்பனிய ஏவலாளிகளினாலும் எந்நேரமும் தயாராக வைத்திருக்கப்பட்டிருக்கும் அந்த மூன்று உயிர்களையும் நினைக்கும் போதே குலை நடுங்குகிறது. அதுவும் எல்லா இளைஞர்களையும் போல் வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்திருக்க வேண்டிய மூன்று உயிர்கள் பத்தொன்பது வருடங்களாக காலத்தை பகுத்தறிய முடியாத நிலையில் இருட்டு கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை நினைத்தால் மனம் பதறுகிறது. ஏன்..... இவ்வளவு நாளாக அந்த மூன்று உயிர்களை பற்றிய கவலை இன்றி நம்முடைய வாழ்வு நம்முடைய அரசியல் என்று அலைந்திருந்தையும் பற்றி எண்ணினால் கண்ணாடியின் முன்பு நம்முடைய முகத்தை பார்ப்பதற்கே அருவருப்பாயிருக்கிறது. 


காலம் கடந்த விழிப்புணர்வாக இருந்தாலும் கடைசி தருணத்திலாவது எப்பாடு பட்டேனும் இந்த அநீதியை நிறுத்தியாக வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனது உணர்வும் இப்போதாவது தட்டி எழுப்பப்பட வேண்டும். ஏன் இவ்வளவு நாளும் அமைதியாக இருந்த இந்திய வல்லாதிக்கமும் அதன் ஏவலாட்களும் தற்போது மட்டும் இவ்வளவு முனைப்பாக செயல்படுகிறார்கள் என்று எனக்கு நெருங்கிய வட்டாரங்களோடு பேசிய போது நான் அறிந்த விடயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். 


நம்மில் பலர் இதை ஏதோ சோனியா இட்ட உத்தரவு என்றே நம்புகிறோம். அதையும் தாண்டி இந்திய வல்லாதிக்கத்தில் உள்ள கார்பரேட் முதலாளிகளும், பார்ப்பனிய கும்பல்களுக்கும் இதில் உள்ள தொடர்புகளை பற்றி நாம் எண்ணி பார்ப்பதில்லை. ஆனால் உண்மை என்னன்னா இலங்கை அரசின் நிர்பந்தத்தின் பேரில் தான் இந்த தூக்கு தண்டனையை பற்றிய கோப்பு தூசி தட்டப்பட்டு இருக்கிறது என்பது தான். அதை செயல்படுத்த இலங்கை அரசுக்கு உதவியாக இந்தியாவில் களம் இறங்கியிருப்பது இந்தியாவின் தரகு முதலாளிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளடங்கிய பார்ப்பனிய கும்பல். இலங்கை அரசுக்கு அதற்கெதிராக சர்வதேச அளவில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அதிகமாகவே உள்ளது.. இந்த நிலையில் என்ன செய்வது என்று இலங்கை அரசு கையை பிசைந்து கொண்டிருந்த வேளையில் அதற்கு இந்தியாவில் உள்ள பார்ப்பனிய அதிகார வர்க்கத்தினால் கொடுக்கப்பட்ட ஆலோசனையும், அதை செயற்படுத்துவதற்காக அவர்கள் எடுத்து கொள்ளுகிற முயற்சிகளின் ஒரு பகுதி தான், மூன்று அப்பாவிகளின் மரண தண்டனைக்கு நாள் குறிப்பதில் இந்திய வல்லாதிக்கம் காட்டுகிற அவசரம். ..... குறிப்பாக “சந்து” போன்ற பார்ப்பனிய ஊடகங்களும், ஒரு தொலை தொடர்பு துறையை சார்ந்த நிறுவனமும் கச்சை கட்டி கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறது. 

இதனால் இலங்கை அரசுக்கு என்ன கிடைத்து விட போகிறது என்று நீங்கள் கேட்காலாம்..... அதனுடைய நோக்கமே அதற்கெதிராக தமிழர்களால் எடுக்கப்படும் போராட்ட முனைப்பை எப்படியாவது திசை திருப்ப வேண்டும், அதே போன்று தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிரான எதிர்ப்புகளையும் திசை திருப்பி வலுவிழக்க செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள பார்ப்பனிய கும்பல்களின் திட்டமோ, இந்த மரண தண்டனையை நிறைவேற்றுவதின் மூலம் தமிழகத்தில் மக்களிடையே சமீபகாலமாக எழும்பி இருக்கும் தமிழ் இன உணர்வை மழுங்கடிக்க வேண்டும் என்பது தான். இந்தியாவின் தரகு முதலாளிகளுக்கோ இந்த விடயத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய அரசின் அரசு இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம், இலங்கையில் அவர்கள் தொழில் தொடங்க அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்தி தரும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில். இந்திய வல்லாதிக்கத்தை கட்டுபடுத்தும் ஆதிக்க வர்க்கங்களும் இலங்கையில் இந்திய தொழில் நிறுவனங்கள் கால் வைக்க வாய்ப்பு ஏற்படுத்துவதன் மூலம் அங்கு தளம் அமைத்து கொண்டிருக்கும் சீனர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கலாம் என்ற நோக்கோடு செயல்படுகிறது. 

இந்த தூக்கு தண்டனையை நிறை வேற்றுவதின் மூலம் போராட்ட களத்தில் இருக்கும் தமிழர்களின் தன்னம்பிக்கையை உடைத்து விடலாம் என்றே இந்திய அளவிலும் , தமிழக அளவிலும் உள்ள பார்ப்பனிய கும்பல் நம்புகிறது. சோனியாவை சுற்றி நின்று இயக்குவதும் இந்த பார்ப்பனிய கும்பல் என்பது நாம் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நம்மில் பல தோழர்கள் செயாவிடம் சென்று கோரிக்கை விடுத்தால் அந்த மூன்று உயிர்களையும் மீட்டு விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கின்றனர். உண்மை என்னவென்றால் .... இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் செயலாலிதா வேறு கணக்கு போட்டு கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஈழ தமிழர்களுடைய பிரச்சினையில் கலைஞர் மீது வெறுப்பில் இருக்கும் தமிழர்களிடம் இந்த தூக்கு தண்டனைக்கும் கலைஞர் தான் காரணம். மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் அவர் நினைத்திருந்தால் சோனியாவிடமும் , மன்மோகனிடமும் பேசி இந்த தூக்கு தண்டனையை ரத்து பண்ண வைத்திருக்கு முடியும், ஆனால் துரோகி கருணாநிதி அதை செய்ய தவறி விட்டார் என்று தமிழர்களிடையே கலைஞரை பற்றி பரப்புரை செய்யலாம் என்பதும், அதன் மூலம் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதனையே ஒரு பெரிய ஆயுதமாக திமுகவிற்கு எதிராக பயன்படுத்தலாம் என்பதும், செயாவின் சுற்றி இருந்து அவருக்கு அறிவுரை கொடுத்து கொண்டிருக்கும் பார்ப்பனிய கும்பலின் திட்டம். 

இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு உதவுவதன் மூலம் செயாவிற்கும் சோனியாவிற்கும் இடையே ஒரு பாலத்தை ஏற்படுத்தி விடாலாம் என்றே அந்த பார்ப்பனிய கும்பல் நம்புகிறது. அவ்வாறு நடப்பதின் மூலம் திமுகவை மத்தியில் கூட்டணியில் இருந்து தூக்கி எரிந்து விட்டு, திமுகவிற்கு எதிரான செயல்பாடுகளை தமிழகத்தில் இன்னும் தீவிரபடுத்தலாம் என்றும் அந்த கூட்டம் நம்புகிறது. 

இப்படி பட்ட சூழல் தான் இங்கே தற்போது நிலவி கொண்டிருக்கிறது . ஆகவே இந்த மரண தண்டனையை எதிர்த்து போராட்டத்தில் குதித்து இருக்கும் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள். தமிழர்களுக்கு எதிராக இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் மிக பெரிய கன்னி விரித்து வைக்க பட்டு இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் இங்கு இருக்கிறவர்களின் காலில் விழுந்து காலத்தை வீணாக்குவதை விட இந்த போராட்டத்தை அணைத்து தமிழ் ஆர்வலர்களையும், கடந்த கால மன கசப்புகளை மறந்து விட்டு ஒன்றிணைத்து ஒரே அணியில் இருந்து மிக பெரிய அளவில் கொண்டு செல்வதோடு , சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் சொந்தங்கள் ஈழ தமிழர் பிரச்சினையோடு இந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட போகிற கொடுமைக்காகவும் அந்தந்த நாடுகளில் போராட்டங்களை முன்னெடுப்பது அவசியம். அதன் மூலம் சர்வதேச அளவில் இந்திய அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தலாம். இந்த வழியில் செல்வதே இப்போதைக்கு ஒரு நல்ல முடிவை தர கூடிய சூழ்நிலையை உருவாக்கும். என்பதே நான் கேள்விப்பட்ட விடயங்களில் இருந்து அறிந்து கொண்டது. 

இப்போதைய நிலவரப்படி அந்த கும்பல் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. அது தான் எமக்கு ஆழ்ந்த கவலையை தருகிறது.. என்னுடைய சொந்த ரத்தங்கள் அல்லவா அவர்கள் . உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா தமிழனுக்கு எல்லா பக்கமும் இருந்து இடி. வந்தாரை எல்லாம் வாழ வைத்த தமிழன் கடைசியில் அவனுடைய சுதந்திரத்திற்காகவும், எதிராக இழைக்கப்படுகிற அநீதிகளுக்காவும் சொந்த மண்ணிலேயே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான் என்பது வேதனையான உண்மை 

கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் ..... ஒரு வேளை கடவுள் என்பவர் எங்கேயாவது இருந்து அவரிடம் சென்று விண்ணப்பித்தால் இந்த தூக்கு தண்டனையை நிறுத்தி விட முடியாதா என்ற பரிதவிப்புடன் தான் அலைகிறேன். ம்ம்ம்ம் தற்போதைய நிலைமையில் பகுத்தறிவை விட அந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட போகிற அநீதியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே பெரிய விடயமாக எனக்கு தோன்றுகிறது.

நன்றி
இப்படிக்கு 
உங்கள் நண்பன் K.அந்தோணி

Friday, August 26, 2011

ஜெ விற்கு ஏழை உசுரு கொசுறா?



அன்று 

 புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட்டது குறித்து அதிமுக அமைச்சர் பேசுகையில் அந்தக் கட்டடத்தில் முறைகேடு மட்டுமல்ல, தரம் குறைவாக இருப்பதாகவும் . தரம் குறைந்த கட்டடத்தில் செயல்படுவது சரியாக இருக்காது. எனவே, முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதுவரை, கட்டடப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. என்றும் கூறினார்.

இன்று 

ஆனால் இன்று புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதாக கூறியிருக்கிறார்கள். 

சட்டமன்றமாக இருந்தால் அனைத்து துறைகள் மற்றும் வந்து செல்வோர் என சுமார் 3000 பேரை தாங்கக்கூடியதாக இருக்கும் ,, அச்சமயத்தில் அப்படியே ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உயிர் இழப்பு சற்று குறைவாகத்தான் இருக்கும் ,அதுவும் சுமார் 12 மணிநேரம் மட்டுமே இயங்கும் சட்டமன்றத்தில்  இரவில் அசம்பாவிதம் நடந்தால் மிகவும் சொச்சமான உயிரிழப்புதான் ஏற்படும். ..

ஆனால் தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, அதாவது, (Multi Super Specialty Hospital) ஒன்றை அமைக்க ஜெயா அரசு முடிவு எடுத்துள்ளது . ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் 'ஏ' கட்டடத்தில் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது .

தரமற்றவை என்று கருதி அரசு மற்றும் அரசியல்வாதிகள் பயன்படுத்தாத ஒரு கட்டிடத்தை ஏழை, எளிய மக்கள் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வகையில் அதுவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு நிகராக புதிய மருத்துவமனை அமைந்தால் அதில் பணியாற்றும் மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள்,மருத்துவ மாணவர்கள் ,சிகிச்சை பெறுவோர் உடனிருப்போர் , வெளிநோயாளிகள் ,என சுமார் 20000 நபர்களை தாங்க வேண்டிய சூழல் ஏற்படும் .. மேலும் 24 மணி நேரமும் இயங்கவேண்டியிருகும் . 

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தரமற்ற இக்கட்டிடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பாத்திகப்படுவார்கள் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள் ...  


Thursday, August 25, 2011

சவுக்கை சுழற்றும் ராசா

நான் பணம் சம்பாதித்ததாக நிரூபித்தால் குற்றச்சாட்டை ஏற்கத் தயார்: ராசா


டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நானும், எனது குடும்பத்தாரும் பணம் சம்பாதித்ததாக சி.பி.ஐ. நிரூபித்தால் அவர்கள் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொள்ள தயார் என்று முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கூறினார்.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ராசாவே நேரில் ஆஜராகி 1 மணி நேரம் வாதாடினார். அவர் கூறுகையில், இந்தியாவில் வெறும் 5 நிறுவனங்கள் மட்டுமே தொலைத்தொடர்புத் துறையில் லாபம் சம்பாதித்து வந்தன.

இதனால் 6.2 மெகா ஹெர்ட்ஸுக்கு மேல் உள்ள ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்தினால் அதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை நான் கொண்டு வந்தேன். அதற்கு முன் அதை அந்தத் தனியார் நிறுவனங்கள் இலவசமாக பயன்படுத்தி வந்தன.

ஆனால் டிவி, பத்திரிகைகளில் வந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து என் மீது சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்துள்ளது. தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூட பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தான் எழுதப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்த பிரஷாந்த் பூஷண் கூட, பத்திரிக்கை செய்திகளையே ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாகவோ அல்லது விதிமுறைகளை மீறியதாகவோ மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் குற்றம் சாட்டப்படவில்லை. சம்பந்தபட்ட அனைத்துத் துறைகளின் அதிகாரிகளையும் ஆலோசித்த பின்னர்தான் உரிமங்கள் வழங்கப்பட்டன.

நான் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பணம் சம்பாதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு ரூ.750 கோடி பணம் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது.

அந்த நிறுவனத்துக்கு டி.பி. ரியாலிட்டீஸ் வழங்கிய ரூ.1.05 கோடி பணம் திரும்ப வழங்கப்பட்டுவிட்டது. அதுவும் கூட சட்டபூர்வமான பணப் பரிமாற்றம்தான்.

அந்த நிறுவனத்தில் உயிரிழந்த எனது நண்பர் சாதிக் பாட்சா, என் மனைவி பரமேஸ்வரி, கலியபெருமாள், ரேகா பானு ஆகியோர் நிர்வாகப் பொறுப்பு வகித்தனர்.

எனது உறவினர்கள் 7 பேர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. நானும் எனது உறவினர்களும் பணம் சம்பாதித்ததை சி.பி.ஐயோ, அமலாக்கப் பிரிவினரோ அல்லது வருமான வரித் துறையினரோ நிரூபிக்க தயாரா?. அப்படி நிரூபித்தால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.

நான் குற்றமற்றவன் என்பதை நிச்சயம் ஒரு நாள் நிரூபிப்பேன். அதனால்தான் நான் ஜாமீன் கோரி இது வரை மனு தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.

அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்னும் பல உண்மைகளைச் சொல்ல வேண்டியிருப்பதால். மேலும் 10 நிமிடங்கள் பேச அனுமதிக்குமாறு ராசா கோரினார்.

இதைக் கேட்ட நீதிபதி சைனி, நிறைய உண்மைகளைச் சொல்லி விடாதீர்கள் என்றார் சிரித்துக் கொண்டே.. அதைக் கேட்ட ராசா உள்ளிட்ட நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டன...

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்று தொலைத் தொடர்புத்துறைக்கு நாங்கள் பரிந்துரை ஏதும் செய்யவில்லை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விற்பனையால் நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.

டிராய் கூறியுள்ள இந்தத் தகவல் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு சாதகமாக அமையலாம் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்று தனக்கு அதிகாரிகளோ அல்லது தொலைத் தொடர்பு ஆணையமோ பரிந்துரையே செய்யவில்லை என்றும், இதனால் பாஜக ஆட்சியில் பின்பற்றப்பட்ட முதலில் வருவோருக்கு முதலில் என்ற வழிமுறையையே நானும் பின்பற்றினேன் என்றும் ஆரம்பத்தில் இருந்தே ராசா கூறி வருகிறார்.

இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 20ம் தேதி சிபிஐக்கு டிராய் அமைப்பின் செயலாளர் ஆர்,கே.அர்னால்ட் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சிபிஐ எழுப்பிய சில கேள்விகளுக்கு அவர் பதில் தந்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2007ம் ஆண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்றோ, 2003ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொலைத் தொடர்புத்துறையில் நுழைந்த புதிய நிறுவனங்களுக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றோ தொலைத் தொடர்புத்துறைக்கு டிராய் எந்த பரிந்துரையும் செய்யவில்லை.

ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதால் எவ்வளவு பணம் அரசுக்குக் கிடைக்கும் என்பதை துல்லியமாக மதிப்பிடுவது முடியவே முடியாத காரியம்,

மேலும் தொலைத் தொடர்பு சேவையையும், ஸ்பெக்ட்ரத்தையும் அரசுக்கு வருமானம் ஈட்டும் வழியாக டிராய் எந்தக் காலத்திலும் கருதியதில்லை. இதன் அடிப்படையில் தான் ஸ்பெக்டரத்தை ஏலம் விடுமாறோ அல்லது கட்டணத்தை உயர்த்துமாறோ அரசுக்கு டிராய் பரிந்துரைக்கவில்லை. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூற முடியாது.

2007ம் ஆண்டில் 6.2 மெகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட 2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கும் எந்த விலையையும் டிராய் நிர்ணயிக்கவில்லை. எந்த விலையையும் பரிந்துரைக்கவும் இல்லை. 10 மெகாஹெர்ட்ஸ்க்கு மேல் ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்குமாறு கூறினோமே தவிர வேறு எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

டிராய் அமைப்பின் இந்த விளக்கம் ராசாவின் வாதத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆனால் மக்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளவில்லை அன்று ஊடகங்கள்தான் இவ்விடயத்தை பெரிதுப்படுத்தியது என்றும் , அன்று ராசாவின் பேட்டியை கூட எந்த ஊடகமும் வெளியிடவில்லை ...ஏன் வலைபூக்களில் கூட அவர் பேட்டி இடம்பெற்றதாக தெரியவில்லை ..

இதோ 

"இந்து நாளேட்டில் ஆ.ராசாவின் பேட்டி (நவம்பர் 14 இதழில் வெளியானதன் தமிழாக்கம்)"

கேள்வி : இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து கசிந்ததாகக் கூறப் படும் பகுதி, அலைக் கற்றை ஒதுக்கீட்டில் உங்களது கொள்கை மூலமாக வும், மேலும் பல நிறு வனங்களை அறிமுகப் படுத்தியதன் மூலமாக வும், சில உரிமை நிபந்த னைகள் சில வற்றில் மாற்றங்கள் மூலமாகவும், அரசுக்கு ரூ.1.77 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுகி றதே. தங்களால் விளக்க முடியுமா?

அமைச்சர் ஆ.இராசா : தற்போது எழுப்பப் பட்டுள்ள பிரச்சினைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவ தாக அரசுக்கு ஏற்பட்டு விட்ட தாகக் கூறப் படும் இழப்பு, இரண்டாவதாக நடை முறைத் தவறுகள்.

மத்திய அமைச்சரவையால் பரிசீலிக்கப் பட்டு நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப் பட்ட 1999ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஏலமுறையிலிருந்து (94ஆம் ஆண்டு கொள்கை) வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு (99ஆம் ஆண்டு கொள்கை) மாற அதிகாரம் அளிக்கிறது. கசிந் துள்ள தணிக்கை அறிக்கை நாங்கள் ஏல முறையைக் கடைப் பிடித்து 3 ஜி படகில் கணக்கு ரீதியிலான பயணம் மேற்கொண்டி ருக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, தற்போது ஏற்பட்டுவிட்ட தாகக் கருதப்படும் இழப்பு கணக்கிடப்பட்டுள்ள தற்கான அளவு கோலே சரியானதல்ல.

இங்கே நமக்குள்ள பிரச்சினை அரசியல் சட்ட ரீதியிலான ஒரு அமைப் பான தலைமைத் தணிக்கை அதிகரிக்கும் மற்றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்புகளான மத்திய அமைச்சரவை, மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கு இடையிலான அபிப்ராய பேதம் (கருத்து வேறுபாடு ) ஆகும்.

தணிக்கை அதிகாரி, அமைச்சரவை, நாடாளுமன்றம் மற்றும் மற்றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்பான தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மற்றும் திட்டக்கமிஷன் ஆகியவற்றோடு ஒப்புக்கொள்ள முடியாததது போலத் தோன்றுகிறது. இப்படிப் பட்ட நிறுவன முறை மீறலுக்கு நீதித் துறை மூலமாகவோ அல்லது நாடாளுமன்ற அமைப்பு மூலமோ தீர்வு காணப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

கேள்வி: இந்தக் கொள்கையால் இழப்பு ஏற்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் ரூ.1.77 லட்சம் கோடி பற்றி?

அமைச்சர் ஆ.இராசா : 2 ஜி அலைக்கற்றை ஏன் ஏலம் விடப்படவில்லை என்ற அடிப்படைக் கேள்விக்கு ‘இந்து’ நாளேட்டில் எனது முந்தைய பேட்டியில் விளக்கியுள்ளேன். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட 1999 ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஆவணம் மறுப்பதால், 2ஜி அலைக்கற்றையை ஏலத்தில் விட முடியாது.
நாடாளுமன்றம்தான் கொள்கையை திருத்த முடியும்.

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம், பதினொறாவது ஐந்தாண்டுத்திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஆகியவையும் 99 ஆம் ஆண்டு கொள்கை யின்படியே உள்ளன. 99 ஆம் ஆண்டு கொள்கையில் ஏதாவது திருத்தம் தேவையென்றால் அதை நாடாளுமன்றம் மட்டும் தான் செய்ய முடியும்.
புதிய ஒருமைப் பயன் பாட்டு சேவை உரிமங்கள் மற்றும் 2ஜி அலைக் கற்றை வழங்குவதற்கான தற்போதைய கொள்கை 2003 ஆம் ஆண்டு நவம்பர் முதல் எந்தவித மாறுதலும் இன்றி, வெளிப் படையான கொள்கையாக இருந்து வருகிறது. 2003 அக்டோ பர் 31 அன்று மத்திய அமைச்ச ரவையால் ஒப்புதல் அளிக் கப்பட்டக் கொள்கை யிலிருந்து எந்த விலகலும் இல்லை. 2003 நவம்பர் முதல் இன்றுவரை அடுத் தடுத்து வந்த அரசு களால், உரிமங்கள் வழங்குதல், அலைக் கற்றை ஒதுக்கீடு செய்தல், கட்டணங்கள் ஆகியவற் றிற்கான நடைமுறைக் கொள்கை கடை பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

61 சதவிகித மக்களுக்கு செல்போன் வசதி
அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கான வரிகள் மற்றும் ஒழுங்கு முறைக் கொள்கை முன் னேற்றுவதற்காக இருந்து வந்துள்ளது, இருக்கிறது. அதில் வருவாய் ஈட்டுதல் என்பதற்கு இரண்டாவது இடம்தான் தரப்பட்டுள்ளது. இவை இத்துறையில் முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சிக்கும், தொலைத்தொடர்பு அடர்த்தியில் மிகப்பெரும் தாவுதலையும் கண்டுள்ளது என்பதால் இந்தக் கொள்கைகள் மாற்றப்படவில்லை ( அதாவது, உலகிலேயே இரண்டாவதாக தற்போது 70 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் உலகிலேயே மிகக்குறைந்த கட்டணங் களில் செல்போன் வசதியைப் பெற்றுள்ளனர் -) கிராமப்புறங்களில் 2010 செப்டம்பர் மாதம் அது 28.46 சதவீதமாகவும், கிராமப்புறம் மற்றும் நகர்ப் புறம் சேர்ந்து மொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி 60.99 சதவீத மாக உயர்ந்துள்ளன. ( அதாவது 100 இந்தியர்களில் சுமார் 61 பேருக்கு செல்போன் வசதி கிடைத்துள்ளது). தற்போது மொத்தம் உள்ள தொலை பேசிகளின் எண் ணிக்கை 72.3 கோடி ஆகும். இது 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கான 60 கோடிக்கும் அதிகமாகும்.

மேலும், அரசின் மிக அதிகமான வரி இல்லாத வருவாய் இத்துறையில் வருடாந்திர உரிமக் கட்டணமும், அலைக்கற்றை கட்டணமும் ஆகும். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அரசு வருவாய்ப் பங்கீட்டு முறை மூலமாக ரூ.77,038 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

6.2 மெகா ஹட்ஸ்க்கு மேலானஅலைக்கற்றை ஒதுக்கீட்டில், இதன் காரணமாக அரசுக்கு ரூ.36,729 கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. என்னு டைய அமைச்சரவையில் உள்ள விவரங்களின்படி, ஒட்டுமொத்த வருவாயில் ஒரு சதவித வருவாய் பங்கீடு என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்டசந்தாதாரர் அடித் தளத்தை அடைந்த தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 6.2 மெகா ஹட்ஸ்க்கு மேல் 10 மெகா ஹட்ஸ் வரை கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் முடிவை அப்போதைய அமைச்சர் பிரமோத் மகாஜன் 2002 ஜனவரி 31 அன்று எடுத்தார்.

அடுத்த அமைச்சர் அருண்ஷோரி 6.2க்கு மேல் 21 மெகா ஹட்ஸ் ஒதுக்கீடு செய்தார். தயாநிதிமாறன் 38.8 மெகா ஹட்சும், நான் 12.6 மெகா ஹட்சும் ஒதுக்கீடு செய்தோம். நான் ஒதுக்கீடு செய்தபோது, 6.2 மெகாஹட்ஸ் என்பது ஒப்பந்த கலவை மிஞ்சி இருப்பதால் 6.2 மெகா ஹட்சுக்கு மேலான அலைக்கற்றைக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஒரு விதியை வகுத்தேன்.

இது நான் எனக்கு முன் இருந்தவர்கள் மீது குற்றம் சுமத்துகிறேன் என்றோ, அவர்கள் மீது பொறுப்பை சுமத்துகிறேன் என்றோ அர்த்தமாகாது, 1999 முதல் நடைமுறை முழுவதும் தொடர்ந்து வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காதது ஏன்?
இழப்பு என்று கருதப்படுவதற்கு எந்தவிதமான தர்க்க ரீதியிலான அடிப்படையும் கிடையாது. அது பொருத்தமான கணக்கீட்டு முறையும் ஆகாது. கொள்கை மற்றும் செயல் முறையில் ஏற்பட்டிருக்கலாம், வந்திருக்கலாம் என்றெல்லாம் வழி கிடையாது என்பதால் ஊடகங்களின் அடிப்படையில் இழப்பை கணக்கிட முடியாது.

எதிர்க் கட்சிகள் விவாதத்தில் பங்கேற்றால் அவை அம்பலமாகிவிடும் என்பதால், அவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்.

கேள்வி :- ஆனால் நீங்கள் அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டீர்கள் என்பது குற்றச் சாட்டு . . . . ?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் ஒரு ஏகபோக சுயநல கும்பலை நான் உடைத்து விட்டேன் என்பதால் இந்தக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று நம்புவதற்கு எனக்கு உறுதியான காரணங்கள் உள்ளன. 1999 முதல் நான் பொறுப்பு ஏற்பதற்குச் சில நாட் களுக்கு முன்பு வரை இந்த ஏகபோக சுயநல கும்பலுக்குள் இதே கொள்கை நடை முறைப் படுத்தப்பட்டு வந்தவரையில், எந்த அமைச்சரும் விமர்சிக்கப்பட வில்லை. 1998-99 ஆம் ஆண்டுக்கான தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையைப் பாருங்கள்; அது அப்போதிருந்த உரிமங்களை நிர்ணயிக் கப்பட்ட கட்டண முறை யிலிருந்து வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு மாற்றிய கொள்கையைக் கடுமை யாக விமர்சித்தது. அதில் பல கடுமையான கண்டனங்கள் இருந்தன. ஆனால் தலைமைத் தணிக்கை அமைப்புக்கே தெரிந்த காரணங்களை 2000-ம் ஆண்டு முதல் அது மவுன காட்சியாக விளங்கி, அடுத்தடுத்து அளித்த அறிக்கைகளில் அது அமைச்சகத்தை எப்போதும் கேள்வி கேட்டதில்லை.

உரங்கள், பெட்ரோலியப் பொருட்கள், பொது விநியோக முறையின் கீழ் வழங்கப்படும் அரிசி போன்றவற்றிற்கு அரசு மானியங்கள் தரும் உதாரணத்தைப் பயன்படுத்தி, இந்த இழப்பு கருத்தியலானது, உண்மை நிலையை அடிப்படையாகக்கொண்டது அல்ல என்பதை நான் விளக்குகிறேன். இந்தப் பொருட்களின் சந்தை விலைகளை எடுத்துக் கொண்டு, அவை மிகக் குறைந்த விலைகளில் (அரசு மானியத்தால்) விற்கப்படுவதால் அரசுக்கு இவ்வளவு ஆயிரம் கோடி இழப்பு என்று சொன்னால், அதை ஏற்க முடியுமா?

அறிவார்ந்த காரணங் களின் அடிப்படையில் ஒரு கொள்கை இருக்கிறது. அவ்வப்போது மாறிவிடும் பிரச்சினை களை முடிவு செய்ய சட்ட ரீதியிலான ஒரு அமைப்பு உள்ளது. எனவே தொலைத் தொடர்புக் கொள்கை தீர்ப்பின்படி, வருவாய்ப் பங்கீட்டு முறைதான் எங்களுக்கு உள்ளது.

கேள்வி:- அலைக் கற்றைப் பிரச்சினையில் நீங்கள் ஏன் சட்ட அமைச் சகம் நிதி அமைச்சகம் ஆகியவற்றின் சேவை களைப் பயன்படுத்த வில்லை? நீங்கள் பிரதம ரின் ஆலோச னையையும் பொருட் படுத்த வில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
அமைச்சர் ஆ. இராசா:- சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை தானாக வருவதில்லை. இருப்பில் உள்ள அலைவரிசை மிகக் குறைவாக இருப்பதால், வந்த ஏராளமான விண் ணப்பங்களை எப்படிக் கையாள்வது என்ற குறிப்பிட்ட பிரச்சினையில் எங்கள் அமைச்சகம் சட்ட அமைச்சகத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பியது. அந்தக் குறிப்பிலேயே நாங்களும் சில வழி முறை களைக் குறிப் பிட்டிருக்கி றோம். இதன்மீது அபிப்ராயத்தைக் கூறுவதற்கு மாறாக, சட்ட அமைச்சகம் இதை அமைச்சர்கள் குழுவிற்கு அனுப்புமாறு ஆலோசனைக் கூறியது. இந்த ஆலோசனை அலைக்கற்றை விலை நிர்ணயிப்புடனோ அல்லது வருவாய்ப் பங்கீட்டு அளவிலேயோ தொடர்புடை யது அல்ல. அலைக் கற்றை இருப் பைப் பொறுத்து முதலில் வந்த வர்களுக்கு முதலில் சேவை என்று இப்போதுள்ள கொள்கை அடிப்படையில் எங்கள் துறை செல்ல விரும்பிய தால் இது பிரதமரிடம் விளக்கப் பட்டது.

2001 ஆம் ஆண்டு நிர் ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று தொலைத் தொடர்புத் துறை செயலாளருக்கு நிதித்துறை செயலாளர் ஒரு கடிதம் எழுதினார். நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் திடம் (டிராய்) தான் உள்ளது. 2007 -ம் ஆண்டு டிராய் நுழைவுக் கட்டணத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மிக உறுதியாக, அறுதி யிட்ட பரிந்துரையை அளித்ததாலும், ஏற்கனவே அந்தக் கட்ட ணத்துக்கு நிதித்துறை அமைச்சகத்தின் பிரதி நிதியும் உறுப்பினராக உள்ள தொலைத் தொடர்பு கமிஷன் ஒப்பு தல் அளித்துள்ள தாலும், டிராய் பரிந்துரையை மேற்கோள் காட்டி தொலைத் தொடர்புத் துறை செயலாளர் நிதித் துறை செயலாளருக்கு பதில் அனுப்பினார் - அத்துடன் அந்த சுற்று முடிந்தது.

அதுபோலவே, அலைக் கற்றை ஒதுக்கீடு மற்றும் சந்தாதாரர் விதி முறை தொடர்பாக பிரதமர் சில குறிப்புகளை அனுப்பினார். உத்தேசிக்கப்பட்டிருந்த அனைத்துப் பிரச் சினைகள் மற்றும் விதி முறைகள் ஆகியவை பிரதமருக்கு அனுப்பப்பட்டு அது வந்து சேர்ந்ததற்கான பதிலும் வந்தது. கேபினட் அமைச்சர்கள் ஒருவருக் கொருவர் கடிதங்கள் எழுதிக்கொள்வது, கேபினட் அமைச்சர் கள் பிரதமருக்கு கடிதங்கள் அனுப்புவதும் சாதாரண வழக்கம் தான். எனக்கும் பிரதமருக்கும் இடையில் கடிதப் போக்கு வரத்து இருந்தது என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து நான் பிரதமரின் ஆலோசனையைப் பொருட்படுத்த வில்லை என்று ஊகிக்க முடியாது.
கடைசி தேதி என்பது அர்த்தமற்றது

கேள்வி :- உரிமங்கள் பெறுவதற்கான கடைசி தேதியை நீங்கள் ஏன் அப்பட்டமாக மாற்றினீர்கள்?

அமைச்சர் ஆ.இராசா:- முதலில் விண்ணப்பித்த வர் முதலில் பரிசீலிக்கப் படுவதால், முதலில் வந்த வருக்கு முதலில் சேவை என்ற கொள்கை கடை பிடிக்கப்படும் வரை, கடைசி தேதி என்பது அர்த்தமற்றது. அலைக் கற்றை இருப்பின் தோராய மதிப்பீடு மற்றும் 2009 செப்டம்பர் 25 அன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட வரையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அந்தத் தேதி வரையில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் முதல் தொகுதி பரிசீலிக்கப்பட்டது. ஏதாவது விண்ணப்பம் புறக்கணிக்கப்பட்டதா அல்லது பின்னுக்குத் தள்ளப்பட்டதா என்பதுதான் கேள்வி.

மீதமுள்ள விண்ணப் பங்கள் அலைக்கற்றை இருப்பைப் பொறுத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மீத முள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்பது ஊடகத்துறையில் உள்ள சில தவறான கருத்தாகும்.

பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்

கேள்வி :- நீங்கள் இலக்கிடப்பட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறீர் களா?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் மாற்றங்கள் கூடாது என்று விரும்பும் ஒரு பெரிய (ஆதரவு திரட்டும்) கும்பல் இருப்பதாக நினைக்க நான் நிர்ப்பந்தக்கப்படுகிறேன். உதாரணமாக (செல் போன் சேவையை எண்கள் மாறாமல் ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாற்றிக் கொள்ளும்) எண் சேவை மாற்ற முறைக்கு எதிரானவர்கள் சிலர் உள்ளனர். என்னைக் குறி வைத்து பிரகடனப்படுத்தி யுள்ள ஏகபோக சுயநல கும்பல் ஒன்று உள்ளது. அதற்கு ஊடகத் துறையின் மீது செல்வாக்கு உள்ளது. அதனிடம் மிகப் பெருமளவு நிதி ஆதாரங்களும், பணமும் உள்ளன. இந்த நிகழ்வுகள் சில அரசியல் கட்சிகளால் தி.மு.க.வுக்கு கெட்ட பெயரைத் தேடித்தரப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மக்கள் பயன டைந்துள்ளனர் என்ற உண்மை உள்ளது. அது என்னாலும் அரசாலும் நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகளாலும், எடுக்கப் பட்ட முயற்சிகளாலும் ஆகும்.

கேள்வி:- கொடுக்கப் பட்ட 122 உரிமங்களில் 85 தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத நிறுவனங்களுக்குச் கொடுக்கப்பட்டுள்ளது ஏன்?

அமைச்சர் ஆ.இராசா:- இதுவும் தெளிவற்ற கருத்து, தலைமை தணிக்கை அதிகாரி அரசியல் சட்ட ஷரத்து 149 க்கு அப்பால் அதிகாரங்களை அபகரிக்க முயலவோ, அரசியல் சட்ட ரீதியில் உச்சநீதி மன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் முறையே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள 32 மற்றும் 226வது பிரிவுகளின் கீழ் பிரச்சினைகளை முடிவு செய்யவோ முயலக்கூடாது. விண் ணப்ப தேதியில் கம்பெனிகள் பதிவாளரிடம் குறிக்கோள் மாற்றப் பிரிவு, நிகர மதிப்பு, கம்பெனியின் பெயர் ஆகியவை காண்பித்தால் அது தொடர்பாக தணிக்கை அதிகாரி அறிக் கையில் தகுதி யின்மை என்று கூறப்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும். நாங்கள் சுயமாக அளிக்கப்படும் சான்றை அடிப்படையாகக் கொள்கிறோம். கம்பெனிகள் பதிவாளர் பதிவேட்டில் பதிவு செய்வது என்பது ஒரு நடைமுறை. அந்தப் பதிவாளரிடம் முந்தைய தேதியில் பதிவு செய்யப்படுவது, அதற்கான தீர்மானம் முறையாக நிறை வேற்றப்பட்டு கம்பெனி செயலாளரால் சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தால், எந்தவிதமான சட்ட சிக்கலும் இல்லை என்று சட்ட அமைச்சகம் தற்போது கருத்து தெரிவித் துள்ளது.

கேள்வி : 99 ஆம் ஆண்டு புதிய தொலைத் தொடர்புக் கொள்கை தவறான கொள்கை என்று ஏற்றுக் கொள்வீர்களா?

அமைச்சர் ஆ.இராசா:- இல்லை. அந்தக் கொள்கையின் தீர்ப்பினுடைய வடிவமும், உணர்வும், நிகழ்ந்து வருகிறது. அரசில் கட்சி நிலைமை மாறுவதால் கொள்கைகள் மாற்றப்படக் கூடாது. 99ஆம் ஆண்டு கொள்கை தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசால் உருவாக் கப்பட்டது. இதை பா.ஜ.க. தலைமையிலான அரசு வடிவ மைத்தது என்ப தால் மட்டும் அதை நான் மாற்ற விரும்பவில்லை. அப்போதைய அரசின் தொலைநோக்குப் பார்வை சரியானது என்று நான் நாடாளுமன் றத்திலேயே பேசியிருக் கிறேன்.
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்

கேள்வி : தணிக்கை அதிகாரியின் எதிரான கருத்தைத் தொடர்ந்து என்ன நடக்கிறது? நீங்கள் ராஜிமானா செய்வீர் களா?

அமைச்சர் ஆ.இராசா : அரசியல் சட்டத்தின் கீழ் தணிக்கைக் கான ஒரு நிறுவனமான தலைமை தணிக்கை அதிகாரியை நான் மதிக்கிறேன். இருப் பினும், முறையான நடை முறை தீர்க்கப்படும் வரை யில், ஒரு தணிக்கையரைத் தண்டிக்கவோ அல்லது அரசின் கொள்கை களைப் பற்றி முடிவுக்கு வரவோ தணிக்கை அதிகாரி அறிக்கையை நீதிமன்ற தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியாது.

மேலும், நாடாளு மன்றத்தின் மூலம் 2000 ஆம் ஆண்டில் வைக்கப் பட்ட தலைமை தணிக்கை அதிகாரியின் 1998 - 99 ஆம் ஆண்டுக்கான அறிக் கையிலும் இதுபோன்ற கருத்துக்கள் கூறப்பட்டி ருந்தன. பொதுக்கணக்கு குழுவோ, நாடாளு மன்றமோ, கொள்கையை மாற்ற முடிவு எதுவும் செய்ய வில்லை. பொதுக் கணக்கு குழுவிடமிருந்து எந்த விதமான ஆலோ சனையும், நடவடிக்கையும் வராத நிலையில், அதற்குப் பின்னர், 2010 ஆம் ஆண்டு வரையில் தலைமைத் தணிக்கை அதிகாரி எந்தத் தவறையும் கண்டுபிடிக்க வில்லை. இதை தணிக்கை அதிகாரிதான் விளக்க வேண்டும்.

பொது வாழ்க்கையில் குற்றச்சாட்டுகளும் எதிர்க் குற்றச்சாட்டுகளும் சகஜமானவைதான். நீதிபதி வி.ஆர்.கிருஷ் ணய்யர் கூறியது போல, ‘மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை, மிகத்தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் சட்டத்துக்கு கீழான வர்கள் இல்லை’. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். ஒரு கறையுடன் நான் வெளியேற விரும்பவில்லை.இந்த துறைக்கு நான் பொறுப்பேற்றுக்கொண்டது முதல் உண்மையாக உழைத்திருக்கிறேன். என் முயற்சியால்தான் வாடிக்கையாளர்கள் 70 கோடியை தாண்டியிருக்கிறார்கள். நான் இந்த தேசத்திற்கு என் கடமையை சரியாக செய்திருக்கிறேன் என்பதை கூறிக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.... 

ஆனால் இதை ஊடகங்கள் இன்னும் ஒரு உழல் குற்றசாட்டகவே பிரகடனப்படுத்துகிறது...
பொது ஜனங்கள் தேசத்தின் உண்மை நிலையை உணருவதற்கு ஆதாரமாயிருப்பது வர்த்தமானப் பத்திரிகைகள் என்று சொல்லுவார்கள். ஆனால், அவை நமது நாட்டின் உண்மை நிலையை மறைத்துப் பொய்யைச்சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி, ஒருவரைக் கெடுத்து ஒருவர் பிழைப்பதற்குத்தான் அவை முழுவதும் ஆதாரமாயிருந்து வருகிறது.

நன்றி-குமார் 

Monday, August 22, 2011

இரத்தம் குடிக்கும் இன உணர்வு



இந்தியாவில் இருந்து கொண்டு ஈழத்தமிழருக்கு தனிநாடு 
பெற்றுத் தருவதாக தமிழர் என்ற போர்வையில் பக்கா அரசியல் செய்யும் சென்நாய்களை இனம்காணுங்கள் உண்மை தமிழ்ர்களே. 



தமிழ் இன உணர்வும்......இரத்தம் குடிக்கும் சென்நாய்களும்

பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு ஊர்ஜிதம்...அரசியல் போராட்டம். ஒரு தமிழனாய் ஒரு தமிழன் தண்டிக்கபடுவதை விரும்பாத அதே வேலையில் நம் மனதில் சில நினைவுகள் போராடுவது சரியா என மனசாட்சி வாட்டுகிறது......


ஆம் இன்று பேரறிவாளன் தாய் விடும் கண்ணீரை எண்ணி மனம் வருந்தும் வேளையில் ராஜீவுடன் அன்று மரணித்த 18 தமிழ் உயிர்களை உறவுகளின் தாயார் கண்ணீரை ஏன் நம்மால் என்றும் நினைக்க முடியவில்லை..? அவர்களை பெற்றவர்களும் தாய் தானே...அவர்களை கொன்றதும் தமிழ் இனம் தானே...? மறுக்க முடியுமா ?



இதோ விடை வெகு நீளமாக.....ஆம் அன்று பேரறிவாளன் அவர்களுக்கு வயது 19 பாட்டரி வாங்கி கொடுக்கும் போது அவர் மனதில் உயிர்களை காவு வாங்க வெறியேற்ற பட்ட பொழுது. அது அரசியல் சூழ்ச்சி அதே வெறியை இன்று சீமான் போன்றோர் எண்ணற்ற தமிழ் இளைஞர்களின் மனிதில் ஏற்றுகின்றனர்...ஆம் இந்திய நமது நாடு அல்ல....இந்திய அரசாங்கம் தமிழ் விரோத அரசாங்கம் என்று....அப்படியானால் இந்திய அரசாங்கம் தமிழகத்திற்கு இவ்வாண்டு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியது ஏன்? ஆம் ஒரு பேரறிவாளனின் தாய் படும் துயர் நெஞ்சை வருடும் போது எண்ணற்ற பேரறிவாளன்களை உருவாக்க துடிக்கும் இந்த அரசியல் சூழ்ச்சியர்களை இளைஞர் சமூகம் புறந்தள்ளி முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல மனம் வேண்டுகிறது.

ஈழ விடுதலை போரில் ஒன்றும் செய்யாமல் இன்று தடி எடுத்தவன் தண்டல்காரன் போல் செயல்படுவது வேதனையிலும் வேதனை, ஆம் சீமான், வைகோ , அய்யா பழ நெடுமாறன் போன்றோர் இன உணர்வை வெளிபடுத்த ஏன் அன்று இன உணர்வாளர்களை திரட்டி கடல் மார்க்கமாக ஈழம் நோக்கி சென்று போர்களத்தில் சிங்களவனை எதிர்த்து போரிடவில்லை அப்படி அவர்கள் சென்றிருந்தால் உண்மை இன உணர்வின் பலன் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கும் அது தான் இன போர். அவர்கள் யாரும் அவ்வாறு செல்லவில்லை ஏன் என்றால் சுயநலம்..தான் எனது என்ற மனம்.....புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் மூளைகளை பிற நாட்டு குடிஉரிமை பெற குறுக்கு வழியில்செலவிட்டதை இனத்திற்காக செயல் படுத்தி இருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும். இது கடுகு அளவு இன்னும் பல கூற்றுகள் உள்ளன. இவர்கள் தங்கள் சுயநல அரசியல் புரிந்ததால் இழப்பு ஒன்றரை லட்சம் என் இனத்தவர்களை சிங்களவன் சூறையாடினான். இன்று புயல் ஓய்ந்தவுடன் காளான் போன்ற தலைவர்கள் என கூறிக்கொள்ளும் இவர்கள் சமூக சீரலழி விற்காக எடுத்துள்ள ஆயுதம் இன்றைய இளைய சமூகத்தை பாலாக்குவது இன உணர்வு என்ற பெயரால்.இதற்கு அவர்கள் செய்வது பழுத்த மரத்தில் கல் எறிவது போன்று திமுக மற்றும் தமிழ் இன மூத்த தலைவர் கலைஞர் மீது குறை, பழி சுமத்தி அரசியல் வாழ்வு தேடுவது, தங்கள் தவறை மறைக்க கூறும் நாடகம் இது.

 அன்று 

1991 ஆம் ஆண்டு ஆட்சி கலைக்கப்பட்டதும் ஏன் இந்த இன உணர்வாளர்கள் அவரை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவில்லை, அன்று எங்கே போனது இந்த வெறி...இன்று எதிர்ப்பதும் இன உணர்வு என்ற கோணத்தில் அவர் உதவி புரியவில்லை என்ற பொய் பிரசாரம் வேறு...அன்று கொத்து கொத்தாக என் இன மக்கள் கொன்று குவிக்கப்பட்ட பொழுது ஏளனம் செய்த ஜெயா இன்று தமிழ் மக்களின் காவலர் என்று கூறுவது நினைத்தால் .......பாவம் கலைஞர் இப்படிப்பட்ட பழிக்கு பிறகும் தளராது தமிழ் பணி ஆற்றுகிறார்.



எது இன உணர்வு ? என் இன இளைஞர்களின் மனதில் வெறி ஏற்றுவதா? அல்லது போராட அலைப்பதா? உண்மை இன உணர்வு எது வென்றால் இளைஞர்களுக்கு கல்வி கொடுங்கள், தொழில் வாய்ப்புக்களை பெருக்கி கொடுங்கள், இன மக்களை பசி இல்லாமல் வாழ வழி செய்யுங்கள், இனத்தை தலை நிமிர செய்வதே இன உணர்வு. இன மக்களை அனைத்து துறைகளிலும் முன்னேற வைப்பதே இன முன்னேற்றம். அன்றே தமிழன் தலை நிமிர்ந்து வாழ முடியும். ஐயன் வள்ளுவனை உலகம் எண்ணி பெருமை கொள்வது ஏன்? அதுவே தமிழனுக்கு பெருமை.சிங்களவன் என்ன அனைவரும் நம்மை மதிப்பான் நாம் நினைப்பது நம் கைக்கு கிட்டும்...உதாரணம் ஜப்பானை பாருங்கள் தெற்காசிய தலைநகரமாக உருவானதை எண்ணி பாருங்கள். என்று இந்த வெள்ளாடு தோல் போர்த்திய இன இரத்தம் குடிக்கும் செந்நாய்கலை நாம் அடையாளம் கண்டு புறந்தள்ளுகிறோமோ அன்றே சமூகம் முன்னேற்றம் பெறும்.

அந்த வெறியாட்டத்தின் விளைவு இன்று தமிழகத்தை கன்னடத்து ஜெயா ஆட்சி செய்ய அனுமத்திருப்பது தெலுங்கவனை எதிர்க்கட்சி தலைவன் ஆக்கி இருப்பது அவர்களிடம் இன உதவி கேட்பது குச்சியை கொடுத்து அடி வாங்க காத்திருப்பது போன்றது. பிறர் வாழ தமிழன் தன்னை அழித்து கொண்டது போதும் உதாரணம் ரஜினி நலம் பெற 1008 தமிழர்கள் மொட்டை அவரோ மராட்டியம் சென்று பால்தக்கரேயிடம் நீ என் கடவுள் என்று தன் இன உணர்வை வெளிபடுத்துகிறார்.

இன்றைய இளைய சமூகம் சீமான் போன்றவர்களை தனிமை படுத்தி வாழ வழி தேடி இனத்தை முன்னேற்ற பாதை நோக்கி வழி நடத்தி செல்லுங்கள். அரசியல் சூழ்ச்சியில் வாழ்வை தொலைத்து பேரறிவாளன் தாய் போன்றதொரு நிலையை உங்கள் தாய்க்கு கொடுக்காதீர்கள்....சுயநலம் பிடித்த இந்த மிருகங்கள் தங்கள் வாழ்வில் நல்ல நிலையில் தான் இருந்து கொண்டு தங்கள் புகழுக்காக உங்களை சீரழிக்கின்றனர்....உணருங்கள் முன்னேறுங்கள் அதுவே சமூக முன்னேற்றம்



தமிழன் என்று சொல்லடா .....தலை நிமிர்ந்து நில்லடா....போன்ற தலைமுறையை உருவாக்குவதே நம் பொறுப்பு...




நன்றி உண்மை தமிழன் -கழுகுப்பார்வை 




Sunday, August 21, 2011

சென்னை -372

வணக்கம் சென்னை. இன்று 372 வது பிறந்தநாள் காணும் சென்னைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சென்னை, வந்தாரை வாழவைக்கும் சென்னை, எத்தனை லட்சம் பேருக்கு வாழ்க்கை கொடுத்த, கொடுக்கப்போகும் சென்னை.

1639ஆம் ஆண்டு இதே நாளில் சென்னப்ப நாயக்கரிடமிருந்து இந்த இடத்தை கிழக்கிந்திய கம்பனியின் வணிகர்கள் Francis Day மற்றும் Andrew Cogan வணிகம் செய்வதற்காக வாங்கினர். அப்போது மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டது. பின்பு ஒரு வருடம் கழித்து இங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இங்கிருந்து ஆங்கிலேயர்கள் வணிகம் செய்து வந்தனர். கொஞ்சகாலம் பிரெஞ்சு கட்டுப்பாட்டிலும் மெட்ராஸ் இருந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னை மாகாணம் உருவாக்கினர். தற்போதைய தமிழ்நாட்டுடன் ஆந்த்ரா, கேரளா, கர்நாடகா மற்றும் ஒரிசாவில் இருந்து கொஞ்சம் பிச்சு பிச்சு சேர்த்தால் பழைய சென்னை மாகாணம் கிடைக்கும்.சுதந்திரம் அடைந்த பிறகு, மெட்ராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது தற்போதைய தமிழ்நாடு. 1968இல் மெட்ராஸ் மாநிலம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. 1996இல் மெட்ராஸ் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது. எத்தனையோ மாற்றத்திற்கு பிறகும் இன்றும் கம்பீரமாக நிற்கிறது சென்னை.

சென்னை தற்போது என் போன்ற பலரின் வாழ்கையின் ஒரு முக்கிய பகுதியாகிவிட்டது, எனக்கு உலகின் நுழைவாயில் போன்றது சென்னை, சென்னை பல விஷயங்கள் கற்றுக்கொடுக்கிறது, இன்னும் நிறைய கற்றுக்கொடுக்கும். சென்னையும் நமக்கு ஒரு ஆசனாகிவிட்டது. இன்னும் பலருக்கு வாழ்க்கை தரப்போகும் சென்னை மாநகருக்கு மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Saturday, August 20, 2011

பொய்லலிதாவின் போலி முகம் ....



ஜெ. ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர். 18.1.2009) 

கேள்வி: ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே? 

ஜெயலலிதா பதில்: அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில், அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் 
விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். 

*16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா 
முன்மொழிந்த தீர்மானம் வருமாறு:* 

நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான LTTE.-யின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கு கொண்டு வந்து சேர்த்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென திரும்பத் திரும்பக் கேட்டுக் 
கொண்டிருந்தேன். 20.9.1991 ஆம் தேதியிட்ட எனது கடிதத்தில், அப்போது மாண்புமிகு பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களை, தேவைப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய இராணுவத்தை அனுப்பியேனும் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிற்குக் கொண்டுவரவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். முன்னாள் பிரதமர், அமரர் திரு. ராஜீவ்காந்தியின் படுகொலையைப் புரிந்தமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரியிருந் தேன். அதன் பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வலியுறுத்தினேன். அப்போது பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களின் அரசு, இது குறித்து நடவடிக்கை எடுத்து, 1995-இல் - Interpol-International Criminal Police Commission அமைப்பின் வாயிலாக 
பிரபாகரனைக் கைது செய்ய Red Corner Notice வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை. அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம், Prevention of Terrorism Act, 2002-இன்கீழ் இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து இந்திய மக்களை நிம்மதியடையச் செய்தது. அந்தப் பயங்கரவாத அமைப்பினால், அண்மைக் காலங்களில் 
விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் மௌனம் காத்து வருவது எங்களுக்குக் கவலை அளிக்கிறது. 
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் திரு. ராஜீவ்காந்தி 
அவர்களின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் 
திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இவ்வாறு சட்டப் பேரவையிலேயே தீர்மானத்தை நிறைவேற்றியவர்தான் ஜெயலலிதா. 
  தமிழகத்தில் அமைதி நிலவவும், இந்தியாவின் இறையாண்மை காக்கப்படவும், பயங்கரவாத இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு நான் தமிழக முதலமைச்சராக பொறுப்பெற்ற பிறகு, மத்திய அரசை வலியுறுத்தினேன். என்னுடைய பெரு முயற்சியின் காரணமாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் 14.5.1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அந்த இயக்கத்தின் மீதான தடை இன்று வரை தொடருகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

* (நமது எம்.ஜி.ஆர். 23.10.2008 பக்கம் 1). * 

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்ற அசட்டுத் தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேச விரோத கருத்துகளை பேச ஆரம்பித்து விட்டனர். POTA இல்லாவிட்டாலும், சட்ட விரோதமான நடவடிக்கைகளை தற்போதுள்ள சட்ட விரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி திமுக அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவான பேச்சுகள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.* 


*-  அறிக்கை (நமது எம்.ஜி.ஆர். ஏடு 23.10.2008)* 


*விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி !* 
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப் 
பார்த்தால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது. 


*- ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர். 16.10.2008)* 
------------------------------------ 
*போரை நிறுத்த வேண்டும் என்பதன்மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. * 
*(நமது எம்.ஜி.ஆர். 16.10.2008)*


கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பொதுக் கூட்டம் போட முடிகிறது, பேரணி நடத்த முடிகிறது, போராட்டங்களை நடத்த முடிகிறது என்பதை நன்கு தெரிந்திருந்தும் ஜெயலலிதாவைப் போற்றுவதும், கலைஞரைத் தூற்றுவதும் அறிவார்ந்த செயல் தானா? 
உண்மையிலே ஈழத் தமிழர்கள்மீது அக்கறை யிருந்தால் விரோதியை நண்பராகவும் நண்பரை 
விரோதியாகவும் கருதுவார்களா? 
இதன் மூலம் என்ன தெரிகிறது? ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேச முடியாது. கலைஞர் ஆட்சியில் இருந்தால் பேச முடிகிறது. இதற்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு ஜெ போடுவோரை என்னவென்று கூறுவது? 


-------------------------------------- 



Tuesday, August 9, 2011

வரலாறு திரும்பும் என்பார்கள், ஆனால்...



வரலாறு திரும்பும் என்பார்கள், ஆனால், அது மீண்டும் அதே பாதையிலேயே திரும்பாது, மேம்பட்ட வேறொரு பாதையில் திருபிம்யது ...

சமச்சீர்கல்வி 

நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னர் -உச்சநீதிமன்றத் தீர்க்கமான தீர்ப்பையும் பெற்ற பின்னர் -சமச்சீர் கல்வித் திட்டத்தை சென்ற ஆண்டுதான் தி.மு.க அரசு செயல்படுத்தத் தொடங்கியது. ஆனால் அந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது புதிய அ.தி.மு.க அரசு முடிவு செய்தது. அந்த முடிவுதான் அரியணை ஏறியதும் எடுத்த முதல் முடிவு. அதிர்ந்து போனோம். ஏனெனில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவைக்கவேண்டும் என்று எந்த இயக்கமும் கோரவில்லை. ஆனால் துக்ளக் "சோ"தான் அந்தத் திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து வந்தார். 

அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம், சமத்துவம் என்ற உன்னதமான தத்துவத்திலிருந்து பிறந்திருக்கிறது. புதிய அரசு இதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முகாந்திரம் சற்று குழப்பமாக இருந்தாலும் புலப்படுகிறது, ஒருவேளை இந்த பாடத்திட்டம் நல்ல பலனை கொடுக்குமாயின், கலைஞர் உருவாக்கிய பாடத்திட்டம் என்பதுபோல் வரலாறு ஆகிவிடும் என்பதுதான் காரணமாக இருக்கமுடியும். நான் இப்படி கூறுவதற்கு காரணங்கள் இருக்கின்றன.

குலக்கல்வி

1952 இல் திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அன்றைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் அவரவர் குலத் தொழிலைத்தான் அவர்கள் செய்ய வேண்டும்; படிக்கக் கூடாதென்று பகிரங்கமாகப் பேசினார் என்பதும், 1952இல் குலக்கல்வித் திட்டத்தை ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குக் கொண்டுவந்து அந்தச் சிறுவர்கள் ஜாதித் தொழிலைச் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.என்பதும், ஆச்சாரியார் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட ஆரம்பப் பள்ளிப் பாடநூல்களில் அந்தந்த ஜாதிக்காரர்களின் குலத்தொழிலைப் படத்தோடு போட்டு ஒருமையில் எழுதி அவமதித்தார் என்பது வரலாறு 

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே 

கடந்த கால வரலாறு தெரிந்தால் மட்டுமே நிகழ்கால அரசியலை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. வரலாற்றில் இருந்து படிப்பினை படிக்க முடியாதவர்கள் தாங்கள் விட்ட பிழைகளை மீண்டும் விடத் தள்ளப்படுவார்கள் (Those Who Do Not Learn From History Are Doomed to Repeat It.) நமது வரலாற்றை ஒரு நாளிலோ ஒரு மாதத்திலோ அல்லது ஒரு ஆண்டிலேயோ படித்து முடித்துவிட முடியாது. அது ஒரு தொடர் தேடுதலாக இருக்க வேண்டும்.

‘’நான் வலியுறுத்த விரும்பும் இன்னொரு முக்கிய அம்சமாவது கடந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறுவது பற்றியதாகும். நான் கடந்த காலத்தை மட்டும் நேசிக்கும் பிரிவினர்களைச் சார்ந்தவனல்லன். நான் எதிர்காலத்தில் நம்பிக்கையுள்ளவன். எதிர்காலத்தை அறிவதற்கு எனக்கு நிகழ்காலம் அவசியப்படுகின்றது. இன்று நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளைச்‌ சரியான முறையில்புரிந்து , நமது நாகரித்தினதும் பண்பாட்டினதும் மூல ஊற்று பற்றிய தெளிவான அறிவைப் பெறுதல் இன்றைய காலகட்டத்தின் தேவையாகும்.

இந்தக் காரணமாக நாம் கடந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறவேண்டும் . நவீன பண்பாட்டினதும் நாகரிகத்தினதும் அடிப்படைகள் பற்றிய அறிவையும் பரிச்சயத்தையும் நாம் பெற்றிராததால் நவீன அறிவைத் தேடிப் பெறுவதில் பிற இனங்களை விட நாம் பின்தங்கியுள்ளோம். எனவே,நம் கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைப்பதைத் துண்டித்த அம்சங்கள் பற்றி நாம் கவனம் செலுத்துதல் வேண்டும்.

வரலாறு என்பது ஆட்சியாளர்கள், அரண்மனை வாழ்வு, படையெடுப்புக்கள் பற்றிய ஒரு பதிவாக அன்றி, மக்கள் சமூகத்தின் செயற்பாடு, மாற்றங்கள் பற்றிய விளக்கமாக அமைதல் வேண்டும் என்ற கருத்தை வரலாற்றறிஞர்கள் பலர் கொண்டிருந்தனர். ‘ஆட்சியாளர்கள் காலத்திற்குக் காலம் தோன்றி மறைவார்கள். ஆனால் சமூகங்கள் தொடர்ச்சியாக நிலைத்திருக்கும்’ என்ற வரலாற்று உண்மை..

இன்று
நடப்பு ஆண்டே தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும்.

- 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்த வேண்டும்.

- சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒத்திவைக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுகிறது.
- தமிழகத்தில் பழையப் பாடத் திட்டத்தை செய்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு ...

நம் திராவிடர் வரலாறு எனபது நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று.....

நன்றி-காலன் 

Monday, August 8, 2011

ஜெயலலிதாவின் ஆசியுடன் தினகரன்


ஜெஜெ டிவி பாஸ்கரனை நினைவிருக்கிறதா....
தொன்னூறுகளில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியை மறக்காத யாராலும் அத்தனை சுலபத்தில் மறக்க முடியாத நபர் இந்த பாஸ்கரன். அதாவது சின்ன எம்ஜிஆர் என்று தனக்குத் தானே பட்டம்  சூட்டிக் கொண்ட முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனின் அண்ணன், டிடிவி தினகரனின் தம்பி!. இத்தனை நாட்கள் எங்கே இருந்தார், என்ன செய்தார்.... இந்த ஆராய்ச்சிக்கெல்லாம் போகாமல், நேரே விஷயத்துக்கு வருவோம்.... மனிதர் இப்போது சினிமா ஹீரோவாகிறார். பாஸ் என்கிற பாஸ்கரன் என்பதுதான் இப்போது அவர் முழுப் பெயர். நடிக்கும்
படத்துக்குத் 'தலைவன்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். தலைவன்? "ஆமாங்க... படம் பேரு தலைவன்தான். நம்ம புரட்சித் தலைவரோட படம் ஒன்றின் பெயரே எனது முதல் படத்தின்தலைப்பாகவும் அமைந்துள்ளது. அதுதான் தலைவர் எனக்குத் தரும் ஆசீர்வாதம்", என்கிறார் உற்சாகத்துக்குக்
குறைவில்லாத பாஸ்கரன். படத்தின் இயக்குநர் ரொம்பப் பிரபலமானவராம். ஆனால் பெயரை இப்போது அறிவிக்க மாட்டார்களாம். சரி, திமுக தலைவர்களின் வாரிசுகள் நடிக்க வந்தால் மட்டும் குய்யோ முறையோ என
கூப்பாடு போட்டார்களே... இப்போது பாஸ்கரன் நடிக்க வந்தது மட்டும் எந்த வகையில் சேர்த்தி? என்று கேட்டால், "என் திறமை மூலம் மட்டுமே நான் ஜெயிப்பேன். தயாரிப்பாளரில் இருந்து லைட்பாய் வரை எல்லாரும் வாழணும். நான் வாழறதுக்காக மத்தவங்க வாழ்க்கையை அழிக்க மாட்டேன் என்கிறார்!
பாஸ்கரனுக்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி உண்டா என்றால், "அவர்
ஆசி இல்லாமலா... அது எப்பவும் நிறைய உண்டு", என்று கூறியுள்ளார்
ஒரு பேட்டியில்! 1995ம் ஆண்டு அன்னிய செலாவணி விவகாரத்தில் இவரை அமலாக்கப் பிரிவினர் கைது செய்ததும் நினைவுகூறத்தக்கது. ரிம்சாட் என்ற
செயற்கைக் கோள் நிறுவனத்துக்கு 6.8 லட்சம் டாலர் பணத்தை இவர் பறிமாற்றம் செய்ததாக அப்போது புகார் கூறியது அமலாக்கப் பிரிவு.
பின்னர் அந்த வம்பு வழக்குகளில் இருந்தெல்லாம் வெளியே வந்து மிக மிக
அமைதியாக இருந்தார். இப்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

நன்றி-கார்த்திக்