கேள்வி: ஈழத் தமிழர்கள் போரில் கொல்லப்படுகிறார்களே?
ஜெயலலிதா பதில்: அங்கு இன்னும் ஈழம் அமையவில்லை. இலங்கைத் தமிழர்கள் என்பதுதான் அரசியல் ரீதியில், அலுவல் ரீதியாகச் சொல்லப்படுகிறது. இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும்
விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், இன்று இலங்கையில் என்ன நடக்கிறது என்றால், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப்புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
*16.4.2002 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா
முன்மொழிந்த தீர்மானம் வருமாறு:*
நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போதெல்லாம் இந்திய அரசாங்கத்தை ஸ்ரீலங்கா அரசுடன் தொடர்பு கொண்டு பயங்கரவாத அமைப்பான LTTE.-யின் தலைவரான பிரபாகரனை ஸ்ரீலங்கா நாட்டிலிருந்து இங்கு கொண்டு வந்து சேர்த்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தின்முன் நிறுத்தவேண்டுமென திரும்பத் திரும்பக் கேட்டுக்
கொண்டிருந்தேன். 20.9.1991 ஆம் தேதியிட்ட எனது கடிதத்தில், அப்போது மாண்புமிகு பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களை, தேவைப்படும் பட்சத்தில் ஸ்ரீலங்கா அரசினுடைய அனுமதி பெற்று நம்முடைய இராணுவத்தை அனுப்பியேனும் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவிற்குக் கொண்டுவரவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். முன்னாள் பிரதமர், அமரர் திரு. ராஜீவ்காந்தியின் படுகொலையைப் புரிந்தமைக்காக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை இந்திய நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமெனக் கோரியிருந் தேன். அதன் பின்னர் பலமுறை இதே கோரிக்கையை வலியுறுத்தினேன். அப்போது பாரதப் பிரதமராக இருந்த திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்களின் அரசு, இது குறித்து நடவடிக்கை எடுத்து, 1995-இல் - Interpol-International Criminal Police Commission அமைப்பின் வாயிலாக
பிரபாகரனைக் கைது செய்ய Red Corner Notice வழங்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் எதுவும் நடக்கவில்லை. அண்மையில் நிறைவேற்றப்பட்ட 2002 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புச் சட்டம், Prevention of Terrorism Act, 2002-இன்கீழ் இந்திய அரசாங்கம் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து இந்திய மக்களை நிம்மதியடையச் செய்தது. அந்தப் பயங்கரவாத அமைப்பினால், அண்மைக் காலங்களில்
விடுதலைப்புலிகள் சம்பந்தப்பட்ட சில பிரச்சினைகளில் மத்திய அரசாங்கம் மௌனம் காத்து வருவது எங்களுக்குக் கவலை அளிக்கிறது.
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் திரு. ராஜீவ்காந்தி
அவர்களின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத்
திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இவ்வாறு சட்டப் பேரவையிலேயே தீர்மானத்தை நிறைவேற்றியவர்தான் ஜெயலலிதா.
தமிழகத்தில் அமைதி நிலவவும், இந்தியாவின் இறையாண்மை காக்கப்படவும், பயங்கரவாத இயக்கமான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்று 1991-ஆம் ஆண்டு நான் தமிழக முதலமைச்சராக பொறுப்பெற்ற பிறகு, மத்திய அரசை வலியுறுத்தினேன். என்னுடைய பெரு முயற்சியின் காரணமாகத்தான் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கம் 14.5.1992 அன்று மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. அந்த இயக்கத்தின் மீதான தடை இன்று வரை தொடருகிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக பிரபாகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
* (நமது எம்.ஜி.ஆர். 23.10.2008 பக்கம் 1). *
தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்ற அசட்டுத் தைரியத்தில் சிலர் பகிரங்கமாகவே தேச விரோத கருத்துகளை பேச ஆரம்பித்து விட்டனர். POTA இல்லாவிட்டாலும், சட்ட விரோதமான நடவடிக்கைகளை தற்போதுள்ள சட்ட விரோதமான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி திமுக அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் விடுதலைப்புலிகள் ஆதரவான பேச்சுகள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.*
*- அறிக்கை (நமது எம்.ஜி.ஆர். ஏடு 23.10.2008)*
*விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி !*
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட (14.10.2008) தீர்மானத்தைப்
பார்த்தால், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படுகிறாரோ என்ற சந்தேகம்தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை அய்ந்து முறை முதலமைச்சரான கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது. இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும். அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது.
*- ஜெயலலிதா (நமது எம்.ஜி.ஆர். 16.10.2008)*
------------------------------------
*போரை நிறுத்த வேண்டும் என்பதன்மூலம் கருணாநிதி விடுதலைப் புலிகள் அமைப்பை காப்பாற்றுவதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறார். இது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல. *
*(நமது எம்.ஜி.ஆர். 16.10.2008)*
கலைஞர் ஆட்சியில் இருக்கும்போதுதான் பொதுக் கூட்டம் போட முடிகிறது, பேரணி நடத்த முடிகிறது, போராட்டங்களை நடத்த முடிகிறது என்பதை நன்கு தெரிந்திருந்தும் ஜெயலலிதாவைப் போற்றுவதும், கலைஞரைத் தூற்றுவதும் அறிவார்ந்த செயல் தானா?
உண்மையிலே ஈழத் தமிழர்கள்மீது அக்கறை யிருந்தால் விரோதியை நண்பராகவும் நண்பரை
விரோதியாகவும் கருதுவார்களா?
இதன் மூலம் என்ன தெரிகிறது? ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் விடுதலைப்புலிகளைப் பற்றிப் பேச முடியாது. கலைஞர் ஆட்சியில் இருந்தால் பேச முடிகிறது. இதற்குப் பிறகும் ஜெயலலிதாவுக்கு ஜெ போடுவோரை என்னவென்று கூறுவது?
--------------------------------------
நாடு இனியும் உங்களை நம்பாது!
ReplyDeleteஜெயலிதா தமிழர்களுக்கு செய்ய வேண்டிய கட்டாயமில்லை.... ஏன்னா அவங்க ஒரு பாப்பாத்தி!
ஆனால் கருணாநிதி தான் தமிழர்களை காப்பாற்றி இருக்க வேண்டும்...
ஏன்னா தமிழ் தமிழர் என்று சொல்லி கொண்டு திரிந்தவர் அவர்!
கனிமொழி அக்கா இப்ப எங்கே?
ReplyDeleteகருணாநிதியின் சொக்கத் தங்கம் இத்தாலி சோனியா எங்கே?
மஞ்சத்துண்டு இன்னும் அழியவில்லையா?
இதிலே என்ன போலி முகம் கண்டீங்க?
ReplyDeleteஎங்களுக்கு ஒன்னும் தெரியலையே???!!!
உங்க எல்லா செய்திலேயும், ஜெவின் விடுதலை புலி எதிர்ப்பு தானே அடங்கியிருக்கு.
இது ஒரு முகம் தானே எப்படி போலி முகமாகும்.
ஒண்ணும் விளங்கலே :(
- கரிகாலன்
கழக முண்டங்களான சாந்தி,பாபு,
ReplyDeleteஇன்னும் எவ்வளவு நாளைக்கு மஞ்ச துண்டு,பெரிய வெள்ளை தாடி போன்ற அயோக்யர்களின் பெயரில் பிச்சை எடுத்து ஈன வாழ்க்கை வாழப் போகிறீர்கள்.
Bro really appericiate u
ReplyDelete