தொகுப்புகள்

Search This Blog

Friday, August 26, 2011

ஜெ விற்கு ஏழை உசுரு கொசுறா?



அன்று 

 புதிய சட்டமன்ற கட்டிடம் கட்டப்பட்டது குறித்து அதிமுக அமைச்சர் பேசுகையில் அந்தக் கட்டடத்தில் முறைகேடு மட்டுமல்ல, தரம் குறைவாக இருப்பதாகவும் . தரம் குறைந்த கட்டடத்தில் செயல்படுவது சரியாக இருக்காது. எனவே, முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதுவரை, கட்டடப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. என்றும் கூறினார்.

இன்று 

ஆனால் இன்று புதிய சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றுவதாக கூறியிருக்கிறார்கள். 

சட்டமன்றமாக இருந்தால் அனைத்து துறைகள் மற்றும் வந்து செல்வோர் என சுமார் 3000 பேரை தாங்கக்கூடியதாக இருக்கும் ,, அச்சமயத்தில் அப்படியே ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உயிர் இழப்பு சற்று குறைவாகத்தான் இருக்கும் ,அதுவும் சுமார் 12 மணிநேரம் மட்டுமே இயங்கும் சட்டமன்றத்தில்  இரவில் அசம்பாவிதம் நடந்தால் மிகவும் சொச்சமான உயிரிழப்புதான் ஏற்படும். ..

ஆனால் தற்போது, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், பயன்படுத்தப்படாமல் உள்ள கட்டடம், ஏழை, எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும், தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வகையில், பல துறை உயர் சிறப்பு மருத்துவமனை, அதாவது, (Multi Super Specialty Hospital) ஒன்றை அமைக்க ஜெயா அரசு முடிவு எடுத்துள்ளது . ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், முந்தைய தி.மு.க அரசால், புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக கட்டப்பட்ட, 97,829 சதுர மீட்டர் தளப் பரப்பு கொண்ட பிளாக் 'ஏ' கட்டடத்தில் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது .

தரமற்றவை என்று கருதி அரசு மற்றும் அரசியல்வாதிகள் பயன்படுத்தாத ஒரு கட்டிடத்தை ஏழை, எளிய மக்கள் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வகையில் அதுவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துமனைக்கு நிகராக புதிய மருத்துவமனை அமைந்தால் அதில் பணியாற்றும் மருத்துவ வல்லுநர்கள், செவிலியர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள்,மருத்துவ மாணவர்கள் ,சிகிச்சை பெறுவோர் உடனிருப்போர் , வெளிநோயாளிகள் ,என சுமார் 20000 நபர்களை தாங்க வேண்டிய சூழல் ஏற்படும் .. மேலும் 24 மணி நேரமும் இயங்கவேண்டியிருகும் . 

இப்படிப்பட்ட ஒரு சூழலில் தரமற்ற இக்கட்டிடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பாத்திகப்படுவார்கள் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள் ...  


1 comment:

  1. அதானே பாத்தேன் என்னடா இன்னும் சத்தத்தேயே காணாமேன்னு? குடும்பமாவே நீங்க ரெண்டு பேரும் வரிஞ்சு கட்டி கிட்டு ஜெ வை துவம்சம் செய்ய கிளம்பிட்டீங்கலாக்கும்? ஒட்டு மொத்த தமிழக மக்களுமே சேர்ந்து உங்க தானை தலைவரை ஒதுக்கி வச்சப்பரமும் இன்னும் உங்க கோபம் போகலியே?இதை விட கேவலம் இருக்க முடியாது. உங்களுக்கெல்லாம் பேச அருகதையே கிடையாது.ஒரு திருட்டு கும்பலுக்கு வக்காலத்து வாங்கும் மக்கள் இருப்பது அதையும் வெட்கமில்லாமல் இணையத்தில் பதிவு செய்வது கேவலமானது.

    ReplyDelete