சமுக உறவில் தேடுங்கள்

Loading

Saturday, August 27, 2011

3 - உயிர் குடிக்க துடிக்கும் ஓர் கும்பல்


கொஞ்ச நாளா ஊழலுக்கு எதிரான போர் என்று பத்திரிக்கை ஊடங்கங்களால் விளம்பரப்படுத்தப்படும் அண்ணா கசாரே என்ற காந்தியவாதியின் ... அவரு திரைமறைவில் என்னவென்ன சத்திய பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கிறாரோ அது அவரை சுற்றி இருக்கும் காற்றுக்கே வெளிச்சம்...... 

   ஆனால் போலியாக முனையப்பெற்ற குற்ற சாட்டுகளால் தூக்கு கயிற்றின் முன்னால்  நிற்கும் வருங்கால இளைய பாரதத்தின் ஊற்று கண் எது என்றும் பார்க்க வேண்டியது அவசியம். கட்டி இழுத்து சென்று தூக்குகயிறு முன்   நிறுத்தப்படுவதற்கும்,அதற்கு பின்னால்  இயங்கும் இந்திய வல்லாதிக்கத்தினாலும் அதன் பார்ப்பனிய ஏவலாளிகளினாலும் எந்நேரமும் தயாராக வைத்திருக்கப்பட்டிருக்கும் அந்த மூன்று உயிர்களையும் நினைக்கும் போதே குலை நடுங்குகிறது. அதுவும் எல்லா இளைஞர்களையும் போல் வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்திருக்க வேண்டிய மூன்று உயிர்கள் பத்தொன்பது வருடங்களாக காலத்தை பகுத்தறிய முடியாத நிலையில் இருட்டு கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை நினைத்தால் மனம் பதறுகிறது. ஏன்..... இவ்வளவு நாளாக அந்த மூன்று உயிர்களை பற்றிய கவலை இன்றி நம்முடைய வாழ்வு நம்முடைய அரசியல் என்று அலைந்திருந்தையும் பற்றி எண்ணினால் கண்ணாடியின் முன்பு நம்முடைய முகத்தை பார்ப்பதற்கே அருவருப்பாயிருக்கிறது. 


காலம் கடந்த விழிப்புணர்வாக இருந்தாலும் கடைசி தருணத்திலாவது எப்பாடு பட்டேனும் இந்த அநீதியை நிறுத்தியாக வேண்டும் என்று ஒவ்வொரு தமிழனது உணர்வும் இப்போதாவது தட்டி எழுப்பப்பட வேண்டும். ஏன் இவ்வளவு நாளும் அமைதியாக இருந்த இந்திய வல்லாதிக்கமும் அதன் ஏவலாட்களும் தற்போது மட்டும் இவ்வளவு முனைப்பாக செயல்படுகிறார்கள் என்று எனக்கு நெருங்கிய வட்டாரங்களோடு பேசிய போது நான் அறிந்த விடயங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். 


நம்மில் பலர் இதை ஏதோ சோனியா இட்ட உத்தரவு என்றே நம்புகிறோம். அதையும் தாண்டி இந்திய வல்லாதிக்கத்தில் உள்ள கார்பரேட் முதலாளிகளும், பார்ப்பனிய கும்பல்களுக்கும் இதில் உள்ள தொடர்புகளை பற்றி நாம் எண்ணி பார்ப்பதில்லை. ஆனால் உண்மை என்னன்னா இலங்கை அரசின் நிர்பந்தத்தின் பேரில் தான் இந்த தூக்கு தண்டனையை பற்றிய கோப்பு தூசி தட்டப்பட்டு இருக்கிறது என்பது தான். அதை செயல்படுத்த இலங்கை அரசுக்கு உதவியாக இந்தியாவில் களம் இறங்கியிருப்பது இந்தியாவின் தரகு முதலாளிகள், அரசு உயரதிகாரிகள் உள்ளடங்கிய பார்ப்பனிய கும்பல். இலங்கை அரசுக்கு அதற்கெதிராக சர்வதேச அளவில் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை முறியடிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் அதிகமாகவே உள்ளது.. இந்த நிலையில் என்ன செய்வது என்று இலங்கை அரசு கையை பிசைந்து கொண்டிருந்த வேளையில் அதற்கு இந்தியாவில் உள்ள பார்ப்பனிய அதிகார வர்க்கத்தினால் கொடுக்கப்பட்ட ஆலோசனையும், அதை செயற்படுத்துவதற்காக அவர்கள் எடுத்து கொள்ளுகிற முயற்சிகளின் ஒரு பகுதி தான், மூன்று அப்பாவிகளின் மரண தண்டனைக்கு நாள் குறிப்பதில் இந்திய வல்லாதிக்கம் காட்டுகிற அவசரம். ..... குறிப்பாக “சந்து” போன்ற பார்ப்பனிய ஊடகங்களும், ஒரு தொலை தொடர்பு துறையை சார்ந்த நிறுவனமும் கச்சை கட்டி கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறது. 

இதனால் இலங்கை அரசுக்கு என்ன கிடைத்து விட போகிறது என்று நீங்கள் கேட்காலாம்..... அதனுடைய நோக்கமே அதற்கெதிராக தமிழர்களால் எடுக்கப்படும் போராட்ட முனைப்பை எப்படியாவது திசை திருப்ப வேண்டும், அதே போன்று தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிரான எதிர்ப்புகளையும் திசை திருப்பி வலுவிழக்க செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள பார்ப்பனிய கும்பல்களின் திட்டமோ, இந்த மரண தண்டனையை நிறைவேற்றுவதின் மூலம் தமிழகத்தில் மக்களிடையே சமீபகாலமாக எழும்பி இருக்கும் தமிழ் இன உணர்வை மழுங்கடிக்க வேண்டும் என்பது தான். இந்தியாவின் தரகு முதலாளிகளுக்கோ இந்த விடயத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்திய அரசின் அரசு இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம், இலங்கையில் அவர்கள் தொழில் தொடங்க அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்தி தரும் என்ற உறுதி மொழியின் அடிப்படையில். இந்திய வல்லாதிக்கத்தை கட்டுபடுத்தும் ஆதிக்க வர்க்கங்களும் இலங்கையில் இந்திய தொழில் நிறுவனங்கள் கால் வைக்க வாய்ப்பு ஏற்படுத்துவதன் மூலம் அங்கு தளம் அமைத்து கொண்டிருக்கும் சீனர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கலாம் என்ற நோக்கோடு செயல்படுகிறது. 

இந்த தூக்கு தண்டனையை நிறை வேற்றுவதின் மூலம் போராட்ட களத்தில் இருக்கும் தமிழர்களின் தன்னம்பிக்கையை உடைத்து விடலாம் என்றே இந்திய அளவிலும் , தமிழக அளவிலும் உள்ள பார்ப்பனிய கும்பல் நம்புகிறது. சோனியாவை சுற்றி நின்று இயக்குவதும் இந்த பார்ப்பனிய கும்பல் என்பது நாம் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நம்மில் பல தோழர்கள் செயாவிடம் சென்று கோரிக்கை விடுத்தால் அந்த மூன்று உயிர்களையும் மீட்டு விடலாம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கின்றனர். உண்மை என்னவென்றால் .... இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதன் மூலம் செயலாலிதா வேறு கணக்கு போட்டு கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஈழ தமிழர்களுடைய பிரச்சினையில் கலைஞர் மீது வெறுப்பில் இருக்கும் தமிழர்களிடம் இந்த தூக்கு தண்டனைக்கும் கலைஞர் தான் காரணம். மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் அவர் நினைத்திருந்தால் சோனியாவிடமும் , மன்மோகனிடமும் பேசி இந்த தூக்கு தண்டனையை ரத்து பண்ண வைத்திருக்கு முடியும், ஆனால் துரோகி கருணாநிதி அதை செய்ய தவறி விட்டார் என்று தமிழர்களிடையே கலைஞரை பற்றி பரப்புரை செய்யலாம் என்பதும், அதன் மூலம் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதனையே ஒரு பெரிய ஆயுதமாக திமுகவிற்கு எதிராக பயன்படுத்தலாம் என்பதும், செயாவின் சுற்றி இருந்து அவருக்கு அறிவுரை கொடுத்து கொண்டிருக்கும் பார்ப்பனிய கும்பலின் திட்டம். 

இந்த தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு உதவுவதன் மூலம் செயாவிற்கும் சோனியாவிற்கும் இடையே ஒரு பாலத்தை ஏற்படுத்தி விடாலாம் என்றே அந்த பார்ப்பனிய கும்பல் நம்புகிறது. அவ்வாறு நடப்பதின் மூலம் திமுகவை மத்தியில் கூட்டணியில் இருந்து தூக்கி எரிந்து விட்டு, திமுகவிற்கு எதிரான செயல்பாடுகளை தமிழகத்தில் இன்னும் தீவிரபடுத்தலாம் என்றும் அந்த கூட்டம் நம்புகிறது. 

இப்படி பட்ட சூழல் தான் இங்கே தற்போது நிலவி கொண்டிருக்கிறது . ஆகவே இந்த மரண தண்டனையை எதிர்த்து போராட்டத்தில் குதித்து இருக்கும் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள். தமிழர்களுக்கு எதிராக இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் மிக பெரிய கன்னி விரித்து வைக்க பட்டு இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாம் இங்கு இருக்கிறவர்களின் காலில் விழுந்து காலத்தை வீணாக்குவதை விட இந்த போராட்டத்தை அணைத்து தமிழ் ஆர்வலர்களையும், கடந்த கால மன கசப்புகளை மறந்து விட்டு ஒன்றிணைத்து ஒரே அணியில் இருந்து மிக பெரிய அளவில் கொண்டு செல்வதோடு , சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் சொந்தங்கள் ஈழ தமிழர் பிரச்சினையோடு இந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட போகிற கொடுமைக்காகவும் அந்தந்த நாடுகளில் போராட்டங்களை முன்னெடுப்பது அவசியம். அதன் மூலம் சர்வதேச அளவில் இந்திய அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தலாம். இந்த வழியில் செல்வதே இப்போதைக்கு ஒரு நல்ல முடிவை தர கூடிய சூழ்நிலையை உருவாக்கும். என்பதே நான் கேள்விப்பட்ட விடயங்களில் இருந்து அறிந்து கொண்டது. 

இப்போதைய நிலவரப்படி அந்த கும்பல் மரண தண்டனையை நிறைவேற்றுவதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. அது தான் எமக்கு ஆழ்ந்த கவலையை தருகிறது.. என்னுடைய சொந்த ரத்தங்கள் அல்லவா அவர்கள் . உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா தமிழனுக்கு எல்லா பக்கமும் இருந்து இடி. வந்தாரை எல்லாம் வாழ வைத்த தமிழன் கடைசியில் அவனுடைய சுதந்திரத்திற்காகவும், எதிராக இழைக்கப்படுகிற அநீதிகளுக்காவும் சொந்த மண்ணிலேயே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறான் என்பது வேதனையான உண்மை 

கடவுள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும் ..... ஒரு வேளை கடவுள் என்பவர் எங்கேயாவது இருந்து அவரிடம் சென்று விண்ணப்பித்தால் இந்த தூக்கு தண்டனையை நிறுத்தி விட முடியாதா என்ற பரிதவிப்புடன் தான் அலைகிறேன். ம்ம்ம்ம் தற்போதைய நிலைமையில் பகுத்தறிவை விட அந்த அப்பாவிகளுக்கு இழைக்கப்பட போகிற அநீதியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே பெரிய விடயமாக எனக்கு தோன்றுகிறது.

நன்றி
இப்படிக்கு 
உங்கள் நண்பன் K.அந்தோணி

No comments:

Post a Comment