சமுக உறவில் தேடுங்கள்

Loading

Thursday, August 25, 2011

சவுக்கை சுழற்றும் ராசா

நான் பணம் சம்பாதித்ததாக நிரூபித்தால் குற்றச்சாட்டை ஏற்கத் தயார்: ராசா


டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நானும், எனது குடும்பத்தாரும் பணம் சம்பாதித்ததாக சி.பி.ஐ. நிரூபித்தால் அவர்கள் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொள்ள தயார் என்று முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கூறினார்.

சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ராசாவே நேரில் ஆஜராகி 1 மணி நேரம் வாதாடினார். அவர் கூறுகையில், இந்தியாவில் வெறும் 5 நிறுவனங்கள் மட்டுமே தொலைத்தொடர்புத் துறையில் லாபம் சம்பாதித்து வந்தன.

இதனால் 6.2 மெகா ஹெர்ட்ஸுக்கு மேல் உள்ள ஸ்பெக்ட்ரத்தை பயன்படுத்தினால் அதற்குக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறையை நான் கொண்டு வந்தேன். அதற்கு முன் அதை அந்தத் தனியார் நிறுவனங்கள் இலவசமாக பயன்படுத்தி வந்தன.

ஆனால் டிவி, பத்திரிகைகளில் வந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாக வைத்து என் மீது சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்துள்ளது. தணிக்கை அதிகாரியின் அறிக்கை கூட பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் தான் எழுதப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்த பிரஷாந்த் பூஷண் கூட, பத்திரிக்கை செய்திகளையே ஆதாரமாகக் காட்டியுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் தன்னிச்சையாக முடிவு எடுத்ததாகவோ அல்லது விதிமுறைகளை மீறியதாகவோ மத்திய தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் குற்றம் சாட்டப்படவில்லை. சம்பந்தபட்ட அனைத்துத் துறைகளின் அதிகாரிகளையும் ஆலோசித்த பின்னர்தான் உரிமங்கள் வழங்கப்பட்டன.

நான் கிரீன் ஹவுஸ் பிரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பணம் சம்பாதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு ரூ.750 கோடி பணம் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறானது.

அந்த நிறுவனத்துக்கு டி.பி. ரியாலிட்டீஸ் வழங்கிய ரூ.1.05 கோடி பணம் திரும்ப வழங்கப்பட்டுவிட்டது. அதுவும் கூட சட்டபூர்வமான பணப் பரிமாற்றம்தான்.

அந்த நிறுவனத்தில் உயிரிழந்த எனது நண்பர் சாதிக் பாட்சா, என் மனைவி பரமேஸ்வரி, கலியபெருமாள், ரேகா பானு ஆகியோர் நிர்வாகப் பொறுப்பு வகித்தனர்.

எனது உறவினர்கள் 7 பேர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. நானும் எனது உறவினர்களும் பணம் சம்பாதித்ததை சி.பி.ஐயோ, அமலாக்கப் பிரிவினரோ அல்லது வருமான வரித் துறையினரோ நிரூபிக்க தயாரா?. அப்படி நிரூபித்தால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொள்கிறேன்.

நான் குற்றமற்றவன் என்பதை நிச்சயம் ஒரு நாள் நிரூபிப்பேன். அதனால்தான் நான் ஜாமீன் கோரி இது வரை மனு தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.

அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இன்னும் பல உண்மைகளைச் சொல்ல வேண்டியிருப்பதால். மேலும் 10 நிமிடங்கள் பேச அனுமதிக்குமாறு ராசா கோரினார்.

இதைக் கேட்ட நீதிபதி சைனி, நிறைய உண்மைகளைச் சொல்லி விடாதீர்கள் என்றார் சிரித்துக் கொண்டே.. அதைக் கேட்ட ராசா உள்ளிட்ட நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டன...

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்று தொலைத் தொடர்புத்துறைக்கு நாங்கள் பரிந்துரை ஏதும் செய்யவில்லை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.

மேலும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விற்பனையால் நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது.

டிராய் கூறியுள்ள இந்தத் தகவல் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு சாதகமாக அமையலாம் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்று தனக்கு அதிகாரிகளோ அல்லது தொலைத் தொடர்பு ஆணையமோ பரிந்துரையே செய்யவில்லை என்றும், இதனால் பாஜக ஆட்சியில் பின்பற்றப்பட்ட முதலில் வருவோருக்கு முதலில் என்ற வழிமுறையையே நானும் பின்பற்றினேன் என்றும் ஆரம்பத்தில் இருந்தே ராசா கூறி வருகிறார்.

இந் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 20ம் தேதி சிபிஐக்கு டிராய் அமைப்பின் செயலாளர் ஆர்,கே.அர்னால்ட் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் சிபிஐ எழுப்பிய சில கேள்விகளுக்கு அவர் பதில் தந்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2007ம் ஆண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்றோ, 2003ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தொலைத் தொடர்புத்துறையில் நுழைந்த புதிய நிறுவனங்களுக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றோ தொலைத் தொடர்புத்துறைக்கு டிராய் எந்த பரிந்துரையும் செய்யவில்லை.

ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதால் எவ்வளவு பணம் அரசுக்குக் கிடைக்கும் என்பதை துல்லியமாக மதிப்பிடுவது முடியவே முடியாத காரியம்,

மேலும் தொலைத் தொடர்பு சேவையையும், ஸ்பெக்ட்ரத்தையும் அரசுக்கு வருமானம் ஈட்டும் வழியாக டிராய் எந்தக் காலத்திலும் கருதியதில்லை. இதன் அடிப்படையில் தான் ஸ்பெக்டரத்தை ஏலம் விடுமாறோ அல்லது கட்டணத்தை உயர்த்துமாறோ அரசுக்கு டிராய் பரிந்துரைக்கவில்லை. இதனால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூற முடியாது.

2007ம் ஆண்டில் 6.2 மெகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட 2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கும் எந்த விலையையும் டிராய் நிர்ணயிக்கவில்லை. எந்த விலையையும் பரிந்துரைக்கவும் இல்லை. 10 மெகாஹெர்ட்ஸ்க்கு மேல் ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்களிடம் மட்டும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்குமாறு கூறினோமே தவிர வேறு எந்த பரிந்துரையும் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

டிராய் அமைப்பின் இந்த விளக்கம் ராசாவின் வாதத்துக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆனால் மக்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளவில்லை அன்று ஊடகங்கள்தான் இவ்விடயத்தை பெரிதுப்படுத்தியது என்றும் , அன்று ராசாவின் பேட்டியை கூட எந்த ஊடகமும் வெளியிடவில்லை ...ஏன் வலைபூக்களில் கூட அவர் பேட்டி இடம்பெற்றதாக தெரியவில்லை ..

இதோ 

"இந்து நாளேட்டில் ஆ.ராசாவின் பேட்டி (நவம்பர் 14 இதழில் வெளியானதன் தமிழாக்கம்)"

கேள்வி : இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையிலிருந்து கசிந்ததாகக் கூறப் படும் பகுதி, அலைக் கற்றை ஒதுக்கீட்டில் உங்களது கொள்கை மூலமாக வும், மேலும் பல நிறு வனங்களை அறிமுகப் படுத்தியதன் மூலமாக வும், சில உரிமை நிபந்த னைகள் சில வற்றில் மாற்றங்கள் மூலமாகவும், அரசுக்கு ரூ.1.77 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தி விட்டதாகக் கூறப்படுகி றதே. தங்களால் விளக்க முடியுமா?

அமைச்சர் ஆ.இராசா : தற்போது எழுப்பப் பட்டுள்ள பிரச்சினைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். முதலாவ தாக அரசுக்கு ஏற்பட்டு விட்ட தாகக் கூறப் படும் இழப்பு, இரண்டாவதாக நடை முறைத் தவறுகள்.

மத்திய அமைச்சரவையால் பரிசீலிக்கப் பட்டு நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப் பட்ட 1999ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஏலமுறையிலிருந்து (94ஆம் ஆண்டு கொள்கை) வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு (99ஆம் ஆண்டு கொள்கை) மாற அதிகாரம் அளிக்கிறது. கசிந் துள்ள தணிக்கை அறிக்கை நாங்கள் ஏல முறையைக் கடைப் பிடித்து 3 ஜி படகில் கணக்கு ரீதியிலான பயணம் மேற்கொண்டி ருக்க வேண்டும் என்று கூறுகிறது. எனவே, தற்போது ஏற்பட்டுவிட்ட தாகக் கருதப்படும் இழப்பு கணக்கிடப்பட்டுள்ள தற்கான அளவு கோலே சரியானதல்ல.

இங்கே நமக்குள்ள பிரச்சினை அரசியல் சட்ட ரீதியிலான ஒரு அமைப் பான தலைமைத் தணிக்கை அதிகரிக்கும் மற்றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்புகளான மத்திய அமைச்சரவை, மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கு இடையிலான அபிப்ராய பேதம் (கருத்து வேறுபாடு ) ஆகும்.

தணிக்கை அதிகாரி, அமைச்சரவை, நாடாளுமன்றம் மற்றும் மற்றொரு அரசியல் சட்ட ரீதியிலான அமைப்பான தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மற்றும் திட்டக்கமிஷன் ஆகியவற்றோடு ஒப்புக்கொள்ள முடியாததது போலத் தோன்றுகிறது. இப்படிப் பட்ட நிறுவன முறை மீறலுக்கு நீதித் துறை மூலமாகவோ அல்லது நாடாளுமன்ற அமைப்பு மூலமோ தீர்வு காணப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

கேள்வி: இந்தக் கொள்கையால் இழப்பு ஏற்பட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறும் ரூ.1.77 லட்சம் கோடி பற்றி?

அமைச்சர் ஆ.இராசா : 2 ஜி அலைக்கற்றை ஏன் ஏலம் விடப்படவில்லை என்ற அடிப்படைக் கேள்விக்கு ‘இந்து’ நாளேட்டில் எனது முந்தைய பேட்டியில் விளக்கியுள்ளேன். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட 1999 ஆம் ஆண்டு தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை ஆவணம் மறுப்பதால், 2ஜி அலைக்கற்றையை ஏலத்தில் விட முடியாது.
நாடாளுமன்றம்தான் கொள்கையை திருத்த முடியும்.

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம், பதினொறாவது ஐந்தாண்டுத்திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) ஆகியவையும் 99 ஆம் ஆண்டு கொள்கை யின்படியே உள்ளன. 99 ஆம் ஆண்டு கொள்கையில் ஏதாவது திருத்தம் தேவையென்றால் அதை நாடாளுமன்றம் மட்டும் தான் செய்ய முடியும்.
புதிய ஒருமைப் பயன் பாட்டு சேவை உரிமங்கள் மற்றும் 2ஜி அலைக் கற்றை வழங்குவதற்கான தற்போதைய கொள்கை 2003 ஆம் ஆண்டு நவம்பர் முதல் எந்தவித மாறுதலும் இன்றி, வெளிப் படையான கொள்கையாக இருந்து வருகிறது. 2003 அக்டோ பர் 31 அன்று மத்திய அமைச்ச ரவையால் ஒப்புதல் அளிக் கப்பட்டக் கொள்கை யிலிருந்து எந்த விலகலும் இல்லை. 2003 நவம்பர் முதல் இன்றுவரை அடுத் தடுத்து வந்த அரசு களால், உரிமங்கள் வழங்குதல், அலைக் கற்றை ஒதுக்கீடு செய்தல், கட்டணங்கள் ஆகியவற் றிற்கான நடைமுறைக் கொள்கை கடை பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

61 சதவிகித மக்களுக்கு செல்போன் வசதி
அரசின் தொலைத் தொடர்புத் துறைக்கான வரிகள் மற்றும் ஒழுங்கு முறைக் கொள்கை முன் னேற்றுவதற்காக இருந்து வந்துள்ளது, இருக்கிறது. அதில் வருவாய் ஈட்டுதல் என்பதற்கு இரண்டாவது இடம்தான் தரப்பட்டுள்ளது. இவை இத்துறையில் முன்னெப்போதும் கண்டிராத வளர்ச்சிக்கும், தொலைத்தொடர்பு அடர்த்தியில் மிகப்பெரும் தாவுதலையும் கண்டுள்ளது என்பதால் இந்தக் கொள்கைகள் மாற்றப்படவில்லை ( அதாவது, உலகிலேயே இரண்டாவதாக தற்போது 70 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் உலகிலேயே மிகக்குறைந்த கட்டணங் களில் செல்போன் வசதியைப் பெற்றுள்ளனர் -) கிராமப்புறங்களில் 2010 செப்டம்பர் மாதம் அது 28.46 சதவீதமாகவும், கிராமப்புறம் மற்றும் நகர்ப் புறம் சேர்ந்து மொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி 60.99 சதவீத மாக உயர்ந்துள்ளன. ( அதாவது 100 இந்தியர்களில் சுமார் 61 பேருக்கு செல்போன் வசதி கிடைத்துள்ளது). தற்போது மொத்தம் உள்ள தொலை பேசிகளின் எண் ணிக்கை 72.3 கோடி ஆகும். இது 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்கான 60 கோடிக்கும் அதிகமாகும்.

மேலும், அரசின் மிக அதிகமான வரி இல்லாத வருவாய் இத்துறையில் வருடாந்திர உரிமக் கட்டணமும், அலைக்கற்றை கட்டணமும் ஆகும். 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அரசு வருவாய்ப் பங்கீட்டு முறை மூலமாக ரூ.77,038 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

6.2 மெகா ஹட்ஸ்க்கு மேலானஅலைக்கற்றை ஒதுக்கீட்டில், இதன் காரணமாக அரசுக்கு ரூ.36,729 கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. என்னு டைய அமைச்சரவையில் உள்ள விவரங்களின்படி, ஒட்டுமொத்த வருவாயில் ஒரு சதவித வருவாய் பங்கீடு என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப் பட்டசந்தாதாரர் அடித் தளத்தை அடைந்த தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 6.2 மெகா ஹட்ஸ்க்கு மேல் 10 மெகா ஹட்ஸ் வரை கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் முடிவை அப்போதைய அமைச்சர் பிரமோத் மகாஜன் 2002 ஜனவரி 31 அன்று எடுத்தார்.

அடுத்த அமைச்சர் அருண்ஷோரி 6.2க்கு மேல் 21 மெகா ஹட்ஸ் ஒதுக்கீடு செய்தார். தயாநிதிமாறன் 38.8 மெகா ஹட்சும், நான் 12.6 மெகா ஹட்சும் ஒதுக்கீடு செய்தோம். நான் ஒதுக்கீடு செய்தபோது, 6.2 மெகாஹட்ஸ் என்பது ஒப்பந்த கலவை மிஞ்சி இருப்பதால் 6.2 மெகா ஹட்சுக்கு மேலான அலைக்கற்றைக்கு அரசால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஒரு விதியை வகுத்தேன்.

இது நான் எனக்கு முன் இருந்தவர்கள் மீது குற்றம் சுமத்துகிறேன் என்றோ, அவர்கள் மீது பொறுப்பை சுமத்துகிறேன் என்றோ அர்த்தமாகாது, 1999 முதல் நடைமுறை முழுவதும் தொடர்ந்து வந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கேற்காதது ஏன்?
இழப்பு என்று கருதப்படுவதற்கு எந்தவிதமான தர்க்க ரீதியிலான அடிப்படையும் கிடையாது. அது பொருத்தமான கணக்கீட்டு முறையும் ஆகாது. கொள்கை மற்றும் செயல் முறையில் ஏற்பட்டிருக்கலாம், வந்திருக்கலாம் என்றெல்லாம் வழி கிடையாது என்பதால் ஊடகங்களின் அடிப்படையில் இழப்பை கணக்கிட முடியாது.

எதிர்க் கட்சிகள் விவாதத்தில் பங்கேற்றால் அவை அம்பலமாகிவிடும் என்பதால், அவர்கள் நாடாளுமன்றத்தை முடக்குகிறார்கள்.

கேள்வி :- ஆனால் நீங்கள் அரசுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தி விட்டீர்கள் என்பது குற்றச் சாட்டு . . . . ?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் ஒரு ஏகபோக சுயநல கும்பலை நான் உடைத்து விட்டேன் என்பதால் இந்தக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று நம்புவதற்கு எனக்கு உறுதியான காரணங்கள் உள்ளன. 1999 முதல் நான் பொறுப்பு ஏற்பதற்குச் சில நாட் களுக்கு முன்பு வரை இந்த ஏகபோக சுயநல கும்பலுக்குள் இதே கொள்கை நடை முறைப் படுத்தப்பட்டு வந்தவரையில், எந்த அமைச்சரும் விமர்சிக்கப்பட வில்லை. 1998-99 ஆம் ஆண்டுக்கான தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையைப் பாருங்கள்; அது அப்போதிருந்த உரிமங்களை நிர்ணயிக் கப்பட்ட கட்டண முறை யிலிருந்து வருவாய்ப் பங்கீட்டு முறைக்கு மாற்றிய கொள்கையைக் கடுமை யாக விமர்சித்தது. அதில் பல கடுமையான கண்டனங்கள் இருந்தன. ஆனால் தலைமைத் தணிக்கை அமைப்புக்கே தெரிந்த காரணங்களை 2000-ம் ஆண்டு முதல் அது மவுன காட்சியாக விளங்கி, அடுத்தடுத்து அளித்த அறிக்கைகளில் அது அமைச்சகத்தை எப்போதும் கேள்வி கேட்டதில்லை.

உரங்கள், பெட்ரோலியப் பொருட்கள், பொது விநியோக முறையின் கீழ் வழங்கப்படும் அரிசி போன்றவற்றிற்கு அரசு மானியங்கள் தரும் உதாரணத்தைப் பயன்படுத்தி, இந்த இழப்பு கருத்தியலானது, உண்மை நிலையை அடிப்படையாகக்கொண்டது அல்ல என்பதை நான் விளக்குகிறேன். இந்தப் பொருட்களின் சந்தை விலைகளை எடுத்துக் கொண்டு, அவை மிகக் குறைந்த விலைகளில் (அரசு மானியத்தால்) விற்கப்படுவதால் அரசுக்கு இவ்வளவு ஆயிரம் கோடி இழப்பு என்று சொன்னால், அதை ஏற்க முடியுமா?

அறிவார்ந்த காரணங் களின் அடிப்படையில் ஒரு கொள்கை இருக்கிறது. அவ்வப்போது மாறிவிடும் பிரச்சினை களை முடிவு செய்ய சட்ட ரீதியிலான ஒரு அமைப்பு உள்ளது. எனவே தொலைத் தொடர்புக் கொள்கை தீர்ப்பின்படி, வருவாய்ப் பங்கீட்டு முறைதான் எங்களுக்கு உள்ளது.

கேள்வி:- அலைக் கற்றைப் பிரச்சினையில் நீங்கள் ஏன் சட்ட அமைச் சகம் நிதி அமைச்சகம் ஆகியவற்றின் சேவை களைப் பயன்படுத்த வில்லை? நீங்கள் பிரதம ரின் ஆலோச னையையும் பொருட் படுத்த வில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
அமைச்சர் ஆ. இராசா:- சட்ட அமைச்சகத்தின் ஆலோசனை தானாக வருவதில்லை. இருப்பில் உள்ள அலைவரிசை மிகக் குறைவாக இருப்பதால், வந்த ஏராளமான விண் ணப்பங்களை எப்படிக் கையாள்வது என்ற குறிப்பிட்ட பிரச்சினையில் எங்கள் அமைச்சகம் சட்ட அமைச்சகத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பியது. அந்தக் குறிப்பிலேயே நாங்களும் சில வழி முறை களைக் குறிப் பிட்டிருக்கி றோம். இதன்மீது அபிப்ராயத்தைக் கூறுவதற்கு மாறாக, சட்ட அமைச்சகம் இதை அமைச்சர்கள் குழுவிற்கு அனுப்புமாறு ஆலோசனைக் கூறியது. இந்த ஆலோசனை அலைக்கற்றை விலை நிர்ணயிப்புடனோ அல்லது வருவாய்ப் பங்கீட்டு அளவிலேயோ தொடர்புடை யது அல்ல. அலைக் கற்றை இருப் பைப் பொறுத்து முதலில் வந்த வர்களுக்கு முதலில் சேவை என்று இப்போதுள்ள கொள்கை அடிப்படையில் எங்கள் துறை செல்ல விரும்பிய தால் இது பிரதமரிடம் விளக்கப் பட்டது.

2001 ஆம் ஆண்டு நிர் ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டிய தேவை உள்ளது என்று தொலைத் தொடர்புத் துறை செயலாளருக்கு நிதித்துறை செயலாளர் ஒரு கடிதம் எழுதினார். நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கும் அதிகாரம் தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத் திடம் (டிராய்) தான் உள்ளது. 2007 -ம் ஆண்டு டிராய் நுழைவுக் கட்டணத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மிக உறுதியாக, அறுதி யிட்ட பரிந்துரையை அளித்ததாலும், ஏற்கனவே அந்தக் கட்ட ணத்துக்கு நிதித்துறை அமைச்சகத்தின் பிரதி நிதியும் உறுப்பினராக உள்ள தொலைத் தொடர்பு கமிஷன் ஒப்பு தல் அளித்துள்ள தாலும், டிராய் பரிந்துரையை மேற்கோள் காட்டி தொலைத் தொடர்புத் துறை செயலாளர் நிதித் துறை செயலாளருக்கு பதில் அனுப்பினார் - அத்துடன் அந்த சுற்று முடிந்தது.

அதுபோலவே, அலைக் கற்றை ஒதுக்கீடு மற்றும் சந்தாதாரர் விதி முறை தொடர்பாக பிரதமர் சில குறிப்புகளை அனுப்பினார். உத்தேசிக்கப்பட்டிருந்த அனைத்துப் பிரச் சினைகள் மற்றும் விதி முறைகள் ஆகியவை பிரதமருக்கு அனுப்பப்பட்டு அது வந்து சேர்ந்ததற்கான பதிலும் வந்தது. கேபினட் அமைச்சர்கள் ஒருவருக் கொருவர் கடிதங்கள் எழுதிக்கொள்வது, கேபினட் அமைச்சர் கள் பிரதமருக்கு கடிதங்கள் அனுப்புவதும் சாதாரண வழக்கம் தான். எனக்கும் பிரதமருக்கும் இடையில் கடிதப் போக்கு வரத்து இருந்தது என்பதை மட்டும் அடிப்படையாக வைத்து நான் பிரதமரின் ஆலோசனையைப் பொருட்படுத்த வில்லை என்று ஊகிக்க முடியாது.
கடைசி தேதி என்பது அர்த்தமற்றது

கேள்வி :- உரிமங்கள் பெறுவதற்கான கடைசி தேதியை நீங்கள் ஏன் அப்பட்டமாக மாற்றினீர்கள்?

அமைச்சர் ஆ.இராசா:- முதலில் விண்ணப்பித்த வர் முதலில் பரிசீலிக்கப் படுவதால், முதலில் வந்த வருக்கு முதலில் சேவை என்ற கொள்கை கடை பிடிக்கப்படும் வரை, கடைசி தேதி என்பது அர்த்தமற்றது. அலைக் கற்றை இருப்பின் தோராய மதிப்பீடு மற்றும் 2009 செப்டம்பர் 25 அன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட வரையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அந்தத் தேதி வரையில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் முதல் தொகுதி பரிசீலிக்கப்பட்டது. ஏதாவது விண்ணப்பம் புறக்கணிக்கப்பட்டதா அல்லது பின்னுக்குத் தள்ளப்பட்டதா என்பதுதான் கேள்வி.

மீதமுள்ள விண்ணப் பங்கள் அலைக்கற்றை இருப்பைப் பொறுத்து பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மீத முள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை என்பது ஊடகத்துறையில் உள்ள சில தவறான கருத்தாகும்.

பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்

கேள்வி :- நீங்கள் இலக்கிடப்பட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறீர் களா?

அமைச்சர் ஆ.இராசா:- தொலைத் தொடர்புத் துறையில் மாற்றங்கள் கூடாது என்று விரும்பும் ஒரு பெரிய (ஆதரவு திரட்டும்) கும்பல் இருப்பதாக நினைக்க நான் நிர்ப்பந்தக்கப்படுகிறேன். உதாரணமாக (செல் போன் சேவையை எண்கள் மாறாமல் ஒரு சேவையிலிருந்து மற்றொரு சேவைக்கு மாற்றிக் கொள்ளும்) எண் சேவை மாற்ற முறைக்கு எதிரானவர்கள் சிலர் உள்ளனர். என்னைக் குறி வைத்து பிரகடனப்படுத்தி யுள்ள ஏகபோக சுயநல கும்பல் ஒன்று உள்ளது. அதற்கு ஊடகத் துறையின் மீது செல்வாக்கு உள்ளது. அதனிடம் மிகப் பெருமளவு நிதி ஆதாரங்களும், பணமும் உள்ளன. இந்த நிகழ்வுகள் சில அரசியல் கட்சிகளால் தி.மு.க.வுக்கு கெட்ட பெயரைத் தேடித்தரப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் மக்கள் பயன டைந்துள்ளனர் என்ற உண்மை உள்ளது. அது என்னாலும் அரசாலும் நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகளாலும், எடுக்கப் பட்ட முயற்சிகளாலும் ஆகும்.

கேள்வி:- கொடுக்கப் பட்ட 122 உரிமங்களில் 85 தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத நிறுவனங்களுக்குச் கொடுக்கப்பட்டுள்ளது ஏன்?

அமைச்சர் ஆ.இராசா:- இதுவும் தெளிவற்ற கருத்து, தலைமை தணிக்கை அதிகாரி அரசியல் சட்ட ஷரத்து 149 க்கு அப்பால் அதிகாரங்களை அபகரிக்க முயலவோ, அரசியல் சட்ட ரீதியில் உச்சநீதி மன்றத்திற்கும், உயர்நீதிமன்றத்திற்கும் முறையே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள 32 மற்றும் 226வது பிரிவுகளின் கீழ் பிரச்சினைகளை முடிவு செய்யவோ முயலக்கூடாது. விண் ணப்ப தேதியில் கம்பெனிகள் பதிவாளரிடம் குறிக்கோள் மாற்றப் பிரிவு, நிகர மதிப்பு, கம்பெனியின் பெயர் ஆகியவை காண்பித்தால் அது தொடர்பாக தணிக்கை அதிகாரி அறிக் கையில் தகுதி யின்மை என்று கூறப்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும். நாங்கள் சுயமாக அளிக்கப்படும் சான்றை அடிப்படையாகக் கொள்கிறோம். கம்பெனிகள் பதிவாளர் பதிவேட்டில் பதிவு செய்வது என்பது ஒரு நடைமுறை. அந்தப் பதிவாளரிடம் முந்தைய தேதியில் பதிவு செய்யப்படுவது, அதற்கான தீர்மானம் முறையாக நிறை வேற்றப்பட்டு கம்பெனி செயலாளரால் சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தால், எந்தவிதமான சட்ட சிக்கலும் இல்லை என்று சட்ட அமைச்சகம் தற்போது கருத்து தெரிவித் துள்ளது.

கேள்வி : 99 ஆம் ஆண்டு புதிய தொலைத் தொடர்புக் கொள்கை தவறான கொள்கை என்று ஏற்றுக் கொள்வீர்களா?

அமைச்சர் ஆ.இராசா:- இல்லை. அந்தக் கொள்கையின் தீர்ப்பினுடைய வடிவமும், உணர்வும், நிகழ்ந்து வருகிறது. அரசில் கட்சி நிலைமை மாறுவதால் கொள்கைகள் மாற்றப்படக் கூடாது. 99ஆம் ஆண்டு கொள்கை தேசிய ஜனநாயகக் கூட் டணி அரசால் உருவாக் கப்பட்டது. இதை பா.ஜ.க. தலைமையிலான அரசு வடிவ மைத்தது என்ப தால் மட்டும் அதை நான் மாற்ற விரும்பவில்லை. அப்போதைய அரசின் தொலைநோக்குப் பார்வை சரியானது என்று நான் நாடாளுமன் றத்திலேயே பேசியிருக் கிறேன்.
சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்

கேள்வி : தணிக்கை அதிகாரியின் எதிரான கருத்தைத் தொடர்ந்து என்ன நடக்கிறது? நீங்கள் ராஜிமானா செய்வீர் களா?

அமைச்சர் ஆ.இராசா : அரசியல் சட்டத்தின் கீழ் தணிக்கைக் கான ஒரு நிறுவனமான தலைமை தணிக்கை அதிகாரியை நான் மதிக்கிறேன். இருப் பினும், முறையான நடை முறை தீர்க்கப்படும் வரை யில், ஒரு தணிக்கையரைத் தண்டிக்கவோ அல்லது அரசின் கொள்கை களைப் பற்றி முடிவுக்கு வரவோ தணிக்கை அதிகாரி அறிக்கையை நீதிமன்ற தீர்ப்பாக எடுத்துக் கொள்ள முடியாது.

மேலும், நாடாளு மன்றத்தின் மூலம் 2000 ஆம் ஆண்டில் வைக்கப் பட்ட தலைமை தணிக்கை அதிகாரியின் 1998 - 99 ஆம் ஆண்டுக்கான அறிக் கையிலும் இதுபோன்ற கருத்துக்கள் கூறப்பட்டி ருந்தன. பொதுக்கணக்கு குழுவோ, நாடாளு மன்றமோ, கொள்கையை மாற்ற முடிவு எதுவும் செய்ய வில்லை. பொதுக் கணக்கு குழுவிடமிருந்து எந்த விதமான ஆலோ சனையும், நடவடிக்கையும் வராத நிலையில், அதற்குப் பின்னர், 2010 ஆம் ஆண்டு வரையில் தலைமைத் தணிக்கை அதிகாரி எந்தத் தவறையும் கண்டுபிடிக்க வில்லை. இதை தணிக்கை அதிகாரிதான் விளக்க வேண்டும்.

பொது வாழ்க்கையில் குற்றச்சாட்டுகளும் எதிர்க் குற்றச்சாட்டுகளும் சகஜமானவைதான். நீதிபதி வி.ஆர்.கிருஷ் ணய்யர் கூறியது போல, ‘மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை, மிகத்தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் சட்டத்துக்கு கீழான வர்கள் இல்லை’. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். ஒரு கறையுடன் நான் வெளியேற விரும்பவில்லை.இந்த துறைக்கு நான் பொறுப்பேற்றுக்கொண்டது முதல் உண்மையாக உழைத்திருக்கிறேன். என் முயற்சியால்தான் வாடிக்கையாளர்கள் 70 கோடியை தாண்டியிருக்கிறார்கள். நான் இந்த தேசத்திற்கு என் கடமையை சரியாக செய்திருக்கிறேன் என்பதை கூறிக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.... 

ஆனால் இதை ஊடகங்கள் இன்னும் ஒரு உழல் குற்றசாட்டகவே பிரகடனப்படுத்துகிறது...
பொது ஜனங்கள் தேசத்தின் உண்மை நிலையை உணருவதற்கு ஆதாரமாயிருப்பது வர்த்தமானப் பத்திரிகைகள் என்று சொல்லுவார்கள். ஆனால், அவை நமது நாட்டின் உண்மை நிலையை மறைத்துப் பொய்யைச்சொல்லி பாமர ஜனங்களை ஏமாற்றி, ஒருவரைக் கெடுத்து ஒருவர் பிழைப்பதற்குத்தான் அவை முழுவதும் ஆதாரமாயிருந்து வருகிறது.

நன்றி-குமார் 

5 comments:

  1. //நானும், எனது குடும்பத்தாரும் பணம் சம்பாதித்ததாக சி.பி.ஐ. நிரூபித்தால் அவர்கள் கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொள்ள தயார் என்று முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கூறினார்.//
    நிருபித்து விட்டால், இவர் ஒத்துக்கொண்டால் என்ன, ஒத்துக்கொள்ளாவிட்டால் என்ன? வெறும் வாய் சவடால்!

    ReplyDelete
  2. Arumayana Vilakkam

    ReplyDelete