தொகுப்புகள்

Search This Blog

Tuesday, August 9, 2011

வரலாறு திரும்பும் என்பார்கள், ஆனால்...



வரலாறு திரும்பும் என்பார்கள், ஆனால், அது மீண்டும் அதே பாதையிலேயே திரும்பாது, மேம்பட்ட வேறொரு பாதையில் திருபிம்யது ...

சமச்சீர்கல்வி 

நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னர் -உச்சநீதிமன்றத் தீர்க்கமான தீர்ப்பையும் பெற்ற பின்னர் -சமச்சீர் கல்வித் திட்டத்தை சென்ற ஆண்டுதான் தி.மு.க அரசு செயல்படுத்தத் தொடங்கியது. ஆனால் அந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது புதிய அ.தி.மு.க அரசு முடிவு செய்தது. அந்த முடிவுதான் அரியணை ஏறியதும் எடுத்த முதல் முடிவு. அதிர்ந்து போனோம். ஏனெனில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்திவைக்கவேண்டும் என்று எந்த இயக்கமும் கோரவில்லை. ஆனால் துக்ளக் "சோ"தான் அந்தத் திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்து வந்தார். 

அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம், சமத்துவம் என்ற உன்னதமான தத்துவத்திலிருந்து பிறந்திருக்கிறது. புதிய அரசு இதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முகாந்திரம் சற்று குழப்பமாக இருந்தாலும் புலப்படுகிறது, ஒருவேளை இந்த பாடத்திட்டம் நல்ல பலனை கொடுக்குமாயின், கலைஞர் உருவாக்கிய பாடத்திட்டம் என்பதுபோல் வரலாறு ஆகிவிடும் என்பதுதான் காரணமாக இருக்கமுடியும். நான் இப்படி கூறுவதற்கு காரணங்கள் இருக்கின்றன.

குலக்கல்வி

1952 இல் திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய அன்றைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் அவரவர் குலத் தொழிலைத்தான் அவர்கள் செய்ய வேண்டும்; படிக்கக் கூடாதென்று பகிரங்கமாகப் பேசினார் என்பதும், 1952இல் குலக்கல்வித் திட்டத்தை ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்குக் கொண்டுவந்து அந்தச் சிறுவர்கள் ஜாதித் தொழிலைச் செய்கிறார்களா என்பதைக் கண்காணிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.என்பதும், ஆச்சாரியார் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட ஆரம்பப் பள்ளிப் பாடநூல்களில் அந்தந்த ஜாதிக்காரர்களின் குலத்தொழிலைப் படத்தோடு போட்டு ஒருமையில் எழுதி அவமதித்தார் என்பது வரலாறு 

வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே 

கடந்த கால வரலாறு தெரிந்தால் மட்டுமே நிகழ்கால அரசியலை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. வரலாற்றில் இருந்து படிப்பினை படிக்க முடியாதவர்கள் தாங்கள் விட்ட பிழைகளை மீண்டும் விடத் தள்ளப்படுவார்கள் (Those Who Do Not Learn From History Are Doomed to Repeat It.) நமது வரலாற்றை ஒரு நாளிலோ ஒரு மாதத்திலோ அல்லது ஒரு ஆண்டிலேயோ படித்து முடித்துவிட முடியாது. அது ஒரு தொடர் தேடுதலாக இருக்க வேண்டும்.

‘’நான் வலியுறுத்த விரும்பும் இன்னொரு முக்கிய அம்சமாவது கடந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறுவது பற்றியதாகும். நான் கடந்த காலத்தை மட்டும் நேசிக்கும் பிரிவினர்களைச் சார்ந்தவனல்லன். நான் எதிர்காலத்தில் நம்பிக்கையுள்ளவன். எதிர்காலத்தை அறிவதற்கு எனக்கு நிகழ்காலம் அவசியப்படுகின்றது. இன்று நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளைச்‌ சரியான முறையில்புரிந்து , நமது நாகரித்தினதும் பண்பாட்டினதும் மூல ஊற்று பற்றிய தெளிவான அறிவைப் பெறுதல் இன்றைய காலகட்டத்தின் தேவையாகும்.

இந்தக் காரணமாக நாம் கடந்த காலத்தைப் பற்றிய அறிவைப் பெறவேண்டும் . நவீன பண்பாட்டினதும் நாகரிகத்தினதும் அடிப்படைகள் பற்றிய அறிவையும் பரிச்சயத்தையும் நாம் பெற்றிராததால் நவீன அறிவைத் தேடிப் பெறுவதில் பிற இனங்களை விட நாம் பின்தங்கியுள்ளோம். எனவே,நம் கடந்த காலத்தை எதிர்காலத்துடன் இணைப்பதைத் துண்டித்த அம்சங்கள் பற்றி நாம் கவனம் செலுத்துதல் வேண்டும்.

வரலாறு என்பது ஆட்சியாளர்கள், அரண்மனை வாழ்வு, படையெடுப்புக்கள் பற்றிய ஒரு பதிவாக அன்றி, மக்கள் சமூகத்தின் செயற்பாடு, மாற்றங்கள் பற்றிய விளக்கமாக அமைதல் வேண்டும் என்ற கருத்தை வரலாற்றறிஞர்கள் பலர் கொண்டிருந்தனர். ‘ஆட்சியாளர்கள் காலத்திற்குக் காலம் தோன்றி மறைவார்கள். ஆனால் சமூகங்கள் தொடர்ச்சியாக நிலைத்திருக்கும்’ என்ற வரலாற்று உண்மை..

இன்று
நடப்பு ஆண்டே தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் தொடர வேண்டும்.

- 1 முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித் திட்டமே நடைமுறைப்படுத்த வேண்டும்.

- சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒத்திவைக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுகிறது.
- தமிழகத்தில் பழையப் பாடத் திட்டத்தை செய்படுத்த தடை விதிக்கப்படுகிறது.

உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு ...

நம் திராவிடர் வரலாறு எனபது நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று.....

நன்றி-காலன் 

2 comments:

  1. சமச்சீர் கல்வியின் உணமையான நிலையை உணர தாங்கள் முதலில் அப் புத்தகங்ககளை பதிவிறக்கம் செய்து நடுநிலை மனதோடு ஆராய அன்போடு வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  2. கல்வி என்பது சமச்சீரானதாக மட்டும் இருந்தால் போதாது... தரமானதாகவும் இருக்க வேண்டும்...

    ReplyDelete