Friday, August 10, 2018

Whatsapp வதந்திகள்..

இத்தனை நாட்களாக என் பதிவை படித்தவர்களுக்கு மிக மிக நன்றிங்க,

சிக்சர்களும் ,பவுண்டரிகளும் , கோபங்களும் இயலாமையும் , சந்தோசங்களும், தெறிக்கும் இப்பதிவையும்  கடைசி வரிவரை படியுங்கள்,
படித்த பின்பு ,,
நெஞ்சில் நேர்மையிருந்தால் ஒரு துளி கண்ணீரோ , ஒரு பச்சதாபமோ ,, வரவில்லை என்று சொல்லுங்கள் இணையத்தை விட்டே விலகுகிறேன், 😥😥😥

----

நீதான் நடுசென்டராச்சே.. திமுக இல்லம்பியே அப்றம் ஏன் இப்டி கலைஞர் கலைஞர்னு கத்துறன்னு சில நட்புக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

பலர் கேட்காமல் கூட நினைத்துக்கொண்டிருக்கலாம்.

நியாயமான கேள்விதான். இதே ஜெயா இறந்தப்ப இவ்ளோ பொங்கல.
அதிமுகவும் இல்லதான்.

ஆனா ஏன் கருணாவுக்கு மட்டும்??

தராசு முள் எப்புறம் சரியுமோ அதன் எதிர்ப்புறம் இட்டு நிரப்பி சரிசெய்யவேண்டியதே ஒரு நடுநிலையாளனின் கடமை..

மாறாக நடுவில் நின்று தேமே என்று வேடிக்கை பார்ப்பதல்ல. அது ஒரு பொறுப்புத் தட்டிக்கழித்தல்.

கடந்த 49 வருடங்களில் கருணாநிதி தந்தது எத்தனையோ திட்டங்கள்.
சொல்லப்போனால் சாதனைகள்.

இருக்கலாம். ஊழல் இருந்திருக்கலாம். மறுக்கவில்லை. தவறுகள் நடந்தன. மறக்கவுமில்லை.

ஆனால் 1970க்குப் பிறகு மெல்ல மெல்ல வாழ்க்கை முறை மாறியது. எம்ஜியாரின் வரவுக்குப் பின்னர் ஒரு மாபெரும் முட்டாள் அடிமைக்கூட்டம் உருவானது.

காமராஜர் காலத்தில் மக்களின் மனநிலை வேறு. இப்ப கண்டிப்பா வேறு.

இப்ப காமராஜரே இருந்திருந்தாலும் டிராஃபிக் ராமசாமி லெவல்ல தான் டீல் பன்ணிருப்பாங்க. பண்ணிருப்போம்.

கவாஸ்கர் கால ஆட்டம் வேறு சச்சின் கால ஆட்டம் வேறு கோலி ஆட்டம் வேறு.

ஆனால் ஒருவர் மூன்று வித ஃபார்மெட்டிலும் தன் இருப்பை ஆணித்தரமாகப் பதிவு செய்திருக்கிறார். மறுக்கமுடியுமா என்ன?

இன்றைக்குச் சென்னை நகரத்தைக் கட்டமைத்ததில் அவருடைய ஆட்சிக்குப் பெரும்பங்கு உண்டு.

ஒரு காலத்தில் சொல்வார்கள்.
டாடாவுடைய தயாரிப்பில் ஏதேனும் பத்துப் பொருட்களை ஒரு இந்தியன் தன் வாழ்நாளில் பயன்படுத்திவிடுவான் என்று.
இப்ப அது ரிலையன்ஸ்டம் வாங்குகிறோம் ,

கலைஞரின் திட்டங்களும் நமக்கு அவ்வழியே..

ஆனால் அதற்குரிய மரியாதையை நாம் கொடுத்திருக்கிறோமா?

கடந்த ஐம்பதாண்டு காலமாக ப்ளான் பண்ணி,, கட்சிக் கணக்குக் கேட்டேன் தரலன்னு ஒரு பேராசைக்காரப் பொருளாளரே சொல்லி கட்சியை விட்டு விலகியது முதல் ,
எத்தனை வதந்திகள் எத்தனை கட்டுக்கதைகள் எத்தனை இழிபெயர்கள் எத்தனை பழிவாங்கல்கள் ???...

கருணாவால் பாதிப்படைந்தவர்கள்னு நிறைய பேர் உண்டு.அதுல பெரும்பாலானோர் இருக்கப்பட்டவங்க உயர்சாதிக்காரர்கள் இவன்லாம் நம்மை ஆளுறதான்னு சிரிச்ச ஆண்டை சாதிக்காரர்கள்.

ஆனா அவங்களுக்கும் இவர் பண்ணிய நலத்திட்டங்கள் ஏராளம். ,,
அவர் செத்ததும் வெடிவெடிச்சுக் கொண்டாடுனதும் இவங்கதான்.,
குறிப்பா பூணூலிஸ்டுகள்,

கருணாநிதி என்ன அவர் அப்பன் வீட்டுக்காசுலயா திட்டங்களைக் கொண்டுவந்தார்?

இல்லதான்.,
ஆனா காமராஜரோ கக்கனோ எந்த சுப்பனோ அவங்கவங்க அப்பன் வீட்டுக் காசுல சேவை செய்யலையே??

எல்லாருமே ஷாப் கோகனட் டுக்கு.
வே பிள்ளையாருக்கு டக்கு தானே..
கைக்காசப் போடலயே..

காமராஜர் கக்கன் செத்தப்போ சொத்தென்ன இப்ப சொத்தென்ன?

ம்ம். குட் க்வெஸ்டின்.

ஆனா காமராஜர் பீரியட்ல காமராஜருக்கு சொத்தில்ல.
ஆனா அவர் சார்ந்த இனத்தோட வளர்ச்சி என்ன??

இன்னிக்குத் தமிழகம் முழுக்க ஆதிக்கம் செலுத்தக்கூடிய இடத்துல இருக்காங்க.

அதுக்குக் காரணம் காமராஜர் இல்லதான??

உலகமயமாக்கலுக்குப் பின்னாடி பல கம்பெனிகளின் மதிப்பு தாறுமாறா ஏறியது. அதுல கலைஞர் குடும்ப நிறுவனங்களும் உண்டு. (கலைஞருக்கான பங்கு பிரித்து கொடுத்துவிட்டார்கள், இப்போது மாறன் சகோதரர்கள் மட்டுமே )

ஆனா இன்னிக்கும் சன் டிவி தான டிஆர்பில நம்பர் ஒன்.,
அதுக்கும் கலைஞர் தான் காரணமா??

அப்டிப் பாத்தா கலைஞர் டிவி அந்தளவு வளரலயே??
கருணா டொக்காயிட்டாரா சம்பாதிக்றதுல??

ப்ராமண லாபி பத்தி நம்ம எல்லாருக்கும் தெரியும். தெரிஞ்சிருக்கணும்..

பத்து பேர் வேலை செய்ற ஆஃபிஸ்ல ஒரே ஒரு வெஜ் ப்ராமிண் இருந்தா ட்ரீட்டுக்கு வெஜ் ஓட்டல்தான் போவாங்க. இதான் இன்னிக்கும் நிதர்சனம்.

நம்ம மனசுல இயல்பாவே புகுத்தப்பட்ட குற்ற உணர்ச்சி.. அய்யரப் பழிச்சா குலநாசம்னு..
அதே நேரம் தன் காரியம் ஆகணும்னா எந்த எல்லைக்கும் இலகுவாகப் போகக்கூடிய திறமை ப்ராமணர்களுக்கு எப்போதும் உண்டு.

ஸ்லெட்ஜிங் பண்ணியே எதிராளியின் உளவியலைத் தகர்க்கக்கூடிய திறமை ஆரியக்கூட்டத்திடம் அளவு கடந்து உண்டு.

ஏளனம் செய்தே நம்மைக் கூனிக் குறுகவைக்கமுடியும். கூட்டமாகக்கூட.

அப்படித்தான் கிளப்பப்பட்டன ஆயிரமாயிரம் வதந்திகள்.
2ஜி கூட அப்படி ஒன்றுதான். விஞ்ஞான ஊழல்வாதி என்றெல்லாம் பட்டப்பெயர்கள்.

ஆனால் ஒருமுறை கூட வஞ்சம் தீர்க்க இயலவில்லையே எப்படி??(இத்தனை எதிரிகளில் ஒருவரால்கூட நிறுபிக்க முடியாதா?)

வழக்குப் போட்டதாலேயே குற்றவாளி என்றால் நீதிமன்றங்களே தேவையில்லை.,
போலீஸ் ஸ்டேஷன் போதும். FIR போதும்.

சரி நம்ம கதைக்கு வருவோம்.,
கலைஞரை ஏன் இவ்வளவு தூரம் சிலாக்கவேண்டும்?

நியாயமா அந்தாளு செஞ்ச நல்லதுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதை கிடைக்கல. கொடுக்கவும் பலருக்கு மனசில்ல.

இந்த இடத்துல அவர் மேல ஒரு வித பரிதாபம் வருது,6
. உழைச்சவன் ஒருத்தன் உயரத்துல போய் உக்காந்தவன் ஒருத்தங்குற மாதிரி.
திட்டுவாங்கிப் பழகியவன்ற ஒரே காரணத்துக்காகக் கண்ட கழிசடைகள்கிட்டயெல்லாம் திட்டுவாங்கிப் பொறுத்துப்போயாச்சு.

செத்தாலும் திட்டுறாங்க.,
ஈழத்தைச் சிதைத்தானாம்.அடப்பாவிகளா திகார்ல வச்ச கனிமொழியைவே காப்பாத்த முடியல.ஈழத்துக்கு என்ன ஏரோப்ளேனா விடமுடியும்??

சென்டரல் லாபி அவ்ளோ ஸ்ட்ராங்கானது.. எப்போதுமே.. (மேனன்கள் காலத்திலேயே இலங்கை பிரச்சினைக்கான முடிவுரை எழுதப்பட்டுவிட்டது )

சில மிஸ்கம்யூனிகேஷன்ஸ் சறுக்கல்கள் இருந்தது அந்த சமயத்துல.

ஆனா அதத் தொக்கா எடுத்துப் பயன்படுத்திக்கிட்டது பின்னாடி வந்த கட்சிக்காரங்க., கூடவே சில பிச்சைக்காரங்க.

ஏன்னா ஈழம்கிற பிச்சைப்பாத்திரம் ரொம்பவே பெருசு.,
சின்னப்புள்ளைக கண்ணைக் குத்தி அதக்காட்டி பிச்சை எடுத்துத் திங்குறமாதிரி.

சரி இருக்கட்டும்.,
அப்ப நடந்தது என்னன்னு கூடத் தெரியாம ஆமைக்கதைகளை நம்பிட்ருக்கவங்க நம்பட்டும்.

ஆனா அவங்களுக்கும் இந்த மனுஷன் எதாவது செஞ்சிருப்பார். அறிவு வளந்தப்றம் புரிஞ்சுக்கட்டும்..
அதுவரை இனத்துரோகி கலைஞர் ஒழிக. போதுமாடா என் ஷெல்வங்களே..
குச்சிமிட்டாய் சாப்டுங்க.

நிற்க...

சர்க்காரியா கமிஷன்6
எமர்ஜென்சி மிசா நள்ளிரவுக் கைது 2ஜி திகார் எத்தனை?எத்தனை?

பதிமூனு வருஷமா வனவாசம் போனதைபோல் எந்த ஆட்சி அதிகாரத்திலும்  இல்லை,
எம்ஜியார் போன்ற ஒரு ஏகாதிபத்தியக் கிறுக்கன் கையில மாநிலமே சிக்கியிருந்தது

ஊர்ப்பட்ட சாராய வியாபாரிகள் கல்வித்தந்தைகளானது அப்பத்தான்.

எம்ஜியார் எவ்ளோ நல்லவரு..
என்னா கலரு.. ஐ! பொன்மனச்செம்மல்யா..

இந்த ஜெயலலிதா.. வேணாம்.. எதுக்கு..

தங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றுமில்லை.. குற்றம் ஒன்றுமில்லை.

பரப்பன அக்ரகாரங்களும் குமாரசாமிகளும் சசிகலாக்களும் தினகரன்களும் சுதாகரன்களும்
ஈஓ பிஎஸ்களும் வாழ்க வளர்க.

சரி இதனால கருணாநிதியைப் பிடிக்கணுமா??

நல்ல கேள்வில்ல. ம்ம்..
நமக்குப் புரியற பாஷையிலயே பேசுவோம்.

நாம ஒரு சாதாரண ஆள். இருந்திருந்து கஷ்டப்பட்டு ஒரு நல்ல போஸ்ட் செம்மயா ஒரு கதை சூப்பரா ஒரு கவிதை அருமையா ஒரு படம் வரைஞ்சு போஸ்ட் பண்றோம். ஒருத்தனும் பாக்கல.

அதையே ஒரு பிரபலம் காப்பி பண்ணி ஆயிரம் லைக் வாங்குறான்.

காண்டாகும்ல.. ல்ல??

கேவலம் ஒரு ரோமத்துக்கும் பிரயோஜனமில்லாத இந்த லைக்குக்கே இவ்ளோ காண்டாகுதே எத்தனை திட்டங்கள் இவர் யோசிச்சு ஆரம்பிச்சு வச்சுருப்பார்.

நோகாம அத அப்டியே காப்பியடிச்சு அல்லது பேர மாத்தி பேருவாங்கிட்டு கூடவே இவரையும் கேவலமா திட்டுறப்ப எப்டி இருந்திருக்கும்.

ஒரு தார்மீக ஆதரவு தரணுமா வேணாமா?
ஒரு அப்பா பேர் தெரியாத அனாதையைக் கூப்ட்டு போடா அப்பன் பேர் தெரியாதவனேன்னு கூப்பிட்டா எப்டி இருக்கும்.?

அடக்கி ஒடுக்கிவைக்கப்பட்ட சாதிலருந்து பிறந்த ஒருவன் தன் அறிவால் திறமையால் உழைப்பால் முன்னேறியபின்னும் தெலுங்கன் வடுகன் சின்னமேளம்னு நண்டு சுண்டெல்லாம் ஈஸியா கிண்டலடிக்கறப்ப ???

ஒரு சக மனுஷனா அவனை ஆதரிக்கவேணாமா??

தகுதியே இல்லாதவங்களுக்கு பாரத ரத்னா கொடுக்குறப்ப தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்ட ஒரு கலைஞனுக்கு ,,
தமிழக அரசியலைத் திருப்பிப் போட்ட ஒரு தலைவனுக்கு திருட்டுத் திராவிடன் பட்டமும் இனத் துரோகிப் பட்டமும் கொடுத்தா அதை எதிர்க்க வேணாமா??

மூனு நாள் பேசுன பொண்ணு நாலாவது நாள் கண்டுக்கலன்னதும் துரோகம் வலி சில்றைன்னு போஸ்ட் போடுற பசங்கள்லாம்,
பல வருஷம் கூடப்பழகுனவங்க,,
பதவிக்காக கட்சி மாறி விஷம் உமிழ்ந்தப்பவும் கலங்காம இருந்தவனைத் துரோகின்னு சொல்லும்போது அதை எதிர்க்கேள்வி கேக்கவேண்டாமா??

சாகும்வரை தாழ்த்த நினைத்தவர்கள் ,,
மத்தியில் தயங்காம நின்னு பிரச்சனையை நேருக்கு நேர் எதிர்கொண்டு எல்லாரையும் அரவணைத்து பாத்துக்கிட்ட ஒருத்தனை சாகுறப்பவாவது தாங்கிப்பிடிக்கவேண்டாமா??

வாழ்க்கை முழுக்க வன்மத்தால வீழ்த்தப்பட்டவனை வணங்கவேணாம். நினைக்கவேணாமா??

அதென்ன கட்டுமரம். ம்ம்..

ஆமா பின்ன சொகுசா பல்லாக்குல ஏறிப் படுத்துகிட்டு நம்மளை நாக்கு  தள்ளத் தூக்கிவரவச்சுட்டு
இறங்கிப்போறப்ப அசதியா இருக்குன்னு நெட்டிமுறிச்சுட்டுப் போறவன் எல்லாம்  சாமியாகுறப்ப,

தனி ஆளா முன்னேறித் தமிழ்நாட்டத் தூக்கி நிறுத்துனது  முட்டாப்பய கட்டுமரம்தான... ல்ல..
அட இதுக்கெல்லாம் அந்தாளக் கொஞ்சவா முடியும்னு கேக்கலாம். தப்பில்ல..,

ஆனா ஒரே ஒரு சின்னக் கேள்வி..

இதே கருணாநிதி ஒரு அக்மார்க் அய்யங்காரா இருந்திருந்தா இந்த இந்தியா அவரை எப்டி கொண்டாடி இருக்கும்?

பீஷ்மரே பிதாமகரே வாழ்விக்க வந்த வள்ளலே ராஜதந்திர ராஜனே அறிவின் ஆலமரமே அண்ணலே!!!
மனிதருள் மாணிக்கமே
தமிழக ஜோதியே
தரணியின் நீதியே!!!

அப்படின்னு கொண்டாடி இருக்கும்ல்ல??
ஆனா இப்ப அப்டி நடக்கலயே. ஏன்??
கடைசி நாள்ல கூட காமராஜரை மெரினால புதைக்கல காவேரிய கடல்ல கரைக்கலன்னு வாட்சப் வதந்தி., (முகநூல் வாட்ஸ்அப் வதந்திகளை நம்பி அரசே நீதீமன்றத்தில் பொய் தகவல் )

ஏன் இப்டிலாம்?

கொஞ்சம் யோசிக்கலாமா??

ஏன்னா அவன் அடிச்ச அடி அப்டி.
எங்க அடிச்சா வலிக்குமோ அங்க அடிச்சான்.

இன்னொன்னு என்ன? ம்ம்.. குடும்ப அரசியல்..

எனக்குத் தெரிஞ்சு இந்தியாவுல குடும்பம்னு பெரிசா இல்லாதவங்களைத் தவிர மீதி எல்லாருடைய குடும்பத்தினரும் குறிப்பா வாரிசுகள் அரசியல்லதான் இருக்காங்க.(அகிலேஷ் யாதவ், தேஜாஷ்வி, குமாரசாமி, சிந்தியா குடும்பம், Etc,, )

ஒரு சில விதிவிலக்குகள்.
சிலருக்கு இயல்பாவே வராது.
அதனால விலகிடுவாங்க.சிலர் வந்து விலகலாம்.
ஸ்டாலினோ கனிமொழியோ அழகிரியோ அவ்ளோ ஈஸியா இந்த நிலைக்கு வந்துடல.

ஸ்டாலினுக்கு இப்பதான் இளமை திரும்புதா? வயசென்ன.,
இந்த வயசுலயும் வியர்வையைத் தொடைச்சுகிட்டு விடிய விடியத் தூங்காம அழாம நின்னு நிலைமையைப் புரிஞ்சுகிட்டு நடக்கணும்னு என்ன தலையெழுத்தா?

அரசியலின் சூடு அவ்வளவு காத்திரமானது.

ஆனா ஸ்டாலின் போன்ற பெருந்தந்தை மகன்களுக்கு அது கூடுதான்..

ராகுலைப் பப்பு என்று கூறிச் சிறுமைப்படுத்துவது போல இந்த மனுஷனை சுடலைன்னு சொல்லி இழிவுபடுத்த அதே வதந்திக் கும்பல்.

தப்பில்லை. பிழைக்கணுமே.. சம்பாதிக்கறது எவ்ளோ கஷ்டம் இன்னிக்கு..

சரி கலைஞருக்கு வருவோம்.,
இலவசங்கள் கொடுத்து நாட்டைக் கெடுத்தார்.

உன்மைதான்.,
ஆனா ஒரு சின்ன தகவல்..
எங்க வீட்ல கலைஞர் டிவி வந்தப்றம் தான் கேபிள்னு ஒன்னு இழுத்தோம். Yy
ஐ மீன் அரசு இலவச வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி.
அதுவரை பணக்காரங்க வீட்ல போய் எட்டித்தான் பாப்போம்.

எத்தன பயனாளிகள்??

கார்ப்பரேட் ஸ்கூல்ல வேன்ல அடைஞ்சு போறவங்களுக்கு பஸ்பாஸ் மகிமை தெரியாதுதான்.,
ஆனா நிலக்கோட்டைலருந்து பஸ்பாஸ்லயே திண்டுக்கல் வரை வந்து படிச்சுட்டுத் திரும்பிப்போனவன்லாம்.. ??

மறந்துடலாமா??

மதிய உணவுத்திட்டத்துல ரெண்டு முட்டையப் போட்டு பேர மாத்தி பாரதரத்னா வாங்கத் தெரியலதான.. ஆம் கலைஞர் வேஸ்ட்ல?

நான் இஞ்சினியரிங் படிக்க முதல் வருஷ ஃபீஸுக்கே காட்டை வித்தோம்..

ஆனா எங்க சித்தி பையன் நோகாம படிச்சுட்டு வெளிய வந்தான்.முதல் நிலைப் பட்டதாரியா??

நாளைக்கு அவன் கூட நாம் தமிழராகவோ அதிரடி அனுமாராகவோ அதிமுக அடிமையாகவோ மாறி கலைஞரைத் துரோகின்னு சொல்லலாம்.

பழகிருக்கும் அந்தாளுக்கு...

சரி.,
இதெல்லாம் ஏதோ லைக்குக்கோ பொழுது போகாமலேயோ திமுக அபிமானிங்கறதாலயோ சொல்லல.

நம்மைப் போன்ற ஒரு சக மனுஷன்.,
ஒரு திறமைசலிக்கான அங்கீகாரம் அவனுக்குண்டான மரியாதை கடைசிவரை கிடைக்காமலேயே செத்துப்போன ஒரு சக உயிர் அப்டிங்குற ஆதங்கம்., வருத்தம்.. 😥😥😥😥

சென்டிமென்டல் இடியட்டாவே இருந்துக்கறேன். தப்பில்ல.

பி.கு 1: 2009 பொதுத்தேர்தல்லருந்து இப்ப வரை நான் திமுகவுக்கு ஓட்டுப் போட்டதில்லை.

பி.கு 2: இனியும் ஓட்டுப்போடுவதை அந்தந்த அரசியல் சூழலே தீர்மானிக்கும்.

பி.கு 3: கலைஞர் அங்கீகாரத்துக்கு ஏங்கிய குழந்தை. பாவப்பட்ட மனுஷன். வதந்திகளைக் களைந்து உண்மை உணர்வோம்.

மிஸ் யூ #கலைஞர் மாம்ஸ்

பகிர்விலிருந்து,

Sunday, August 5, 2018

பாரம்பரிய பிரசவம் எப்படி நடந்தது ?

இந்திய மாதா - காதரீன் மேயோ

காதரீன் மேயோ எழுதிய இந்திய மாதா என்ற புத்தகம் 1928 இல் வெளியிடப்பட்டது. அமெரிக்கப் பெண்மணியான அவர் இந்தியாவை சுற்றிப் பார்த்து , தான் பார்த்ததையும் , கேட்டதையும் புத்தகமாய் எழுதி வெளியிட்டார். இந்தியத்  துணைக்கண்டத்தின் பார்ப்பனிய முகத்தை புத்தகம் தொட்டுக் காட்டியதால் உலகம் அதிர்ச்சியுற்றது. அதில் அப்போது நடப்பில் இருந்த மகப்பேறு முறைகள் குறித்து அறியும் போது யாராலும் அதிர்ச்சியுறாமல் இருக்க முடியாது. இந்தியாவில் அந்த புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டது...

1. பிரசவம் என்பது ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வு. வழக்கம் போல தீட்டால் ஏற்ப்படும் கொடுமைகள் அனைத்தும் நடந்தன.

2. பிரசவம் பார்ப்பது மருத்தவச்சி என்ற ஒரு தனி சாதி பெண்கள். தீண்டப்படாத சாதியினர்.

3. பிரசவம் ஒரு தீட்டான நிகழ்வாய் இருப்பதால், அது ஒரு தனியான, ஒதுக்குப்புறமான, உபயோகமற்ற, வெளிச்சமும் காற்று வசதியும் அற்ற ஒரு அறையில் தான் நடக்கும். தீட்டு காரணமாய் பெரும்பாலும் பழைய அழுக்கான துணிகளே பயன்படுத்தப் படும்.

4. பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகள் பாரம்பரியமாக  தாங்கள் கேள்விப்பட்ட முறைகளையும், அப்போது தங்களுக்கு உதிக்கும் திடீர் யோசனைகளையும் பயன்படுத்தியே பிரசவம் பார்த்தனர்.

5. வலி வந்து நேரமாகி விட்டால் தங்கள் கைகளை உள்ளே விட்டு சிசுவின் கையோ காலோ எது கிடைக்கிறதோ அதைப் பிடித்து வெளியில் இழுப்பர். ஒருவரால் முடியாவிட்டால் இரண்டு மருத்துவச்சிகள் முயல்வர். நிச்சயம் இரண்டு உயிர்களில் ஏதாவது ஒன்றாவது போய் விடும்.

6. வலி வந்து தாமதமாகி விட்டால் பெண்ணை சுவர் ஓரமாய் நிறுத்தி வைத்து மருத்துவச்சி  ஓடி வந்து பெண்ணின் வயிற்றில் முட்டுவர். அல்லது கைகளால் குத்துவர்.

7. பிரசவம் முடியும் வரையிலும் பெண்ணுக்கு எந்த ஆகாரமும் இல்லை. வலி நான்கு நாட்கள் இருந்தாலும் ஆகாரம் இல்லை.

8. பிரசவம் சீக்கிரம் நடக்க தேளைக் கொண்டு கொட்ட விடுவது, பாம்புத் தோலைக்  காட்டி பயப்படுத்துவது போன்ற கொடுமைகளும் நடந்துள்ளன. சில சமயங்களில் பெண்ணை தலைகீழாக குலுக்குவதும் உண்டு.

9. தீட்டு காரணமாய் பிரசவம் அன்னியர் கண் படாமல் இருட்டறையில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் நடக்கும். மூடிய அறையில் புகை நிறைந்திருக்கும் சமயத்தில் அன்னியர் யாராவது பார்த்து விட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் மருத்துவச்சி உடனே சில துர்நாற்றம் தரும் புகையை உண்டாக்குவாள். துர்நாற்றம் தீட்டை போக்கி விடும்.

10. பிரசவத்தில் பெண்ணின்  உயிர் போய் விடும் என்ற சந்தேகம் வந்தால் அந்த பெண்ணின் கண்களில் மிளகாய் தூள் நிரப்பப்படும். இறந்த பின் அவள் பேயாக மாறி வழி கண்டுபிடித்து வந்து பழி வாங்கலைத் தடுக்கவே இந்த முறை.

11. அதே போன்று பேயாய் மாறி பழி வாங்கலைத் தடுக்க பெண்ணின் கைகளை தரையில் வைத்து ஆணியடித்தலும் உண்டு. சற்று பிழைக்க வாய்ப்புள்ள பெண்களும் இதனால் இறந்து போயிருப்பார்.

12. தொப்புள் கொடி அறுக்க இரும்புத் தகடோ, கண்ணாடித் துண்டோ , மூங்கில் கழியோ உபயோகப் படுத்தப்படும்.

13. அறுபட்ட தொப்புள் மீது சாம்பலோ, சாணியோ, மண்ணோ தடவப்படும்.

மருத்துவம் வளர்ச்சியுறாத காலத்தில் உலகம் முழுதும் பிரசவங்கள் பாதுகாப்பாய் நடந்திருக்க வாய்ப்பில்லை. அரை குறை வைத்தியங்களே நடந்திருக்கும். ஆனால் இந்தியாவில் பிரசவம் ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வாய் இருந்ததால் உலகில் எந்த பகுதியிலும் அனுபவிக்காத கொடுமைகளை இங்கே பெண்கள் அனுபவித்துள்ளனர்.

இதில் தீட்டு இல்லாதிருந்திருந்தால் , சமூகத்தின் பொது அக்கறை இதில் இருந்திருக்கும். குறைந்தபட்சம் ஒரு வெளிச்சமுள்ள காற்றோட்டமுள்ள இடத்திலாவது பிரசவம் நடக்க வேண்டும் என்ற அறிவாவது பெற்றிருப்பர். தீட்டு பிரசவம் குறித்த ஒரு பொது அறிவை வளர விடாமல் தடுத்துவிட்டது.

சாதியத்தையும், பார்ப்பனியத்தையும், தீட்டையும், இந்து மதத்தையும் பிரித்துப் பார்ப்பது முடியாத ஒன்று.

Saturday, August 4, 2018

தமிழகத்திற்கு ஆபத்தானவர் யார் ?

தமிழகத்தைப் பொருத்தவரை அரசியலில் ஒருவர் வளர, உயர ,புகழ்பெற வலுவாய் இருக்கும் ஒரு தலைவரை எதிர்த்தே  அரசியலில்  வளர்ந்திருக்கிறார்கள் , உயர்ந்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 80 வருட பொது வாழ்க்கையில்,  பேசினாலும் தலைப்புச் செய்தியாய், பேசாவிட்டாலும் தலைப்புச் செய்தியாய் ,ஏன் செயல்படவே முடியாமல் இயற்கை விளையாடியதால் நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அகில இந்தியமும் தாண்டி உலக அளவில் பேசுபொருளாக ஆகியிருக்கிறார் .அவர்தான் டாக்டர் கலைஞர்.
இதில் தலைவர் கலைஞர் அவர்களுக்கே ஏற்ற இறக்கங்கள் ,போராட்டமே வாழக்கை என்பதாக இயற்கையே இயற்கையாக  வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது.
தனது 13 வயதில் இந்தி எதிர்ப்புக்காகக்  கொடிபிடித்தவர் 93 வயதுவரைத் தாங்கிப் பிடித்த கழகக்  கொடியை தன் கூடவே இருந்து அரசியல் கற்ற, கழகத்திற்காக  அடிபட்ட,மிதிபட்ட தளபதி ஸ்டாலின் அவர்களிடம் கொடியை ஒப்படைத்தது வரை...
போகட்டும் இது நாமறிந்ததுதான்.
     கிட்டத்தட்ட அகில இந்திய அளவில் தலைவர் கலைஞர் அவர்களைப் படித்து, பிடித்து,பார்த்து அரசியல் செய்தவர்களும் ,
தலைவர் கலைஞர் அவர்களை வாழ்நாளெல்லாம் எதிரியாகவே நினைத்து, தங்களின் அரசியல் பயணத்தைத் தமிழகத்தில் துவங்குவதற்கு பெரும் தடையாக இருக்கும் ஒரு மாமலையான கலைஞரைக் காணாமலடிக்க எல்லாவிதமான வேலைகளையும் செய்த, செய்துவருகிற கட்சியினர்கூட காவேரியில் தனது பாவத்தைக் கழுவ வருவதும் போவதுமாகவே இருந்து வருகிறார்கள்.
இதுவும் நாம் அன்றாடம் பார்த்து வரும் செய்தியே.
அதேசமயம், தமிழகத்தின் முதலமைச்சர் தொட்டு, அனைத்து அமைச்சர்கள் வரை வந்து பார்த்து தங்களின் அரசியல் பண்பாட்டை நிலைநிறுத்தியிருக்கிறார்கள். பேட்டிகளிலும் தங்களது கன்னியத்தையே பிரதிபலித்திருக்கிறார்கள்.
ஆனால்
திரு.சீமான் என்கிற ஒரு நடிகரும் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திக்க வந்து தளபதி அவர்களிடம் விசாரித்துச் சென்றிருக்கிறார்.
மறைந்த ஹிட்லர் கூட திரு.சீமானைப்போலச் செய்திருப்பாரா என்றால்  இல்லை.
ஏன் இந்த வன்மம்?
தலைவர் கலைஞர் அவர்களை காவேரியில் பார்த்துவிட்டு அதை ஒரு பொதுக்கூட்டம் ஒன்றில் மிக மிகக் கேவலமாக விமர்சனம் செய்வதென்பதை விலங்கினங்கள்கூடச் செய்யாது.
எப்படி திரு.சீமான்?
மேதகு பிரபாகரன் அவர்களிடம் பழகியவர்கள் அத்துனைபேரும் மனிதநேயர்களாக இருந்துவரும் சூழலில் நீங்கள் மட்டுமே ஹிட்லரை விட மோசமாக இருக்கிறீர்கள்.
ஆக,நீங்கள் மேதகு பிரபாகரன் அவர்களிடம் பழகவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.
என் கவலை ஒன்றே ஒன்றுதான். உன்னையும் நம்பி,உனது சுயநலம் அறியாமல் உன்னைச் சுற்றி சில இளைஞர்கள் இருக்கிறார்களே அவர்களைப் பற்றியே எனது கவலை.
இளைஞர்களே!
காலம் பொன் போன்றது. காலம் மிகப்பெரிய ஒரு சமூகப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறது.
அதை எப்படி,எந்த வகையில் பயண்படுத்தப்போகிறீர்கள்  என்பதில் இருக்கிறது உங்களது பயணம்.
சீமானிடம் இருப்பதன் மூலம் உங்களது விலைமதிப்பற்ற உழைப்பு வீணடிக்கப்படுகிறது.
உங்களின்  உடம்பில், மூளையில் விசம் பாய்ச்சப்படுகிறது. கோவப்படாமல் சிந்திக்க முயலுங்கள். உங்களை அறியாமல் உங்களைக் கோவப்பட மட்டுமே பழக்கப்படப்பட்டிருக்கிறது.

       சீமான் என்கிற தனிமனிதனின்  சுயநலத்திற்காக ஒன்றுமறியா  இளைஞர்கள் அல்லவா பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். 
மேதகு பிரபாகரன் இல்லை என்பதற்காக இப்படியெல்லாம் பொய்கள் பேசி இளைஞர்களை நாசம் செய்யக்கூடாது.
        நாம் தமிழர் என்கிற இயக்கத்தை வளர்க்க முடியவில்லை எனும்போது அதைக் கலைத்துவிட்டு இளைஞர்களை சமூகத்திடம் ஒப்படைத்தது விட்டு நீங்கள் தூக்கிலிட்டுக்கொள்வதே தமிழகத்திற்கு நல்லது. பாஜகவை விட நீங்கள் மோசமான ஆபத்தானவர் என்பதை தமிழுலகம் அறிந்துகொண்டது.
ஹிட்லரைப் பற்றி அறிந்துகொண்டதை விட யூதாசைப் பற்றி நீங்கள் கூடுதலாக அறிந்திருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பதால். மேற்கண்ட இரண்டில் ஏதாவதொரு முடிவை எடுக்கும் சூழலுக்கு வந்துவிட்டீர்கள். எடுத்து விடுங்கள்.
     ஈழத்தில் மேதகு பிரபாகரன் அவர்கள் எதிரிகளைக் களத்தில் சந்திப்பதற்கு முன்  துரோகிகளை அழித்துவிட்டே எதிரிகளிடம் சென்றார்.
நீங்கள் தமிழகத்திற்கு ஆபத்தானவர்...
      நன்றி அண்ணன் சிங்கராயர் ஆரோக்கியசாமி