தொகுப்புகள்

Search This Blog

Monday, May 28, 2012

8 வயதில் கெஞ்சும் பிஞ்சுகள் - பாலிஷ் போட

என் நண்பர் துணை இயக்குனர் P. ரவி நலங்கிள்ளி பாரதி வாசனின் status கொடுத்த பதில் அவர் அனுமதியுடன் ...

*********# (நம் மக்கள் பால்காவடி, உண்ணாவிரதம், கோவில் பிரார்த்தனையெல்லாம் செய்து எப்படியோ மாவோக்களிடமிருந்து அவரை விடுவித்து விட்டார்கள்) ??????????????????????????????????????????????????????

உடன்பாடற்ற வார்த்தைகள் மேற்கண்டவை. போகட்டும்.ஒரு உண்மை தெரியுமா உங்களுக்கு...? கடந்த மாதம் நான் இயக்கவிருக்கும் திரைப்படத்தின் தயாரிப்பாளரைத்தேடி ஒடிசா சென்றிருந்தேன். அந்த வேளையில்தான் அலெக்ஸை கடத்தினார்கள். ஒடிசா தலைநகர் புவனேஷ்வரிலிருந்து கட்டாக், கட்டாகிலிருந்து 83 கி.மீ ( ரயிலில் ) தூரத்தில் பரடீப் ( தாலுக்கா ) நகரம்.அங்கே தான் என் அலுவல்.கிட்டத்தட்ட திருப்பூர் மாவட்டம் அவிநாசி போன்ற ஒரு நகரம் எத்தனை அரசுப்பள்ளிகள் இருக்கவேண்டும் என்பதை கணக்கிட்டுப்பாருங்கள். குறைந்த பட்சம் ஒரு பத்து...? ஒரே பள்ளி கூட இல்லை.!!!!! நம்ப முடியாமல் தீர விசாரித்தேன்.முடிவு அதிர்ச்சி மட்டுமே. சீறுடை அணிந்த பணக்கார வீட்டு குழந்தைகள் மட்டுமே இருக்கும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.கட்டாக் ரயில் நிலையத்தில் நான் காத்திருக்கையில் 8 வயது முதல் 16 வயது வரை உள்ள படிக்கவேண்டிய பருவமுடையவர்கள் ஷூ விற்கு பாலீஷ் போட்டுக்கொள்ளும்படி கெஞ்சுகின்றனர்.



பெங்காலிகளாலும், மராத்தியர்களாலும், ராஜ்புத்திரர்களாலும், மார்வாடிகளாலும் ஒரியாவின் பூர்வக்குடிகளென்னப்படும் பத்ரா இனத்தவர்கள் நகரத்தில் இருந்து உரிமைகளையும் உடமைகளையும் இழந்து அடித்து விரட்டப்பட்டு சாக்குபைகளில் சட்டிப்பானைகளை சுமந்தபடி நாடோடிகளாகிவிட்டார்கள்.காட்டில் மீதமுள்ள பூர்வக்குடிகளை மானங்கெட்ட மத்திய அரசு அக்காடுகளில் உள்ள கனிமங்களை அந்நியருக்கு தாரைவார்க்க அப்பாவிகளுக்கு தீவிரவாத சாயத்தை பூசி வேட்டையாடிக்கொண்டிருக்கிறது. அலெக்ஸை கடத்தியவுடன் சுக்மா நகரத்தில் உள்ள போராட்டக்கார்களுக்கு ஆதரவான பெரியோர்களிடமிருந்து கடத்தியவர்களுக்கு சென்ற முதல் தகவலே " நீங்கள் தவறு செய்து விட்டீர்கள்.இந்த மண்ணில் நாம் இழந்துபோன உரிமைகளை மீட்டெடுக்க நமக்கு என்ன தேவையோ அந்தக்கல்வியை நம் மக்களுக்கு உண்மையாக புகட்டவந்த ஒரு உன்னதமானவரை நீங்கள் கடத்தியிருக்கிறீர்கள்.நம் இனம் மீண்டும் இழந்ததை பெறவேண்டுமெனில் நமக்கு கல்வி வேண்டும். அந்த கல்வியைப்பெற அலெக்ஸ் போல அதிகாரிகள் வேண்டும்.விட்டுவிடுங்கள் அவரை "- ( நான் அங்கே இருந்ததால் உள்ளூரில் பேசிக்கொண்டதில் நான் அறிந்துகொண்டது.) என்பதுதான்.சட்டீஸ்கர் ஒடிஸாவை இணைக்கும் ஒரு காட்டில் அவர் விடுவிக்கப்பட்ட விதம் இதுதான் என்பது என் கருத்து.மத்திய , மாநில அரசுகள் அங்கே வெறியாட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றன.போய்ப்பாருங்கள் புரியும்.


1 comment:

  1. எவ்வளவு கொடுமை வந்தாலும் அதை ஒரு ட்வீட்டிலோ பதிவிலோ SMSசிலோ FB statusசிலோ போடுவதோடு நிறுத்திக்கொள்ளும் நவ நாகரீக யுவ யுவதிகள் காலத்தில் இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்

    ReplyDelete