சமுக உறவில் தேடுங்கள்

Loading

Friday, February 11, 2011

இன்று கலைநிதிக்கு முதல் பிறந்தநாள்


இன்று எங்கள் மகன் கலைநிதிக்கு முதல் பிறந்த நாள் .  பலருடைய
வாழ்த்துக்களுடன் இந்த நாள் இனிதே ஆரம்பமானது . 

காலையில் குடும்பத்தினர் அனைவரும் மிக மகிழ்ச்சியாக அந்த தருணத்தை கொண்டாடினோம்
.
பிறகு ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்க்கு சென்று இன்று இரவு விருந்தை அவர்களுடன் அருந்தலாம் என்று என் வீட்டு பெரியோர்கள் ஆலோசனை கூறினார்கள். சரி என்று சொல்லி ஆனால் ஒரு சிறு நிபந்தனையுடன் நாங்கள் ஒப்புக்கொண்டோம் . 

ஆதரவற்றோர் இல்லத்திற்கு பிறந்த நாள் விழா கொண்டாட செல்லும்பொழுது கலைநிதியை அழைத்துக்கொண்டு செல்ல கூடாது என்பதும் , அவன் பிறந்த நாளுக்காகத்தான் இவ்வுணவு வழங்கப்படுகிறது என்பதை அவர்களிடம் சொல்லக்கூடாது என்பதும்தான் . அங்கு சென்று இவன் பிறந்த நாளுக்காக உணவு வழங்கிவிட்டு அவர்களிடம்(ஆசிரம குழந்தைகள் ) வாழ்த்து வாங்கிவிட்டு வருவதும் , கலைநிதிக்காக நாங்கள் இருக்கிறோம் உங்களுக்கு யாருமில்லையே என்ற ஏக்கத்தை அவர்களிடம் விதைத்து வருவதில் எங்கள் இருவருக்குமே உடன்பாடு இல்லை . 

இதுவும் ஒரு வகையில் லஞ்சமாகத்தான் எனக்கு தோன்றுகிறது. 

எதுவும் சொல்லமால் இன்று உணவு விருந்து படைக்க யாரோ ஒருவர் மட்டும் செல்ல உள்ளோம் . நன்றி வாழ்த்துக்களுடன் உங்கள் சாந்திபாபு . 

3 comments:

  1. கலை நிதிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
    மகிழ்ச்சியான தருணங்கள் தொடர நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. கலைநிதிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete