சமுக உறவில் தேடுங்கள்

Loading

Tuesday, February 15, 2011

ராசா போல் ஜெயலலிதா கைது செய்யபடுவாரா ?ஆ. இராசாமீது சி.பி.அய். வழக்குத் தொடர்ந்தது போலவே அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாமீது சி.பி.அய்.வழக்குத் தொடரவில்லையா?

தேர்தலை முன்னிட்டு இன்று அவர் ஆறு மாதம் வழக்கைத் தள்ளிவைக்க கேட்கிறார் .
அவர்மீது சி.பி.அய். தொடர்ந்த வழக்கிற்கு வயது 11 ஆண்டுகள் ஆயிற்றே! அந்த வழக்கின் அடிப்படையில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டாரா?

வெளிநாடு ஒன்றிலிருந்து அவருக்குப் பிறந்த நாள் பரிசாக மூன்று லட்சம் அமெரிக்க டாலர்கள் (77 லட்சத்து 52 ஆயிரத்து 501 ரூபாய் மதிப்பு) அனுப்பப்பட்டன. முதல் அமைச்சர் என்பவர் - அரசு ஊழியர் என்பதால் அந்தத் தொகையை அரசுக் கருவூலத்தில் செலுத்தியிருக்க வேண்டும் என்பதே சட்டத்தின் நிலை - ஆனால் இவர் என்ன செய்தார்? தன் கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்.

இது சம்பந்தமாக சி.பி.அய். வழக்குத் தொடர்ந்தது. சம்மனும் அனுப்பியது. அதன் அடிப்படையில் சி.பி.அய். அலுவலகத்திற்கு அம்மையார் செல்லவில்லையா?

முன்னாள் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா மாதம் ஒரு ரூபாய் சம்பளம் பெற்று வருவதாகச் சொன்னதுண்டு. அப்படிச் சொன்னவர் 1991 முதல் 1996 முடிய முதல் அமைச்சராக இருந்த அந்தக் காலகட்டத்தில் அவரின் சொத்து மதிப்பு ரூ.66 கோடியே 65 லட்சம் ரூபாய் அளவுக்கு வளர்ந்தது எப்படி என்ற முறையில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்ததே (5.7.1997) நினைவிருக்கிறதா?

14 ஆண்டுகள் ஆகப் போகின்றன. போதிய ஒத்துழைப்பை அம்மையார் கொடுக்காததால் அனுமார் வால்போல நீண்டு கொண்டு போகிறது.

வழக்கு விசாரணையை ஏதாவது காரணம் சொல்லி தள்ளிக்கொண்டே போகும் சாதனையைத்தான் இன்று வரை செய்து கொண்டு இருக்கிறார்.

1997இல் 259 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 2001இல் மீண்டும் அம்மையார் ஆட்சிக்கு வந்தார். வழக்கில் குளறுபடிகள் நடந்த நிலையில், பேராசிரியர் தி.மு.க பொதுச் செயலாளர் க. அன்பழகன் அவர்கள் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கோரிக்கையை ஏற்று வழக்கினை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து - எந்த அளவு செல்வி ஜெயலலிதா நீதியை மதிக்கக் கூடியவர் என்பதற்கான அத்தாட்சியாகும்.

நீதிபதிகள் எஸ்.என். வரியவா, எச்.கே. சேமா ஆகியோர் கூறியது என்ன?

1) எங்களின் கருத்துப்படி மனுதாரர் (க. அன்பழகன்) நியாயப் பூர்வமான, கருத்தில் கொள்ளத்தக்க அய்யப்பாடு களை எழுப்பி, அதாவது நீதி திசை திரும்பியும், பாரபட்சமாகவும் செல்வதால் எங்களுடைய குறுக்கீடு அவசியம் தேவை என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் என்பதுதான் உண்மை.

2) ஜெயலலிதா தலைமையிலான அரசு 1997 (சி.சி.எண் 7) வழக்கில் தீய நோக்கத்தோடு, வேண்டு மென்றே அரசு வழக்குரைஞரின் உதவியோடு நேர்மை யான, சுதந்திரமான விசாரணையைக் குலைப்பதற்காகத் தலையிட்டுள்ளது.

3) தங்கள் முந்திய வாக்குமூலங்களை மாற்றிக் கூறிய சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவோ, மறு விசாரணை செய்யவோ முயற்சிக்காமல், அரசு வழக்குரைஞர் கடமையிலிருந்து தவறியிருப்பது, அரசு வழக்குரைஞர் துறை, ஜெயலலிதா உட்பட குற்றம் சாற்றப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதற்கு வழியமைத்துக் கொடுக்க இரகசியமாக முடிவு செய்து செயல்பட்டுள்ளது. இதன் மூலம் நீதி நிருவாகத்தில் தலையிட்டுள்ளது என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகிறது.

4) முதல் அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் இருக்கும்போது, இந்தியக் குற்றவியல் சட்டம் 313 ஆவது பிரிவின்கீழ் அவர் நேரில் ஆஜராகாமல் இருப்பதற்கு அரசு வழக்குரைஞர் ஒப்புதல் அளித்திருப்பது, அரசு வழக்கறிஞர் சுதந்திரமாகச் செயல்படவில்லை; முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் விருப்பப்படியே செயல்படுகிறார் என்பதைத் தெரிவிக்கிறது.

5) முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் சட்ட விரோதத் தலையீடும், குற்றம் சாற்றப்பட்டவருக்கு அரசு வழக்குரைஞர் சட்ட விரோத உதவியளித்ததும் இந்திய அரசியல் சட்ட அமைப்புச் சட்டத்தின் 21ஆம் பிரிவையும், இந்தியக் குற்றவியல் சட்டத்தின் 313ஆம் பிரிவையும் மீறிய செயலாகும். எல்லாவற்றையும்விட இது குற்றவியல் நீதிமுறையைக் குலைக்க மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியாகும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனரே!


இப்படி நீதித்துறையை சட்ட அமைப்பு முறையைக் காலில் போட்டு நசுக்கிய அம்மையார்தான் ஆ. இராசாமீதான கைதுபற்றி நீட்டி முழங்கியுள்ளார்.

காலதாமதமான நடவடிக்கைபற்றி இவர் பேசலாமா? தம்மீது உள்ள வழக்கை 14 ஆண்டுகளாக நிலுவையில் நிறுத்தக் கூடியவர் இதுபற்றியெல்லாம் கருத்துக் கூறத் தகுதி உடையவர்தானா?

காங்கரஸ் பற்றியும் குறை கூறும் இவர் ஒரு மாதம் முன்பு என்ன பேசினார் என்று தான் அனைவருக்கும் தெரியுமே...  

இவரைக் கூட்டணியின் தலைவராக ஏற்கத் துடிக்கும் அரசியல் கட்சிகளும் நிதானமாக சிந்திக்க வேண்டும்; பொது மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.
நன்றி-தமிழ் 

4 comments:

 1. இந்த பதிவில் உள்ள படம்.....விஜய், விஜயகாந்த், சீமான் ஆகியோருக்கு ஒரு பாடம்

  ReplyDelete
 2. தேனை எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருக்கமாட்டன். ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்து ஏனையா உழல்
  செய்கிறார்கள். அது தான் போருக்க முடியவில்லை. எம். ஜி. ஆர். காலத்திலும் ஊழல் இருந்தது தான். ஆனால் இப்படியா..

  ReplyDelete
 3. thirumathi santhi babu averkale ,ungalin samuga uravu valai thalam parthen padithen miga nanraga vadivamaithullikal, nalla karuthukal anal idhu tamilnatin adithal makalai poei seruma?,irunthalum ungalathu muyarchiku enathu vazhthukal, regards kanagaraj EX-ARMY.

  ReplyDelete
 4. 77 கோடி 14 வருடத்தில் 300 கோடி ஆகும் . அப்படி என்றால் கூட அதை 176000 கோடி யோடு ஒப்பிட்டால் 175700 கோடி அதிகம். நீங்கள் ஒரு வேளை ராசாவை மட்டும் ஒப்பிடுகிறீர்களா?

  ReplyDelete