Monday, February 7, 2011

கலைஞரே - வைகோவும் , ஜெயாவும் யார் ?

என் இனிய வலைத்தமிழ் மக்களே...!


"புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்றும் அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது.

அப்படி இருக்கையில் அன்று ஜெ.வின் வற்புறுத்தலால் எம்.ஜி.ஆர் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கினார். பாராளுமன்றத்துக்கு சென்றவர் அறிஞர் அண்ணா அமர்ந்த இருக்கை எதுவென்று கேட்டு, அவ்விருக்கையை தனக்கு வாங்கிக் கொண்டார். இதற்குப் பின் அவரது வளர்ச்சி ஜெட் வேகம் தான். எம்.ஜி.ஆராலேயே அவரது வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

அரசியலின் சித்து விளையாட்டு அம்மாவுக்கு அத்துபடி ஆனது.  இந்நிலையிலே எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் அமெரிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்திரா மரணமடைந்த நிலையில் பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் பாராளுமன்றத் தேர்தலை நடத்துகிறார். பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத் தேர்தலும் அனுதாப அலைக்காக இணைந்தே நடக்கிறது. தமிழ்நாட்டிலே நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பணியாற்றுகிறார்.

அரசியல் அனல் பறந்தது. கலைஞரே கூட எம்.ஜி.ஆர் திரும்பி வந்தால் அவர் தான் முதல்வர் என்று அறிக்கை விட, அம்மா மட்டும் உஷாராக இருந்தார்.எம்.ஜி.ஆர்.,நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தில், செயல்படாத முதல்வராக எம்.ஜி.ஆர்., உள்ளார். எனவே அவருக்கு பதிலாக தம்மை முதல்வர் பதவியில் உட்கார வைக்க கூறிய துரோகி ஜெயலலிதா. எம்.ஜி.ஆர்., இறந்து அவர் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்த இடத்தில், ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "ஜானகியம்மாள் தான் எம்.ஜி.ஆருக்கு மோரில் விஷம் கலந்துகொடுத்து கொன்றதாக கூறினார்.அரண்டு போனார் ராஜீவ்.
87ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மரணமடைகிறார். எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி மண்டபத்தில் கிடத்தப்பட்டிருக்கிறது. கட்சி யார் பக்கம்? ஜெயலலிதா மட்டும் வரக்கூடாது என்று அதிமுகவின் முக்கியத் தலைவர்கள் சிலரால் முடிவு எடுக்கப்படுகிறது. ஜானகி அம்மாளை முன் நிறுத்தும் யோசனையை ஆர்.எம்.வீ செயல்படுத்தத் தொடங்குகிறார். எம்.ஜி.ஆரின் உடல் ஏற்றப்படும் பீரங்கி வண்டியிலே ஜெயலலிதாவும் ஏற முயற்சிக்க ஆரம்பத்திலேயே அறுத்து விடும் நோக்கில் ஜானகி அம்மாளின் உறவினரான நடிகர் தீபன் எட்டி உதைக்கிறார். எம்.எல்.ஏ.வாக இருந்த கே.பி.ராமலிங்கம் ஓடிவந்து இழுத்து கீழே தள்ளுகிறார்.

இவ்வாறெல்லாம் சொந்தக் கட்சிக்காரர்களாலேயே அவமானப்படுத்தப்பட்ட, அடிக்கப்பட்ட ஜெயலலிதா அந்தக் கட்சியின் பொதுச்செயலாளரானது தான் காலத்தின் கோலம்.

எல்.டி.டி.ஈ

விடுதலை புலிகளை பொறுத்த வரை அ.தி.மு.க. பொது செயலாளர் செல்வி ஜெயலலிதாவோ, எல்.டி.டி.ஈ. தீவிரவாத அமைப்பு அதை ஒழிக்க வேண்டுமென்று அறை கூவல் விடுக்கிறார், தமிழினத்தை பொறுத்தவரை இவர் ஒரு சகுனி என்றே கூற வேண்டும், எம்.ஜி.ஆர். இருந்தவரை தீவிரவாத அமைப்பு என்று தெரியாத போது, எம்.ஜி.ஆர். இறந்தபிறகு அ.தி.மு.க. தொண்டர்களின் கருத்துகளை கேட்டா முடிவெடுத்தார். அல்லது தமிழக மக்களையோ, இலங்கையிலும் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களையும் கேட்டா எல்.டி.டி.ஈ அமைப்பு தீவரவாத இயக்கம் என்று அறிவிக்கிறார், கேட்டால் எல்.டி.டி.ஈ அமைப்பு சக தமிழ் மக்களையே கொன்றார்கள் என்கிறார். 

தர்மபுரியில் 3 மாணவிகளை எரித்து கொன்றார்களே அ.தி.மு.க வினர். அப்படியானால் அ.தி.மு.க தீவரவாத கட்சியா. அதலால் தமிழகத்தில் அ.தி.மு.கவுக்கு தடை விதிக்கலாமா? ப. சிதம்பரத்தை திருச்சியில் தாக்க முற்பட்டார்களே, கொடுங்கோலன் சுப்ரமணியசாமியை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்க முற்பட்டார்களே இவர்கள் தீவிரவாத கட்சியா? இல்லையா?

வரலாறு தெரியாமல் இழி குணம் கொண்ட ஜெயலலிதா தி.மு.க ஆட்சியை ஒழிக்க ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் செய்யும் அரசியல் ஓட்டு மொத்த தமிழினத்தையே எரிச்சல் படுத்துகிறது. ஜெயலலிதாவின் இச்செயல் ஒரு ஈனச்செயல்! இழிகுணச் செயல்!

வை கோ 

ஈழ துரோகி ஜெயாவுக்கு வெண்சாமரம் புடிக்கும் வைகோ எதுக்காக 19 மாதம் ஜெயிலில் இருந்தாராம் புலிகளை ஆதரித்த்தால் தானே அதை எளிதில் மறந்து விட்டீர்களா கோபால்சாமி அவர்களே . உங்களை பொடாவில் உள்ளே தள்ளியபோது கோர்ட் வளாகத்தில் கர்ஜித்தது ஜெயா ஒரு பாசிச சக்தி என்று முழங்கியது அனைத்தும் மறந்துவிட தமிழர்கள் முட்டாள்கள் அல்ல.  ,கலைஞ்ர் இந்த தள்ளாத வயதிலும் வேலூர் சிறைசாலைக்கு வந்து கண்கலங்க நின்றாரே அவருக்கு நீங்கள் செய்த துரோகம் இந்த உலகம் உள்ளவரை அழியாது .மேலும் அவர் குடும்பத்தாருடன் பழகி அவர்களை பற்றியும் பொதுமேடையில் பழிபேசுவது ,அதைவிட துரோகம் ,எப்ப பார்த்தாலும் வீரவசனம் பேசி இலங்கையில் தமிழின மக்களை உசுப்பேற்றி அவர்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியது நீதானே 

நீங்கள் பொழப்பு ஓட இலங்கை பற்றி பேசுகிறீர்கள் ,நீங்கள் நடத்தும் மதிமுக வேறு எந்த பிரச்சினை பற்றியும் பேச திராணி இல்லை .கொள்கை மறந்து ஜெயாவுடன் சேர்ந்து இருப்பதுடன் பேசாமல் கட்சியை கலைத்துவிடவேண்டியதுதானே . ஜெயா காங்கிரசில் கூட்டு வைத்தால் நீங்கள் நாண்டுக்கிட்டு செத்திருபீர்களா ? ஒருமாதத்திற்கு முன்பு ஜெய காங்கிரசிற்கு ஆதரவு தர முன்வந்தது உங்களுக்கு தெரியாதா? அப்போ உங்கள் வாயில் தையல் போட்டு இருந்ததா ?
 அரசியல் அரிச்சுவடி கற்று கொடுத்த ஆசான் கலைஞரை முதுகில் குத்தி காட்டிகொடுத்த எட்டப்பன் தான் வைகோ. இப்படி பட்ட துரோகங்களுக்கு மத்தியில் எல்லா துரோகங்களையும் நெஞ்சில் தாங்கி, எத்தனையோ சோதனையான காலங்களிலும் திமுக வை பெரிய ஆலமரமாக வளர்த்து, உண்மையிலேயே, காமராஜரும், அண்ணாவும், காந்தியும் கண்ட ஒரு நல்ல நாட்டை உருவாக்கி வழி நடத்தி கொண்டிருப்பவர் தான் கலைஞர். நண்பர்களே, இன்று ஏழை மக்களுக்கு எதிராக செயல்படுவதும் , கழக அரசை அனைத்து விஷயங்களிலும் குறை சொல்வதும் , தலைவரின் அனைத்து அரசியல் முடிவுகளுக்கும் நக்கல் செய்வதும் , நல்ல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டும் மலிவான விமர்சனம் செய்து விளம்பரம் தேடிக்கொண்டு இன்று பலர் வலைபூக்களில் வளம் வருகிறார்கள் .

  அரசியல் மன மாச்சரியங்களை கடந்து, விரோத மனப்பான்மையை களைந்து பாருங்கள்,    கலைஞரின் சமூக தொண்டையும், ஏழைகளின் வாழ்வில் கலைஞரின் பங்கையும். உண்மையிலேய பாராட்ட படவேன்டியாய உன்னத மனிதர் கலைஞர். அவருக்கு பிறகும் சரி அவருக்கு முன்பும் சரி, அவருக்கு நிகர் அவர்தான். வாழ்க கலைஞர், வளர்க அவரின் மக்கள் தொண்டு.


5 comments:

  1. Excellent Post congratulations

    ReplyDelete
  2. Abu Mymoona-Dubai, U.A.E.February 8, 2011 at 3:05 PM

    தமிழக அரசியல் உண்மைகளை தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். நல்லாட்சி செய்பவருக்கு மட்டுமே மக்கள் என்றும் பக்க பலமாக இருப்பார்கள் என்பது சரித்திர உண்மை

    ReplyDelete
  3. தமிழக அரசியல் உண்மைகளை தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். நல்லாட்சி செய்பவருக்கு மட்டுமே மக்கள் என்றும் பக்க பலமாக இருப்பார்கள் என்பது சரித்திர உண்மை. அருமையானக் கட்டுரை

    ReplyDelete
  4. காங்கிரஸ் எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையை மட்டுமே கொண்டு. முன்னாள் ஊழல்வாதிகளுக்கு சாமரம் வீசும் வீணாய்போன கம்யூனிஸ்ட்கள் பற்றி ஒன்றுமே கூறவில்லையே?.... ஏன்?

    இந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. பொருளாதாரம் நல்ல நிலையில் முன்னேறியுள்ளது.

    நாட்டில் உள்ள பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலமாக சிஎன்என் ஐபிஎன் தேர்வு செய்து வைர விருது (முதல் இடம்) வழங்கியுள்ளது. ஆனால் தமிழக பத்திரிகைகள் குறிப்பாக அதிமுக ஆதரவு பத்திரிக்கைகள் மீண்டும் மீண்டும் ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை சரியாக கண்ணோட்டத்தில் பார்க்காமல் திமுக-வையும் கலைஞரையும் குற்றம் சுமத்தி வருகிறார்கள். பிரச்சினை நல்ல முடிவுக்கு வரும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. உங்களில் யாரும் செய்தித்தாள் படிப்பதில்லையா ?
    SPECTRUM ஊழல் பற்றி முதலில் தெரிந்து கொள்ளவும். மக்களே தி மு க கொள்ளை அடித்த பணம் உங்களுக்கு சேர வேண்டிய பணம் தான், மறக்காதீர்கள்.

    ReplyDelete