சமுக உறவில் தேடுங்கள்

Loading

Saturday, February 26, 2011

CPI யும் , CPM மும் காக்கை எச்சமா ?


ஒரு புரட்சிகர சித்தாந்தம் மக்களின் கையில் கிடைக்கப் பெறும் போது பௌதீக சக்தியாகிறது 
ம-கம்யூனிஸ்ட் இ-கம்யூனிஸ்டுவின் புரட்சிகர சித்தாந்தம் ஒரு பௌதீக சக்தியாக இன்னும் முழு அளவில் பரிணமிக்கவில்லை. ஆனால் புரட்சிகர சித்தாந்தத்தை தமது கொள்கையாக அவர்கள் கொண்டுள்ளனர். CPM-CPI   வெறும் விசிலடிக்கும் குஞ்சுகளையும், RSSக்கு இணையாகன கூட்டத்தையுமே தமது பிரதான சக்தியாக கொண்டுள்ளது. புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தை பிழைப்புவாத மோகத்தில் மூழ்கடித்து, தொழிற்சங்கம் என்பத்ற்க்கே அவப் பெயரை உருவாக்கியுள்ளது.
முதலாளித்துவ பாரளுமன்றம் நடைமூறையில் உள்ள நாட்டிலேயே ஒரு கம்யுனிஸ்டு கட்சி என்பது தலைமறைவாக செயல்பட வேண்டியதன் தேவை குறித்து லெனின் கூறுகீறார். மகஇக வெகு ஜன அமைப்புதான். தமிழகம் முழுவதும் வீதிகள் தோறும் நக்சல்பாரி என்று எழுதியவர்கள்தான். ஒவ்வொரு பேரணியிலும் நக்சல்பாரி என்று முழங்கியவர்கள்தான். தமது பொருளாதார அரசியல் கொள்கைகளை தமது ஒவ்வொரு போராட்டத்திலும் நேரடியாக மக்கள் முன் வைத்துதான் அவர்க்ளை அணி திரட்டுகீறார்கள் மக இகவினர். சிலர் கூறுவது போல பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கூட தெரியாமல் அரசியல் செய்துதான் மக இகவிற்கு அமைப்பு கடந்த ஆதரவு இன்று உருவாகியுள்ளதோ?

ஆனால், முல்லைப் பெரியாறு முதல், காவிரி வரை தமது நிலைப்பாட்டை மாநிலத்திற்க்கு ஒரு குரலில் பேசி புரட்சி செய்வது யார்? இந்தியாவெங்கும் ஸ்டைரைக் ஆனால் மே.வாவில் கிடையாது, இந்தியா முழுவதும் உலகமயத்திற்க்கு அடையாள எதிர்ப்பு ஆனால் மே.வாவில் பில் கிளீண் டனுக்கு வரவேற்ப்பு, இந்தியா முழுவதும் ஜார்ஜ் புஷ்க்கு எதிர்ப்பு மே.வாவில் அமெரிக்க ராணுவ பயிற்சிக்கு சிகப்பு கம்பள வரவேற்ப்பு – நல்ல புரட்சிகர கட்சி. இதைத்தான் வோட்டுப் பொறூக்கி அரசியல் என்கிறோம். மக்களை வெறும் வோட்டு போடும் மிசின்களாக கருதி நடக்கும் இவர்களைத்தான் நாம் போலி கம்யுனிஸ்டு என்கிறோம். மக்களிடமிருந்து கற்றுக்கொள் மக்களுக்கு கற்றுக் கொடு என்பதை இவர்கள் நடைமுறைப்படுத்தும் விதம் இதுதான். உண்மையில் கூரை ஏறி கோழி பிடிக்கும் விசயம் இவர்களுக்குத்தான் சாலவும் பொருந்தும். சாதாரண விசயங்களிலேயே மிக அற்பமாக சரணாகதி அடையும் இவர்கள் எந்த காலத்திலும் பாட்டளிக்கோ அல்லது விவசாயிக்கோ விடுதலை வாங்கி கொடுக்கப் போவதில்லை. இவர்களின் நில சீர்திருத்தத்தின் அவலம் வேலையின்மையிலும், கேரள வல்லநாடு உள்ளிட்ட இடங்களிலும், ரப்பர் தொழில் சரிவிலும் தெரிகீறது. நாடாளுமன்ற குண்டு சட்டிக்குள் புரட்சி செய்ய முனைந்து ஏகாதிபத்திய சேமியாவுக்கு கறிவேப்பிலையாக மணக்கும் CPI,CPMன் அவலம் உண்மையிலேயே மிக பரிதாபகரமானதுதான்.
புரட்சிகர கட்சியின் பாத்திரம் பற்றி லெனின் கூறுகிறார், ஒரு சிறப்பான கட்டமைப்பான புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி இருந்தால், எந்தவொரு சாதாரண சம்பவத்தையும் புரட்சிக்கான சம்பவமாக மாற்ற முடியும்.

புரட்சி என்பது மேலே பறந்து போகும் காக்கை போடும் எச்சமல்ல. காக்கை போடும் பொழுது பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருப்பதற்க்கு.

அதற்க்கு அடிப்படையாக தேவைப்படுவது முரன்பாடுகளை கையாளும் துணிச்சலும், தத்துவ பலமும். இந்த இரண்டும் உறுதியாக CPI,CPM-க்கு கிடையாது. அதுவும் முரன்பாடுகளை கையாளும் துணிச்சல் உறுதியாக அதற்க்கு கிடையாது. மாறாக முரன்பாடுகளை பார்த்தால் வசதியாக ஒருக்களித்து படுக்கும் ஒரு இடுக்கு கிடைத்து விட்டது என்று சந்தோசப்படும். இதை அந்த கட்சிகள் பல்வேறு பிற்போக்கு சக்திகளுடன் தத்துவ தளத்தில் வைத்திருக்கும் உறவுகளை பார்த்தால் புரியும்..

பார்ப்பனியம் தமிழகத்தில் பிழைத்துக்கொள்ள, பாப்பாத்தி ஜெயலலிதா ஊடாக வேஷம் போட்டு ஆட, புலியிசம் ஈழத் தமிழனை ஏமாற்றி பிழைக்க அம்மா சரணம் தாயே என்ற கும்பிடு போடுகின்றனர்.

வர்க்கப் போராட்டாம், வெகுஜன இயக்கம், ஹிந்துத்துவ எதிர்ப்பு என்று தங்களது நடைமுறைக்கு சம்பந்தமில்லாத விசயங்களைப் பற்றி பேசுகிறார்கள். அப்படி என்ன விதமான போராட்டங்களை நடத்தி விட்டார்கள் என்று நான் கேட்பதை விடுங்கள் மக்களுக்கு தெரியும்.
நன்றி-செந்தில் 

4 comments:

 1. தம்பி இது உண் கருத்தா இல்ல மகஇக என்ஜிஓ கருத்தா

  ReplyDelete
 2. தைரியம் இருந்தால் காங்கிரசை எதிர்த்து மானரோசத்தோடு எழுதிக்குவிக்கட்டும் முரசொலி.திமுகவின் மானத்தை திகார் சிறைஅறியும் http://goo.gl/CpOzf.

  ReplyDelete
 3. ஒரு கட்சி செயல்படும் முறை தவறு என்று சொல்லும் நீங்கள் ஏன் ஒரு தனிபதிவாக கம்யூனிஸ்ட்கள் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது.. நீங்கள்தான் சித்தாந்த படி நடந்து திகார் சிறையில் அடைபட்டு உள்ளீர்களே... உங்களுக்கு தெரியாதா கம்யூனிஸ்ட்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று? கொஞ்சம் சொல்லுங்கள் காத்து இருக்கிறோம்.

  ReplyDelete
 4. கருநாதி குடும்பத்தில் பாப்பாத்திகள் இல்லையா?

  இந்திரா என்ற பாப்பாத்தியிடம் மண்டியிட்ட கருநாதிக்கு ஆதரவாக எழுதும் போது வெக்கமாக இல்லை. பாப்பாத்திகளைக் கண்டால் ஒருக்களித்துப் படுக்கும் பழக்கம் இந்த உலகில் கருநாதி குடும்பத்திற்கு மட்டுமே உண்டு.

  காக்கை எச்சம் ஒன்றும் இல்லை, நாறிப்போன கருநாதி என்ற எச்சம் தமிழ்நாட்டை நாறடிக்கின்றது.

  அந்த எச்சத்தை முற்றிலும் துடைத்தெறியவேண்டும்.

  ReplyDelete