தொகுப்புகள்

Search This Blog

Saturday, February 12, 2011

காதலர் தினத்தில் காதலர்களின் கவனத்திற்கு..!!


    வணக்கம் அனைவருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

என்னடா இது காரசாரமான பதிவினை விடுத்து காதலைப்பற்றி போட்டுள்ளாரே என்று பார்க்கிறீர்களா ..?? ஆம். நாளை மறுநாள் காதலர் தினம் என்றதும் என் மனம் குதூகலத்துடன் 24 வருடம் பின்னோக்கி நகர ஆரம்பித்து விட்டது.

யோசனை வேண்டாம்.நானே சொல்கிறேன் . நானும் எனது மனைவியும் காதலிக்க ஆரம்பித்து 24 வருடங்களாகிவிட்டது .நான் ஊட்டியில் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது தூரத்து உறவான சாந்தி அன்னூரில் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.எங்கள் சொந்தக்கார பாட்டியின் இறப்பு எங்கள் சந்திப்பிற்கு அடித்தளமிட்டது. அதில் இருந்த சில பெரியோர்கள் இது உனக்கொரு மாமன் பொன்னாகுது என்று எங்களுக்குள் காதல் விதைகளை தூவி விட்டனர்.அன்று முதல் "puppy love" என்று சொல்லக்கூடிய காதல் எங்களை தொற்றிக்கொண்டது.ஆனால் பின்னர் திருமணம் என்று வந்தவுடன் பிரச்சினைகள் மற்ற காதல்களைப்போலவே தான். காரணம் அவரின் படிப்பு B.E, நானோ +2தான். காதலித்தாலும் சாந்தி படிப்பில் படு சுட்டி. +2 வகுப்பில் பள்ளியில் முதலிடம் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர் என்றாலும் அவரது படிப்பை பார்த்து பல அமெரிக்க மாப்பிள்ளைகளும் இன்ஜினியர் மாப்பிள்ளைகளும் வந்த வண்ணம் இருந்தன.

 காதலிலும் ஜெயித்து வாழ்க்கையிலும் ஜெயிக்க் முடியாதா..?(This happen before BOYS movie) என்ற கேள்வியுடன்  என் தூரத்து உறவான சாந்தியை  சுமார் பதினான்கு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டடேன். பல போராட்டங்களுக்கு பிறகு பெற்றோர்களது சம்மதத்துடன் என்னை கை பிடித்தார் சாந்தி.  எங்களுடைய காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்த போதிலும் அவர்களுடைய சம்மதத்திற்க்காக காத்திருந்து பெற்றோர்களின் மனம் கோணாமல் பின்புதான் திருமணம் செய்து கொண்டோம்.. பிறகு அருகில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி கொண்டிருந்தார் . மேற்படிப்பு படிக்க ஆசை பட்டவரை M.E படிக்க வைத்தோம்.

 M.E இறுதியாண்டு படிக்கும் பொழுதே அகில உலக கருத்தரங்கில் கலந்து கொண்டு தனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த இவருக்கு அமெரிக்க நிறுவனம் ஓன்று சம்பளமாக சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு வேலை வாய்ப்பு அளித்தது, ஆனால் என் மனைவியோ அந்த வாய்ப்பை நிராகரித்து இந்தியாவிலேயே எங்கள் குடுப்பதினரோடு எங்கள் கிராமத்தில் இருப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்று கூறிவிட்டார் . 
                         (நிக்சிதா -  Our family friend & Avinashi union vice chairman's daughter)

சரி எங்களை விடுங்கள் . நாங்கள் இன்னும் எங்களுடைய கூட்டுக்குடும்பத்தில் 24 வருட காதலர்களாகவும் 10 வருட தம்பதியராகவும் இருப்பதால் தான் காதலை பற்றி இந்த பதிவினை போட தகுதியுடன் கூடிய ஆவல் ஏற்பட்டது.

பொதுவாக காதல் பிரச்சனை வீட்டில் தெரியவந்தவுடன் கண்டிப்பாக பிரச்சனைகள் வரவே செய்யும்.குழந்தையாக பாவித்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென மிகப்பெரிய முடிவினை அவர்களாகவே எடுக்கும் பொழுது கோபம், ஆத்திரம் எல்லாம் பெற்றவர்களுக்கு ஏற்படுவது நியாயமே. 

'ஏன் நமது நியாயமான காதல் ஆசையை, ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாமல் பெற்றவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்?' என சிந்திக்காமல், அவர்களது கோபம் நியாயமே, அது தீர்வதற்கு சிறிது நேரம் கொடுக்கலாம் என காத்திருங்கள். இந்திரா காந்தி படிக்கும் காலத்தல் பெரோஸ் காந்தியைக் காதலித்தார். விஷயம் பிரதமராக இருந்த நேருவின் காதுகளுக்குப் போனது. 'நான்கு வருட காலம் இருவரும் சந்திக்காமல், பேசிக்கொள்ளாமல், கடிதம் எழுதாமல் இருங்கள். அதற்குப் பின்னர் இருவருக்கும் காதல் இருப்பதாகத் தெரிந்தால் திருமணம் முடித்து வைக்கிறேன்' என்று நிபந்தனை விதித்தார். 

இருவரும் காதலுக்காக சொன்ன சொல்லைக் காப்பாற்றிக் கிடந்தார்கள். அவர்கள் இருவரும் அன்போடு காதலில் காத்துக் கிடந்திருப்பதைப் பார்த்த நேரு, விரைவிலேயே இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தார். பெற்றோர்களது கோபம் தீரும் வரை காத்திருங்கள். காத்திருந்தால் கண்டிப்பாக நல்லதே நடக்கும். பெற்றோர், காதல் இரண்டும் மனிதனுக்கு இரு கண்களைப் போன்றது.அதனால் இரண்டுடனும் சேர்ந்து வாழ்வதற்காக முடிந்தவரை கஷ்டப்பட்டு சம்மதம் பெறுதலே நல்லது. 

சில பெற்றோர்கள் காதலுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். ஆனால், இந்த காதலுக்கு இசைவு தெரிவித்தால் அடுத்ததாக தம்பி, தங்கைக்கு திருமணம் முடிப்பதில் சிக்கல் ஏற்படும் என பயப்படுவார்கள். அவர்களது சந்தேகம், பயம் நியாயமானதே. அதனால் உங்களது காதலால் குடும்பத்தில் மற்றவர்களது எதிர்காலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்க வேண்டியது உங்கள் கடமை.காதல் திருமணங்கள் என்பது இப்பொழுது வெகு சகஜமாக நடைபெறுகின்றன. இது சமூக குற்றம் அல்ல என்பதை எடுத்துச் சொல்லி அவர்களது அன்பினைப் பெற்று அதன் பின்னர் திருமணம் முடிப்பதே நல்லது. 

உண்மையும், நேர்மையும் கலந்த காதல் என்றும் அழிவதில்லை, தோற்பதில்லை என்பார்கள். காதலின் அடிப்படையும் கூட அதுதான். ஒரு பெண் ஒரு ஆணை ஏன் காதலிக்க முடிவு செய்கிறாள்? இவன் நம் மனதுக்கு ஒத்து வருபவனாக இருக்கிறான், இறுதிவரை உடன் வருவான், துயரங்களில் துணை இருப்பான், இவனின் சினேகிதம் ஆறுதல் தருகிறது என்ற எண்ணத்தில்தான். இது ஆண்களுக்கும் பொருந்தும். இந்த எண்ணங்கள் எந்தக் கோட்டில் உடைகிறதோ அந்த நொடியே அந்தக் காதலின் அஸ்திவாரம் தவிடு பொடியாகி விடுகிறது.

முழுமையான புரிந்து கொள்ளுதல், பாதுகாப்புணர்வு, முழுமையான நம்பிக்கை, உண்மையான நேசம், இன்ன பிறதான் ஒரு காதலை உயிர்ப்புடன், துடிப்புடன், உண்மையான காதலாக நீட்டிக்க வைக்கும்.உணர்வுகளுக்கு அங்கு மதிப்பு இருக்க வேண்டும். பாசத்திலும், நேசத்திலும் பாசாங்கு இருக்கக் கூடாது. வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல், உண்மையான செயல்பாடுகள் காணப்பட வேண்டும். உன் முன்னேற்றத்திற்கு நீ இப்படிச் செய்யலாம், இதை நீ செய்தால் சரியாக வரும். உனது உயர்வுக்கு இது உதவும் என்ற அறிவுரைகளில் உண்மையான காதலைக் காணலாம்.

காதல் என்றால் கூடவே எதிர்ப்பும் பின்னாலேயே நிற்கும். அதையும் உணர்ந்து, அதை எப்படி தாண்டுவது என்பதில் பாசிட்டிவான சிந்தனை இருக்க வேண்டும். அவசரம் காட்டுவது அலங்கோலத்திற்கு வழி வகுத்து விடலாம்.உண்மையான காதல், மரியாதை, நம்பிக்கை, பாசப் பிணைப்பு ஆகியவற்றை பலமாக கொண்ட ஒரு அடித்தளமாகும். ஒற்றுமை, நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் சக்திதான் காதல்.

எனவே, உண்மையாக காதலிப்போம், உண்மையான காதலைக் காதலிப்போம், காதலைக் கொண்டாடுவோம்

1 comment:

  1. Dear MAM,
    It is very nice to see your blog.. We really missed you When you left Maharaja Engg...... There was nobody there to support IT(Lateral Entry) after you left. For your information all of our Lateral entry gang are very well settled in several countries. I am also planning to come back to India after 3 years and i would like to live a peaceful life like you. It was really surprising to see your writings.... Take Care MAM.. Convey my regards to your family..

    ReplyDelete