2002-2003 நெசவாளர்களை வறுமையில் வாடவிட்டு கஞ்சித்தொட்டி திறந்த பொழுது நான் எழுதிய கண்ணீர் கவிதை.
"ஆராரோ ஆரிரரோ
கண்ணுறங்கு கண்மணியே
ஈரஞ்சு மாசத்தில
நேரமிங்கு சரியில்ல
நெஞ்ச துணி விக்கவில்ல
கஞ்சி காச்ச வழியுமில்ல
மாருலதான் பாலுமில்ல
பிஞ்சு நீயும் வாடுறியே
கொஞ்சம் நீயும் பொருதுக்கயா
நஞ்ச நானும் வாக்கையில
பஞ்சமினி உனக்கில்ல
பரலோகம் போய்வாயா
ஆராரோ ஆரிரரோ
கண்ணுறங்கு கண்மணியே....!!!
2005-2006ல் 79 விசைத்தறி சங்கங்கள் மட்டும் லாபத்தில் இயங்கின. ஆனால் 2009-2010ல் 126 விசைத்தறி சங்கங்கள் லாபகரமாக இயங்கி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிற 5 கூட்டுறவு நூற்பாலைகளும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமும், ஈரோட்டில் இயங்கி கொண்டுள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நூல் பதனிடும் ஆலையும் லாபத்தில் இயங்கி வருகின்றன.
இலவச வேட்டி சேலைத்திட்டத்தில் "டெண்டர்" முறையே தொடர்ந்து கடை பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் கைத்தறி கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச வேட்டி சேலை நெய்வதற்காக கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து நூல் வழங்கப்பட்டு வருகிறது.
நூல் விலை எவ்வளவு அதிகரித்தாலும் அக்டோபர் 2010 வரை ரூ.950/- விலைக்கே நூல் வழங்கிட வேண்டும். டெண்டர் கமிட்டி முடிவு செய்துள்ள விலையான 5 கிலோ ஒன்றுக்கு ரூ.950/- தான் இந்த ஆண்டு இலவச வேட்டி சேலைக்கு கூட்டுறவு நூற்பாலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நூலுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு ஐந்தாண்டு காலத்தில் ஒரே முறை 2004ம் வருடம் மட்டும் 10 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. கலைஞர் ஆட்சிக் காலத்தில் 2007ல் 10 சதவிகித அகவிலைப்படி உயர்வும்; 2008-ஆம் ஆண்டில் 10 சதவிகித கூலி உயர்வும்; 2009-ஆம் ஆண்டு 15 சதவிகித அகவிலைப்படி உயர்வும்; 2010ல் 10 சதவிகித அடிப்படை கூலி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் 2005-ஆம் ஆண்டில் கைத்தறி சேலைக்கு ரூ45ஆக இருந்த கூலியை உயர்த்தி; தற்போது ரூ68.22 ஆகவும்; கைத்தறி வேட்டியின் கூலியை ரூ.42.13 ஆக இருந்த கூலியை ரூ.58.06ஆக உயர்த்தியும்; விசைத்தறி சேலைக்கு 2005-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.21.42ஐ, தற்போது ரூ.28.16ஆக உயர்த்தியும்; விசைத்தறி வேட்டிக்கு ரூ.12.38ஆக இருந்ததை ரூ.16 ஆக உயர்த்தியும் கலைஞர் அரசு வழங்கியுள்ளது.
இத்திட்டத்திற்கு கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உள்ள 11000 கைத்தறிகளும், விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்ளைச் சார்ந்த 41000 தறிகளும் ஈடுபடுத்தப்பட்டு டிசம்பர் மாதம் வரை வேலை வாய்ப்பு வழங்கி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இலவச வேட்டி சேலை திட்டத்தைப் பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர் ஜெயலலிதா. ஏனென்றால் 2001-2002 மற்றும் 2002-2003 ஆகிய இரண்டாண்டுகளில் இத்திட்டத்தை செயல்படுத்தாமல் நெசவாளர்களை வறுமையில் வாடவிட்டு கஞ்சித்தொட்டி திறக்கும் நிலைமைக்கு ஆளாக்கியவர் இவர். தான் திருடி பிறரை நம்பாள் என்பது ஜெயலலிதாவிற்கே பொருந்தும்.
பால் கொள்முதல் விலை
அதிமுக ஆட்சியில் பால் கொள்முதல் விலை பசும்பாலுக்கு ரூ. 1.50, எருமைப் பாலுக்கு ரூ. 1.56 என்றுதான் உயர்த்தப்பட்டது. இப்போதைய திமுக ஆட்சியில் 4 முறை பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பசும்பாலுக்கு ரூ. 6.60 அளவுக்கும், எருமைப் பாலுக்கு ரூ. 12.70 அளவுக்கும் விலை உயர்வு தரப்பட்டுள்ளது.
பசும்பாலுக்கு இது 4 மடங்கும், எருமைப் பாலுக்கு 8 மடங்கும் விலை உயர்வு ஆகும்.தற்போது மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் பால் கொள்முதலுக்கு கூடுதல் விலை கொடுக்கப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் லிட்டருக்கு ரூ.16.40ம், ஒரிசாவில்ரூ. 16.32ம், கேரளாவில் ரூ.16.07ம், ஆந்திராவில் ரூ.15.42ம், மேற்குவங்காளத்தில் ரூ. 15.19ம், மராட்டியத்தில் ரூ. 13.50ம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பசும் பாலுக்கு ரூ.16.50ம், எருமைப்பாலுக்கு ரூ.25.20ம் வழங்கப்படுகிறது.
இன்னும் இவற்றை போல பல இருக்கிறது எதை சொல்வது எதை விடுவது.
சமந்தபட்டவர்களுக்கு தெரியும் இவற்றின் வேறுபாடு .
மனசாட்சி உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள் .
சமந்தபட்டவர்களுக்கு தெரியும் இவற்றின் வேறுபாடு .
மனசாட்சி உள்ளவர்கள் புரிந்துகொள்வார்கள் .
நல்லா எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஎல்லாவற்றையும் அரசியலாக பார்ப்பது தானே உலக வழக்கம்...
ReplyDeletewt abt inflation
ReplyDelete