சமுக உறவில் தேடுங்கள்

Loading

Friday, December 31, 2010

ஈழ தமிழர்களின் வில்லி - கோமளவள்ளி


அனுதாப அலையின் மூலம் செல்வி.ஜெயலலிதா மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல் அமைச்சர் என்ற பெருமையை தமிழக அரசியலில் பெற்றார்.

* அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதா ,வயதில் பெரிய அமைச்சர்களை கூட தனது காலில் விழுந்து வாழ்த்து பெறுவதை பொது மேடைகளில் கூட தமிழ்நாடு காண செய்தார்.

* தோழி சசிகலா தனது குடும்ப உறுப்பினர்களோடு பெரும் செல்வங்களை அரசியல் செல்வாக்கின் மூலமாக பெற்று இன்றும் இவருடைய நிழலாக இருப்பது பல்வேறு கண்டனங்களையும் ,எதிர்ப்புகளையும் ஏற்படுத்தி இவரை பல வழக்குகளில் சிக்க செய்தன

* ஒரு கிலோ எடையுள்ள தங்க ஒட்டியாணம் மட்டும் ஏறக்குறைய ஐம்பத்து லட்ச ருபாய் மதிப்புடையதாககணக்கிடப்பட்டுது!.நானுட்ட்ரி அறுபத்தி எட்டு வகையான தங்க ஆபரணங்கள் தேடுதலின் போது கை பற்றப்பட்டது !

*இவர் மீது பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன .

* திருமணம் செய்துகொள்ளாமல் செல்வியாக இருந்து வரும் ஜெயலலிதா, சசிகலா என்கிற சாதாரண வீடியோ லைப்ரரி நடத்தி வந்தவரை தனது ஆத்ம தோழியாக ஏற்று கொண்டார். வேறு யாரும் அவரை நெருங்காதவண்ணம் உயிர் தோழிகளாக இன்று வரை உள்ளார்கள்

* ஜோசியம் ,யாகம்,யானை பசுமாடு போன்ற தானங்கள் என பலவற்றை நடத்தி தன்னை சக்தி மிக்கவராக காட்டி கொண்டவரும் ஜெயலலிதாதான் !

* மதமாற்ற தடை சட்டம் இயற்றியும் அரசு பணியாளர்கள் ஒரு லட்சத்தி எழுபது ஆயிரம் பேரை அதிரடி பனி நீக்கம் செய்தவர் ஜெயலலிதா .இதுவே அவருடைய ஆட்சி இழப்பிற்கு காரணமாக அமைந்தது எனலாம் !

ஜெயலலிதா, சசிகலா சொத்து கணக்கையும் கொஞ்சம் பாருங்கள் 

இதில் ஜெயா டிவி, ஆந்திராவில் உள்ள திராட்சைத் தோட்டம், ஊட்டி தேயிலைத் தோட்டம் ஆகியவை அனைவரும் அறிந்த சில சொத்துக்கள்.
 ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள பட்டியல் விவரம்:

1. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், சென்னை

2. ஜே. பார்ம் ஹவுசஸ், சென்னை

3. ஜெயா கான்ட்ராக்டர் அண்ட் பில்டர்ஸ், சென்னை

4. கிரீன் பார்ம் ஹவுசஸ், சென்னை

5. ஜே.ஜே லீசிங், சென்னை

6. ஜே.எஸ். ஹவுசிங் டெவலப்மெண்ட், சென்னை

7. ஏபி அட்வர்டைசிங், சென்னை

8. ஃபிரஷ் மஷ்ரூம்ஸ், சென்னை

9. ரிவர்வே அக்ரோ ப்ரோடக்ஷன், நீலாங்கரை

10. சூப்பர் டூப்பர் டி.வி, சென்னை

11. லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மெண்ட், சென்னை

12. மாஸ்டர் ஜே விவேக்ஸ், போயஸ் கார்டன், சென்னை

13. மெடோ அக்ரோ பார்ம்ஸ் சென்னை

14. சினோரா பிசினஸ் என்டர்பிரைசஸ், சென்னை

15. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ், சென்னை

16. விக்னேஸ்வரா பில்டர்ஸ், சென்னை

17. லட்சுமி கன்ஸ்ட்ரக்ஷன், சென்னை

18. கோபால் ப்ரமோட்டர்ஸ், சென்னை

19, சக்தி கன்ட்ஸ்ரக்ஷன்ஸ், சென்னை

20. நமச்சிவாயா ஹவுஸ்சிங், சென்னை

21. அய்யப்பா பிராப்பர்டி டெவலப்மெண்ட், சென்னை

22. ஸீ என்கிளேவ், சென்னை

23. நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ், சென்னை

24. ஓசியாணிக் கன்ஸ்டரக்ஷன், சென்னை

25. ஜே ரியல் எஸ்டேட், சென்னை

26. கிரீன் கார்டன் அபார்மெண்ட், சென்னை

27 கொடநாடு டீ எஸ்டேட், உதகை

28. மார்பிள் அண்ட் மார்வெல்ஸ், சென்னை

29. பேக்ஸ் யுனிவர்சல், சென்னை

30. வினோத் வீடியோ விஷன் சென்னை

31. இண்டோ டோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்ம்சுடிக்கல்ஸ், சென்னை

32. மெட்டல் கிங், சென்னை

33. ஜெயா பப்ளிகேஷன்ஸ், சென்னை

34. சசி எண்டர்பிரைசஸ், சென்னை

என்று ஜெயலலிதா சசிகலா தொடர்பான வர்த்தக நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருந்தன இந்த நிறுவனகள் யாவும் அபிராமபுரம் இந்தியன் வங்கியிலேயே கணக்கு வைத்திருந்தன.பெரும்பாலும் 1994 -1995 லேயே இங்கு கணக்குகள் தொடங்கப்பட்டன.1995 ஆம் ஆண்டில் ஏழு முதல் பதினாறு வரையிலான ஒவ்வொரு கம்பெனியிலும் ரூ.22 ௦௦ ௦௦௦ முதலீடு செய்யப்பட்டது.மொத்தம் ரூபாய் 40700000 முதலீடு செய்யப்பட்டது.இவைகளெல்லாம் எங்கிருந்து வந்த முதலீடுகள்?யார் சம்பாதித்தது?

இந்தக் கேள்விகளுக்கு என்ன பதில்?

ஜெயலலிதா தலைமையில் தனி ஈழம் பெறுவோம் என்று மார்தட்டும் "மகாபெரிய மேதை"களே! உங்களைத்தான்...

1. அந்தத் தனி ஈழம் விடுதலைப்புலிகளுக்குத் தொடர்பே இல்லாத சுதந்திர நாடா?

2. தனி ஈழம் பேசினாலும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு - உலகத்தில் பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட அமைப்பு - இலங்கைத் தமிழர்களுக்கு ஒரே பிரதிநிதி விடுதலைப்புலிகள் என் பதை நாங்கள் நம்பவில்லை என்று ஜெயலலிதா திட்டவட்டமாகக் கூறியுள்ளாரே - இவருடன் கூட்டணி சேர்ந்துள்ள தனி ஈழ ஆதரவாளர்களின் பதில் என்ன?

3. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடித்து இந்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு, அதன்பின்னர் இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி தனி நாடு வாங்கி, யாரிடம் ஒப்படைக்கப் போகிறார்?

4. விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் போடுகிறது. விடுதலைப்புலிகளைத் தடை செய்ததற்கு நான் தான் காரணம். இரண்டாண்டுக்கு ஒருமுறை இந்தியா வில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்படுவதும் என்னால்தான் என்று சட்டமன்றத்திலேயே இறுமாப்புடன் தீர்மானம் போட்டாரே - இதன்மீது அதன் கூட்டணியில் உள்ள விடுதலைப்புலிகள் ஆதரவாளர்களின் பதில் என்ன?

5. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு முதல்வர் கலைஞர் இரங்கல் கவிதை எழுதினார் என்பதற்காக தி.மு.க. ஆட்சியைக் கலைக்கவேண்டும் என்று சொன்னாரே - அந்த நிலையிலிருந்து ஜெயலலிதா மாறுபட்டுள்ளாரா? அப்படி ஜெயலலிதா அறிக்கை விட்டபோது, அது தவறு என்று கண்டித்து அறிக்கை விடுவதைத் தடுத்தது எது?

6. ஆன்டன் பாலசிங்கம் மருத்துவ உதவிக்கு இந்தியாவுக்கு வருவதைக்கூட எதிர்த்து அறிக்கைவிட்ட மனிதாபிமானமற்ற ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்காக இப்பொழுது விடுவது நீலிக் கண்ணீரா அல்லது கிளிசரின் கண்ணீரா?

7. விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்ததைக்கூட, கருணாநிதியும் - திருமாவளவனும் பேசி வைத்துக்கொண்டு ஆடிய நாடகம் என்றாரே ஜெயலலிதா இப்பொழுது ஜெயலலிதாவின் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் கூட்டணித் தலைவர்கள் ஜெயலலிதாவின் அந்தக் கூற்றைக் கண்டித்து அறிக்கை வெளியிடாதது ஏன்? அப்படியென்றால், அந்த நாடகத்தில் இவர்கள் வகித்த பாத்திரங்கள் என்னென்ன? கோமாளிப் பாத்திரமா - வில்லன் பாத்திரமா? காட்டிக் கொடுக்கும் எட்டப்பர் பாத்திரமா?

8. ஈழப் பிரச்சினைக்காகத்தான் ஜெயலலிதாவோடு கூட்டு சேர்ந்ததாக இவர்கள் சொல்வார்களேயானால், இவர்கள் ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்த நேரத்தில், அந்த அம்மையார் தனி ஈழத்துக்கு ஆதரவாகப் பேசியது கிடையாதே - அப்படி இருக்கும்போது இந்தக் கருத்து எப்படி உண்மையாக இருக்க முடியும்?

9. ஜெயலலிதா தலைமையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்டோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டோ தனி ஈழம் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளாத நிலையில், இந்தக் கூட்டணியின் கொள்கை தனி ஈழம்தான் என்று எப்படி சொல்ல முடியும்?

10. ஈழப் பிரச்சினையைத் தேர்தல் பிரச்சினையாக நாங்கள் முன்வைக்க மாட்டோம் என்று தோழர் தா. பாண்டியன் பேட்டி அளித்துள்ளாரே - அப்படி இருக்கும்போது இந்தக் கூட்டணியின் பொதுக்கொள்கை தனி ஈழம்தான் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

11. 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு கூட்டுச் சேர்ந்த ம.தி.மு.க., மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சினையை முன்வைக்கவில்லையே - இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்காக உயிரையே கொடுப்போம் என்று தோழர் வைகோ முழங்குவதில் சாரம் உண்டா?

12. ஈழப் பிரச்சினையில் ஒத்த கருத்தோடு பணியாற்றும் பா.ம.க., ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து தனிக் கூட்டணி வகுத்துத் தேர்தலைச் சந்திப்போம் என்று தோழர் திருமாவளவன் அவர்கள் கூறிய கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், ஈழப் பிரச்சினையில் தமிழர்களுக்கு விரோதமாகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஜெயலலிதாவின் பக்கம் ஓடி கூட்டணி வைத்துக் கொண்டதன் மர்மம் என்ன?

13. தேர்தலுக்கு முன்பே காங்கிரசைக் கூட்டணிக்கு அழைத்த செல்வி ஜெயலலிதா, தேர்தலுக்குப் பிறகு என்ன முடிவு எடுப்பார் என்பதற்கு இப்போது அந்த அம்மையாருடன் கூட்டணி சேர்ந்துள்ள தலைவர்கள் உத்தரவாதம் கொடுப்பார்களா?

14. தேர்தல் முடிந்ததற்குப் பின்னால் பாரதீய ஜனதா கூட்டணியில் ஜெயலலிதா சேர்வார் என்று பாரதீய ஜனதா தலைவர் எல்.கே. அத்வானி கூறியதற்குப் பதிலாக ஒரு நல்ல அரசியல்வாதி எதையும் நிராகரிக்க மாட்டார் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே - இதன் பொருள் என்ன?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அ.இ.அ.தி.மு.க. வுடன் கூட்டணி சேர்ந்துள்ள கட்சித் தலைவர்கள் பதில் சொல்வார்களா ...????
நன்றி -தமிழ் 
                      

6 comments:

 1. not only jj's assert but also MK's & his family assert is also enormous.so the campaigning style shall be changed as all the politicians despite of their designations are in the search for position along with wealth

  ReplyDelete
 2. I appreciate your boldness. keep it up

  ReplyDelete
 3. என்னங்க. நீங்க சொன்ன நாலு கோடியே ஏழு லக்ஷம் கருணாநிதி பேரன்கள் எடுக்கும் ஒரு படத்தின் செலவில் பத்தில் ஒரு பாகம் கூட இல்லை என்பதும் அவர்களுக்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்றும் மக்கள் கேட்பார்களே, அதற்க்கு என்ன சொல்வீங்க?

  ReplyDelete
 4. Intha Kelvi ellam een inga kekuringa...poi admk ooda kootani vachi irukum thalaivarkal kitta kelunga...appdiya kazhaga kudumba sotthukalaiyum varisai paduthunga....

  ReplyDelete
 5. naan potta comment i post ponnunga Boss...

  ReplyDelete
 6. pitachai edutharam perumalu.,atha pudugi thinnaram Anumaru.,,,,,,,,,,,,,,

  ReplyDelete