தொகுப்புகள்

Search This Blog

Saturday, December 25, 2010

அய் அய் அய் அய் யோ !!!!!!!



நமது பொதுவாழ்வில் நடைபெறும் பல முக்கிய விவாதங்கள் இரு துருவங்களாகப் பிரிந்த நிலையிலேயே நடைபெறுகின்றன. எதிரெதிர் விளிம்புகளுக்கு நடுவிலும் நிலைப்பாடுகள் இருக்கின்றன என்பதைப் பெரும்பாலோர் ஏற்றுக் கொள்வதில்லை. நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறையுங்கள் என்று கேட்பவன் தேசபக்தி இல்லாதவன். 

ரிஷி பிரகாஷ் தியாகிக்குத் தூக்கு தண்டனையை ரத்து செய்யுங்கள் என்றால், அவன் காவல்துறையின் எடுபிடி. சிங்களப் பேரினவாதத்திடம் இருந்து தமிழர்களுக்கு தேசிய சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றால், அவன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன். புலிகள் நடத்திய 'துன்பியல் சம்பவத்தை' நினைவுகூர்ந்தால், அவன் தமிழர் நலனுக்கு எதிரானவன்.

அப்பாவி மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டித்தால் அவன் தேசிய வெறியன். காவல்துறையின் மனித உரிமைகள் மீறலைக் கண்டித்தால் அவன் பயங்கரவாதி. இவ்வாறு இரு துருவங்களில் இருந்தும் இப்படிப்பட்ட முத்திரைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு நபர்களுக்கு குத்தப்படுகின்றன.

"அன்பு தோழர்களே, அரசியல்வாதிகளை கேவலமாக பேசுவோருக்கும் ஆசிரியர்களின் ஊதியம் அதிகம் என்றும் பேசுவோருக்கும்" - ஒரு கேள்வி.
உங்களை அரசியல்வாதிகளாகவோ ,ஆசிரியர்களாகவோ ஆகவிடாமல் தடுத்தது யார் ?

என்று பொதுவாக கேட்டால் ,

 எல்லோரும் அரசியல்வாதியாகிவிட எல்லோரும் சாந்திபாபு அல்ல, எப்படியாவது கூஜா தூக்கி பிழைக்க, இரண்டு காலமும் திமுக அடிவருடி அரசியலில் ஊறித்திழைத்து கோடிக்கணக்கான வருமான‌த்தில் பட்டம் வாங்கி, அதிகார பலத்தால் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை வாங்கும் திறமை எல்லோருக்கும் வராது. 
என்கிறார்கள் 

நான் அப்படி இல்லைங்க சொல்லி ,குமுதம்-1,குமுதம்-2, , தினமலர் ,தினமணி  ,மங்கையர்மலர் பாருங்க சொன்ன 
குமுதம், கல்கண்டு இவங்க பத்திரிக்கை விற்க, நொறுக்கு தீனி மாதிரி ஏதாச்சும் ஒரு விளம்பரமான செய்தியை போடுவாங்க, இதையெல்லாம் பாராட்ட நான் சராசரி அல்ல. பொது வாழ்க்கைக்கு வரும் எவருக்கும் செய்தியோ, விளம்பரமோ அவசியமில்லை , என்கிறார்கள் .

பத்து , இருபது பிளாக் வெச்சுயர்கவங்கக்கெல்லாம் நிம்மதியா இருகாங்க , இந்த ஒரு ப்ளாக் வெச்சிட்டு நா படுற பாடு இருக்கே  அய் அய் அய் அய் யோ

ம்ஹும்... பொது வாழ்வில் சம்பவிக்கும் முக்கிய விவாதங்கள் இரு துருவங்களாக இல்லை. நமக்கேன் வம்பு என ஒதுங்கியிருந்தாலும் இவனுக்கு ஒன்றுமே தெரியாது என்று மூன்றாவது முத்திரையும் குத்தப்படுகிறது.

கஷ்டப்பட்டு ஒரு வேலையை செய்வதை விட இஷ்டப்பட்டு செய்வதுதான்  திருப்தியை தரும் , எனக்கு போராட்டம் மிகவும் பிடிக்கும். காரணம் நாம் பூமியில் வாழுவதற்கு கொடுக்கும் வாடகைதான் நமது சேவை

1 comment:

  1. உங்களுக்கு எப்படி தேவையோ அப்படி பேசுங்கள்
    பாராளுமன்றத்தின் மேல் தாக்குதல் நடத்தியவன் மேல் கருணை காட்டியாவனுக்கு பரிந்து பேசுகிறீர்களே
    அது மட்டும் அல்ல அய்யா தாஜ் ஹோட்டல் மேல் தாக்குதல் நடத்தியவனுக்கு சிறையில் கோழிக்கறி இன்ன பல வசதிகள் செய்து கொடுக்கும் அரசை தட்டி கேட்டால் இவன் முஸ்லீம் விரோதி என்கிற பட்டம் இவன் மதவாதி
    நாட்டை துண்டு போட செய்பவன்- இப்படியும் பல வியாக்கியானங்கள்
    நாட்டின் பணத்தை சுரண்டியவனை காக்க சாதியை இழுத்து வாதம் செய்யும் தலைவர்கள் உள்ளவரை பணம் சுரண்டல் எப்படி நிற்கும் ?
    கேட்டால் நான் சாதி வெறி பிடித்தவன்
    நீங்கள் சாதி உணர்வு இல்லாதவர்கள்
    நாக்கிற்கு தான் நரம்பில்லையே நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள்.
    அத்சை நம்ப பலர் உள்ளனர் தமிழ் நாட்டில்.
    ஏமாற்றப்படுபவர்கள் உள்ளவரை உங்களை போல ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
    ஜமாயுங்கள். உங்கள் காட்டில் மழை பொழிகிறது

    ReplyDelete