தொகுப்புகள்

Search This Blog

Monday, December 27, 2010

படித்தவர்கள் பயந்தாகொள்ளியா ?

                                          

"இவர் நல்லவராயிற்றே, இவர் ஏன் அரசியலுக்கு வரவேண்டும்' என அவர்கள் கேட்கின்றனர். இதில் இருந்து , அரசியலில் நல்லவர்கள் இருக்க முடியாது என அர்த்தமா ?. இதே போன்ற எண்ணம், தமிழகத்தில் உள்ள மாணவர்கள், பட்டதாரிகள், ஓய்வு பெற்றவர்கள், முதியோர் என, பலதரப்பட்டவர்களின் மனதிலும் ஏற்பட்டுள்ளது. 

அரசியல் ஒரு சாக்கடை, அது அசுத்தம் நிறைந்தது என்றும் அவர்கள் கருதுகின்றனர். படித்தவர்கள் அரசியலில் இருந்தால் தான், நம் நாடு முன்னேறும். தகுதியும், திறமையும் மிக்கவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசும் படித்தவர்கள்  அதிக உடல் உழைப்பில்லாத நாகரிகமான சூழ்நிலை இருக்க கூடிய,தன்னை பிறர் மதிக்க கூடிய இடத்தில்தான் பணிபுரிய விரும்புவார்கள்.அரசியலில் அப்படி ஒரு நிலையை எதிர்பார்க்க முடியாது. ஆனால், அரசியல் என்பது கடின உழைப்பைக்கொண்டது.அதில் நுழையும் வழி நேர்வழியாகவும் இருக்கலாம்.தவறான வழியாகவும் இருக்கலாம்.ஆனால் அதற்கும் பல சிரமங்களை கடந்தாக வேண்டும்.பல கீழ்த்தர விமர்சனங்களை கூட சகித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். படித்தவர்களிடம் இந்த சகிப்புத்தன்மையை எதிர்பார்க்க முடியாது. எனவே,அதெற்கெல்லாம் துணிந்தவர்கள் மட்டும்தான் அரசியலில் தலைதூக்க முடியும்.

 ஒருவேளை அரசியல் என்பது பன்னாட்டு நிறுவன வேலை போலவோ, அலுவலக உத்தியோகம் போலவோ ஆக்கப்பட்டால் படித்தவர்கள் அரசியலுக்கு வரக்கூடும். படித்தவர்கள் தங்கள் வேலை, குடும்பம் இதற்கு கட்டுப்பட்டு அரசியலுக்கு வர பயப்படுகிறார்கள். படிக்காதவர்களை ஒப்பிட்டு பார்க்கையில் படித்தவர்கள் இந்த காலத்தில் சற்று பயந்தாகொள்ளியாகத் தான் இருக்கிறார்கள்.

இன்னோரு விசியம் நம்மை வளர்க்கு பொற்றொர் இஞ்சினியர்,டாக்டர் ஆக வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள் யாரும் அரசியல் வாதியாக வர வேண்டும் என்று விரும்புவதில்லை. சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்று அக்கறை உள்ளவர்கள் அரசியலுக்கு அதிகமாக வரும் வரையில் அது நாற்றமடித்துக்கொண்டுதான் இருக்கும். கால்வாயில் கலந்த சாக்கடை நீர் வெளியேற வேண்டுமானால் அதில் நல்ல நீர் வெள்ளமாய்ப் பாய்ந்தால்தான் நடக்கும். நாறுகிறதே என்று மூக்கைக் பொத்திக்கொண்டு நல்லநீருக்கு அணைபோட்டுத் தடுத்துவைத்திருக்கும் வரையில் சாக்கடை நாற்றத்தை மாற்ற முடியாது என்றார் குமரேசன் அசாக்.

அறிவும்,ஆற்றலும் மிக்க இளைய தலை முறையில் பெரும்பாலனவர்கள் வெளிநாட்டு மோகம் கொண்டு வேறு நாடுகளுக்குப் பறந்து விடுகிறார்கள்... செலவு செய்தது தரமான கல்வியைக் கொடுப்பது தாய் நாடு என்பது அவர்களுக்குக்கு மறந்து விடுகிறது..
அரசியல் சாக்கடையாய்க் கிடக்கிறது என்று குற்றம் சொல்ல மட்டும் இந்தியாவில் ஆயிரம்,ஆயிரம் ஆட்களுண்டு...ஆனால் அதில் இறங்கி சுத்தம் செய்யும் துணிவு வராத வரையில் என்ன பயன்?

அரசியலா அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் இன்றைய மாணவர்கள் நினைத்து அதை விட்டு விலகி நிற்கின்றனர்.சமுதாயத்தில் உள்ள பெண்களும் அரசியல் என்றால் ஆபத்து என்று நினைத்து விலகி நிற்கின்றனர்.

பெரியாரும் ,அண்ணாவும் நமக்கு அரசியலை கற்று தரவில்லையா? அதற்கான முன் மாதிரி திராவிடம் இல்லையா? அப்படியானால் நம் முன்னோர் எப்படி ஆட்சி செய்தார்கள்?

அரசியலை சாக்கடை என்று சொல்லி படித்தவர்களும், பண்புள்ளவர்களும் ஒதுங்கிப் போனால், அதை யார்தான் சுத்தம் செய்வது?' என்று வசனம் பேசுகிற பல ஹீரோக்கள்... வாழ்கையில் ஓட்டுப் போடுவதோடு தங்கள் ஜனநாயக் கடமையை முடித்துக் கொள்கிறார்கள்.(சிலர் அதையும் செய்வதில்லை ) இது  சாக்கடை என்று பயந்து ஒதுங்கிக் கொள்வதால் ரவுடிகளும், கட்டை பஞ்சாயத்து ஆசாமிகளும் இன்று அரசியலை தம் உள்ளங்கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள்.ஒரு முக்கியமான உண்மையை நாம் எல்லோரும் மறந்துவிடுகிறோம். சாக்கடை என்றும் மானங்கெட்டது என்றும் நாம் பேசும் அரசியல் எவ்வளவு புனிதமானது என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.
 இந்த நிலையில், 'சாக்கடையை சுத்தம் பண்ண நான் ரெடி' என்று சொல்ப்பவர்கள் எத்தனை பேர் ? 


1 comment: