ஒப்பிட முடியாத ஒரு சில உதாரணங்கள் .
தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை மாணவ நேசன் என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர்.
செபாஸ்டின் சீமான்
சென்னை வரும்போது எனக்கு வயசு 19. ஊரில் இருக்கிற வரைக்கும் பரமக்குடி, இளையான்குடி தாண்டி எதுவும் தெரியாது. கல்லூரி படிக்கும்போதுதான் மதுரை, ராமேஸ்வரத்துக்கு நண்பர்களோட போனேன், அதுவும் சினிமாப் பார்ப்பதற்குத்தான். அதனால் சென்னை வந்தபோது அந்த பிரம்மாண்டம் எனக்கு ரொம்ப பிரமிப்பாயிருந்தது. இது சீமான் பேட்டியில் கூறியது .
சீமானின் தமிழுணர்வையோ, அவரது ஈழ ஆதரவையோ குறை சொல்வதல்ல என் நோக்கம்..
ஆனால் அவர் செய்வது சொல்வது எல்லாம் அவரை ஒரு சுயநலவாதியாகவே காட்டுகிறது.. சினிமாவில் ஓய்வு பெற்றவர்களும், வெற்றி பெற முடியாதவர்களும் அரசியலை நோக்கிப் பார்வையைத் திருப்புவது இயல்பு.. சீமானும் அதே பாணியில், கலைஞரைத் தாக்கிப் பேசினால் மக்கள் நம்மைத் திரும்பிப்பார்ப்பார்கள், அப்படியாவது 2011ல் இல்லாவிட்டாலும் 2016ல் ஆவது நம் கட்சியை ஒரு சக்தியாக மாற்றிவிடலாம் என நினைக்கிறார்..
கலைஞரைக் குறை சொல்லும் அவர் ஈழத்திற்காகக் கலைஞர் செய்த தியாகங்களை மறைத்துவிட்டு ஏதோ தன்னைவிட்டால் வேறு யாரும் இல்லை என்பதைப் போல் பேசுகிறார்….சீமான் அவர்கள் சினிமாவில் முயன்று கொண்டிருக்கும்போதெல்லாம் ஈழம் பற்றி ஏன் பேசவில்லை… சீமான் ஈழம் பற்றி முதல் அறிக்கை விட்ட நாளன்றுதான் ஈழப் பிரச்சனை உருவானதா?
அப்பாவித் தமிழர்கள் ஈழத்தில் கொல்லப்படுகிறார்கள் எனக் கூறிக் கொண்டே, தமிழகத்தில் சிங்களவன் எங்கே படித்துக் கொண்டிருக்கிறான், எங்கிருக்கிறான் என்று தெரியும், பட்டியல் இருக்கிறது என்றாரே…இது தான் வீரமா? அந்த சிங்கள மாணவர்கள் அப்பாவிகள் இல்லையா? ராஜீவ் படுகொலைக்காக அப்பாவித் தமிழர்களைக் கொல்கிறார்களே எனச் சொல்லிக் கொண்டு, ராஜபக்க்ஷேவின் தவறுக்காக அப்பாவி சிங்கள மாணவர்கள் மீது வன்முறையைத் தூண்டுவது தவறில்லையா?
சாதி அடையாளம் பூசிக் கொள்ளத் தயாரான உங்களை எப்படித் தமிழர்கள் பொதுவானவராக ஏற்றுக் கொள்ள முடியும்…
அரசியலில் ஈடுபடாமல் மக்கள் இயக்கமாக, ஈழ மக்களுக்கு ஆதரவு திரட்டும் அமைப்பாக இயங்கியிருந்தால் உங்கள் பின்னால் மக்கள் அணிதிரண்டிருப்பார்கள்….
அரசியல் ஆதாயம் தேடி, ஈழத்தை வைத்து இங்கு அரசியல் நடத்துபவர்கள் எல்லாம் ஒரு வகையில் சுயநலவாதிகளே..
நன்றி -தமிழ்
எந்த ஒரு அதிகாரத்திலும் இல்லாத சீமானின் மீது இவ்வளவு குற்றம் சுமத்துவதை விட, அதிகார மையத்தில் உள்ள, செய்ய கடமைப்படுள்ள கலைஞர் எவ்வளவு சுயநலமாக இருந்தார் என்பது நாடறியும். அவரது லட்சணம்தான் சந்தி சிரிக்கிறதே சாந்தி அக்கா !.
ReplyDeleteகருணாநிதியின் சுயநலம் தான் ஊரறிந்த விசயமாயிற்றே. தன் குடும்ப வளர்ச்சி தான் முக்கியம். மற்றது எல்லாம் அப்புறம். குடும்பத்தினருக்காக டெல்லியில் டேரா போட்டு வேண்டிய இலாகா வாங்க மட்டும் தெரியும். மற்றதுக்கு எல்லாம் கடிதம் மட்டும் தான்.
ReplyDeletedear shanthi, we are the affected. we need only the people who want to console us or to express our agony made by sinhala. karunanithy did nothing, wrote only letters but seeman talks for us without fearing his future.please read what is happening in vanni. sathi
ReplyDeleteநான் ஒரு பத்திரிக்கை செய்தியாளர் பயிற்சியின் அனுபவத்தை கொண்டு கூறுகிறேன் ஈழத் தமிழர் கொன்று குவித்த சம்பவம் காவலர்களை வைத்து செய்திகளை வரவிடாமல் செய்து விட்டனர் ....
ReplyDeleteநான் இலங்கைத் தமிழர்களைப் பற்றி மற்றும் நாட்டில் நடக்கும் அநியாயங்களை ....................................
Seeman never promoted or supported violence . His view is forward looking.The case filed over him was dismissed . This clearly shows the cheap politics in our state.
ReplyDeletekalaingarin ezhap porattathai than avarin unnaviratham moolamum anru mathiyame por nirutthappattathu enak koori unnavirathathai muditthare theriyatha.
ReplyDeleteசாந்தி பாப்பா ,நீங்க மட்டும் என்ன ?உங்க பொழப்புக்கு கலைஞரை பாரட்டுரிங்க ...எல்லோரும் தங்கள் பிழைப்புக்கு இப்படி எதாவது செய்து நாட்டை கொள்ளை அடித்து கொண்டு இருக்கிறார்கள் தங்கள் சுயநலத்துக்காக ...யாரும் இங்கே காந்தியும் இல்லை ,புத்தனும் இல்லை
ReplyDeleteஎல்லோரும் பிழைப்புக்குத்தான் வேலை செய்கிறோம்..அது நேரான பாதையில் நல்லவர்களுடனா..? குடும்பஸ்தனுடனா..? குடும்பங்களைப் பிரித்து குஷியடைபவர்களுடனா..? என்பதுதான் முக்கியம்..
ReplyDeletewhy blame seeman, blame the cunning leader karunadani and his dynastay
ReplyDelete