தொகுப்புகள்

Search This Blog

Wednesday, December 29, 2010

சீமான் விலைக்குத் தானே விற்றார்....


தேசிய பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விடுதலையான சீமான், தற்போது நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பதுடன், நடிகர் விஜய்யுடன் இணைந்து “பகலவன்” படத்தை இயக்கும் பணிகளிலும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். தி.மு.க-காங்கிரஸை கடுமையாக விமர்சிக்கும் சீமானும் தி.மு.க.வுக்கு எதிராக அ.தி.மு.க.வுடன் கைகுலுக்கத் துடிக்கும் விஜய்யும் இணையவிருப்பது சீமானின் கொள்கை சறுக்கல் என்ற விமர்சனமும் வைக்கபடுகிறது.
மண்ணுக்காக, மக்களுக்காக சினிமாவில் இருந்து எழும் ஒரு கலகக் குரல் இயக்குநர் சீமானுடையது. அதிர வைக்கும் வசனங்கள், கோபாவேசமான காட்சிகள் என இவர் இயக்கிய தம்பி படம், பார்க்க வந்தவர்களை முறுக்கேற்றி அனுப்பியது ஆனால் சீமான் அவர்களின் ஈழ ஆதரவு, அரசியல் பிரவேசம், ஆக்ரோசப் பேச்செல்லாம் பார்க்கும்போது, புத்தருக்கு போதி மரத்தடியில் கிடைத்ததுபோல் இவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு ஞானோதயம் கிடைத்தது போல் தெரிகிறது. கலைஞரைத் திட்டினால் பிரபலமாகலாம் எனத் திட்டிக் கொண்டிருக்கிறார் எனத்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்… அவரது பேட்டியை ஜெயா டிவி நேர்முகம் நிகழ்ச்சியில் காணும்வரை.

முதலில் அவரையும் மதித்து பேட்டி எடுக்கக் கூப்பிட்டிருக்கிறார்களே என ஒரு ஆவலில் போயிருப்பார் என நினைத்தேன். ஆனால் அவரது பேச்சில் ஈழ மக்களின் நலனை விட கலைஞரைத் திட்டி அம்மையாரிடம் அரசியல் ஆதாயம் பெற முடியுமா என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது…

எதற்கெடுத்தாலும் கலைஞர் அதைச் செய்யவில்லை…இதைச் செய்யவில்லை எனக் கூறுவதை ஜெயா டி.வி யே விரும்புவதில்லை என்பது சீமானுக்குத் தெரியவில்லை.. அதைச் செய்யவில்லை…இதைச் செய்யவில்லை எனச் சொன்னால், அந்த டி.வி யை எப்போதாவது பார்க்கும் பாமர மக்கள் கூட இந்த அம்மா ஆட்சியில் இருக்கும்போது செய்திருக்கலாமே எனச் சொல்லி பார்க்காமல் இருந்துவிடுவார்கள் என்பது ஜெயா டி.வி நிர்வாகிகளுக்குத் தெரியாமல் இருக்காது… சினிமாவில் வெற்றி பெற முடியாததால் அரசியல் பிரவேசம் செய்த சீமானுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை…

அண்டப் புழுகு ஆகாசப் புழுகு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்..சிவகங்கை மாவட்டத்திலுள்ள அவரது ஊரில் 18 மணி நேரம் மின்வெட்டு என வாய் கூசாமல் அவர் சொன்ன போதுதான் இதுதான் அண்டப் புழுகு ஆகாசப் புழுகு என்பதை உணர்ந்தேன்..

அவரது பேச்சில் ஈழ மக்களின் பிரச்சனைகளை விட அவரது மாயாண்டி குடும்பத்தார் படத்தை விலை கொடுத்து வாங்கி (இலவசமாக அல்ல) வெளியிட்ட தொலைக்காட்சி அவரது ஒரு பாடலை வெட்டி வெளியிட்ட வருத்தம்தான் இருந்தது…

ஏதோ இவர் திரைத் துறையில் லாப நோக்கின்றி சேவையாற்றுவது போலவும் அந்தத் தொலைக்காட்சி அந்தப் பாடலை வெட்டியது தவறு என்பது போலவும் புலம்பினார்… பொறுத்துக் கொள்ள முடியாமல் ஜெயா டி.வி. ரபி பெர்னார்டே நன்றி சீமான் எனச் சொல்லி பேட்டியை முடித்தது இன்னமும் நகைச்சுவையாக இருந்தது..

இவர் சினிமாத் துறையில் வெற்றி பெற முடியாததால் அரசியலுக்கு வந்தார் என அனைவருக்கும் தெரியும்.. ஏதோ இவர் வந்து தான் ஈழப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது போல் காட்டிக் கொண்டார்…

மாயாண்டி குடும்பத்தார் விஷயத்துக்கு வருவோம்…. ஏதோ ஆஸ்கார் விருது பெறும் படமாக இருந்தாலும் சீமான் விலைக்குத் தானே விற்றார்.. ஒரு பாடலை வெட்டி விட்டார்கள் என இன்னொரு தொலைக்காட்சியில் வந்து புலம்புவது நியாயமா….அவர்கள் செய்தது தவறென்றால் அதற்குத் தீர்வு காண எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. கிடைத்தது வரை லாபம் எனப் படத்தை விற்றுவிட்டு பாடலை வெட்டிவிட்டார்கள் எனப் புலம்புவதிலிருந்து சீமானின் அபரிதமான தமிழுணர்வும், ஈழ மக்களின் துன்பத்தை விட இது அவரை எவ்வளவு பாதித்துள்ளது என்பதும் தெரிகிறது…

இதோ இவர்களின் சில முரண்பாடு முட்டைகள்
அப்பாவிகளான ஈழத் தமிழர்கள் சிங்கள இராணுவ குண்டு மழையிலிருந்து காப்பாற்றப்படவேண்டும்; சொந்த மண்ணிலேயே அம்மக்கள் ஏதிலிகளாகி, காடுகளிலும், வனாந்தரங்களிலும் பசி, பட்டினியோடு நாளும் செத்துக் கொண்டுள்ள நிலையில், போர் நிறுத்தம் ஏற்படவும், தமிழர்களுக்கு நிவாரண உதவி போய்ச் சேரவேண்டு மென்றும் குரல் கொடுத்தால், அப்படிப் பேசுகிறவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளின் தீவிரவாதத்திற்குத் துணை போகிறவர்கள் என்று அறிக்கை விடும் அறிக்கை அரசி ஜெயலலிதா .

சீமான் பேசுவதை ஜெயலலிதா நியாயப்படுத்துவதாக இருந்தால் அவர் முதலமைச்சராக இருந்த நேரத்தில், வைகோ அவர்களின் அத்தகைய பேச்சு இறையாண்மைக்கு விரோதமான உரை என்றும் சட்ட விரோதம் என்று பொடாவின்கீழ் கைது செய்து ஓராண்டுக்குமேல் சிறையில் தள்ளியது ஏன்?

நீதிமன்ற ஆணையின் அடிப்படையில் விடுதலை பெற்ற பிறகும்கூட அவர்கள் பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்று வாய்ப்பூட்டுப் போட்டவர் யார்? சாட்சாத் இதே ஜெயலலிதா அம்மையார்தானே. அந்த நேரத்தில் கொலைகாரி என்ற சொல்லைப் பயன்படுத்தியவர்தானே - ஒழித்துக்கட்டுவோம் என்று சூளுரைத் தவர்தானே தோழர் வைகோ?

இந்த நிலையில் சீமான் ஜெயலலிதாவிற்கும் வை கோ விற்கும் வக்காலத்து வாங்குவது எந்த அடிப்படையில்? மனந்திருந்திய நிலையிலா? ஈழத்தமிழர்கள் மீது உண்மையான அக்கறை கொண்டதன்மையிலா?

ஜெயலலிதா பக்கத்தில் நின்றுகொண்டு கலைஞர்மீது கல்லெடுத்து எறிபவர்கள் அந்தரங்கச்சுத்தியுடன் ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டாமா?

ஒரு தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்காக மனிதாபி மானத்தோடு கலைஞர் அவர்கள் எழுதிய இரங்கல் கவி தைக்குக் கடும் எதிர்ப்பைக் காட்டியவர்தானே ஜெயலலிதா!

ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சித்தபோது முதலமைச்சர் என்ற முறையில் மிகவும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தவராயிற்றே ஜெயலலிதா.

மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பதும், நோய்க்கு வைத்தியம் செய்வதும் உலகம் ஒப்புக்கொண்ட மனிதாபிமானச் செயல்கள். அதைக்கூட ஈழத் தமிழர்கள் விஷயத்தில் காட்டத் தயாராக இல்லாத ஜெயலலிதாவை முன்னிறுத்தி ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதாகப் பேசுவதை விட ஏமாற்று வேலை, மோசடி வேலையை தவிர வேறு எதுவாகத்தானிருக்க முடியும்?

தமிழ் ஈழம் என்பதை உணர்ச்சியோடு, உணர்வோடு கலந்து உச்சரிக்கக் கூடியவர்கள் திராவிடரியக்கத்துக்காரர்கள்தான்.
எனவே திராவிடர் இயக்கத்தைப் பலகீனப்படுத்தி, அதன் மூலமாக லாபம் அடையலாம் என்று சொன்னால் அது கையிலே கிடைத்த முக்கியமான ஒன்றை தூக்கி எறியக்கூடிய சிறுபிள்ளைத்தனமான ஒரு முடிவாகத்தான் அது ஆகும்.

எனவேதான் இதிலே தொலைநோக்குப் பார்வை தேவை என்பதே என் தாழ்மையான கருத்து. 
                                                                          நன்றி தமிழ் 

14 comments:

  1. ஐயா சாமி யாருங்க நீங்க; நீங்க ஒரு கலைஞரோட பெரிய ஜிங்ஜாக் னு தெரியுது

    இதே போல நாங்க லிஸ்ட் பண்ணட்டுமா?

    இந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தது

    போர் நிறுத்தம் ஏற்படவில்லை என்றால் எங்கள் எம்பிக்கள் ராஜிநாம செய்வோம்னு சொல்லிட்டு தலையில முக்காடு போட்டது

    பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்று பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுத்து ஏறக்குறைய இலங்கையின் உளவாளி ரேஞ்சுக்கு செயல்பட்டது

    நடந்துட்டு இருக்கிற பிரச்சினையை விட்டுட்டு 1970லே என்று ஆரம்பித்து மக்களை திசை திருப்பியது

    மே 18 முதலாண்டு நினைவுநாள் அன்று அமைச்சர் துரைமுருகனுடன் சேர்ந்து
    அபிராமி மெகா மால் தியேட்டரில் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் திரையரங்கத்தை திறந்து வைடத்து படுத்துக்கொண்டே படம் பார்த்தது என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

    ReplyDelete
  2. மிக நேர்மையாக எழுதியிருக்கிறீர்கள்.. நிஜமான சமுக அக்கறையுடன் தங்கள் கட்டுரை அமைந்திருக்கிறது.. ஆனால் ஒருவன் தொ..தொ. ன்னு பேரு வலைபூவுக்கு....இந்தியாவின் அக்கிரமத்திற்கு மிக குருரமாக வக்கலாத்து வாங்கி எல்லோரது தலையிலும் தீயை வைத்திருக்கிறார். அவரது கட்டுரைக்கு உங்கள் கட்டுரை நேர்மையின் ஒர் வடிவம்.

    ReplyDelete
  3. //ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சித்தபோது முதலமைச்சர் என்ற முறையில் மிகவும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தவராயிற்றே ஜெயலலிதா.
    //
    பிரபாகரின் தாயார் சிகிச்சை விஷயத்தில் கருணாநிதி எப்படி நடந்து கொண்டார்?

    ReplyDelete
  4. சீமானின் போக்கு தமிழர்களுக்கு எதிரானது.
    இவர் பெரியாரைப் பயின்ற லட்சணம் இதுதானா...? என எண்ணும்போது மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. இவரைக்கண்டுதானா ராமகோபாலன்கள் தாவிக் குதித்ததுகள்? பாவம் அவாள் வெட்கப்பட்டிருப்பர்.

    இப்போது மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருப்பர். பெரியார் பார்வையிலிருந்து விலகி, இன உணர்வின்றி போன சீமான் போன்ற துரோகிகளை பார்ப்பனீயம் தாங்கிப்பிடிக்கும்.

    ஜெயா டி.வி என்ன...?
    R.S.S-காரன் வைத்தியநாதய்யரின் திணமணி தனது பொன்னான பக்கங்களை சீமான்களுக்காக ஒதுக்கும்.

    மொட்டையன் சோ ராமசாமி தனது துக்ளக்கில் எச்சரிக்கை பகுதியில் சீமானுக்காய் பரிந்து பேசுவான்.

    ஆனந்த விகடன் ஆலவட்டம் சுற்றும்.

    குமுதம் ரிப்போர்ட்டர் சக துரோகி என குதூகலிக்கும்.

    சீமானை "கிறிஸ்தவ சைமோன்" என்று தகிடுதத்தம் செய்த ராமகோபாலனய்யன் இப்போது சீமானை எதிர்த்து மூச்சு விடுவதில்லையே?
    இது ஒன்றே போதுமே...! தமிழினத் துரோகிகளை பார்ப்பனியம் எவ்வாறெல்லாம் தாங்கிப் பிடிக்கும்... எப்படியெல்லாம் கொம்பு சீவி விடும் என்பதற்கு உதாரணம்?

    ReplyDelete
  5. இன்னும் ஒரு கவுன்சிலர் பதவிக்கு கூட நின்று வெற்றிப்பெற்று மக்களுக்கு நீங்கள் சேவை செய்ய சரியானவர் என்று நிரூபிக்கவில்லை அதற்குள் ஆள்வதை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? கொள்ளையடிக்கவும், கூட்டம்சேர்க்கவும் ஈழத்தமிழனுக்காக குரல்கொடுத்த அந்த ஒருதகுதி போதும் என்று நினைத்துவிட்டீர்களா?
    for more pl visit,
    http://saigokulakrishna.blogspot.com/2010/12/blog-post_499.html

    ReplyDelete
  6. விளாசு விளாசுனு விலாசிருக்கிங்க...நீங்க போன வாரம் பாலிமர் சேனல் லில் சீமான் பேட்டி பார்த்திங்களா...இன்னும் உக்கிரம் ஆயருப்பிங்க...

    ReplyDelete
  7. வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

    பின்னூட்டங்களுக்கு காலம் பதில் அளிக்கும். அதுவரை...
    PLEASE WAIT

    ReplyDelete
  8. அய்யா சாந்தி பாபு நீங்கள் கருணாநிதியின் வளர்ப்பு தானே அப்படித்தான் எழுதுவீர்கள்
    உடன்பிறப்புகளிடம் எதை எதிர்பார்க்க முடியும் ? இன்னும் எந்த தேர்தலிலும் நிற்கவில்லை ஆனால் சீமானுக்கு இவ்வளவு எதிர்ப்பு திராவிட,தேசிய வியாதிகளிடம் இருந்து வருகிறது என்றால் நிச்சயம் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றே கருதலாம்.
    திராவிடம் என்று சொல்லி இனியும் ஏமாற்ற முடியாது.
    சீமானைக் கண்டு நீங்கள் அஞ்சவில்லை என்றால் அவரை ஏன் விமர்சிக்க வேண்டும்?
    ஏன் காங்கிரஸ் இன் முக்கிய தலைகள் பாராளுமன்றத் தேர்தலில் மண்ணை கவ்வ வேண்டும் சிதம்பரம் மட்டும் அழகிரியின் குண்டர் பலத்தை வைத்து மோசடி செய்து வெற்றி பெற வேண்டும் ?

    //நோய்க்கு வைத்தியம் செய்வதும் உலகம் ஒப்புக்கொண்ட மனிதாபிமானச் செயல்கள் //

    அது தானே பார்வதி அம்மாளை நடு இரவில் திருப்பி அனுப்பும்போதே கருணாநிதியின் மனிதாபிமானம் பல்லிளித்ததே
    //பொறுத்துக் கொள்ள முடியாமல் ஜெயா டி.வி. ரபி பெர்னார்டே நன்றி சீமான் எனச் சொல்லி பேட்டியை முடித்தது இன்னமும் நகைச்சுவையாக இருந்தது..//

    இதிலிருந்தே தெரியவில்லையா உங்களின் முட்டாள்தனம்! ரபி பெர்னார்ட் நேரம் முடிந்தவுடன் நன்றி சொன்னதை "பொறுத்துக் கொள்ளமுடியாமல் என்று எழுதும் போதே" !! ஏன் அவர் எல்லா பேட்டி முடிவிலும் அவ்வாறு தான் சட்டென்று முடிக்கிறார் ஆக எல்லாரிடமும் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான் முடிக்கிறாரா ?

    பதிவெழுதும் போது நடுநிலையோடு "சிந்தித்து" எழுத வேண்டும் அதை விட்டு உடன்பிறப்பாக வெண்டைக்காய்,விளக்கெண்ணை,கற்றாழை இவையெல்லாம் கலந்து கருணாநிதியின் பதில்கள் மாதிரி இருக்கக்கூடாது.

    இந்த சாய் கோகுல கிருஷ்ணா பெயரைப் பார்த்தாலே ஒரு தெலுங்கு வந்தேறி என்று தெரிகிறது.

    ReplyDelete
  9. seeman oru chinna paiyan adutha 10 year apparam ethai pesuvarooooooooooooooooooo.........

    ReplyDelete
  10. செந்திலான் மற்றும் பந்து அவர்களே, பார்வதி அம்மாள் இந்தியா வர முடியாமல் போனதற்கு காரணம் 2002 ம் ஆண்டு ஜெ. ஆட்சியின் பரிந்துரையின் படி அவரது பெயரை கறுப்பு பட்டியலில் சேர்த்தது தான். பார்வதி அம்மாள் இந்தியா வரகூடாது என்று கலைஞர் சொல்லவில்லை. ஆனால் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சைக்காக இந்தியா வரக்கூடாது என்று எல்லா தடைகளையும் மத்திய அரசு மூலம் செயல்படுத்தியவர் ஜெ.

    ReplyDelete
  11. ஈழத் தமிழர்களுக்கு டாக்டர் கயவர் துரோகி. புரட்டுக் கிழவி எதிரி. கோட்டான் ஒரு மிருகம்.

    கருனானிதியை எதிர்க்கும் எவரும் ஜெயலலிதாவிடம் எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது. சீமான் விஜய்யை வைத்து படும் எடுப்பதில் இருந்து முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை போடுவது வரை முரண்பாடாகத்தான் செயல்படுகிறார்.

    இவர் முன்னெடுத்து காங்கிரசை தமிழகத்திலிருந்து கருவறுக்கலாம் என்ற நம்பிக்கை இல்லை.

    ஜெயலலிதாவுடன் சமரசம் என்பது சோனியாவை எதிர்க்க ராஜபக்ஷேவுடன் கூட்டு வைப்பது போலாகும்.

    கோபால்சாமி 'கைப்புள்ள' ஆனாபோது உண்டான வருத்தமே இப்போதும். எத்தனையோ வேதனைகளைத் தாண்டி, தாங்கி நிற்கிறோம். இதையும் அதேபோல் எதிர்கொள்வோம். காலம் தனக்கான தலைமையை உருவாக்கும்.

    ---------------------
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் - ஜன '2011)

    ReplyDelete
  12. மண்ணுக்காக, மக்களுக்காக சினிமாவில் இருந்து எழும் ஒரு கலகக் குரல் இயக்குநர் சீமானுடையது. அதிர வைக்கும் வசனங்கள், கோபாவேசமான காட்சிகள் என இவர் இயக்கிய தம்பி படம், பார்க்க வந்தவர்களை முறுக்கேற்றி அனுப்பியது ஆனால் சீமான் அவர்களின் ஈழ ஆதரவு, அரசியல் பிரவேசம், ஆக்ரோசப் பேச்செல்லாம் பார்க்கும்போது, புத்தருக்கு போதி மரத்தடியில் கிடைத்ததுபோல் இவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு ஞானோதயம் கிடைத்தது போல் தெரிகிறது. கலைஞரைத் திட்டினால் பிரபலமாகலாம் எனத் திட்டிக் கொண்டிருக்கிறார் எனத்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்… அவரது பேட்டியை ஜெயா டிவி நேர்முகம் நிகழ்ச்சியில் காணும்வரை.

    # சீமான் மேல உபிக்கு ரொம்பவே பாசம் போல??! யோவ்.

    உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை., உன்ன யாரு கேட்டா.? நீ சீமான திட்டி பிரபலமாக போறீயா??

    ReplyDelete
  13. செந்திலான், ஒரு வெளி நாட்டவர் இந்தியாவிற்குள் வருவதற்கான தடை (கறுப்பு பட்டியல்) விதிப்பது மத்திய அரசு. விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் (Immigration officers) அந்த கறுப்பு பட்டியல் பார்த்து அதில் பெயர் இருப்பவரை விமான நிலையத்தில் வைத்திருந்து நாட்டிற்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி விடுவர். அதற்கும் மானில அரசுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் மானில அரசு வேண்டுகோள் படி, கறுப்பு பட்டியலில் பெயர் சேர்ப்பார்கள். பார்வதி அம்மாளை 2002-ல் ஜெ. அரசு கேட்டுக்கொண்டதன் படி இந்தியாவிற்குள் நுழையவிடாமல் செய்யப்பட்டது. எனவே அந்த
    "புண்ணியமும்" ஜெ.வைத்தான் சேரும். பதிவு செய்யும்போது நாகரீகமாக கருத்தை சொல்லுங்கள். முட்டாள் தனம் என்ற வார்த்தை பிரயோகம் தவிர்க்கப்படவேண்டியது.

    ReplyDelete
  14. கலைஞரின் உண்ணாவிரதத்தை சில மணி நேர உண்ணாவிரதம் என்றெலலம் கொச்சை படுத்தும் அன்பர்கள், இலங்கை தமிழருக்கு எதிரான போரை நிறுத்தும்படி உண்மையிலேயே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தங்கள் உண்மையான அக்கறையை நிரூபித்து இருக்கலாமே.

    ReplyDelete