தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும்.
ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக, தானே முயன்று உருவாக்கிய மொழியே தமிழ்.
ஒரு இனம் தன்னுடைய வரலாறு பற்றி மிகத் தெளிவான விளக்கத்தை தன்னகத்தே கொண்டிருப்பதென்பது அதனது மிகப் பெரிய பலம் என்றுதான் கூறவேண்டும். தனது இனத்தின் வரலாறு, வரலாற்றுச் சம்பவங்கள், அந்தச் சம்பவங்களுக்கான ஆதாரங்கள், பற்றிய அறிவையும் தெளிவையும் ஒரு இனம் நிச்சயம் கொண்டிருக்கவேண்டும். உலகத்தால் அங்கீகரிக்கப்படுவதற்கு இந்த அறிவும் தெளிவும் மிக மிக அவசியம்.
யூதர்களுக்கு இனது இனத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றிய அறிவும் தெளிவும் மிக அதிகமாகவே இருக்கின்றது. தமது இனத்தின் வலாறு பற்றிய அறிவு இல்லாத யூதர்களே இல்லை என்று கூறலாம். யூதக் குழந்தைகள் கூட தமது இனம் பற்றி, தமது மொழி பற்றி, தமது மதம் பற்றி மிக மிக விரிவான அறிவைத் தமதாகக் கெண்டவர்களாக இருக்கின்றார்கள். தமது சந்ததி என்ன? 3000, 4000 வருடங்களுக்கு முன்னர் தமது இனத்தை ஆண்ட அரசர்கள் யார், அவர்களது சந்தியினர் யார் என்ற வரலாறு ஆதாரங்களுடன் யூதர்கள் கரங்களில் இருக்கின்றது.
ஈழத் தமிழரைப் பொறுத்தவரையில் எம்மிடம் - எம்மில் பலரிடம் இருக்கின்ற ஒரு மிகப் பெரிய குறை இதுதான்.
தமிழின் வரலாறு எமக்கு தெரியாது. ஆரியர்களுடைய வரலாற்றைத்தான், அவர்கள் புனைந்த கதைகளைத்தான் நாம் தமிழின வரலாறாக கூறிக்கொண்டிருக்கின்றோம்.
ஒரு தமிழ் அரசன் ஆரியர்களால் அழிக்கப்பட்ட தினத்தை ஆரியர்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த கொண்டாட்டத்தை விளக்கம் தெரியாமல் நாமும் கொண்டாடுகின்றோம்- தீபாவளியென்று. (முள்ளிவாய்க்காலில் சிங்களவர்கள் பெற்ற வெற்றியை எதிர்காலத்தில் சிங்களவர்களுடன் சேர்ந்து எமது சந்ததிகள் கொண்டாடுவதைப் போன்றதுதான் இது)
தமிழர்களின் வரலாறு பற்றிய அறிவை நாம் கொண்டிருக்கவேண்டும்.
தொல்காப்பியம் பற்றியும் அதன் உள்ளடக்கம் பற்றியும் நாம் தெரிந்திருக்கவேண்டும். ஆத்திசூடி எங்களில் எத்தனை பேருக்கும் தெரியும்?
எமது இனத்தின் பெருமைகள் பற்றி ஒவ்வொருவரும் அடிக்கடி பேசிக்கொள்ளவேண்டும். எமது அடுத்த சந்ததிக்கு கூறி வைக்கவேண்டும்.
ஒரு இனம் விடுதலையை நோக்கிப் பயணிக்க வேண்டுமானால், அந்த இனத்திற்கான உலக அங்கீகாரம் மிக மிக அவசியம்.
புலிகளைப் பிளவுபடுத்த முடிந்த காரணத்தாலேயே அவர்களுடனான யுத்தத்தில் அரசாங்கம் வெற்றியீட்ட முடிந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவிக்கின்றார்.
இந்நாட்டில் பதவிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் புலிகளைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்ததாகவும், அவ்வாறாக புலிகளைப் பிளவுபடுத்தும் நோக்கிலேயே தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் புலிகளுக்கு ஆயுதம் வழங்கப்பட்டதாகவும் அவர் ஒப்புக் கொள்கின்றார்.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவினால் செய்து கொள்ளப்பட்ட போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட புலிகளைப் பிளவுபடுத்தும் நோக்குடனேயே செய்து கொள்ளப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.
மேலும் ஜே. ஆர். ஜயவர்தன, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அரசாங்கங்களும் புலிகளைப் பிளவுபடுத்தும் வேலைத் திட்டங்களை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
அவ்வாறான பிளவுபடுத்தல் நடவடிக்கை வெற்றியடைந்ததன் காரணமாகவே புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா ஒரு கட்டத்தில் அரசாங்கத்துடன் இணங்கிப் போகும் நிலைப்பாட்டுக்கு மாற்றமடைந்ததாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார். யோகியும் அதற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
ஆயினும் புலிகளைப் பிளவுபடுத்துவதில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமே வெற்றி கண்டதாகவும், அதன் காரணமாகவே யுத்தத்தில் வெற்றியை ஈட்ட முடிந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அத்துடன் எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்களை அரவணைப்பதாயின் அதனை வெகு அவதானத்துடன் செய்ய வேண்டுமெனக் குறிப்பிடும் அவர், புலிகளுக்கு ஆதரவான தமிழ் மக்களை எக்காரணம் கொண்டும் அரவணைக்க முற்படக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றார்.
இதற்கு முக்கிய காரணம் நம் வரலாறு எமக்கு தெரியாது என்பதுதான்.
I am posting these comments not to hurt, but if it did, my advance apologizes....
ReplyDeleteI always wanted to ask this question to an LTTE sympathizer...
If you people are truly cared about Tamil Eelam why do not you directly go to Sri Lanka and fight for Tamilans there.....in stead you are supporting the terrorists by means of financial and moral support to cause more trouble to Tamilian's life there....
I bet Sri Lankan Tamils who well settled and prosper in Western countries will never return to their "so-called" Eelam because these people will never give up prosperous and wealthy life that they are enjoying in Western countries....
In stead of making noises, true Tamil sympathizers can donate all their assets to Tamilans and go to Lanka with their families and can fight for Tamil cause there...
I 'm asking from the bottom of my heart will you ever send your son or daughter or your brother or sister or your husband or wife to the war zone or as a suicide bomber….. Please think about the Tamilans who lost their loved ones in the LTTE war. Tamils in Sri Lanka really need peace at this time if you can’t support for the peace at least do not escalate the ethnic tension….
Before we support abroad Tamilans, let us try to clean our mess in our Tamil nadu….Untouchability prevails highly in Tamil society….we do not allow our own fellow Tamilians into our home because he is from low caste….(we have and we are) we murder and torch many of our own Tamilians simply because they are low caste…..
I am extremely very sorry if my words hurt you....i really respect you only we have different views.....
@thangamani...
ReplyDeletei oppose the use of word "terrorist" against LTTE. they are extremists. Suppose if LTTE has victored in the war and if Eezham has been formed, they will be called governmenta forces, army, etc. Even US called Fidel Castro as terrorists before overthrowing dictatorship in Cuba. It is the will of people either to fight or to support or to stay away. Why dont you ask the same question to those who join the Indian Army? Both are services to the nation. One is established, but another not. that's the difference.
Peace cannot be bought at the price of Self respect. It is not that I support suicide bombers but that I cant understand your point of view for not supporting Lankan Tamils.