சமுக உறவில் தேடுங்கள்

Loading

Tuesday, December 7, 2010

நல்லாவே வாசிகிக்ரானுங்க...நான் சொல்லும் வாசிப்பு நல்ல புத்தகங்களுக்கானது மட்டும்தான் நண்பர்களே.
இந்த மனித இனம் பல்வேறு காலகட்டங்களில் வாசிப்பினால் தான் முழுமை அடைந்து இருக்கிறது, புரட்சிகளை நோக்கி சென்றிருக்கிறது. இன்னும் புதிய புதிய கோணங்களை, வாழ்க்கையின் புரியாத புதிர்களை, விடுவித்திருக்கிறது. வாசிப்பு என்று வரும்போது எழுதும் மனிதரைப் பொருத்தும், அவர் கூறும் கருத்துக்களைக் கொண்டும் அது புரிந்து கொள்ளப்படுகிறது. ஒரு அரசியல் கட்டுரை எழுதும் எழுத்தாளரின் காதல் கவிதை என்னவோ எவ்வளவு அழகாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை அல்லது வெற்றியடைவதில்லை. ஒரு வெற்றியடைந்த ஆணுக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாளோ இல்லையோ, பல புத்தகங்கள் இருக்கும் என்பது மட்டும் உண்மை.இந்தத் தலைப்பை நான் எடுத்துக் கொண்டதன் காரணமே, இன்று தொலைக்காட்சியின் வரவுக்குப் பின்னால், பொருள் சார்ந்த வாழ்க்கை ஓட்டத்தில் நமது இளைஞர்கள் வாசிப்பு அனுபவத்தை இழந்து கொண்டிருக்கிறார்களோ என்ற ஒரு பயம் எனக்கு வந்ததன் விளைவு.
பல்வேறு காலகட்டங்களில் நான் சந்தித்த வெற்றியடைந்த மனிதர்கள் அனைவருமே நல்ல வாசிப்பு அனுபவம் நிறைந்தவர்களாகவும், வாசிப்பதை ஒரு தவிர்க்க முடியாத தங்கள் வாழ்வியல் முறையாகவும் பின்பற்றி இருக்கிறார்கள், இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளரராகவோ, கவிஞராகவோ இருக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு சிறந்த வாசிப்பு அனுபவம் மிக்கவராகவே இருக்க வேண்டும்.
வாசிப்பின் வகைகள்.

 வாசிப்பில் இரண்டு வகை இருக்கிறது, ஒன்று மேல்போக்கான வாசிப்பு, இரண்டு ஆழ்ந்த அறிவு சார்ந்த வாசிப்பு. எடுத்துக்காட்டாக ஒரு பயணத்தின் போது நீங்கள் வாரப் பத்திரிக்கை வாசிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அது மேல்போக்கான வாசிப்பு, அந்தத் தருணத்தில் உங்கள் சிந்தனையில் இருக்கும் சில தற்கால நடப்புகள் குறித்த ஒரு குறுகிய வாசிப்பு. (சில நேரங்களில் இப்படியான வாசிப்புகளில் கூட ஆழ்ந்த அறிவு சார்ந்த வாசிப்புகளுக்கான அடித்தளம் அமையக் கூடும்).இரண்டாவது நிலை, இது தான் பல்வேறு தனி மனிதர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, பல்வேறு சமூகங்களின் வாழ்க்கை நிலையையும் மாற்றிப் போட்ட வாசிப்பு நிலை, இலக்கியங்கள், வாழ்க்கை வரலாறுகள், அரசியல் சார்ந்த கட்டுரைகள், மதங்களைத் தழுவிய பதிப்புகள், இன்னும் ஆய்வுக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், கவிதைத் தொகுப்புகள். இவற்றை நாம் வாசிக்கும் போது ஏற்படுகின்ற ஒரு மனவெளியின் கற்பனைப் பயணமும், அதன் பயனும் மிக அழகானது.
ஆகவே, வாசிப்பு என்கின்ற ஒரு அழகான, பயன்கள் மிகுந்த பழக்கத்தை நாமும், நம் இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தொடர்ந்து அதன் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். அப்போது தொலைக்காட்சி என்னும் கலாச்சார அரக்கனின் முன்னால் நம் பிள்ளைகள் மன அடிமைகளாய், மொழி இன உணர்வின்றிக் கவிழ்ந்து கிடக்கும் இழிநிலை மாறும்.
அடுத்து எழுத்தாளர்களின் கடமை, இது ஏதோ கொஞ்சம் அதிகப் பிரசங்கித் தனமாய் இருந்தாலும், அவர்களின் கடமைகளை, சமூகப் பங்களிப்பைச் சுட்டிக் காட்டும் கடமை நமக்கும் இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். இன்றைய எழுத்தாளர்கள் அனைவருக்குமே இது பொருந்தும்.
எழுத்தாளர்களே, கவிஞர்களே நீங்கள் உங்கள் பேனாவை எடுப்பதற்கு முன்னால், உங்கள் கண் முன்னால், ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையின் சிந்தனையும், அந்தத் சிந்தனையின் ஆழத்தில் உங்கள் எழுத்து ஏற்படுத்தும் தாக்கத்தையும், உணர்ந்து தொடங்க வேண்டும்.
எழுத்து எனக்குக் கைகூடுகிறது என்பதற்காக நான் என் மனதில் பட்டதை எழுதுவேன், சுய லாபம் அடைவேன் என்று எழுதுவது ஒரு வகை, உள்ளார்ந்த தனி மனிதக் கருத்துக்களை என் எழுத்துக்கள் மூலம் திரித்துப் பரப்புவேன் என்பது ஒரு வகை, நான் சார்ந்து இருக்கும் அமைப்பை, இயக்கத்தை முன்னிறுத்தி அதன் கருத்துக்களை பரப்பும் ஒரு ஒளிபரப்பு சேவையாக எழுதுவது மற்றும் மனித உணர்ச்சிகளை கிளறிவிட்டு அதன் மெல்லிய ஓசைகளில் தாவி அமர்ந்து கோலோச்சுவது இன்னொரு வகை.
இவை எல்லாவற்றையும் தாண்டி எழுத்தை, ஒரு மொழியின், இனத்தின் முகவரியாக ஏற்றுக்கொண்டு அதன் சாயலில் பொங்கி வரும் இயற்கை அருவி போல எழுதுவது என்பதும். எழுத்தை ஒரு தவம் போல செய்வது என்பதும் ஒரு முழுமை பெற்ற எழுத்தாளனின் அடையாளங்கள் என்று நான் கருதுகிறேன். தான் எழுதுகின்ற எழுத்துக்களில், தான் கடைப்பிடிக்கும் சமூக அக்கறை என்பது ஒரு எழுத்தாளனின் அடிப்படைக் கடமை. அதற்கு மாறாக, ஆதாரமற்ற திரிபு வாதங்கள், அடையாளம் தேடுகின்ற தற்குறிகள், மொழிக்கு எதிரான கருப்பு ஆடுகள் ( இப்படியே எழுதலாமே என்று மொழியைச் சிதைப்பது) இவை எல்லாவற்றையும் கடந்து நாம் எழுத்தாளனைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அதற்கான வாசிப்புத் தேடல் நிறையத் தேவைப்படும். வாழும் காலகட்டத்தில் வாசிப்பில் தேடப்பட்டு, இந்தத் தடைகளை எல்லாம் தாண்டி உங்கள் எழுத்து வரும்போது தான், நீங்கள் காலம் கடந்த எழுத்தாளனாய் கரை கடக்கிறீர்கள்.

எழுத்தாளர்களே, கவிஞர்களே நீங்கள் உங்கள் பேனாவை எடுப்பதற்கு முன்னால், உங்கள் கண் முன்னால், ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையின் சிந்தனையும், அந்தத் சிந்தனையின் ஆழத்தில் உங்கள் எழுத்து ஏற்படுத்தும் தாக்கத்தையும், உணர்ந்து தொடங்க வேண்டும்.
தமிழும், தமிழினமும் உங்களால் தழைக்க வேண்டுமே ஒழிய, ஒருபோதும் தடம் மாறக் கூடாது.
                             நன்றி -திரு செ.வேல்முருகன்

6 comments:

 1. போடா நீயும் உன்னோட ப்லோகும் .... நீ என்ன பெரிய நிகோச்தயுவ ......?

  ReplyDelete
 2. அப்படி நீ என்ன புத்தகம் எழுதி கிளிச்சுட்டே ...?

  ReplyDelete
 3. சுமாவின் எழுதுகோலுக்கு தலை வணங்குகிறேன்

  ReplyDelete
 4. அருமை பாராட்டுக்கள்

  ReplyDelete
 5. அருமை பாராட்டுக்கள்

  ReplyDelete