தொகுப்புகள்

Search This Blog

Wednesday, December 15, 2010

துவேசத்தை விதைகும் சீ சீமான்


உண்மையாகச் சொன்னால் இந்தக் கட்டுரையை எழுதும் தெம்பும் திராணியும் எனக்கில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த வாரம் எழுதலாம்…… இல்லையில்லை அடுத்த வாரம் எழுதலாம் என்று ஒவ்வொரு வாரமும் தள்ளிப் போட்டுக் கொண்டே போன கட்டுரைதான் இது.

அதுவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து கொண்டிருக்கும் தமிழி ஈழ துயரத்தை ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியுமா என்ன?

இது வரையிலும் இதுபற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள்…..
ஆயிரக்கணக்கான கட்டுரைகள்……
மரியாதைக்குரிய நீதிபதிகளது உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள்…
இதோ ..
தமிழக இளைஞர்களே ...

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று"

என்பது வள்ளுவன் குறள் ஆனால் சமீப காலங்களாக ஊருக்கு ஊர் மேடை போட்டு தமிழக முதல்வரையும் மத்திய அரசையும் , தேசிய ஒருமைபடையும் வன் சொற்களால் வசைபாடியும் திரையுலக நடிகர்களையும் மிரட்டி வருகிறார் ஒருவர் . அவரை நீங்கள் அடையாளம் கண்டு கொள்ளுங்கள் . வாய்சவடால் வீரரான அவர் ஒரு பேட்டியில் என்னுடன் சிறையில் இருந்த கைதி ஒருவன் "மலையாளியையோ கன்னடத்தானயோ கொலை செயவில்லை சக தமிழனை கொன்றான் என்றார், அப்படியானால் இவருடைய எஜமானர்களாகிய "விடுதலை புலிகள்" செய்த வரலாற்றை பின்னோக்கி சற்று 


சிறி சபாரத்தினம் யார் ?
1986 மே 6ம் தேதி, ஈழ விடுதலயை வைத்திருந்த அந்த இதயம் தோட்டக்களால் சுக்குநூறாக சிதறடிக்கபட்டது, ஒன்றல்ல இரண்டல்ல, எதிரில் நிராயுதாபாணியாக நின்ற அந்த போராளியின் உடலை 20க்கும் அதிகமான குண்டுகள் சல்லடையாக்கின, சுட்டது எதிர்த்த சிங்களவன் அல்ல , தன் ரத்தம் பகிர்ந்த சகோதரன்.என்ன தவறு செய்திருந்தாலும் சபாவுக்கு இந்த தண்டனை அதிகம், அதற்க்கு என்ன காரணம், எந்த தரப்பில் இருந்து சொல்லபட்டாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.அன்று சரிந்து விழுந்தது சபாவின் சடலம் மட்டுமல்ல, ஈழம் என்கிற ஒரு தேசத்தின் நம்பிக்கை.

நடராஜன் தங்கதுரை மற்றும் யோகசந்திரன்(குட்டிமணி) என்பவரால் உருவாக்கபட்ட ஒரு சிறு குழு தான் பின்னாளில் தமிழிழ விடுதலை இயக்கமாக(டெலொ) மாறியது.அப்பொழுது அவர்களுடன் களத்தில் தளபதியாக செயல்பட்டவர் சிறி சபாரத்தினம். இந்தியாவிற்க்கு தப்ப முயன்ற தலைவர்கள் இருவரும் இலங்கை ராணுவத்தால் கைது செய்யபட, இடைக்கால தலைவராக பொறுப்பேற்று இயகத்தை வழி நடத்தினார் சபா. குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில் கொடுராமக கொலை செய்யபட, டெலோவின் தலைவரானார் சிறி சபாரத்தினம்.


தலைவர் என்று ஆணையிடுபவரல்ல சபா, களத்தில் இறங்கி போராடுபவர்.இன்றும் சபாவை அப்படி தான் ஈழ தமிழர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும் நினைவு கூறுகின்றனர்.ஈழ விடுதலை இயக்கங்களும் அனைத்தும் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்க, இந்திராவும் போராளி இயக்கங்களுக்கு தாரளமாகவே உதவியளித்தார்.

டெலோ, இராஸ்,விடுதலை புலிகள் என பல இயக்கங்களாக சிதறிகிடந்தவற்றை ஒன்றாக இணைத்து ENLF ஆக உருவாக்கபட்டது.அனைத்து போராளிகளும் ஒன்றாக இணைந்து தனி ஈழத்திற்க்காக் போராடுவது என உறுதி செய்யபட்டது.

தங்களின் தொப்புள் கொடியான தமிழகத்தின் அரசியல்வாதிகள், ஈழ பிரச்ச்னையை அரசியலாக்க முயலுகிறார்கள் என்ற ஒரு சிறு விஷ்யம் தெரியாமல், புலிகளும் ,மற்ற இயக்கங்களும் பிரிந்தனர். எம்ஜிஆர் புலிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய, கலைஞர் டேலொவிர்க்கு தன் ஆதரவை தெரிவித்திருந்தார். சபா, கலைஞரின் அன்பிற்க்குரியவரானார். கலைஞர் திரைக்கதை எழுதிய ‘பாலைவன் ரோஜாக்கள்’ படத்தில் கதநாயகனின் பெயர் சபாரத்தினம்.

இந்திய உளவுத்துறை போராளி இயக்கங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து அவர்களுக்கு வியுகங்களையும் அமைத்து கொடுக்க, இதனை ஏற்க புலிகள் தயங்கினர். இந்தியா தன் சுயலாபத்திற்க்கு ஈழ போராளிகளை பயன்படுத்துகிறதென முடிவு செய்த்னார், ஆனால் இந்தியாவின் உளவுத்துறையின் வாக்கை வேத வாக்காக் மற்ற இயக்கங்கள் எடுத்து கொள்வதாக் கோபப்பட்டனர்.

தனி ஈழத்தை குறிக்கோலாக கொண்டு மற்ற இயக்கங்கள் இந்தியாவின் உதவியுடன் செயல்பட்டுக்கொண்டிருந்தன, அவர்களுக்கு தேவை தனி ஈழம்.

இயக்கத்துனுள் கருத்து வேறுபாடுகள் முற்றின,எந்த இயக்கம் பெரியது என்ற மிக மோசமான ஃமாபியா அரசியல் ஈழ விடுதலை இயக்கத்தினுள் புகுந்தது. பரஸ்பரம் சில நபர்கள் கொலை செய்ய்பட்டனர், அந்த கொலைகள் மற்ற இயக்க்ங்கள் தான் செய்கின்றன என தமக்குள் சந்தேக பட தொடங்கினர்.

அந்த வழியில், புலிகள் இயக்கதிற்கு உயிர் சேதமும், தனி ஈழம் என்ற லட்சியத்தில் விரிசல் இருபதாக புலிகள் மற்ற இயக்கங்களை சந்தேக பாட தொடங்கியது, அவர்கள் ஒரு படி மேலே போய் சில கொலைகளுக்கான காரணத்தை ஆராயமால் ‘துரோகி’ பட்டத்தை சபாவிர்க்கு கொடுத்தனர்.

‘துரோகி’ என்ற வார்த்தை வந்துவிட்டால் விடுதலை புலிகள் அதற்கு ஒரே தண்டனையாக வைத்திருத்து மரணத்தை.

சபாவிற்க்கு டார்கெட் வைக்கபட்டது. அப்பொழுது சபாவிற்க்கு யாரும் அடைக்கலம் தர கூடதெனவும், சபாவை உடனடியாக் பிடித்து கொடுக்குமாறும் மக்களுக்கு விடுதலை புலிகள் ஆணையிட்டனர்.சபா என்ன செய்வதறியாமல் மறைந்து வாழ்ந்து வந்தார்.

தமிழகத்தில் அப்பொழுது நடைபெற்ற டெசோ மாநாட்டின் போது, சபாவின் உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்த கலைஞர், விடுதலை புலிகள் இயக்கத்திடம் தன் சார்பில் சபாவை ஒன்றும் செய்ய வேண்டாம் என கோரினார், புலிகளும் அதற்க்கு செவி சாய்த்தனர்.சபாவின் உயிருக்கு தங்களால் ஆபத்து வராது என உறுதியளித்தனர்.


கஞ்சா காடு ஒன்றில் சமாதானத்திர்க்கு வந்த சபாரத்தினத்தை புலிகள் இயக்கத்தை சேர்ந்த கிட்டு, மண்டியிட்ட சபாரத்தினம் எவ்வளவும் கெஞ்சியும் அவருக்கு மரணத்தை பரிசாகளித்தார். போராளி என ஆனபோதே சபாவின் மரணம் உறுதியானது தான் என்ன தன் சகோதரனால் கொல்லபட்டார்.


உமா மகேஸ்வரன் யார்? 

காதல் என குற்றஞ்சாட்டப்பட்டதால், விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு உமா மகேஸ்வரன்வெளியேறினார். பிரபாகரன் காதல் விவகாரம் தொடர்பில் உமாமகேஸ்வரனிடம் கேள்விஎழுப்பினார். "எங்களுக்குள்எந்தக் காதலும் இல்லை'' என்று மறுத்தார், உமா மகேஸ்வரன். "ஆதாரம் இல்லாமல் நான் குற்றம் சாட்டமாட்டேன். நாம்பிரிவதற்கான நேரம் வந்துவிட்டது. நீ ஊர்மிளாவை மணந்து கொள்வதில் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.ஆனால் இயக்கத்தில் இருந்து வெளியேறிவிடு. தவறான முன்னுதாரணம் எங்களுக்குத் தேவை இல்லை'' என்றுபிரபாகரன் கண்டிப்புடன் கூறினார்.
உமா மகேஸ்வரனை இயக்கத்தில் இணைத்து அவருக்குத் தலைவர் பதவியை அளித்து மகிழ்ந்தவரும் அவரே.ஊர்மிளாவை இயக்கத்திற்கு கொண்டு வந்தவர் உமா மகேஸ்வரன். இயக்கத்தில் சேருவதற்கு முன்பே இருவருக்கும்இடையே நெருக்கம் இருந்து இருக்கிறது. காதல், `செக்ஸ்' கூடாது என்ற இயக்கத்தின் கொள்கையை உமா மீறிவிட்டதாகபிரபாகரன் கருதினார்.
"ஒரு புரட்சி இயக்கத்தின் தலைவன், அதன் ஒழுக்க நெறிகளில் முழுமையான நம்பிக்கையும், அர்ப்பணிப்பும்உள்ளவனாக இருக்க வேண்டும்; தலைவனே விதிகளை மீறினால் அந்த இயக்கம் அழிந்துவிடும்'' என்பது பிரபாகரனின்அன்றைய எண்ணம். இதனால் அவர் பிடிவாதமாக இருந்தார். உமா மகேஸ்வரனோ ராஜினாமா செய்ய மறுத்தார்.
சிறிது காலத்திற்கு முன்பு, விடுதலைப்புலிகளின் தலைவராக உமா மகேஸ்வரனை உலக நாடுகளில் உள்ள போராளிப்பிரதிநிதிகளிடம் அறிமுகம் செய்து வைத்த லண்டன் பிரதிநிதிகள், இந்த மோதலை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் சார்பாக கிருஷ்ணனும், ராமச்சந்திரனும் சென்னைக்கு வந்து பிரபாகரனைச் சந்தித்தனர். "உமா மகேஸ்வரன்பெரிய தவறு எதுவும் செய்யவில்லை. காதல்தானே! விட்டு விடுங்கள்'' என்று அவர்கள் பிரபாகரனிடம் பரிந்துரைசெய்தனர்.

தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு(`பிளாட்') என்று பெயர். 1982-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி உமா மகேஸ்வரனின் வலதுகரமாகவும், "புதிய பாதை''என்ற இதழை நடத்தி வந்தவருமான சுந்தரம் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
"புதிய பாதை'' பத்திரிகையில் விடுதலைப்புலிகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சுந்தரம் கடுமையாகவிமர்சனம் செய்து வந்தார். அச்சகத்துக்குள் இருந்த சுந்தரத்தை ஜன்னல் வழியாக சீலன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். ஊர்மிளா விவகாரம் பூதாகரமாக கிளம்பியபோது, விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைக்கடத்தி ஒளித்துவைத்தது, இந்த சுந்தரம்தான். இந்தக் கொலைக்கு விடுதலைப்புலிகள் பொறுப்பேற்றனர். பிரபாகரனைப் பழிவாங்க உமாமகேஸ்வரன் தமிழ்நாட்டுக்குத் தப்ப முடிவு செய்தார். கண்ணன், காக்கா, ஆண்டன், தாசன் ஆகியோருடன் பிப்ரவரி25-ந்தேதி படகில் ஏறி தமிழகம் வந்தார். படகில் திரும்பிய ஆண்டனை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்அளித்த தகவலின் பேரில் வவுனியாவில் இருந்த "பிளாட்'' முகாமை ராணுவம் தாக்கியது. அதில் இருந்த ஆயுதங்கள்பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை வந்து சேர்ந்த உமா மகேஸ்வரன், சென்னையில் தமிழ் அறிஞர் பெருஞ்சித்திரனார் இல்லத்தில் தங்கிஇருந்தார். சுந்தரத்தின் கொலைக்கு, பிரபாகரனை பழிவாங்கக் காத்திருந்தார். உமா மகேஸ்வரனை தீர்த்துக்கட்டபிரபாகரனும் சமயம் பார்த்திருந்தார்.
சென்னை பாண்டி பஜாரில் உமா மகேஸ்வரனை, பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டார். ஆனால், உமா மகேஸ்வரன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.

யார் இந்த தோழர் க.பத்மநாபா ?

பாசிசத்திற்கெதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும், இந்தியாவின் நண்பனாக, சர்வதேச முற்போக்கு விடுதலை இயக்கங்களின் உற்ற தோழனாக, அமைதி, சமாதானம், ஜனநாயகத்தை ஏற்படுத்த உறுதியோடு போராடிய போராளி.
மார்க்சிய, லெனினிய சித்தாந்தத்தில் அதிக ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்டிருந்தார். இடது சாரிகளின் ஐக்கியத்தை வலியுறுத்தினார். இலங்கையிலும், இந்தியாவிலும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இயங்கிய பல்வேறு இடதுசாரி தலைவர்களோடும், நெருங்கியத் தொடர்பினை வைத்திருந்தார். சிங்கள முற்போக்கு சக்திகள் மத்தியிலும் நன்மதிப்பைப் பெற்றதுடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஐக்கியத்திற்கும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பேணுவதிலும் சகல முற்போக்கு சக்திகளோலோடும் இணைந்து நின்று செயலாற்றினார். 
ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் பிரதானமானவர். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனர். அதன் முதல் பொதுச் செயலாளர். 1951 நவம்பர் 19ல் பிறந்த இவர் தனது 39 வருடகால வாழ்நாளில் 20 வருடங்கள் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், அப்போராட்டத்தின் வழி நின்று இலங்கையின் ஒற்றுமைக்கும், அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின், தொழிலாளர்கள், விவசாயிகளின் பூரண விடுதலைக்காகவும் அயராது இறுதிவரைப் போராடியவர்.

சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளுக்கு எதிரான போராட்டம் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்தபோது, ஆயுதத்தின் மீது காதல் கொள்ளாமல், ஒரு தற்காப்பு கருவியாகவே பயன்படுத்தவேண்டும் என்று தனது இயக்கத்தினருக்கு வழி காட்டினார்.

தமிழ் போராளி இயக்கங்களிடையே ஒற்றுமையின்மை தலைதூக்கியபோதெல்லாம், அதை வேரூன்றவிடாமல் ஒற்றுமைக்காக கடுமையாகப் போராடினார். 

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம், பிளாட் இயக்கத் தலைவர் பாலகுமார் மற்றும் மிதவாத இயக்கத்தலைவர்கள் அமிர்தலிங்கம் போன்றோரை சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஒற்றுமைப்படுத்தும் நடவடிக்கையில் சளைப்பில்லாமல் ஈடுப்பட்டார். 

ஆனால் பாசிச குணம் கொண்டு, தான் மட்டுமே தமிழர்களின் ஏகப்பிரதிநிதி என ஆயுத பலத்தின் வன்மையால், சகோதரப்படுகொலைகளை நிகழ்த்தி, மேலே சொன்ன தலைவர்களை கொன்றொழித்தது பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகள் இயக்கம். 1990 ஜூன் 19-இல் சென்னையில் இயக்கத் தலைவர்களுடன் உரிமைப் போராட்டத்திற்கான திட்டம் வகுக்க உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பாசிச புலிகளால் தோழர்.பத்மனாபாவையும் உடனிருந்த 13 தோழர்களையும் கோழைத்தனமாக கொலை செய்தனர் புலிகள்.


இவர்கள் தமிழ்கள் இல்லையா ?


இன்று ஈழவிடுதலை பற்றி பேசுகின்ற அவர் அதற்காக ஒரு சிறு துருபை கிள்ளி போடதுண்டா?
கலைஞர் எதிர் கட்சித்தலைவராக இருந்தும் கூட எம்.ஜி.ஆர் ஆட்சியில் இவருடைய ஒரு மித்த கருத்தில் ஈழவிடுதலைத் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றபட்டது. அதன் பின் ஈழபோரளிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் கலைஞர் முன்னின்று செய்தார்.
ஆறு போராளிகள் இயக்கங்களின் கூட்டமைப்பான "டெலோ" என்ற அமைப்பு கலைஞரின் 
முயர்ச்சியால் நிறுவபெற்றது, இதை சீமான் அறியாமல் இருப்பாரா ?

அதன்பின் நடந்தது என்ன ?
டெசோ இயக்கம் ஆரம்பித்த ஐந்தாவது மாதத்திலேயே சீறி சபாரத்தினம் தலைமையேற்ற டெலோ இயக்கத்தின் மேல் விடுதலை புலிகள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி அதன் அறிவுபூர்வமான இளம் தலைவரையும் அதன் இயக்கத்தவர்களையும் கொலை செய்தனர். 
அதன் பின்னும் அவர்களுடைய கொலைப்பசி அடங்கவில்லை 
அப்பொழுதுதான் 1990 ஜூன் 19-இல் சென்னையில் இயக்கத் தலைவர்களுடன் உரிமைப் போராட்டத்திற்கான திட்டம் வகுக்க உரையாற்றிக் கொண்டிருந்த பொழுது பாசிச புலிகளால் தோழர்.பத்மனாபாவையும் உடனிருந்த 13 தோழர்களையும் கோழைத்தனமாக கொலை செய்தனர் புலிகள்.
அரசியல், ஜனநாயகக் கோட்பாடுகளில் நம்பிக்கையற்று, ஆயுதத்தின் மூலம் மட்டுமே விடுதலையை அடைய முடியும் என்ற பாசிச கோட்பாட்டில் மூழ்கி திளைத்து, பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை பலி கொடுத்து தானும் பலியானதுதான் பிரபாகரனின் சாதனை. தனக்குப் பின்னால் இயக்கத்தை வழி நடத்த இரண்டாம் கட்டத் தலைவர்களைக் கூட உருவாகத் தவறிய ஏகாதிபத்தியவாதியாக திகழ்ந்தவர் பிரபாகரன்.

அதன் பிறகு உச்சகட்ட நிகழ்வாக ஸ்ரீ பெரும்புதூரில் ராஜீவ் படுகொலை செயப்பட்டார் .

இப்படியாக கலைஞரின் அணைத்து முயசிகளையும் கொட்சைப்படுதியது விடுதலைப்புலிகள்தான் என்ற வரலாறு தெரியாதாவரா சீமான் ?

ராஜீவ் கொலை விசாரணைக்காக ஜெயின் கமிஷன் அமைக்கப்பட்டு பதினாறு வருட விசாரனைக்கு ஒரு பதில் கூட தராத பிரபாகரன்:- அது ஒரு துன்பியல் சம்பவம் " என்று கூலாக 

பதில் சொல்கிறார் . இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது , விடுதலை புலிகளிடம் கைதான சக போராளி இயக்கங்களைச் சார்தவர்களை துப்பாக்கி ஆடும் பயிற்சிக்காக "டார்கெட் "ஆக பயன்படுத்தியிருகிறார்கள் . உலக அளவில் இந்த செயலை முதலில் செய்தது ஹிட்லர்தான் அவருக்கு அடுத்த இடத்தை பிரபாகரன் பிடித்துவிட்டார். உலகின் வரலாற்றை பின்னோக்கி நகர்த்திச் செல்ல முயன்ற ஹிட்லர், முசோலினி போன்ற பாசிசவாதிகளை வரலாறு குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியது போல, தமிழ் பேசும் மக்கள் மத்தியில், தமிழ் மக்களையே கொன்று குவித்த, மீண்டும் குவிக்கத் துடிக்கும் பாசிசக் கூட்டத்தை தமிழ் மக்கள் தோற்கடித்து, வரலாற்றுச் சக்கரத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வர் என்பது திண்ணம்பொதுவாக வன்முறை என்பது இருபுறமும் கூரான வாள் போன்றது அது பிடிதிருப்பவனையும் தாக்கும் , இது புலிகளின் விடயத்தில் உண்மையானது .
அவர்கள் தங்கள் இனத்தை சேர்ந்த சக போராளிகளையும் சமூகத்தினரையும் கொன்று குவித்த போதிலும் அவர்களுக்காக உழைத்த கலைஞரின் நட்பையும் இழந்து விட்டனர் இறுதில் சிங்கள பேரினவாதம் வென்று விட்டது ஈழத்தில் அப்பாவி மக்கள் சாவுக்கு கொடூரன் ராஜபக்ஷே எவ்வளவு உடந்தையோ பிரபாகரனுக்கும் அதில் சம அளவு பங்கு உள்ளது.... 

தற்போது தமிழர் பகுதியில் புனர் நிர்மானம் மற்றும் மறு குடியிருப்பு சம்மந்தமாக அணைத்து நடவடிக்கைகளும் கலைஞரின் வற்புறுத்தலின் பேரிலேயே மத்தியஅரசு செய்து வருகிறது.

ஒரு உண்மையை சொல்லப்போனால் எம் ஜி ஆர் , கலைஞரை போல , விடுதலை புலிகளுக்கு உதவியவர்கள் தமிழகத்தில் இருப்பது அபூர்வம். 

இதை புரிந்து கொள்ளாமல் துவேசத்தை விதைத்து வன்முறையை அறுவடை செய்யும் போக்கை சீமான் மாற்றிகொண்டு " தம்பி " போன்ற சமூக கருத்துடைய வன்முறைக்கு எதிரான திரைப்படங்களை தந்தால் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிப்பார்...

37 comments:

  1. madam... simaan paththi pathivu podalaam endru ninaiththu kondu irunthen... neenga pottuttinga...
    jeyila vittu veliya vanthavudan mgr silaikku maalai etharkku podanum.... (mgr - malaiyaali... )
    therthalai nokkam kondu pannukiraar.... avar ela prichchinaiyai kail kondu arasiyalvaathiyaaka maarittaar!!!! ippa irukka simaan appo ean kural kodukkala?

    ReplyDelete
  2. மிகவும் நன்றி இனியவன் , நான் சீமானை சினிமாகாரராக மட்டும்தான் பார்கிறேன். புலிகள் ஆதரவளராகவோ அரசியல்வாதியாகவோ அவரை பார்த்தால் காமடி பீஸ் சகா தெரிகிறார்.

    ReplyDelete
  3. சீமான் ஒரு உன்மையான தமிழின போராளி. ஈழத்தில் மக்கள் சாகும்போது 4 மணிநேர உண்ணாவிரத நாடகமாடிய எட்டப்பன் கருணாநிதியை பற்றி உங்கள் கருத்து என்ன. வரலாற்றை பின்னோக்கி பார்கதிர்கள், நிகழ்காலத்தில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். அகிம்சை வழி போராடி ஒன்றும் நடக்காமால்தான் பிரபாகரன் துப்பாக்கி எடுத்தார். தா. கிருஷ்ணனும் கருணாநிதியின் சகோதரன்தான் பிறகு ஏன் நாடு ரோட்டில் கொன்றார்கள். மன்னித்துவிட பிரபாகரன் ஒன்றும் மடமோ சத்திரமோ நடத்தவில்லை. விடுதலை புலிகள் என்பது மிகவும் கட்டுகோப்பான இயக்கம் அங்கு விதிமுறைகள் மிகவும் கடுமையாகத்தான் இருக்கும்.

    அடி வாங்குபாவனுக்தான் அந்த வலி தெரியும். 500 மீனவர்களை கொன்ற சிங்களவனை கேட்க இங்கு எவனுக்கும் துப்பில்லை. அதை கேட்டால் வன்முறையாளன். இனத்தை பற்றி இங்கு எவனுக்கும் கவலை இல்லை.

    நம் தமிழ் மக்கள் சாக ஆயிதம், ரேடர், கொடுத்த இந்தியா நல்லவானா?
    கோடி கோடியாய் கொள்ளை அடிப்பவன் நல்லவன் அடக்குமுறையை கேட்டால் அவன் வன்முறையாளனா.

    ஒரு ரூபாய் அரிசி, மானட மயிலாட, டாஸ்மார்க். வாக்குக்கு காசு. இதுதான் இன்றைய தமிழகம். இதையும் மீறி ஒருவன் பேசினால் அவன் வன்முறையாளன், காமெடி பீசு என்று சொல்வீர்கள். நாசமாய் போகட்டும் தமிழ்நாடு.

    ReplyDelete
  4. உங்களுடைய அதே கேள்விதான் எனக்கும் விடுதலைப்புலிகள் கொன்றவர்கள் யாரும் தமிழர் இல்லையா. சகோதரர் கஜேந்திரன் சொன்னது போல் ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் அப்படிதான் செய்யும் என்றால் இந்தியா போன்ற கட்டுக்கோப்பான நாடும் தவறு செய்தவர்களை தண்டிக்கத்தான் செய்யும் அது யாராக இருந்தாலும்.

    ReplyDelete
  5. இன்று இளைஞர்களாக இருக்கும் பலருக்கு ஈழ போரின் சரித்திரம் தெரியவில்லை. ஒரு முதலமைச்சராய் இருந்து கொண்டு என் இனத்தை வேட்டையாடி விட்டு வரும் இந்திய அமைதிப்படையை வரவேர்ற்க்க மாட்டேன் என்று அறிவித்து, அதன் காரணமாக ஆட்சியை இழந்த கலைஞரின் வீரம் தெரியவில்லை...

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. திரு சாந்தி பாபு அவர்களே, நீங்கள் திமுகவின் தீவிர விசுவாசி என எனக்கு தோனுகிறது. நீங்கள் இந்த பதிவை எழுத யோகிக்யதை இல்லாவதவர். வெறுமணே அனனிமஸ்ல் வந்து ஸ்டுபிட் போஸ்ட் என்று சொல்லாமல் உங்கள் பக்கம் உள்ள கருத்தை தெரிவிக்கவும். திமுகவை பார்த்து நாடே சந்தி சிரிக்கிறது. ஒரு அடிப்படை அரசியல் தர்மம் கூட இல்லை உங்களிடத்தில்.

    சீமானை பற்றி பேச உங்களில் ஒருத்தனுக்கும் யோக்கியதை கிடையாது. திருடன்+முள்ளமாரி+முடிச்சவிக்கி+ அடுத்தவன பொண்டாட்டி தாலி அறுப்பவன்=திமுககாரன். இதுதான் யதார்த்த உண்மை.

    ReplyDelete
  8. ஒன்று நி சிங்களவன்கிட்ட காசு வாங்கிகிட்டு
    இத எழுதி இருக்கனும் ,இல்ல நீ ஒரு சுயநினைவு
    இலாதவனாக இருக்கணும் ,இந்தியாவுல இந்தியாகாரன்
    தவறு செய்தல் துக்கு கொடுபிங்கதானே ,இதுதான்
    அதுவும் ,உனக்கு பதில் எழுதுவதே தவறு . ஆமா
    பெருசா எழுதினே உன் நண்பர் கருணாவும் ....

    ReplyDelete
  9. Dear shanthibabu you have given a detail history of tamil elam fighters but throughout your post you try to project Prabakaran as a autocrat, and a dictator why it is so, even a school teacher has to be strict with the student to inculcate good moral and discipline among the student, but he is a leader of a group who is fighting for a good cause, he has to take a decision which should be a lesson for others, then only the group will reach their target, don't rationalise DMK or Congress, rajiv's murder happened because of the wrong decisions taken by the former prime minister and don't speak about our chief minister, he was supporting Tamil Elam but now he is only supporting his family and their wellness and not even bother about even the people who are in Tamil Nadu. Don't think that i am against of DMK today's scenario is like that, and seeman is fighting against the rights of tamils now and if you are not supporting him also don't criticise him atleast he is having courage to stand against this today's rotten politicians.

    ReplyDelete
  10. ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் அப்படிதான் செய்யும் என்றால் பிரபாகரன் திருமணம் முடித்துக்கொண்டது ஏன்?
    இவர் திருமணம் செய்து கொண்டது 1984. அப்போது விடுதலைப்புலிகளின் போர் மிகத் தீவிரமாக இருந்தது. தமிழர்களின் நலனுக்காக தம் வாழ்வை அர்ப்பணிக்கும் தியாகிக்கு திருமணம் எதற்கு?

    ReplyDelete
  11. இப்பொழுது புலிகளும், புலம்பெயர் தமிழர்களும் அறவழி அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து வரும் சூழலில்,சீமானின் இதுபோன்ற பேச்சுக்களும் , வீரவசனங்களும் , உணர்வுபூர்வமான முடிவெடுகவைக்குமே தவிர அறிவுப்பூர்வமாக யோசிக்க உதவாது . தமிழர்களுக்கு ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை சிதைத்து அவர்களை மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கே இழுத்துச்செல்லும்.மீண்டும் ஒரு ஆயுத போர் தேவையா ?

    ReplyDelete
  12. @Gajendiran Perumal
    சகோதர கொலை தப்பு செஞ்சா மன்னிக்க பிரபாகரன் மடமோ ஆசரமோ நடத்தவில்லை என சொன்னவர்கள்
    கொஞ்சம் இதற்கும் பதில் சொல்லுங்கள் .
    1990ரில் உடுத்த உடைகளுடன் யாழ்பாணத்தில் பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்களை 24 மணித்தியாலத்திற்குள் வெளியேற்றி அவர்களை அகதிகளாக மாற்றியது
    தொழுகையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அப்பாவிமக்களை ஈவு இரக்கமின்றி துப்பக்க்கியல் சுட்டு கொன்றது
    பஸ் மற்றும் ரயில்களில் குண்டு வைத்து அப்பாவி மக்களை குண்டு வைத்து கொன்றது
    போன்ற புலிகள் செய்த நல்ல காரியங்கள் ஏன் என கொஞ்சம் கூறுங்கள்;

    ReplyDelete
  13. R u have any proof for this news. please send me i want that proof just for information

    Regards
    R.Prakash

    ReplyDelete
  14. நன்றாக தொகுக்கப்பட்ட நிகழ்வுகள் சீமான் பிராமனர்களையும் தன்னுடைய இயக்கத்தில் சேர்த்துகொள்வோம் என்று சொல்லும்போதே தெரிந்திருக்கவேண்டும் அவர் பாஸிஸத்திற்க்கு துனைபோகிறார் என்று கலைஞர் எதுவுமே செய்யவில்லை என்று சொல்லும் சீமான் உண்மையிலேயே ஈழ வரலாறு தெரிந்தவர்தானா !அல்லது தெரிந்தவர்போல் காட்டுகிறரா ஜெயலலிதாவை ஆதரித்தவுடன் அவர் மேலிருந்த நல்அபிப்பிராயம் தொலைந்துவிட்டது தனது நிலையை சீமான் தெளிவுபடுத்தவேண்டும். பால் தாக்கரேவுடனான சந்திப்பு அவர் மீது மேலும் சந்தேகத்தை உண்டுபன்னுகிறது

    ReplyDelete
  15. http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. http://en.wikipedia.org/wiki/List_of_attacks_attributed_to_the_LTTE#Deadliest_attacks

    ReplyDelete
  18. யார் இந்த கருணாநிதி ?

    திருட்டு ரயில் ஏறி வந்து இன்று ஆசியாவின் 5 வது பணக்காரர்

    அண்ணாவுக்கு பின் கழக முன்னோடிகள் பலர் இருக்க நயவஞ்சகமாய் பதவிக்கு வந்ததவர்

    DMK வை குடும்ப கருவூலமாக மாற்றியவர்

    இன்னும் நிறைய இருக்கிறது இப்போதைக்கு இது போதும்

    யார் இந்த ராசாத்தி அம்மாள் ?

    நாடக நடிகை

    அங்கே ஏற்ப்பட்ட கள்ள தொடர்பு கனிமொழி யாய் பிறந்தது

    பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த கருணாநிதி இந்த பிள்ளை தன பிள்ளை இல்லை என்று பத்திரிகைகளுக்கு அன்று கொடுத்தார் அலறல் பேட்டி . பின்னர் அண்ணா அவர்கள் பதவி வேண்டும் என்றல் ஒழுங்காக உண்மையை ஒத்து கொள் என்று மிரட்டிய பிறகு CID கோலோனி வேடு உதயமாயிற்று

    இன்று அந்த ராசாத்தியும் கனியும் சும்மா ஒரு ஒரு லட்சம் கோடி தன ஊழல் பண்ணி இருக்காங்க (மனிக்கவும் ஒரு லட்சம் கோடிக்கு சைபர் போடா தெரியல )

    யார் இந்த ராசா ?

    கள்ள தொடர்பில் பிறந்த கனியின் கள்ள புருஷன்

    ஒருலட்சம் கோடி கனியின் அழகில் மயங்கி பரிசளித்ததால் சில ஆயிரம் கோடி + ராசாத்தியையும் இனம்மாக பெற்றவர்

    !@ சாந்தி பாபு அவர்களே இபாடி ஒரு கேடு கேட்ட குடும்பத்தலைவனின் கட்சியில் இருந்து கொண்டு எங்கள் தலைவனை பெயர் கூற கூட அருகதை கிடையாது உங்களுக்கு என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்

    ReplyDelete
  19. 1. The first mistake is blogspot have given free space
    2. Lot of tamil scripts are available for free & it is open source

    This is why? This kind of shit articles were written by amateur bloggers. Even though I don’t live in india. We are very well known about Indian politics & eelam. If you have any opinion about this shit karunandhi please keep it yourself,don’t try to publish. Because! Everyone knows about him. Some more your profile says that you re DMK ca-ca. Then I amaze what magic you can create with your write-up.

    Simply it’s crap.

    ReplyDelete
  20. ஈழத்தமிழர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் தயவு செய்து தமிழர்கள் என்று உங்களை சொல்லிக்கொள்ள வேண்டாம். சொந்த ஊரில் சேர்ந்து வாழ தெரியாமல் புலம் பெயர்ந்தவர்கள் என்ற பெயரில் வக்கிரமான கருத்துக்களையும், எங்கள் தலைவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதையும் தவிர்த்து விடுங்கள். இல்லையேல் அதற்குறிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். உங்கள் தமிழ் சேவையை scribd.com ல் போய் பாருங்கள் தெரியும்...

    ReplyDelete
  21. hello mrs. shanthi&babu , im really sorry abt u, i know ur in DMK, like 2 send some few clarifications 2 u atleast,NO-1, u wanna critisize seeman or LTTE, NO-2, LTTE leader prabakaran was marr. so wht, he gave her wife,son, daughter 2 same war, can u tell me abt ur leader karunanithi family sacrifice like that??? onlyy spectrummmmmmmm ,,, right? spectrum is a sample thats all...

    ReplyDelete
  22. USELESS FELLOWS, HALF BOILED DMK FELLOWS, WILL U PLS STOP THIS NONSENCE...STUPIDS...PLS NOTE IM A COMON MAN, ...

    ReplyDelete
  23. innuma karunaanidhiya nambureenga????

    ReplyDelete
  24. புலிகளின் நோக்கம் தமிழ் ஈழம் மட்டுமே! ஆனை இரவு போரில் கைதியாக பிடிபட்ட பதினைந்தாயிரம் சிங்கள வீரர்களை ஒன்றும் செய்யாமல் விட்டு சென்றவர் தலைவர்! அமெரிக்க உளவு துறை தலைவரின் கை அசைவிற்கு காத்திருந்தது! தலைவர் அமெரிக்க உதவியை நாடி இருந்தால் இந்திய இலங்கை நாடுகளின் இறையாண்மை கிழிந்து போயிருக்கும் ! தலைவர் எப்போதும் தொலை நோக்கு பார்வையுடன் சிந்திக்ககூடிய மாமனிதன்

    ReplyDelete
  25. pirabakaran thirumaanam mudichu kudumba vaalkaija thodanginaar,kudumba vaalkaja thodangidu enakum antha ponnukum entha samathamum illai enru sollalai

    ReplyDelete
  26. ltte la olukam mukjam atharkaaga jaarum kaljaanam pannika kudaathu enkalaije

    ReplyDelete
  27. udan pirapukalaije kolai pannidaangal enkuringale,thalaiwar nambikai kurijawar karuna maariwidawillaija? ella por iwalawu thuram alijurathuku oru mukja kaaranam karuna ,inru makkallai kadathi kappam kekurathu dakles ponror,entha oru pajamum illamal widu punthu kollai adikurangale ellam jaarale ellam intha udan pirapugalthan kaaranam.tamilana piranthatarkaga ellarum nallavan ennkurathu illai.iwalawu pesura ningal ungal karu naai nithiya solli ippo minchi irukura makkal ,pengalm, maanawargal uyiruku entha oru abathum warathu enndu utharawaatham koduka sollungal paapom.muthalila tamil naadu meenawargala kaapatha parungal

    ReplyDelete
  28. உலகின் வரலாற்றை பின்னோக்கி நகர்த்திச் செல்ல முயன்ற ஹிட்லர், முசோலினி போன்ற பாசிசவாதிகளை வரலாறு குப்பைத் தொட்டியில் தூக்கி வீசியது போல, தமிழ் பேசும் மக்கள் மத்தியில், தமிழ் மக்களையே கொன்று குவித்த, மீண்டும் குவிக்கத் துடிக்கும் பாசிசக் கூட்டத்தை தமிழ் மக்கள் தோற்கடித்து, வரலாற்றுச் சக்கரத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வர் என்பது திண்ணம்.

    # டேய். நீ எங்க இருக்க ?? பிரபாகரன மக்கள் ஏத்துக்கிட்டாங்க. இங்க உன் தலைவர் நாதாரிய மகன்களே ஏத்துக்கள ??!

    ReplyDelete
  29. //ஈழபோரளிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் கலைஞர் முன்னின்று செய்தார்.
    ஆறு போராளிகள் இயக்கங்களின் கூட்டமைப்பான "டெலோ" என்ற அமைப்பு கலைஞரின்
    முயர்ச்சியால் நிறுவபெற்றது, இதை சீமான் அறியாமல் இருப்பாரா ?//

    எந்த ஆறு அமைப்புகளை ஒன்றினைத்து டெலோ உருவாக்கப்பட்டது. மேலும் குட்டிமணி உருவாக்கிய டெலோ அப்பொழுது என்ன ஆனது..

    தாங்கமுடியலடா சாமி, வரலாற்றை திரும்பி பார்க்கிறேன் என்று திருகி பார்க்கிறீர்களே.. சீமானின் கருத்துகளுக்கு எதிர் கருத்து சொல்லுங்கள். ஒரு விடுதலை வரலாற்றை திரிக்காதீர்கள்..

    ReplyDelete
  30. ஆரம்ப காலகட்டங்களில் காதல், திருமணம் கூடாது என்ற இந்த விதி கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. அதன்பிறகு கல்யாணம் ஆனவர்களும் இயக்கத்தில் இணைந்தனர். அப்பொழுது விதிகள் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு பலவருடங்கள் கழித்தே பிராபகரன் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு என்று ஒரே மனைவி தான் மற்ற பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதில்லை. ஏன் இயக்கத்தை சார்ந்த யாரும் பெண்கள் விசயத்தில் தவறாக நடந்ததாக எந்தவிதமான வரலாறும் இல்லை..

    இதெல்லாம் உங்களுக்கு எப்படி புரியும் ஒருவனுக்கு ஒருத்தியை தூக்கி எறிந்தவர் பின்னால் நின்று கொண்டு. பாத்திமா பாபு பின்னால் ஓடியவரின் வாக்கை திருவாக்காக நினைப்பவர்களுக்கு..

    நாடக நடிகையை தொட்டதால் விடாமல் வந்து பிரச்சனையாகி அண்ணாவல் சமரசம் செய்யபட்டு காமரசம் சொட்டியவரிடம் முதலில் இது நியாயமா என்று கேட்கவும்.

    தமிழர்களுக்கு என்றும் ஒரே தலைவன் அது அண்ணன் பிரபாகரனே.

    ReplyDelete
  31. தமிழர்கள் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசியல்வாதிகள்

    http://nanthankural.blogspot.com/2011/01/blog-post_7183.html

    ReplyDelete
  32. Latest Tamil Movies review,Tamil cinema latest News in Tamil
    www.cineikons.com

    ReplyDelete
  33. unga thalaivar rompa nallavar than

    ReplyDelete