தொகுப்புகள்

Search This Blog

Thursday, December 2, 2010

அதிநவீன ஆன்மீக நிறுவனங்கள்

அறிவியலின் அதிவேக வளர்ச்சியினாலும், அதிநவீன தொழில்நுட்பத்தின் ஆளுமையாலும் ஆன்மீக நிறுவனங்கள் அனைத்தும் ஆட்டங்-காணத் தொடங்கிவிட்டன. இதன் தாக்கத்தால் அறிவியல் அலர்ஜி ஏற்பட்டுவிட்ட ம(ந்)த-வாதிகள் தங்களின் கடவுள்களையும் கடவுள்(?) தந்ததாக புளுகு பரப்புரையால் அவரவர்களின் (எழுதப்பட்ட) வேதங்களையும் காப்பாற்றக் கிளம்பிவிட்டார்கள். அதன் அதிர்வுதான் வேதகாகிதப் புத்தகத்தில் அறிவியல் மண்டிக்-கிடப்பதாக மண்ணில் புதையுண்ட செய்தி-களுக்குப் புத்துயிர் கொடுக்க மடிப்பிச்சையாக அறிவியலைக் கையேந்துகிறார்கள்.
அனைத்து மதத்தினரையும் நம்பவைக்க வேண்டுமானால் மற்ற வேதங்களில் இல்லாத பல புதிய சமாச்சாரங்களைத் தேடிப்பிடித்து வியப்பில் ஆழ்த்துவதே இன்றைய நவீன மதவாதிகளின் நோக்கமாக இருந்துவருகிறது. இதை மய்யமாக வைத்துத்தான் ஆன்மீகத்தைக் காப்பாற்ற வேண்டும், மாற்று மதத்தினரையும் ஈர்க்க வேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதே உண்மை. இப்படிப்-பட்ட அறிவியல் கேள்விகளை வைத்துத்-தான் இறைவன் இருக்கின்றான் என்பதை எடுத்துச் சொல்ல ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டதே தவிர கடவுள் உண்டு என நிரூபிக்க ஒருபோதும் முடியாது.
ஒரு குறிப்பிட்ட காலம்-வரையில் அச்சத்தின் காரணமாக சூரியன், சந்திரன், காற்று, மழை, மின்னல், இடி போன்ற இயற்கையை வணங்கி வழிபட்டு அதன்பின் அதற்கு உருவம் கற்பித்து கதைகள் பல புனைந்து பல கடவுளர்கள் வணக்கம், பின் சிலைகள் உருவாக்கப்பட்டு வணக்கத்தில் ஈடுபட்ட காட்டுமிராண்டி காலச் சூழலில், ஒரே ஒரு கடவுளை வணங்கினால் போதுமானது என்று சொன்ன இசுலாமியத் தூதர்வரை ஆன்மீகப் பரிணாமம் பெற்ற பகுத்தறிவாளர்கள்-தான். அதிலிருந்து கடவுள் இல்லை என்று பரிண-மித்தவர்கள்தான் இன்றைய நாத்திகர்கள் _ கடவுள் மறுப்பாளர்கள் என்கின்ற பகுத்தறி-வாளர்கள். ஆகவே, அன்று பல கடவுள் வணக்கத்தை ஒழிக்கப் பாடுபட்ட ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர் இசுலாமிய இறைத்தூதர் என்று அழைக்கப்படுகின்ற முகம்மது அவர்கள். பல கடவுள் கொள்கையிலிருந்து ஒரு கடவுள் என்ற நிலைக்கு வந்ததே இசுலாம். ஆனால், இன்றோ ஒட்டுமொத்த கடவுள்களையும், மதங்களையும், ஜாதிகளையும் சேர்த்தே ஒழிக்கப்-படவேண்டும் என்று முழங்கிப் பாடுபட்டவர்-களில் முதன்மையானவர் தந்தை பெரியார் அவர்கள்.
ஆன்மீகம் என்பது அந்தந்த மதங்களுக்கு மட்டுமே சொந்தமாகி தனித்தனியே பிரித்தாளும் தன்மை கொண்டது. ஆனால், பல மதங்களி-லிருந்தும் உருவாகி ஒன்றாய் இணைபவர்கள் நாத்திகர்கள். ஒரு செல் உயிரிதான் இன்று பலகோடி உயிரினங்களின் பரிணாமம். அதுபோல் கடவுள் மறுப்புக் கொள்கையும் பரிணாமம் பெறும் அந்நாள் விரைவில் வரும்.
கடவுள் இருக்கின்றான் என்பதை நிரூபிக்க முடியாத காரணத்தால்தான், வேதங்களில் சொல்லப்பட்ட வார்த்தைகளை வைத்து, இது அன்றே சொல்லப்பட்டுவிட்டதால் அது இறைவாக்கு, அதனால்தான் அன்றே சொல்ல-முடிந்தது என்பதாக சப்பைக்கட்டு கட்டிக்-கொண்டிருக்கிறார்கள் இன்றைய மதவாதிகள். அறிவியலுக்கும் ஆன்மீகத்திற்கும் தொடர்-பில்லை என்பதற்கு ஓர் எளிய எடுத்துக்காட்டை விளக்கலாம். அதாவது, புளிய மரத்தடியில் படுக்காதே, உட்காராதே, இரவு நேரத்தில் செல்லாதே என இன்றும் கிராமத்தில் கூறிவரு-வதை நாம் பார்க்கிறோம். இது அறிவியலோடு தொடர்புடையதுதான். இருப்பினும் இது சொல்லப்பட்ட காலத்திற்கும் இன்றைய அறிவியலுக்கும் தொடர்புடையனவா? என்று-தான் எண்ணிப்பார்க்க வேண்டும். இதில்தான் மதவாதிகளின் சித்துவிளையாட்டை நாம் இனங்கான வேண்டும்.
புளிய மரத்தடியில் உறங்குபவர்கள் சுறுசுறுப்-பில்லாமல் மந்தமாகவோ, அல்லது நோய்-வாய்ப்பட்டாலோ, அதன் அறிவியல் உண்-மையை உணராத பெரியவர்கள் காரணம் சொல்லவேண்டும் என்பதற்காக பேய் அறைந்து-விட்டது அல்லது காத்துக்கருப்பு அண்டி-விட்டது. அதனால் யாரும் அம்மரத்தடியில் அமரவோ படுக்கவோ செய்யாதீர்கள் என்று அன்றைய சூழலில் கூறினார்கள். அதே அச்சத்துடன் நாம் பார்ப்பதால் இன்றுவரை அம்மரத்தைக் கண்டு பயப்படும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், உண்மை நிலை மிகக் குறைந்த அளவில் 10 சதவிகிதம் மட்டுமே பிராணவாயுவை (ஆக்சிஜன்) உற்பத்தி செய்து வெளியிட்டு, அதிக அளவில் 90 சதவிகிதம் கார்பன்-_டை_ஆச்சைடை உட்கிரகிக்-கும் நிலையில் அந்த இடத்தில் நாம் இருந்தாலோ, உறங்கினாலோ அவற்றை நாமும் சுவாசிக்க நேரிடும். எனவே, நமக்கு மந்தநிலை ஏற்பட்டு சுறுசுறுப்பு இருக்காது, சிலருக்கு மயக்கமே வந்து கீழே விழ நேரிடலாம். இந்த நிலையைத்தான் அன்று பேய் அறைதல், காத்துக்-கருப்பு அடித்தல் எனச் சொல்லிப் பயமுறுத்தி வந்தார்கள். எனவே, இந்த அறிவியல் காரணம் அன்றைய சூழலுக்கும் ஒத்துப் போவதால்தான் அன்றே அறிவியல் சொல்லப்பட்டுவிட்டதாக இன்று கதையளந்து கொண்டிருக்கிறார்கள் மதவாதிகள்.
இப்படியாகத்தான் அன்றைய அவதாரங்கள், தூதர்கள் சொன்ன அறிவியல் சாரா கருத்து-களுக்கு இன்று அறிவியல் முடிச்சுப்போட்டு வேதவரிகளுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள்.
நன்றி -திரு .இனியவன்

1 comment:

  1. இணையத்தில் மட்டும் தான் உண்மை- படிக்கிறீர்களா? இல்லை அச்சு இதழும் படிக்கிறீர்களா- அக்கா?

    ReplyDelete