தொகுப்புகள்

Search This Blog

Friday, January 28, 2011

மகரஜோதி - கருமாதி - தேவச சதி


கேரள மக்களுக்கு ஓணம் மட்டும் சந்தோசம் இல்லை ஒவ்வொரு தமிழனின் சாவும் சந்தோசம் தான் .. கொதித்து போய் சொல்கிறார் சபரிமலை கூட்ட நெரிசலில் தன் தந்தை மற்றும் தங்கையும் காவு கொடுத்த தொப்பம்பட்டி தாமோதரன் கண்ணீருடன் ..........

அப்பாவை காணோம் அண்ணனை காணோம் பிள்ளையை காணோம் தம்பியை காணோம் ....... என்று அன்பான உறவை கூட்ட நெரிசலில் தொலைத்துவிட்டு அருகிலுள்ள ஊருக்கு வந்து டிவியில் ஏதாவது தகவல் வருகிறதா என்று
பார்த்தால் "இறந்தவர்களில் யாரும் கேரளக்காரர்கள் இல்லை யாரும் பீதியடைய வேண்டாம் கவலைப்படத்தேவையில்லை"என்று நம் இதயத்தை இன வெறி எனும் பழுக்க காய்ச்சிய இரும்பு கம்பியால் கீறியது கேரள சேனல்கள் . சிங்களவர்களுக்கு கூட தமிழர்களுக்கு இவ்வளவு கோபம் இருந்திருக்காது.

 அங்குள்ள அரசியல் தலைவர்கள் , கோவில் நிர்வாகிகள் குறைந்தபட்சம் இரங்கல் தெரிவிக்காவிட்டாலும் இந்த பிணங்களையாவது கௌரவமாக  துரிதமாக தமிழர்களிடம் ஒப்படைத்து இருக்கலாம் . ஆம்புலென்ஸ் ஸ்ட்ரெட்சேர் கூட இல்லாமல் ஏதோ இன படு கொலைக்கு பின்னர் எரிப்பதற்கும் , புதைப்பதற்க்கும் குப்பைகளை லாரியில் அள்ளிப்போட்டுச் செல்வதைப்போல் உயிரிழந்த தமிழர்களை குப்புற அள்ளிப்போட்டுக்கொண்டு சென்ற காட்சியை பார்த்தால் தான் தெரியும் இந்திய ஒருமைப்பாடு என்ன நிலவரத்தில் இருக்கிறது என்று ஆத்திரத்துடன் தன் அனுபவத்தை சொன்னார் குருசாமி முனீஸ்வரன் 

அவ்வளவு ஏன் இருபது நாட்களுக்கு முன் சபரிமலைக்கு நான் சென்றிருந்த போது பெரிய கூட்டம் ஒன்றுமில்லை ஆனால் இல்லாத கூட்டத்தை இருப்பதாக காட்டிக்கொள்ள பக்தர்களை எல்லாம் ஏதோ ஆடு மாடுகளை போல் பத்துக்கு பத்து கம்பி வலைக்குள் மிருக காட்சி சாலையை விட கேவலமாக உணவோ தண்ணீரோ சுவாசிக்க காற்றுகூட வாராதது போல் அடைத்து வைத்தனர் . அந்த கூட்டத்தில் எனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வெளியே வரக்கூட முடியாமல் தவித்த போது ஒரு தன்னார்வ தொண்டு  இளைஞர்கள் என்னை ஸ்ட்ரெட்சேரில் படுக்க வைத்து கோவில் வாசல் வரை கொண்டுவந்து விட்டனர் என தன் அனுபவத்தினை இயக்குனர் டி.பி கஜேந்திரன் கூறினார் .

வழக்கமாக சபரிமலையில் சிறு சிறு வியாபாரம் ஓட்டல் நடதுபர்கள் எல்லாம் பாதிக்குமேல் தமிழனாக இருப்பார்கள் . ஆனால் இந்த வருடம் தமிழர்கள் எந்த கடையும் வைக்க அனுமதிக்கப்படவில்லை . அதனாலேயே கூட்ட நெரிசலில் கடைக்காரர்களிடமிருந்து விரட்டியடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது . தமிழ்நாட்டை சேர்ந்த ட்ராவல்ஸ் களுக்கு அனுமதி இல்லை ..'தமிழ்நாட்டு பக்தர்களை பதினெட்டம்படியிலும் ,கோயிலிலும் ஒரு வினாடி நேரம் நின்று செல்லக்கூட அனுமதிக்கக்கூடாது என்று காவலர்களுக்கு கட்டளையே இடப்பட்டுள்ளது என்கிறார் தன் யாத்திரையை பாதியில் முடித்து விட்டு சாமி பார்க்காமல் வந்த சந்திரசேகர்.

இவர்கள் அனைவரும் சொல்வதைப்பார்த்தால் நடந்தது எதேற்சையான விசயயமல்ல .நீண்ட கால (அ)லட்சியம் மற்றும் பிற மாநில பக்தர்கள் திட்டமிட்டு அவதிக்கு உள்ளாக்க நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது .
நடந்த சம்பவத்தை பற்றி ஐயப்பனின் வம்சத்தினை சார்ந்த பந்தள ராஜாவுமான விசாகம் நாள் ராமவர்ம ராஜாவிடம் கேட்ட போது வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுதான் தேவாம்ச போர்டு செயல்படுகிறது . இதில் தமிநாட்டு மக்கள் , ஆந்திர மக்கள் , கேரள மக்கள் , கர்னாடக மக்கள் என்று தனித்தனியாக பார்ப்பது தவறு . எல்லோரும் ஐயப்பனை மனதில் வைத்து கடுமையான விரதமிருந்துதான் வருகிறார்கள் . வரும் பக்தர்களுக்கு வேண்டியதை செய்ய முன்வராத தேவசம் போர்டு எதற்கு அதை கலைத்துவிட்டு ஒரு கமிட்டியிடம் ஒப்படைப்பதே சிறப்பு என்று பொருமிகிறார் .... இனி விழித்து கொள்ள வேண்டியது பக்தர்கள்தான் ...


நன்றி - வீரகேரளம் சரவணன் ,குமுதம் 

இப்பதிவை குமுதத்தில் படித்தவுடன் நான் அதிர்ந்துவிட்டேன். நான் கேரளாவில் சுற்றுலா என்று பல இடங்களுக்கு சென்றுள்ளேன் . அங்கெல்லாம் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாகத்தான் இருக்கும் . மரியாதைக்கும் குறைவிருக்காது . ஆனால் பக்தி பக்தர்களின் கண்ணை மறைத்து பக்தர்கள் சபரிமலையில் குவிவதால்தான் பணம் தேவாம்ச போர்டின் கண்களை மறைத்து விட்டது போலும்.

சாமி கும்பிடாமல் என்னை போல் பலர் மகிழ்ச்சியாக இருக்கையில் நீங்கள் ஏன் ....?????
அப்படி கும்பிட்டுதான் ஆக வேண்டுமென்றால் ............ஐயோ ஆண்மீகவாதிகளே ,பக்தர்களே,சாமிகளே ஒரு நிமிடம் தங்கள் குடும்பத்தை நினைத்து கூட்டத்தில் கோவிந்தா போடுவதை விட்டு விட்டு உங்களுக்கு பிடித்த கடவுளை வீட்டிலிருந்தே தரிசித்து தங்கள் குடும்பத்திற்கும் ,குழந்தைகளுக்கும் நிம்மதியை கொடுத்து மகிழ்ச்சியாக வாழுங்கள் .

5 comments:

  1. ஆன்மிகம் அதிகமானால் ஆபத்து அதிகம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இயக்குனர் அவர்கள் கூறிய அந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் என்ற அமைப்புதான். பக்தர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுக்க ஏற்பட்ட அமைப்பு அது. அந்த அமைப்புக்கும் கூட சரியான ஒத்துழைப்பு கொடுப்பதில்லை தேவசம் போர்டு.

    ReplyDelete
  3. மிகவும் சரியாக சொன்னீர்கள் அய்யா என்னுடைய ப்லொக்கில் இணைப்பு கொடுத்து உள்ளேன் ஏற்று கொள்ளவும் மிக்க நன்றி
    www.enjoymails.blogspot.com

    ReplyDelete
  4. மிகவும் சரியாக சொன்னீர்கள் அய்யா என்னுடைய ப்லொக்கில் இணைப்பு கொடுத்து உள்ளேன் ஏற்று கொள்ளவும் மிக்க நன்றி

    ReplyDelete

  5. என்னோட புலம்பல்களையும் படியுங்க. மகர விளக்கு எவ்வளவு ஃப்ராட்னு தெரியும். அது சரி அந்த போலீஸ்காரர் ஏன் மூக்கில் கர்சீப் கட்டியிருக்கிறார். ஐயப்ப பக்தர்கள் என்ன அவ்வளவு நாத்தமாவா நாறுராங்க?
    http://saraca-asoca.blogspot.in/2011/01/makara-vilakku-cheating-report-by.html
    http://saraca-asoca.blogspot.in/2011/01/makarajyothi-scandal.html
    http://saraca-asoca.blogspot.in/2011/01/be-patience-speed-will-kill.html

    ReplyDelete