அன்பிலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
குறள் பற்றிய விளக்கம் நான் புதிதாக சொல்ல தேவையில்லை
காலை வீட்டிலிருந்து கிளம்பினேன் வரும் அவசரத்தில் சில்லரை காசுகளை எடுக்க மறந்துவிட்டேன். டீ கடையில் டீ குடித்து முடித்த பின்தான் தெரிகிறது சில்லரை காசுகள் இல்லையென்று . சரி இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று நினைத்து , கடையில் ருபாய் நோட்டை கொடுக்கும்போது கடைக்காரரின் முகம் மாறியதே அப்பப்பா ........(காட்பாதர் படத்தில் மர்லின் பிராண்டோ கோபப்படுவார் தெரியுமா! இவர் அதையும் மிஞ்சிவிட்டார் ) என்னடா இது! இதற்கு போய் ஏன் இவர் இவ்வளவு கோபம் அடைகிறார் என்று எண்ணினேன் . இவர் மட்டும்மல்ல இந்த சில்லரை பிரச்சனைக்காக நாட்டில் கோபப்படும் இன்னொரு சமுகம் பேருந்து நடத்துனர்களும் கூட.
சரி , அவர்கள் தினிப்பட்ட கோபம் அதில் நாம் தலையிட வேண்டாம் . ஆனால் மற்றொரு நாள் அதே கடைக்காரர் ஏன் அதே நடத்துனர் கூட சிரித்து கொண்டே சில்லரை கொடுப்பார்கள் , பின்புதான் ஒரு விசயம் நன்கு புரிந்தது , அவர்கள் என் மீதோ சில்லரை காசுகள் இல்லாமலோ கோபப்படவில்லை . அவர்கள் மீது யாரோ ( மனைவி , நண்பர்கள் , வழிபோக்கர்கள் , குழைந்தைகள் ,பெற்றோர் , உடன் பணிபுரிவோர் ........) ஒருவர் காட்டிய கோபத்தின் வெளிபாடுதான் அவர்கள் தன்னையே அறியாமல் மற்றவர்கள் மீது காட்டுகின்றனர் . இந்த பிரச்சனைகளின் பிரமாண்டமான வெளிப்பாடுகள்தான் இந்த உலகில் நடந்த பெரும் பிரச்சனைகளின் அடி நாதம் .
செய்தி தாளை புரட்டும் போது பலவிதமான கலவரங்களையும் , பிரச்சனைகளையும் பார்க்கிறோம் , எல்லாவற்றிக்கும் தொடர்பான ஒரே காரணம் யாரோ ஒருவரின் மிதமிஞ்சிய கோபமாகத்தான் இருக்கும். யூதர்கள் மீது ஹிட்லர் என்ற தனிப்பட்ட மனிதனின் கோபம் இரண்டாம் உலகப் போரில் பெரும் பங்கு ஆற்றியது ஏதோ ஒரு சில தனிப்பட்ட மனிதர்களின் கோபம் இன்றுவரை "இந்து-முஸ்லீம் " என்ற இரு வார்த்தைகளுக்கு இடைப்பட்ட கோட்டை நாம் சண்டை என்றே நினைக்கிறோம். இஸ்ரேல் -பாலஸ்தீனம் இப்படி உதாரணங்கள் பல பல , இவற்றை இந்த ஒரே பதிவில் அடைக்க முடியாது . சரி ஏன் இந்த நிலைமை எதை நாம் தொலைத்தோம் ?
ஆம் நாம் அனைவரும் மிக முக்கியமான ஒன்றை தொலைத்துவிட்டு வெகு நாட்களாக தேடி கொண்டே இருக்கிறோம் . அது ஒன்றும் கிடைக்காத பொருள் அல்ல , கடையில் கிடைக்கும் பொருளும் அல்ல .. பணம் கொடுத்து வாங்கும் பொருளும் அல்ல ... ஆனால் விலை மதிக்கமுடியாத ஒரு உணர்வு . ஆம் நாம் அன்பு என்ற ஒரு உணர்வை தொலைத்துவிட்டதன் வெளிப்பாடுகள்தான் இவை அனைத்திற்கும் ஒரே காரணம் . அந்த டீ கடைகாரரும் சரி நடத்துனரும் சரி அவர்கள் அச்சமயம் யாரோ ஒருவரிடத்து எதிர்பார்த்த அன்பு மறுக்கப்பட்டு இருக்கிறது அதனால் அவர்கள் என்னிடம் அதை தர மறுக்கப்பட்ட அன்பை அச்சமயம் நான் பிறருக்கு தருவதில்லை . இந்த "அன்பு பாராட்டுகள் " தான் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு . உங்களை ஒன்றும் பக்கத்து மளிகை கடையில் வாங்கி கொடுக்க சொல்லவில்லை . மனித உணர்வின் மிக முக்கியமான ஒரு பொக்கிஷம் "அன்பு" அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது . பிறரிடம் கோபப்படும் முன்பு அவர்களிடம் நாம் ஏன் அன்பு காட்டகூடாது என்று எண்ணுங்கள் , சற்று சிந்தித்து பாருங்கள்.
இனிமேலாவது "சில்லரை" பிரச்சனைகளுக்காக கோபப்படாமல் இருப்போம்
No comments:
Post a Comment