தொகுப்புகள்

Search This Blog

Wednesday, January 5, 2011

இனவெறியும், இலங்கையும் வீழும்



மனித நாகரிகம்

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் விலங்குகளிடமிருந்து வேறுபட்டு தோன்றிய மனித இனம், நிறம் ,நாடு , மதம், மொழி , மற்றும் ஜாதி வரியாக பிரிந்து மண்ணிலும் விண்ணிலும் சாதனைகள் பல புறிந்து இயற்கையின் சவால்களை எதிர்கொண்டு இன்று இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் சர்வதேசிய வாதத்திற்கு தயாராகிவிட்டது ஆனால் அறிவால் சாதித்த மனிதன் தன் மனதால் மிருங்கங்களை விட கீழ் நிலைக்கு சென்றுவிட்டான். மனித வரலாற்றில் நடத்த போர்களும் இன படுகொலைகளும் அது சார்ந்த பாலியல் வன் கொடுமைகளும் நமக்கு அதை உணர்த்துகின்றன .

ஆக்கிரமிப்பும் அடிமை முறையும்

ஆதியில் சிறு குழுக்களாக வாழ்ந்த மனிதஇனம் உழைப்பாளிகளாகவும் நிர்வாகியாகவும் தனியாக செயல்பட்டது பின்னர் நிர்வாகிகள் குறுநில மன்னர்களாகவும் அதன் பின் அடத்த குழுக்களை ஆக்கிரமித்தும் தன் ஆரம்பபகால போர்களை தொடங்கிவைத்தது மனிதனின் ஆக்கிரமிப்புகளுக்கு முதல் பலி பெண்களாக இருந்தார்கள் . டாக்டர் ஹெகல் என்ற தத்துவ அறிஞர் இதை முழுமையாக விவரிதிர்ருகிறார், பெண்கள் விலங்குகள் மற்றும் பண்ணைகளை ஆக்கிரமித்த மனிதர்கள் அங்கே அடிமைகளை உருவாகினார்கள் , தம்மை கிழ்படிய மருத்துவர்களை கொன்றும் பாமரர்களை அடிமைபடுத்தியும் தம்முடைய அடுத்த வேட்டைக்காக ஆயுதங்களை நவீனபடுத்தியும் இருக்கிறார்கள் இப்படியாக மனித சமுதாயத்தின் அறிவு வளர்ச்சியும் மனரீதியான இருண்ட பக்கங்களும் ஒரே அளவில் வளர ஆரம்பித்தன .

உலகின் நாகரீக கொட்டில்கள்

ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன் திராவிட நாகரீகம் கலை பொருளாதாரம் அயல்நாட்டு வர்த்தகம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளில் மேல்லோங்கி இருந்த காலகட்டத்தில் நாகரீகம் அறிவு என்றால் என்ன என்று கூட உணராத வெள்ளையர்கள் பதினாறாம் நூற்றாண்டில், நீ மாடு மேய்கத்தான் போவாய் என்று ஆசிரியரிடம் திட்டு வாங்கிய ராபர்ட் கிளைவ் என்ற அதிகாரி முலமாக இந்தியாவை மெதுவாக கபளீகரம் செய்தது . அவர்கள் மொழி ,மதம் மற்றும் கலாச்சார ரீதியாக இந்தியாவை அடிமைகொன்டர்கள் . நடை ,உடை , பாவனை மற்றும் பேச்சு திறனில் மிகவும் நாகரீகமடைந்த லண்டன் மா நகரிலே பதினேழாம் நுற்றாண்டு வரை ஆப்ரிக்க நாடுகளிருந்து கறுப்பின மக்களை கழுத்தில் வளையம் மாட்டி நாய்களை போல் இழுத்து வந்து லண்டன் மாநகர வீதிகளில் அடிமை சந்தை நடத்தினார்கள் இதுவே அமெரிக்காவிலும் ஆப்ரகாம்  லிங்கனுக்கு முன்புவரை நடந்தது .அதன் பின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மனிதனை அடிமை கொள்வது தவறென்று சர்வதேசிய சமூகத்தால் எற்றுகொள்ளபட்டது (இன்றும் நம்நாட்டில் கல் குவரிகளிலும் தீப்பெட்டி தொழில்சாலைகளிலும் இது தொடர்கிறது) 

இன அழிப்பு வேட்டைகள் 

அடிமை முறையை ஒழித்த சமூகத்தால் தன் பகையுணர்வையும் போர்க்குற்றங்களையும் ஒழிக்க முடியவில்லை . அலக்சாண்டர், நெப்போலியன்,ஹிட்லர் ,முசோலனி,போல்பாட் ,ராஜபட்சே என்று சர்வதேச கொலைவெறியர்களின் பட்டியல் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது . மனித இனத்தின் நாகரீக வளர்ச்சியின் ஆரம்பத்தில் இதுபோன்று பல இனங்கள் முற்றிலுமாக அழிக்கபட்டது . கணிதத்திலும் வானசாத்திரத்திலும் தேர்ச்சி பெற்ற மாயன் இன மக்கள் சூனியகாரர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு கத்தோலிகர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டனர் , அதன் பின் யூத இனத்தின் மீது ஹிட்லரும் கல்வி கற்ற நகரதவர்கள் மீது கம்போடிய அதிபர் போல்பாட்டும் நவீன முறையில் கொலை வெறியை அரங்கேற்றினர் , இன்று அவர்கள் கொள்ளு பேரன்னான ராஜபக்சேயும் அதே செயலை அதைவிட தீவிரமாக ஈழ மக்களிடம் நடத்துகிறார் .


வன்முறையும் பாலியல் கொடுமைகளும் 

இரண்டாம் உலக யுத்ததிற்கு முன் ஹிட்லர் யூத இன அழிப்புக்காக தம் நாட்டு
நிதி நிலை அறிக்கையில் இருபது சதவீதத்தை ஒதுக்கினர் . அதற்காக பல கொலை தொழிற்சாலைகளும் கொலை செய்ய தேர்ச்சி பெற்ற பல கொலையாளிகளும் பணியில் அமர்த்தப்பட்டனர் அதற்காக தனி கணக்கியல் துறையும் வெளியுறவு துறை அமைச்சர் கோயபல்ஸ் தலைமையில் நிறுவப்பட்டது . அவர்கள் யூதர்களின் கைகளில் வளையம் மாட்டி அவர்களை சித்திரவதைகுள்ளாகி எரித்து சாம்பலாகிய பின் அந்த வளயங்களை கணக்கியல் துறைக்கு தரப்படும் , அதன் எண்ணிக்கை படி அவர்கள் பதிவு செய்வார்கள் இறந்தவர்களின் தலை முடிகள் மட்டும் ஒன்றரைடன் டன் உர தொழில் சாலைக்காக சேகரிக்கப்பட்டது . போரின் முடிவில் ஹிட்லரின் வீழ்ச்சிக்கு பின் பெர்லின நகருக்குள் நுழைந்த ரஷ்ய வீரர்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்ற ஜெர்மானிய மக்கள் சுமார் அறுபதாயிரம் பேர்களை கொடுமைபடுத்தி கொலை செய்தது மனித வரலாற்றின் இழுக்கின் உச்சமாகும் , தாயை மகனையும் , தந்தையை மகளையும் சகோதரனை சகோதரியையும் , புணர செய்தும் , பெண்ணுறுப்புகளில் துப்பாக்கியை நுழைத்தும் , மார்பகத்தை அறுத்து எறிந்தும் மிருகங்களே வெட்கப்படும் அளவில் வேட்டையாடினார்கள் இன்று அதே காரியத்தை ராஜபக்ச தலைமையிலான சிங்கள ராணுவம் செய்துகொண்டு இருக்கிறது . பிடிபடும் போராளிகளையும் , சந்தேகத்திற்குள்ளாகும் பொதுமக்களை நிர்வாணபடுத்தியும் பெண்களை கற்பழித்தும் கொடுமையாக வேட்டையாடும் சிங்கள ராணுவத்தையும் அதன் தலைவர்களையும் மனிதர்களாக மாற்றும் பொறுப்பு யாருக்கு உள்ளது ?

வாழு வாழவிடு 

ஜெர்மனியில் வாழ்ந்த சிறந்த மனோதத்துவ நிபுணரான டாக்டர் சிக்மென் பிராய்டு என்பவர் மனித மனதை பற்றி சிறப்பாக பகுதாயிந்து உள்ளார் , காமமும் , வன்முறையும் மனித மனதின் இருபக்கங்கள் ஆனால் இரண்டும் ஒன்று சேரும் பொழுது மனிதன் மிருகமாகிறான் என்கிறார். இது இலங்கை படுகொலைகளில் தெளிவாக புரிகிறது இப்படி மனித வேட்டையாடும் மனித மிருகங்கள் தாங்கள் வாழ்க்கையிலும் சர்வதேச சமூகத்திலும் முற்றிலுமாக தோல்வி அடைகிறார்கள் . அழிக்கப்பட்ட தமிழினம் மட்டும் பரிதாபமானதல்ல , அதை அழித்த சிங்களர்கள் அதை விட பரிதாபமானவர்கள் . புத்த மதத்தை பின்பற்றுவதாக கூறிக்கொள்ளும் அவர்கள் வன்முறை இருளின் உச்சத்தில் இருக்கிறார்கள் . அவர்கள் தமிழினத்தை அழித்து இருக்கலாம் ஆனால் தங்கள் மன வக்கிரங்களை அழிக்க முடியாது , அதோடுதான் அவர்களின் மனைவி மக்களோடும் , சமூகத்திலும் வாழவேண்டிஇறுக்கும் அது மட்டுமன்றி அவர்களிடமிருக்கும் வன்முறை நச்சு அவர்கள் வாரிசுகளிடம் பல மடங்கு வீரியமாக வெளிப்படும் , இன்னும் இரண்டு தலைமுறைகளுக்குள் சிங்கள இனமென்று ஒன்று இருந்ததென்பதை உலக மக்கள் பதிவுகள் மூலமாகத்தான் தெரிந்துகொள்ளவேண்டி வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை. இன்று ஒரே இனத்துக்குள் அடித்து மாண்டுகொள்ளும் எதியோப்பியா மற்றும் சோமாலிய நாடுகளை போல் நாளை இலங்கையும் மாறலாம் .

உன்னை உணர்ந்துகொள் 

இது புகழ் பெற்ற சக்ரடீசை தத்துவஞானியாக ஏற்றுக்கொண்ட டெல்பி டேம்பிளின் வாசகமாகும் . மனிதனின் விஞ்ஞான அறிவு செவ்வாயையும் மற்ற கோள்களையும் அறியும் முன் தன்னை அறிந்துகொள்வதாகும் மனிதனின் மரணம் எந்த வழியாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் பிறப்பு ஆண் பெணுடைய அன்பான சேர்க்கை எனும் ஒரே வழிதான் . அதனால் அன்பு ஒன்றே அவன் இயல்பு , ஆனால் அதை விட்டு மனித சமுகம் மிகவும் இருளடைந்த சூழ்நிலைக்கு சென்றுவிட்டது . அதை மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்புவது நம் அனைவருடைய மட்டுமல்ல இது சவதேச சமுதாயத்தின் கடமையாகும் . புத்தன், போதிசத்வர் , மகாவீரர் , போன்ற மகான்களும் கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை போர்புரிந்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்த அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாடான இந்தயாவில் பிறந்த நாம் அனைவருமே அன்பையும் , சத்தியத்தையும் உலகிற்கு போதிக்க தகுதி உள்ளவர்களாக இருக்கிறோம் . அந்த செயலை நமது குடும்பம், நண்பர்கள் மற்றும் நமது சமுதாயத்திடமிருந்து தொடங்குவோம் . நன்றி .....

1 comment:

  1. உங்களுடைய நல்ல ஒரு கட்டுரையில் பிரபாகரனும், புலிகளும் தங்கள் சொந்த இன மக்களிடமே செய்த மோசமான போர்க்குற்றங்களை பற்றி குறிப்பிடாதது ஒரு குறை.

    ReplyDelete