சமுக உறவில் தேடுங்கள்

Loading

Tuesday, January 25, 2011

ப்ளாக் எழுதுனா நீ கொம்பனா ?


இன்று தேசிய வாக்காளர் தினம் :-  ஒவ்வொருவரும் இயன்றவரை வாக்களிக்கும் உரிமை பற்றியும் , அதன் அவசியம் பற்றியும் பிறருக்கு எடுத்துக்கூறி நம் நாட்டை உயர்த்துவதே லட்சியமாக கொள்ளவேண்டும். அதே சமயம் நாளை நம்நாடு 62வது குடியரசுதினத்தை கொண்டாட தயாராகிவரும் வேளையில் ஒரு மிக முக்கியமான பதிவினை பகிர்ந்துகொள்ள கடமைப்பட்டுள்ளேன் . சுதந்திரம் பெற்று குடியரசான ஒரு நாட்டின் மிகப்பெரிய பலம் , கருத்து சுதந்திரமாகும் . இச்சுதந்திரம் நம்நாட்டில் மிகவும் சுதந்திரமாக உள்ள வேளையில் அதனை சிலர் தவறாக பயன்படுத்தி மக்களையும் நாட்டினையும் அவமதித்து இழிவு செய்துவருகின்றனர் .

விரிவாக சொன்னால் , இந்த கருத்து சுதந்திரம் என்பது கணினியின் வாயிலாக அணைத்து மக்களும் தங்களுடைய சமூக வலைத்தளம் , வலை பதிவுகளில் தங்களுடைய எண்ணம் மற்றும் கருத்துக்களை பகிர்ந்தும் கேட்டும் கொள்கின்றனர் . என்னை பொருத்தவரை இந்த சமூக வலைத்தளம் மற்றும் வலைப்பதிவுகளை மூன்று வகையான மக்கள் பயன்படுத்துகின்றனர் ..

1.தேவை 

2.பொழுதுபோக்கு 

3.தொழில் 

தேவை 

இந்த வகையினர் Facebook , Twitter, Orkut, போன்ற ஏதோ ஒன்றில் கணக்கு வைத்துக்கொண்டும் , மெயில் பார்ப்பது மட்டுமே இவர்களின் வேலை மேலும் இவர்கள் ப்ளாக் வைக்கவோ நோட் எழுதவோ விரும்புவதில்லை , அப்படியே பார்த்தாலும் மேலோட்டமாய் மேய்ந்துவிட்டு தம் பணிக்கு திரும்பிவிடுகிறனர் .சில தகவல் தேடுவது மட்டுமே இவர்களின் இணையப் பயன்பாடு .அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மட்டுமே இணையத்தில் செலவிடுவர் .

பொழுதுபோக்கு 

இவர்கள் முதல் வகையினரை போலவே  Facebook , Twitter, Orkut, போன்ற ஏதோ ஒன்றில் கணக்கு வைத்துக்கொண்டும், தமது நட்பு வட்டத்தில் மட்டும் பகிர்ந்து கொண்டும், பெயரளவில் ஒரு ப்ளாக் வைத்துக்கொண்டு தன்னுள் தோன்றும் கதை கவிதைகளை பதிந்துவிட்டு தங்கள் வேலையை தொடர்வர் , இவர்களில் பலர் வலை உலகில் நடக்கும் விவாதங்களில் வாதிடாமல் , படிப்பது மட்டுமே வேலையாகும் ,  இவர்களின் இணையப் பயன்பாடு .அதிகபட்சமாக ஒரு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் மட்டுமே இணையத்தில் செலவிடுவர் .

தொழில் 

மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவர்கள் இந்த வகையினர் . ஏனெனில் மேற்கூறிய இரண்டு வகையினரையும் குழப்பும் அல்லது மாற்றும் திறன் கொண்ட இவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டிலோ , கணிணி சம்மந்தப்பட்ட துறையிலோ உள்ளவர்கள் என்பது குறிபிடத்தக்கது. இவர்களின் வேலையே தான் பின்பற்றும் அமைப்பையோ அல்லது தனது கொள்கையையோ தனக்கு பிடித்த தலைவர்களையோ முன்வைத்து மட்டுமே எழுதியும் அவர்களுக்காக வாதாடியும் சில தவறான தகவல்களை பரப்பியும் வருபவர்கள் . அதிலும் குறிப்பாக எதார்த்த நிலைமையிலிருந்து வேறுபட்ட சிந்தனையை துண்டுவதே  இவர்களின் நோக்கமாகும் . கருத்துகளில் சண்டையிடுவதும் விதண்டாவாதம் செய்வதுமே இவர்களின் தலையாய பணியாகும் .
இவ்வகையில்  Facebook , Twitter, Orkut, ப்ளாக் இல் கணக்கு வைத்துக்கொண்டு தான் ஒரு பெரிய கொம்பன் என்ற நினைப்பில் தங்கள் வலைத்தளம் முன்னணியில் வரவேண்டும் என்று நினைப்புடன் தவறாகவும்  தாருமாராகவும் எழுதும் தன்மை கொண்டவர்கள்.

தமிழையும், தமிழ்நாட்டையும் தாண்டி குடும்ப சுமைகளை சுமக்கும் தமிழர்கள், தாயகம் விட்டு வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் என, தமிழர்கள் கிளை பரப்பி இருக்கும் அனைத்து தேசங்களிலும் வாழும் தமிழர்கள் தங்களுக்குள் இன்னும் மாறாத, மற்ற முடியாத தமிழார்வ மிகுதியாலும், தமிழ் புலமையாலும், கவிதை, கதை, கட்டுரை என எழுதுவதை கடமையாக கருதுகின்றனர். இவர்கள் மட்டுமே தன் தேசம் தாண்டிநாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள்  என்றால் அது மிகையாகாது.

என்னைப்பொருத்தவரை புத்தகம்,உலகம்,சினிமா,அறிவு,வேலை ,தற்சமய  நிகழ்வு போன்றவற்றை உட்கார்ந்த இடத்தில் தம் கண்முன் நிறுத்தும் இணையில்லாதது இணையம் .
இதை வைத்துக்கொண்டு இதையே தொழிலாக கொண்டிருக்கும் சிலர்

* ஈழம்

* சினிமா மற்றும் சினிமா பிரபலங்கள்

* அரசியல் தலைவர்கள்

  இந்த மூன்றை மட்டுமே அதிகமாக விமர்சித்து மற்றவற்றை மறந்தவர்கலாயினர் .

இங்கே எந்தவொரு தனிமனிதனும் விமர்சனத்திற்கு உள்ளானவன்தான். அதற்காக தவறான தகவல்களை பதிவேற்றுவதும் பரப்புவதும் கூடாது.

  ஆனால் சிலர் வெறும் வருவாய்க்கு மட்டுமின்றி வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொள்ளவும், அனுபவிக்கும் ஆசையிலும் வெளிநாடு செல்பவர்கள். டாக்டர், இன்ஜினியர் ஆக வேண்டும் என்று சொல்வது போன்று வெளிநாட்டில் வேலை என்பதையும் சிறுவயதிலேயே பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் ஊட்டி வளர்க்கின்றனர். வேலை செய்வதற்கான சூழலும், வாய்ப்புகளும் அதிகம் என்பதாலும், சொந்த ஊரில் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்காகவும் வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் அதிகம். ஆனால் முக்கிய இலக்கு வருவாய்தான். இரண்டாவது இடத்தில்தான் வாழ்க்கை வசதிகள். 
இப்போதெல்லாம் தொழிற்கல்வி பயிலுபவர்களின் கனவே வெளிநாட்டு வேலை என்பதாகி விட்டது. ஐஐடி படித்தவர்கள் முதல் ஐடிஐ முடித்தவர்கள் மட்டுமின்றி, ஆரம்ப கல்வியை முடிக்காதவர்களும் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பட்டியலில் இருக்கின்றனர். இந்தியாவில் பல ஆண்டுகள் உழைத்து சிரமப்படுவதை விட வெளிநாட்டில் சில ஆண்டுகள் கஷ்டப்பட்டு, கைநிறைய சம்பாதித்து, செட்டிலாகி விடலாம் என்பது வெளிநாடு செல்பவர்களின் தாரக மந்திரம்.
அப்படி சென்றவர்களில் பலர் நமது குக்கிராமத்தில் வசிக்கும் ஏழை மக்களின் நிலையையும் குடிசைவாழ் தமிழர்களின் நிலையையும் சற்றும் தெரிந்தும் புரிந்தும் உணர்ந்தும் கொள்ளாமல் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நாட்டின் வசதி,கலாச்சாரம்,வளர்ச்சி,தொழிநுட்ப மேம்பாடு,ஆகியவற்றை எவ்வித அறிவுமின்றி,  நூற்றி முப்பது கோடி மக்களையும்,பலதரப்பட்ட ஜாதிகளையும், பற்பல மொழிகளையும் தனது சிறிய நிலப்பரப்பினுள் கொண்டுள்ள தீபகற்ப தாய்நாட்டுடன் ஒப்பிட்டு பேசுவதும்,விமர்சிப்பதும்,வளர்சிக்கு வித்திட்ட தலைவர்களை கேலிக்குள்ளக்குவதும் மிகவும் வெட்கத்துடன் வருந்தும் செயலாகும் .உதாரணமாக நம் தமிழ் நாட்டின் திட்டங்களை ஒரு ஏழைப் பயனாளின் பார்வையில் பார்த்தால் மட்டுமே அதன் பயனும் ,நோக்கமும் நமக்கு விளங்கும்.இத் திட்டங்களை குறை கூறியும் எதிர்த்தும் பதியும் எதிர்பதிவர்கள் யாரும் ஏழை கிராமவாசிகளின் நிலையிலோ அவர்களின் கஷ்ட நஷ்டங்கழிலோ எந்தவித தொடர்பும் இல்லாதவர்களே ...!!

எந்த ஒரு கண்டுபிடிப்பும் தொழில்நுட்பமும் ஆக்கத்திற்கு மட்டுமே பயன்பட்டால் நாமும் நமது நாடும் ஏன் இந்த மனித சமுதாயமுமே நல்வழி கண்டு நன்மை பெரும் என்பதில் எள்முனை ஐயமும் இல்லை ..

No comments:

Post a Comment