தொகுப்புகள்

Search This Blog

Tuesday, January 18, 2011

சோ(மாறி) ஒரு இரட்டை நாக்கு பொறம்போக்கு


துக்ளக் ஆண்டு விழாவில் திருவாளர் சோ ராமசாமி மீண்டும் தனது அழுத்தமான பார்ப்பனர் அடையாளத்தை காட்டிக் கொண்டுவிட்டார்.

"கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டினால் என்ன பயன்? அந்த மாநாட்டில் கலைஞரை எல்லோரும் புகழ்வார்கள்; மாநாட்டு மலரிலும் புகழ்வார்கள்;

தன்னைப் பிறர் பாராட்டுவதை - புகழ்வதைக் கேட்பதற்காகத்தான் மாநாட்டை கலைஞர் நடத்துகிறார். தமிழ் வளர்ச்சிக்கு அங்கு எதுவும் நடக்கப்போவதில்லை. ஆங்கில மொழி - இப்படி மாநாடு நடத்தியதாலா வளர்ந்தது?"

என்று துக்ளக் ஆசிரியர் சோ - அவருக்கே உரிய வயிற்றெரிச்சலோடு - அவரது பத்திரிகையின் 42 வது ஆண்டு விழாவில் பேசியிருக்கிறார்.

அவர் நடத்திய அந்த ஆண்டு விழாவில் பேசியவர்கள் அனைவரும்

‘சோ’ - தைரியசாலி

விலைக்கு வாங்க முடியாதவர்

என்ற ரீதியில் அவரை வானளாவப் புகழ்ந்து பேசி இருக்கிறார்கள்.

அதையெல்லாம் மகிழ்ச்சியோடு ரசித்துக் கேட்டுக் கொண்டுதானிருந்தாரே தவிர - "அய்யோ வேண்டாம்; போதும் புகழ்ந்தது" என்று தடுத்து விடவில்லை அவர்!

இப்படிப்பட்ட புகழுரைகளை - பாராட்டு களைக் கேட்க வேண்டும் என்பதற்காகவே

ஆண்டுதோறும்

விழா எடுத்து

அதிலே

பேசுவோர் தனக்கு வழங்கும் பாராட்டுகளை ரசித்துக் கொண்டிருப்பவர்!

அப்படிப் பாராட்டுமளவிற்கு இந்த மகானுபவர் என்ன சாதனை நிகழ்த்திக் காட்டி விட்டார்?

- திராவிடர் இயக்கத்தை நையாண்டி செய்வது,

- புராண, இதிகாசங்களிலுள்ள

மூடத்தனங்களைப் பரப்புவது

- ஊழல் எதிர்ப்பு என்ற பேரால் -

ஜெயலலிதாவுக்கு தங்க முலாம் பூசுவது

போன்ற சமூக விரோத - மக்கள் விரோத - பகுத்தறிவுக்கும் விஞ்ஞானத்திற்கும் எதிரான கழிசடைக் கருத்துக்களைப் பரப்புவது

என்பதைத் தவிர

வேறு என்ன சாதித்துவிட்டார்?

செம்மொழி மாநாட்டை அவர் கேலி செய்வது ஒன்றும் புதியதில்லை. சாதி வெறியரான அவர் - தனது சுயசாதி யினரின் அபிமானத்துக்குரிய சமஸ்கிருதத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுபவர்.கோயில்களில் குடிகொண்டிருக்கும் சாமி சிலைகளுக்கு சமஸ்கிருதம்தான் தெரியும், தமிழ் புரியாது என்பார். அதேசமயம் - தேவாரம் பாடிய மூவரிலிருந்து 63 நாயன்மார்களின் வரலாற்றை வாரா வாரம் எழுதுவார்! அவர் போற்றி எழுதும் - திருநாவுக்கரசரோ, ஞானசம்பந்தரோ, சுந்தரமூர்த்தி நாயனாரோ இறைவனை எந்த மொழியில் போற்றிப் பாடினார்கள்? தமிழில்தானே? திருஞானசம்பந்தருக்கு பார்வதியே வந்து ஞானப்பால் ஊட்டினாரே; அந்த சிசு, பார்வதி ஊட்டிய பாலைக் குடித்து விட்டுப் பாடிய பாடல் எந்த மொழியில்? தமிழில்தானே? மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் தமிழ்தானே? சேக்கிழார் சுவாமிகள் - பெரியபுராணம் பாடினாரே - அதற்கு - ஈசனே தானே முதலடி யைப் பாடினார் - அதை உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கரியவன் என்றுதானே - தமிழில் தானே அடியெடுத்துக் கொடுத்தான். திருஞானசம்பந்தர் - மதுரை கூன் பாண்டியனின் தீராத வயிற்று வலியையும் (சூலை நோய்) கூன் விழுந்த முதுகையும் போக்கினாரே - அதற்கு அவர் பாடிய "மந்திரமாவதும் நீறு; வானவர்மேலதும் நீறு" என்ற பதிகம் தமிழ்ப் பதிகம்தானே? திருமறைக்காட்டில் (வேதாரண்யத்தில்) நூற்றுக் கணக்கான வருடங்களாக - திறக்க முடியாதபடி - அடைத்துக் கிடந்த ஆலயக் கதவை - தமிழில் பதிகம் பாடித்தானே அப்ப ரடிகள் - ஞானசம்பந் தருடன் இணைந்து திறந்து வைத்தார்!திருவெண்ணைநல்லூரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருமணத்தன்று இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்டபோது இறைவனின் விருப்பப்படி பாடிய பாடல் - "பித்தா பிறைசூடி" தமிழ்ப் பாடல்தானே?இதையெல்லாம் எழுதி எழுதி அல்லையன்ஸ் பிரசுரம் மூலம் காசு சம்பாதித்து வயிறு கழுவும் பக்தி வியாபாரி சோ 

தமிழில் அர்ச்சனை செய்தால் அது சாமிக்குப் புரியாது. சாமிக்கு ‘வைபரேஷன்’தான் முக்கியம். அந்த அதிர்வுகள் சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது என்று வக்கணை பேசுவார். காரணம் என்ன? அவரது சுயசாதியினருக்கே பொதுவான தமிழ் விரோதம்- சமஸ்கிருத அபிமானம்தான்! உலகத் தமிழ் மாநாட்டினால் ஒன்றும் பயனில்லை என்கிறார்; அதனால் தமிழ் வளராது என்கிறார். ஆனால் - மலேசியா - கோலாலம்பூரில் ஆரம்பித்து, சென்னை, பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலா லம்பூர், மொரீசியஸ், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 8 முறை மாநாடு நடத்தப்பட்டிருக் கிறதே உலகத் தமிழ் மாநாடு? உலக முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான தமிழறிஞர்கள் கலந்து கொண்டு ஆய்வு அறிக்கைகள் படித்தார்களே- அதனால் எல்லாம் தமிழ் வளரவில்லையா?

‘சோ’வின் சொந்த ஜாதிக்காரராகிய சங்கராச்சாரியார் சமஸ்கிருத வளர்ச்சிக்காக சதஸ்கள் நடத்தினால் அதன் மூலம் சமஸ்கிருதம் வளரும் என்று மட்டும் நம்புகிறாரே எப்படி? தமிழ்நாட்டு அரசியலை - வெறும் அரட்டைக் கச்சேரியாக மாற்றுவதற்காகவே பத்திரி கை நடத்தும் சோ - ஆண்டுதோறும் தன்னைப் புகழ மண்டபக் கூட்டங்கள் நடத்தும் சோ - கலைஞர் - செம்மொழி மாநாடு நடத்துவது தம்மைப் புகழ - பாராட்டத்தான் என்கிறாரே அதை என்னவென்று வர்ணிப்பது?சங்கராச்சாரியார் உரைகளை எல்லாம், கட்டுரைகளை எல்லாம் ‘தெய்வத்தின் குரல்’ என்று புகழும் ‘சோ’க்கள் - இப்படியெல்லாம் பேசுவது எந்தப் புத்தியினால்?பெரியார் தந்த புத்தியை உபயோகித்துப் பார்த்தால் - அது எந்தப் புத்தி என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல பளிச்சென்று விளங்கும்!

கேள்வி பதில் -விளக்கம் 

கேள்வி: ரிமாண்ட் கைதிகள் மற்றும் சிறைக் கைதிகளுக்கு கிராமியக் கலைகளில் பயிற்சி அளிக்கலாம் என்று கனிமொழி எம்.பி., யோசனை தெரிவித்துள்ளதுபற்றி?

பதில்: சரி தான் சொன்னபடி நடக்க வேண்டிய, அடிமை நிலையில் இருக்கிறவார்கள்தான் இந்தப் பயிற்சியை ஏற்பார்கள் என்று அவரே தீர்மானித்து விட்டார் போலிருக்கிறது. கல்லுடைக்கச் சொன்னால் உடைக்க வேண்டியவர்கள் இதைச் செய்ய மாட்டார்களா என்ன? கலை, கைதி சங்கமம்!

(துக்ளக் 3.2.2010)

கிராமியக் கலைகள் என்றால் இந்த மண்ணுக்குரியது. தமிழர்களுக்குரியது. அதனை அழித்துவிட்டு அதன் மேல் ஆரியப் பார்ப்பனக் கலாச்சார சங்கதிகள் அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கின்றன. ஆத்திரம் வராதா அக்கிரகார சிகாமணிகளுக்கு?

ஆத்திரத்தை ஏதோ ஒரு வகையிலே வெளியேற்றாவிட்டால் அவாளுக்கு ரத்தக் கொதிப்பு வந்து விடுமே. அந்தப் பாணிதான் சோவின் பதிலும்.

சரி, அவர் விவாதப்படியே வருவோம்.

கலையைக் கற்றுக் கொள்ளும்போது குரு சொன்னபடி நடந்தால் அதில் என்ன தவறு இருக்கிறது? அதற்கு பெயர் பார்ப்பன சோக்களின் அகராதியில் அடிமை நிலை என்று பெயரா? ஆசிரியர் சொன்னபடி நடக்காமல் கல்வி பயின்ற அடங்காப் பிடாரிகளா இவர்கள்?

கலை - சதி - சங்கமம் என்று இவாள் சொல்லும் முறை கிராமியக் கலையைக் கொச்சைப்படுத்தும் மேல் ஜாதி ஆணவச் சிந்தனைப் போக்கு என்பதை உணர வேண்டும். சின்ன வயதில் வெண்ணெய்யைத் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியக் கிருஷ்ணனைப்பற்றி நாட்டியம் ஆடினால் தானே அவாளுக்கு இனிக்கும்!

*******************************************


கேள்வி: ஆண்களுக்குப் போட்டியாக பெண் அதிகாரிகளும் துணிந்து லஞ்சம் வாங்க ஆரம்பித்திருக்கிறார்களே! பெண்களின் துணிச்சலை நினைக்கும் போது வியப்பாக இருக்கிறதே?

பதில்: ஒரு வியப்பும் இல்லை. பேசாமல், ஆண்கள் வாங்குகிற லஞ்சத்தில் 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வரலாம். அது பெண்மைக்கும் பெருமை; நாட்டிற்கும் கவுரவம்; சமநீதி; சம உரிமை... எல்லாம்.

(துக்ளக் 3.2.2010 பக்கம்13)

எப்பொழுதுமே பெண்களை மட்டம் தட்டி எழுதுவதில் குறியாக இருப்பவர்தான் இந்த சோ ராமசாமி. காரணம் அவாளின் மனுதர்மச் சிந்தனை.

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனுதர்மம் அத்தியாயம் 9; சுலோகம் 17)

இந்த மனுதர்மத்தை அடேயப்பா, எப்படியெல்லாம் தூக்கிப் பிடித்து எழுதியிருக்கிறார் இந்த சோ.. வெறுக்கத்தக்கதா பிராமணீயம்? என்ற சோவின் தொடரைப் படித்தால் இந்த உண்மை விளங்கும். அவாள் வீட்டுப் பெண்களையும் இப்படி ஆபாசமாகத்தான் நடத்துவார்கள் போலும்!

சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பெண்ணுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும் என்று எழுந்திருக்கும் கோரிக்கையைக் கொச்சைப்படுத்துவதற்காகவே லஞ்சம் வாங்குவதில் 33 சதவிகிதம் ஒதுக்கீடு செய்யலாமே என்று பேனா பிடிக்கிறார்.

பெண்களையும் மட்டம் தட்ட வேண்டும் இடஒதுக்கீட்டையும் கொச்சைப்படுத்த வேண்டும் ஒரே கல்லால் இரண்டு காய்களை வீழ்த்த வேண்டும் என்ற அக்கிரகாரக் கீழ்ப்புத்திதான் சோ வின் இந்தப் பதிலில் வழிகிறது.



கேள்வி: தி.மு.க. அரசு அறிவித்த இலவசத் திட்டங்களில் தங்களுக்குப் பிடித்த திட்டம் எது?

பதில்: இரண்டு ஏக்கர் நிலம் இலவசம் என்கிற திட்டம் சிறப்பு வாய்ந்தது. என்றும் வாக்குறுதியாகவே இருக்கக் கூடியது. ஒரு வாக்குறுதி என்றால் அது நிலைத்து இருக்கவேண்டும். இந்த இலவசம் அப்படிப்பட்டது. வாழும் வள்ளுவர் மாதிரி, வாழும் வாக்குறுதி! அழிவே கிடையாது (துக்ளக், 17.2.2010).

இதுபோன்ற பார்ப்பனத்தனமான _ வறட்டுத்தனமான பதிலை திருவாளர் சோ ராமசாமி அய்யரைத் தவிர வேறு யாரால்தான் எழுத முடியும்?

தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் என்று இன்றைக்குக்கூட முதல்வர் கலைஞர் அவர்கள் முரசொலியில் ஒரு பட்டியலை அளித்துள்ளார்.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி

ஏழைப் பெண்கள் திருமணம் செய்துகொள்ள நிதி உதவித் திட்டம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவித் திட்டம்

பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்

உழவர் சந்தை திட்டம்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

கூட்டுறவுக் கடன்கள் ரத்து

உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

108 ஆம்புலன்ஸ் வசதித் திட்டம்

கலைஞர் வீட்டு வசதித் திட்டம்

என்று ஒரு பட்டியலை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

அறிவு நாணயம் அடிமட்ட அளவுக்கு இருந்தால்கூட இவற்றையெல்லாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருப்பர்.

பார்ப்பன அம்மையாரை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்து அழகு பார்க்கவேண்டும் என்ற அடங்கா ஆசை பிடரியைப் பிடித்துத் தள்ள இப்படி தத்துபித்து என்று எழுத ஆரம்பித்துள்ளார்.

மேற்கண்ட திட்டங்கள் எல்லாம் பஞ்சம, சூத்திர மக்களுக்குத்தானே! பெரியார் சமத்துவப்புரம் என்றால் இனிக்குமா இந்த இடிஅமீன் கூட்டத்துக்கு?

அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்றால், அக்கிரகாரத்துக்கு அதனால் என்ன நன்மை?

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி ஏழை எளிய மக்களின் தலைவிதியை மாற்றலாமா?

அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளில் தலையிட்டுத், தலையிட்டு, அவர்களைத் தலைதூக்கி விட்டால் அவாளுக்குப் பிடிக்குமா?

மக்களின் ஆதரவு அமோகமாக தி.மு.க. ஆட்சியின் பக்கம் நாளும் வளர்ந்தால் அது ஜெயலலிதா அம்மையாருக்கு ஆபத்தாயிற்றே!

அதனால்தான் அம்மிக் குழவியை எடுத்து வயிற்றில் குத்திக் கொள்கிறார் இந்த வடிகட்டின பார்ப்பனர்!

இரண்டு ஏக்கர் நிலம் இலவசம் என்ற திட்டம் சிறப்பு வாய்ந்தது; நிரந்தர வாக்குறுதியாக இருக்கும் என்று நக்கல் செய்கிறார்.

இந்தத் திட்டம் ஒரு நொடிப்பொழுதில் நிறைவேற்றப்படக் கூடியதல்ல; அதேநேரத்தில் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது மறுக்க முடியுமா சோவால்?

அவர் கூற்றுப்படியே பார்த்தாலும் இந்தத் திட்டத்தைத் தவிர தி.மு.க. கொடுத்த மற்ற திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை வேறு வழியின்றி திருவாளர் சோ ஒப்புக்கொண்டுள்ளார் என்பது உண்மை!

வறட்டுத்தனமாக எழுதுபவராலேயே தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மறைக்க முடியவில்லையே!
-நன்றி:- விடுதலை

பார்ப்பனர்களின் எல்லாப் புரட்டுகளையும் தோலுரித்த பெரியார் - இறப்புக்குப் பின் எந்த லோகத்திலும் இருக்க மாட்டார்! இந்த லோகத்திலேயே இருக்கிறார் - பகுத்தறிவு, நாத்திகம், அறிவியல், மனித நேயம் என இன்னோரன்ன பல அறிவுக் கருத்துகளின் வடிவில் இருக்கிறார் - என்றென்றும் இருப்பார்!

தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் அதில் குற்றம் குறை கண்டுபிடிப்பவர் நம்ம சோ ராமசாமி அவர்கள். தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தினால் அதுறகும் தி.மு.க. மீது பழி மழை பெய்தால் அதற்கும் தி.மு.க. மீது பழி என்று குறை சொல்லுபவர். இவருக்கு பத்திரிக்கை வேறு இருப்பதால் உடனே கார்ட்டூன் வேறு தீட்டிவிடுவார். கலைஞர் என்றால் காய்ச்சி எடுக்கும் அவரது கார்ட்டூன்கள் ஜெயலலிதாவோ மற்ற இந்துத்வ தலைவர்கள் என்றாலோ வெண்சாமரம் வீசும். 

இந்த துக்ளக் சோமாறி ஒரு இரட்டை நாக்கு பொறம்போக்கு ஜந்து .. செம்மொழியாம் நம் தாய்த்தமிழையும் தமிழர் தம் பண்பாட்டையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டும் குள்ளநரி இந்த மொட்டைப் பாப்பான். தமிழை நீசபாசை என்று இழிசொல் பேசும் காஞ்சிக் கொலைகாரன் ஊத்தைவாய் காமகேடி சங்கராச்சாரியின் ஊதுகுழல் இவன். ஏன்.. இவனுக்கு தில்லு இருந்தால் செத்துப்போன ஆரிய மொழியாம் சமஸ்கிருதத்தில் பத்திரிக்கை நடத்த வேண்டியது தானே இந்த துரோகி !

இவன் போன்ற துரோகிகளின் பருப்பு இங்கே தமிழ்நாட்டில் வேகவே வேகாது.

12 comments:

  1. //ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி

    ஏழைப் பெண்கள் திருமணம் செய்துகொள்ள நிதி உதவித் திட்டம்

    கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதி உதவித் திட்டம்

    பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம்

    உழவர் சந்தை திட்டம்

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

    கூட்டுறவுக் கடன்கள் ரத்து

    உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்

    108 ஆம்புலன்ஸ் வசதித் திட்டம்

    கலைஞர் வீட்டு வசதித் திட்டம்
    //

    இதில் எதாவது தொலை நோக்குடன் இருக்கிறதா? எல்லாம் வாக்கிற்காக. இதில் நீங்கள் சோ பற்றி பேசுகிறீர்கள்! நீங்கள் என்னதான் சொன்னாலும் இலவச திட்டங்களால் எள் முனையளவு கூட நன்மை கிடையாது. எல்லாமே ஒன் டைம் பெனிபிட் மட்டுமே. இது கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைக்கும் உத்தி! இதற்க்கு பதில் நிரந்தர வருமானத்திற்கு வழி ஏற்படுத்தினால் உபயோகம் உண்டு!

    சோ வை புகழ்ந்து பேசுபவர்களுக்கு சோ வினால் எந்த ஆதாயமும் இருக்கமுடியாது. சோ பதவியில் இல்லை. ஆனால் கருணாநிதி அப்படியா? பாரட்டுபவர்களில் பாதி காக்கை கூட்டம். பதவி இல்லை என்றால் ஓடிவிடும் என்று தெரிந்து தான் பேசுகிறீர்களா?

    ReplyDelete
  2. தலைப்பு மிக 'கண்ணியமாக' உள்ளது!

    ReplyDelete
  3. ஈழத்தில் ‘உடன்பிறப்புகள்’ பிணத்தை எண்னிக்கொண்டிருந்தபோது பணத்தை எண்னிக்கொண்டிருந்ததை போடாமல் விட்டுவிட்டீர்களே. பரவாயில்லை நீரா ராடியா டேப்பில் கனியின் குரலிலேயே இருக்கிரதே!

    ReplyDelete
  4. அவரோட மற்ற கேள்வி பதில்களையும் இங்கே பதிவிட முடியுமா, மெய்யாலுமே ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கு.

    ReplyDelete
  5. Nalla pathivu! Aanaal payan edhuvum irukkadhu...erumai maattin meedhu peidha mazhai polave aagum....cho(mari) ennavo thirundhap povathu illai! Thamizhar thelivu adainthaal podhum!

    ReplyDelete
  6. ஐயோ , சிலர் உளறினாலும் தெரியாமல் உளறுகிறார்கள் ஆனால் , அனைத்தும் தெறித்த இவர்கள் நம் தலைவரை இவள்ளவு கேவலமாக ஏசுவதா ? என்னை விட , விஜயகாந்த் , சீமான் , சோ , சு .சாமி , ஆகியோர்கள் , அறிவிலும் , அனுபவத்திலும் , வயதிலும் , மிக மிக உயர்ந்தவர்கள்தான் ஆனால் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை அது யாராக இருந்தாலும் இவ்வளவு கேவலமான விமர்சனங்களை வைக்க கூடாதுங்க.. முடியலைங்க ........, இதயம் வலிக்கிறது .....
    விமர்சனங்கள் நாகரிகமாகக் இருக்கவேண்டாமா?

    ReplyDelete
  7. bandhu@ தொலைநோக்கு என்று எதை சொல்கிறீர்கள் , உதாரணம் கொடுங்கள் ப்ளீஸ் ....., பதில் சொல்கிறேன்

    ReplyDelete
  8. அட அட அட.... உங்க தலைவலியின் அடிப்பொடிகள் தானே நீங்கள் .. அதான் அதே மாதிறி உளரல்.. இவர்கள் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்களாம் ஆனால் கருணாநிதியை விமர்சிக்கும் போது மட்டும் நாகரீகம் வேண்டுமாம்... வாங்குற காசுக்கு மேல கூவரது இதானா?

    ReplyDelete
  9. //தொலைநோக்கு என்று எதை சொல்கிறீர்கள் //
    நிரந்தர வருமானத்திற்கு வழி ஏற்படுத்தினால் உபயோகம் உண்டு!

    ReplyDelete
  10. ur hidden negative side of Dr.kalaignar.,and positive side of cho.,,,,

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete