சமுக உறவில் தேடுங்கள்

Loading

Wednesday, January 19, 2011

சீமான் - பத்து நாளில் பல்டி அடித்து சாதனை


திங்கட்கிழமை, ஜனவரி, 10, 2011 மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
காங்கிரசை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு அளியுங்கள் என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்வேன். இதை கூட சொல்வதற்கு தைரியும் இல்லை என்றால் நான் எப்படி போராளியாக முடியும். யாருக்கு வேண்டு மானாலும் ஓட்டு போடுங்கள் என்று குடு குடுப்பக்காரன் போல் நான் ஜோசியம் சொல்ல மாட்டேன்.

புதன்கிழமை, ஜனவரி 19, 2011 :-தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பாபர் மசூதியின் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது.இந்த கருத்தரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். 
அப்போது அவர் பேசியதாவது,

 ஈழத்தில் உள்ள தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி. எனவே அவர் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தான் நான் சொன்னேன். அதற்காக நான் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா? நான் ஆதரிக்கிறேன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லையே?


சீமான் முரண்பாடுகளின் மூட்டை

பெரியாரின் பேரன், மாமேதை மார்க்சு மற்றும் அண்ணல் அம்பேத்கரின் மாணவன், தம்பி பிரபாகரனின் தம்பி, இதுதான் அண்ணன் சீமான் மேடைதோறும் முழங்கும் முழக்கம்.
பெரியார்பேரனின் அழகு

தனது முதல் படத்தில் முதல் காட்சியிலேயே ஒரு விதவை பெண் ஒருத்தியை காண்பித்ததன் மூலம் ஒரு புரட்சி செய்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும் சீமான் தன்னை அறிமுகப்படுத்திகொண்ட விதமேவேறு, அதே படத்தில் ஒருபாடலில் '' மன்னாதி மன்னவராம் மறவர்குல மாணிக்கமாம், முக்குலத்து சிங்கமுங்க முத்துரமலிங்கமுங்க'' என்று தான் யார் என்பதை அடையாளப்படுதுகிறார்.

பின்பு பெரியார் திராவிடக்கழக மேடைகளில் முழக்கங்கள் புதிய அடையாளங்கள், நாத்திகவாதி, தமிழ்தேசியாவாதி, பகுத்தறிவாளன் இன்னும் பல....

முற்போக்காளனின் அடையாளத்தோடு மீண்டும் ஒருபடம் 'தம்பி' அதிலும் உ.முத்துராமலின்கத்தின் படத்தைக்காட்டி தான் யார் என்பதை மறுபடியும் அடையாளப்படுத்திக்கொண்டார், சர்சையான பின்பு அது தன்னை அறியாமல் நடந்ததாக விளக்கம் சொல்லி மன்னிப்பும்கேட்டார், பின்பு மீண்டும் உ.முத்துராமலிங்கத்தின் சிலைக்கு மாலை அணிவித்து சர்சைக்குள்ளானார் இம்முறை புதியவிளக்கம் உ.முத்துராமலிங்கம் ஒரு போராளி எனவும்

( ஏன் என்றால் உ.முத்துராமலிங்கம் முன்றாம் உலகமாக யுத்தம் அவரது தலைமையில் நடக்கும் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர் ,) அவருக்கு பாராளுமன்றத்தில் சிலைவைத்தால்பத்தாது உருசியாவிலும் சிலைவக்கணும் என்கிறளவுக்கு பேச்சு........கோளறு எங்கன்னு தெரியல........

இவரோ பகுத்தறிவாளர், கடவுள் மறுப்பாளர், தந்தை பெரியார் இவரை சாதி என்னும் சாக்கடையில் இருந்து பிடுங்கி தெளிந்த இடத்தில் நட்டதாக சொல்லிக்கொள்பவர். உ.முத்துரமலிங்கமோ பயங்கரமான ஆத்திகவாதி, சாதி சண்டைகளுக்கு இன்றுவரை காரணமாக இருப்பவர். இருவருக்கும் கொள்கையிலும் ஒற்றுமையில்லை, அவரை போராளி என்பதற்கு வேறென்ன காரணம்?

பிராமணர்களை தனது பேச்சால் வெளுத்துவாங்கும் சீமான் கமல்ஹாசனை மட்டும் தலைவர் என்றும் மண்ணின் கலைஞன் என்று சொல்லுவதற்க்கு என்ன காரணம்? விருமாண்டி மற்றும் தேவர்மகன் தான் காரணம்... நாம் தமிழர் இணையதளத்தில் இருந்த பெரியார் எங்கே? பெரியாரின் அடையாளமான கருப்பு நிறம் எங்கே?..........சீமானுக்கு பெரியார் கன்னடராக தெரிந்துவிட்டரா ?

தமிழ்தேசியம் பேசும் நீங்கள் தலித்தியம் பேசுவதில்லை என்றால் நீங்க ஏன் சேரியில் கொண்டுபோய் பிரச்சனையை நிறுத்துகிறீர்கள் நாம் தமிழனாய் ஒன்றினைவோம் என்கிறீர்கள். நாங்க மட்டும் சாதியை மறந்து உங்களின் பின்னால வரணும் நீங்க அதிலேயே தொங்கிட்டு இருப்பீங்க, அண்ணல் அம்பேத்கரின் படம் பொறித்த t -shirt அணியச்சொன்னால் நான் வெள்ளைநிற சட்டை அணிவதில்லை என்றுசொல்லிவிட்டு, பின்பு அவன் என்ன தமிழனா? என்று நெருங்கிய வட்டங்களில் மட்டும் பேசுவது ......... சேகுவேரா மட்டும் என்ன தமிழனா? சேகுவேர படம் பொறித்த t -ஷர்ட் அணிவதில்லையா? எங்கிருக்கிறது பிரச்சனை, யாரை ஏமாத்த எங்களையா அல்லது உங்களை சார்ந்தவர்களையா? சேரியில் கொண்டுபோய் நிறுத்துறோம் என்றால் ஓட்டு பொறுக்க சேரிக்கு போகபோரதில்லையா? ஈன சாதி.......... இது எவனுடயவாயில் இருந்து வரும் சொற்கள்.சாதிவெறி பிடித்தவனின் வாயிலிருந்து வரும் சொற்கள் அல்லாமல் வேறு எவை ?. உணர்சிவசப்பட்டு உரக்க பேசினால் பத்தாது ....... பக்குவபடனும்.... தமிழ்தேசியம் பேசி ஆட்சியை கைபற்றும் கனவோ? பெரியாருக்கு அரசியல் தேவையில்லாமல் இருக்க பேரனுக்கு தேவையோ?

மக்களுக்காகப் போராட…அதுவும் தமிழர்களுக்காகப் போராட ‘நாம் தமிழர்’ என்னும் தமிழர்களுக்காகவே போராடும் (!?) கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம், தமிழர் திருநாளுக்கான இலவசப் பொருட்கள் வழங்கும் பையில் தி.மு.க வின் சின்னம் எப்படி இடம்பெறலாம் என்பது..

ஈழத்தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைபட்டுத் துன்பப்படும் நிலையில், வீரமாகப் பேச மட்டும் சீமானுக்கு அரசியல் அரங்கில் தானும் இருக்கிறேன் என்று நிலைநாட்ட இந்த அல்ப விஷயத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லையா என வருந்துகிறேன்..

நன்றி -நக்கீரன் மற்றும் ஒன் இந்தியா  
நன்றி - தமிழ்குறள்  


5 comments:

 1. மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு குளிர் காய நினைப்பவர்களில் இவரும் ஒருவர். எதையாவது செய்து இரண்டு சீட்டுகள் வாங்கி திருமா போல புரட்சி வாதியாக மாறத் துடிப்பவர்.

  ReplyDelete
 2. பிறரை குறை கூற திமுகவினருக்கு எந்த வித தகுதியும் இல்லை... உங்கள் தலைவலி கருணாநிதி அடிக்காத பல்டிகளா? ராஜாகி தொடங்கி கனிமொழி வரை எத்தனை பல்டிகள் ..... ஒரு கின்னஸ் சாதனையே படைத்தவர் உங்கள் கருணா....

  ReplyDelete
 3. பட்சோந்தி சீமான்

  ReplyDelete
 4. வணக்கம் சகோதரி ,
  தூய்மையான மக்கள் நலன் விரும்பி ஒருவர் பெயர் உங்களால் கூற இயலுமா?(மனசாட்சியுடன் )
  நட்புடன் ,
  கோவை சக்தி

  ReplyDelete
 5. neengal mattum ambedkar peyaral sadhi pesuvadhu endha oor niyayam ... manushiya irunga apram tamizhachi agalam..

  ReplyDelete