தொகுப்புகள்

Search This Blog

Tuesday, January 11, 2011

பெரியார் பேரன் , கருப்பு எம்.ஜி .ஆர் - பாதாளத்தில்


தமிழக அரசியலில் களம் கண்டவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், டி.ராஜேந்தர், பாக்கியராஜ், சீமான், கார்த்திக் ,சரத்குமார்  என்று பலர். இப்பட்டியலைக் கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும். எம்.ஜி.ஆரைத் தவிர வேறு எவரும் சிவாஜி உள்பட அரசியலில் யாரும் எடுபடவில்லை என்பதே ஆகும். ஜெயலலிதா அரசியலில் களம் இறங்கும்போது அவர் ஒரு முன்ளாள் நடிகைதான். அதுவும் அவருக்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு ஏதுமில்லை என்பது அவர் தனியாக அதிமுக(ஜெ) அமைத்து போட்டியிட்டபோது ஏற்பட்ட படுதோல்வியும் பர்கூரில் தனிப்பட்ட முறையில் தோல்வியடைந்தபோதும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.ராஜீவின் அனுதாபமும் ,எம்.ஜி.ஆரின் செல்வாக்கினால்தான் இன்றுவரை ஜெயலலிதாவின் அரசியல்வண்டி ஓடிக்கொண்டுள்ளது. கலைஞரை எடுத்துக்கொண்டால் அரசியலிருந்துதான் அவர் சினிமாவுக்கு வந்தார். டிசினிமாவிலிருந்து அரசியலுக்குச் சென்றவர் இல்லை என்ற உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்.

சரி, மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று எம்.ஜி.ஆர் வெற்றி பெறவில்லையா ?அதேபோல் நானும் வெற்றிக்கொடி நாட்டுவேன் என்று விஜயகாந்த் நினைப்பாரானால் அது புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்ட கதையாகத்தான் முடியும்.

அன்றைய சூழலில் மக்கள் சினிமா கதாநாயகர்களைப் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. ஒரு காலத்தில் எட்டாக்கனியாக இருந்தது சினிமா. இப்போது தகவல் தொடர்புச்சாதனங்களால் கனவுத்தொழிற்சாலையின் அத்தனை தொழில்நுணுக்கங்ளும் சாதாரண பாமரனுக்குக் கூட அத்துப்படியாகியுள்ள சூழ்நிலை. இதை நடிகர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டிப்பட்டியும் அருப்புக்கோட்டையும் கூட முன்னேறி விட்டன. ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வெற்றி பெறுவது கூட முக்குலத்தோர் மற்றும் அதிமுக வாக்குவங்கியால் மட்டுமே! சினிமா கவர்ச்சியினால் அல்ல. சென்ற நாடாளுமன்றத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட நடிகர் சரத்குமாரின் தோல்வியையும் கணக்கில் கொள்ள வேண்டும். அந்தக்காலத்தில் சினிமா கலைஞர்களுக்கு இருந்த அந்த மாயை இப்போது இல்லை என்பதே எதார்த்தமான உண்மை. அப்படி என்றால் இன்றும் நடிகர் நடிகைகளைப் பார்க்க பெரும் திரளான கூட்டம் திரளுகின்றதே எப்படி ? இதற்கு எளிதான விளக்கம் கொடுக்கலாம். ஒரு சர்க்கஸ் கம்பெனி சர்க்கஸ் நடத்தும்போது அதில் கோமாளிகள் வேடிக்கை காட்டுவார்கள். மறுநாள் சர்க்கஸ் முடிந்தபின் அக்கோமாளிகள் கடைவீதியிலோ அல்லது வெளியிடங்களில் செல்லும்போது அவர்களைச் சுற்றிப் பெருங்கூட்டம் காணப்படும். உடனே அவர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு என்று கூறமுடியுமா ? கோமாளிகளுடன் நான் நடிகர்களை ஒப்பிட்டுப் பேசவில்லை. ஒரு எடுத்துக்காட்டுக்குத்தான் கூறினேன். அதாவது, நம் மக்கள் தங்களைவிட யாராவது சற்று வித்தியாசமாக எது செய்தாலும் கூட்டம் போட்டுவிடுவார்கள். உடனே அதைக் கண்டு தப்புக்கணக்குப் போட்டுவிடக்கூடாது. அப்படித் தப்புக்கணக்குப் போட்டுத் தோல்வியைத் தழுவியர்கள் திரையுலகில் அதிகம். அந்தப்பட்டியலில் விஜயகாந்த் பெயரும் இடம் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில், நடிகர் விஜயகாந்தின் சிந்தனைக்குச் சில கருத்துக்களை முன் வைக்கின்றேன். திரையுலகில் நீங்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றிய காலங்களில் வராத இந்த நினைப்பு அதாவது அரசியலில் ஈடுபட்டு பதவியைப் பிடித்து பொதுச்சேவை செய்ய வேண்டும் என்ற இந்த நினைப்பு திரையுலகில் ஆடி அடங்கும் போது உருவாகியதேன் ? தற்போது அரசியலில் இல்லாமல்தானே மக்கள்சேவை செய்து வருகின்றீர்கள் அதையே தொடரலாமே! அது என்னமோ தெரியவில்லை.. வயது ஆகி சினிமாவிலிருந்து ரிட்டையர் ஆகும்போதுதான் உங்களைப் போன்றவர்களுக்குப் பதவியைப்பிடித்து மக்கள்சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பீரிட்டு எழுகின்றது. அப்படியே பார்த்தாலும் நீங்கள் மற்ற நடிகர்களை விட மிகுந்த செல்வாக்கு மிக்கவரா ? உண்மையில், ரஜினிதான், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் பெரியவர்கள் என்று அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரின் குரலே இந்தத் தேர்தலில் அடிபாதளாத்திற்குச் சென்றுவிட்டநிலையில் உங்களைத் தூண்டிவிட்டுப் பாதாளத்தில் வீழ்த்தி விட நினைப்பவர்களிடம் நீங்கள் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

நடிகர் விஜயகாந்த்தும் தன்னைச்சுற்றியுள்ள அடிவருடிகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு உண்மையான நிலையை உணர்ந்து கொள்ள முன்வர வேண்டும். ரஜினி ஓடிஒளிகிறார் என்கிறீர்கள். உண்மையில் அவர் அரசியலை ஓரளவு உணர்ந்து கொண்டார் என்றே எண்ணுகிறேன். அதுதான் ஒதுங்கிச் செல்கிறார். கமல்ஹாசனைவிட நீங்கள் அதிகம் நற்பணி செய்வதாக எண்ணுகிறீர்களா ? அவர்களுக்கு எல்லாம் வராத பதவி ஆசை உங்களுக்கு ஏன்?

நடிகர் திலகம்டிசிவாஜியை விடவா உங்களுக்கெல்லாம் செல்வாக்கு ? உலகின் எந்த மூலையில் உள்ள எந்தத்தமிழனும் அறிந்த, நேசித்த ஒப்பற்ற நடிகர் அவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இணையாகச் செல்வாக்குப் பெற்றவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பொதுக்கூட்டங்களிலும் மக்களின் கட்டுக்கடங்காத கூட்டம்தான் காணப்படும். அவர் தமுமு என்ற தனிக்கட்சி ஆரம்பித்து 1989-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக(ஜா) அணியுடன் கூட்டணி அமைத்து அவரின் சொந்த மாவட்டமான தஞ்சையில் உள்ள திருவையாறு என்ற தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பாக நின்றவர் அப்போதுதான் முதன்முதலில் தேர்தல்களத்துக்கு வந்த ஒரு இளைஞர். திமுக தலைவர்கள் கூட சிவாஜிக்காக அதிதீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்று அப்போது பேசிக்கொண்டார்கள். சிவாஜி வாக்குக் கேட்டு கிராமம் கிராமமாகச் சென்றார். செல்லுமிடங்கள் எல்லாம் அளவுக்குமீறியக்கூட்டம். இறுதியில் முடிவு என்ன தெரியுமா ? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தோல்வியைத் தழுவினார்.

அப்போது, நடிகர்திலகம் ஒரு பேட்டியில் கூறியதை நினைவுப்படுத்துகின்றேன். “நான் ஓட்டு கேட்டு போறப்ப என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாம், உனக்குத்தான் வெற்றி, உனக்குத்தான் வெற்றின்னு சொல்லிச்சொல்லி உண்மை நிலவரத்தை மறைச்சுட்டுங்க..ஆனா எனக்கு தேர்தல் நேரத்தில் ஒரு டீ க்கடை தம்பி அந்த உண்மையை அப்பவே புரியவைச்சுட்டார்” என்றார். தேர்தல் சமயத்தில், ஒரு மாலைப்பொழுதில் நடிகர் திலகம் வாக்கு கேட்டுச் சென்ற நேரத்தில் ஒரு கிராமத்திற்குச் செல்லும் வழியில் சாலையோர க்கடையில் டீ குடித்துவிட்டு, அந்தக்கடைக்காரரைப் பார்த்து, என்னப்பா வெற்றிவாய்ப்பு எல்லாம் எப்படி இருக்குன்னு கேட்டு இருக்கிறார். அதற்கு அந்தக்கடைக்காரர், ஐயா.. நீங்கதான் அய்யா ஜெயிக்கனும்..ஆனா.. உண்மை நிலவரம் அப்படி இல்லை அய்யா என்று கண்கலங்கிக் கூறியிருக்கிறார். அப்போதே அரசியலில் சுற்றியிருப்பவர்களை நம்பக்கூடாது என்ற உண்மையை தான் உணர்ந்துகொண்டதாக சிவாஜி பின்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தார். சிவாஜிக்கே இந்த நிலை என்றால் மற்ற நடிகர்களுக்கு இது ஒரு பாடமாக அமைய வேண்டாமா ?
நன்றி- பார்த்தி 

4 comments:

  1. hi wat u try to say....v need a change man...u feel dont want anything..or u dont have that knowledge abt polotics...first v salute his daring ...atleast he is trying...tamilan(tn) must ll change this dmk and admk...lets choose vijayakanth .let c wat will happen...and i have 1qustion to u..u said when he(captain) was very famous y he dint try politics...!!!!!so now vijay is very famous he is trying politics..u agree that...????

    ReplyDelete
  2. ஒரு ஊரில் வசித்து வெளியுலகம் அதிகம் சுற்றாத டீக்கடைக் காரருக்கு அரசியல் பற்றி இருந்த விவரம் கூட முன்னூறு படங்களில் நடித்த, பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களுடனிருந்த , உலகத்தையே பலமுறை சுற்றி வந்த நடிகருக்குத் தெரிந்திருக்க வில்லையே, விந்தை தான்.

    ReplyDelete
  3. ithu kandippaa paadamaaka amaiyum...

    by

    www.ineeya.com

    ReplyDelete
  4. சாந்தி பாபு போன்ற,பிரியாணிக்காக மஞ்ச துண்டுக்கு ஜல்லி அடிக்கும் சொறி நாய்கள் தமிழ்நாட்டில் இருக்கும் வரைவெறி நாய்கள் கட்சியான தி மு க வுக்கு ஜாலி தான்.

    ReplyDelete