கொஞ்சம் அசிங்கமான விஷயம் ஒண்ணு சொல்லணும். யாரும் கோவிச்சுக்கக்கூடாது. இதப்போய் சொல்லவந்துட்டான் என்று திட்டக்கூடாது. உங்ககிட்ட சொல்லாம யாருட்ட போய் முட்டிக்கிறது?
வேற ஒண்ணும் இல்லீங்க…நம்ம ஊர்ல பைக்குல ஹெல்மட் இல்லாம போறதுண்டா? அப்படி போனீங்கன்னா உயிருக்குப் பயம் அது இதுன்னு உங்களைப் பயமுறுத்த இதை எழுதலை. இன்னோரு பயங்கரத்தைப் பற்றிச் சொல்லணும்.
உங்களுக்கு முன்னால் போறவர் தீடீர்னு திரும்பி எச்சில் துப்புவார் பாருங்க..அப்போ தெரியும் ஹெல்மட் மகிமை. அதே மாதிரி, நின்று கொண்டிருக்கும் பேருந்தைத் தாண்டிப் போக வேண்டிய நிலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் போக வேண்டியதுள்ளது - எந்த நேரத்தில் எந்தப் புண்ணியவான்(வதி) உள்ளேயிருந்து அபிஷேக விழா நடத்துவார்களோ, யார் கண்டது!
இதில எனக்குப் புரியாத விஷயம் என்ன தெரியுமா? படிப்பு, வயசு, பதவி, தகுதி இந்த மாதிரி எந்த வித்தியாசமும் இல்லாம, எப்படி நம்ம மக்களால் இப்படி நடந்து கொள்ள முடிகிறது? என்ன காற்று அடிச்சாலும் பின்னாலும் மனுஷங்க வருவாங்களே, இப்படி பண்ணலாமான்னு எப்படி யோசனை இல்லாம போகும்? Are we all, as a whole, so self-centered? இதெல்லாம் அடுத்தவங்க சொல்லித்தர வேண்டிய விஷயமா? நம்மளைத்தவிர நாம் எதையும், யாரையும், எப்போதும் கண்டுகொள்வதேயில்லை. சின்ன விஷயந்தான்…ஆனா இது நம்ம national character- ஆக எனக்குத் தெரிகிறது.
வருந்தக்கூடிய விசயம் தான் ... பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஇந்தியர்கள் அப்படிதான்...:)
ReplyDelete//ஆனா இது நம்ம national character- ஆக எனக்குத் தெரிகிறது.//
ReplyDeleteCorrect Assessment.
வணக்கம் நண்பரே ,
ReplyDeleteநீங்கள் கூறுவது சரி .அதிலும் பான் பராக் போட்டு வண்டியில் போகும்போது துப்புபவர்கள் அதிகம் . .
அன்புடன் ,
கோவை சக்தி
தமிழ்மணம் முன்னணி வலைப்பதிவுகள் பட்டியலில் 13-வது இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete//ஆனா இது நம்ம national character- ஆக எனக்குத் தெரிகிறது//
ReplyDeleteஉண்மை தான் .
ஆமா! நீங்க அபிஷேகம் வாங்கியவரா? கொடுத்தவரா?