இந்தியத் திரையிசை மேதைகளில்
இந்திய இசையை எல்லைகளைக் கடந்து உலகப் புகழ்பெறச் செய்த மேதை "சென்னையின் மொஸாட்" என செல்லமாக அழைக்கப்படும்
ஏ. ஆர். ரஹ்மான்
ஆரம்ப காலத்தி கீ போர்டு வாசித்து வந்த ரஹ்மான் தனது 11வது வயதில் இளையராஜாவின் குழுவில் சேர்ந்தார். பின்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் ரமேஷ் நாயுடு ஆகியோரின் இசைக் குழுவிலும் பணியாற்றினார். ஜாகிர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோருடன் இணைந்து உலகம் முழுதும் இசைப்பயணம் மேற்கொண்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் உதவித்தொகை பெற்று, மேற்கத்திய இசையில் இளநிலை பட்டம் பெற்றார் 1991ல் தனது வீட்டை ஒட்டியே தனியாக ஸ்டூடியோ ஆரம்பித்த ரஹ்மான் ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கும், தொலைகாட்சிகளுக்கு இசை அமைத்து வந்தார். 1992ல் முதன் முதலாக இயக்குனர் மணிரத்தினத்தின் 'ரோஜா' படம் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். இப்படத்திற்கு இவர் வாங்கிய சம்பளம் ரூ.25,000
2020இற்குள் வறுமையை இந்தியாவிலிருந்து விரட்டும் நோக்குடன் இவரால் "A. R. Rahman Foundation" எனும் சேவை அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. இதில் எவ்வினத்தவர்க்கும் பாரபட்சமில்லாது ஏராளமான உதவிகள் தாராளமாக வழங்கப்படுகின்றது.
இந்த சாதனை மன்னன், வெற்றியின் மற்றொரு பெயரான 'ரஹ்மான்' பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். அவர் பெற்ற விருதுகளில் சர்வதேசப் புகழ்வாய்ந்த விருதுகளின் பெயர்களை மட்டும் நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.
ரஹ்மான் Oscar விருதுகளுடன்...
ரஹ்மான் பெற்ற முக்கியமான விருதுகள் பற்றிய விபரம் வருமாறு:-
* Grammy விருது- 2 முறை
* MTV Asia விருது- 2 முறை
* MTV வீடியோ இசை விருது- 1 முறை
* Academy விருது- 2 முறை
* BAFTA விருது- 1 முறை
* Golden Globe விருது- 1 முறை
* Golden Globe விருது- 1 முறை
* Satellite விருது- 1 முறை
* World Soundtrack விருது- 1 முறை
* தேசிய திரைப்பட விருது- 4 முறை
* Filmfare விருது- 14 முறை
* Filmfare(தெற்கு) விருது- 12 முறை
* தமிழ்நாடு மாநில விருது- 6 முறை
* விஜய் விருது- 1 முறை
* Oscar விருது- ஒரே தடவையில் 2 விருதுகள் பெற்றார்.
இதை எழுதும்போதுதான் இவ்வருடம் ரஹ்மானுக்கு "பத்மபூஷன்" விருது கிடைத்துள்ளதாக அறிந்தேன். இவை தவிர இவர் பெற்ற விருதுகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அதில் மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது Anna, Aligarh மற்றும் Middlesex ஆகிய பல்கலைக் கழகங்கள் இணைந்து ரஹ்மானுக்கு "டாக்டர்" பட்டம் வழங்கியதாகும்.
எத்தனை புகழ் தன்னைத் தேடி வந்தாலும் அத்தனையையும் இறைவனிடமே அர்ப்பணித்துவிட்டு "எல்லாப் புகழும் இறைவனுக்கே" எனும் கொள்கையுடன் வாழ்ந்துவரும் இவ் இணையில்லாக் கலைஞன் அண்மையில் தனது 44வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். அவரை நானும் நீங்களும் பல்லாண்டு காலம் வாழ வேண்டுமென வாழ்த்தினால் தப்பேதுமில்லையே?
No comments:
Post a Comment