தொகுப்புகள்

Search This Blog

Monday, October 25, 2010

சேர நாடு - சிறுகுறிப்பு




பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள்கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும்தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
முற்காலச் சேரர்களைப் பற்றி மிகவும் அரிதாகவே செய்திகள் உள்ளன, ஆனால் சங்க காலச் சேரர்களைப் பற்றி சிறிதளவு செய்திகள் உள்ளன.
சேர அரசர்களைப் பற்றிச் சங்ககால இலக்கியங்கள் பாடுகின்றன. குறிப்பாக பதிற்றுப்பத்துப்பாடல்கள் பல செய்திகளைத் தருகின்றன.

சேர மன்னர்களின் பட்டியல்
முற்காலச் சேரர்கள்
சேரமான் பெருஞ்சோற்றுதியன் சேரலாதன்கி.மு 1200 (?)
கடைச்சங்க காலச் சேரர்கள்
உதியஞ்சேரலாதன்கி.பி. 45-70
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்கி.பி. 71-129
பல்யானைச் செல்கெழுகுட்டுவன்கி.பி. 80-105
களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்கி.பி. 106-130
செங்குட்டுவன்கி.பி. 129-184
அந்துவஞ்சேரல் இரும்பொறை(காலம் தெரியவில்லை)
செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறைகி.பி. 123-148
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்கி.பி. 130-167
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைகி.பி. 148-165
இளஞ்சேரல் இரும்பொறைகி.பி. 165-180
குட்டுவன் கோதைகி.பி. 184-194
மாரிவெண்கோகாலம் தெரியவில்லை
சேரமான் வஞ்சன்காலம் தெரியவில்லை
மருதம் பாடிய இளங்கடுங்கோகாலம் தெரியவில்லை
சேரமான் கணைக்கால் இரும்பொறைகாலம் தெரியவில்லை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதைகாலம் தெரியவில்லை


எல்லைகள்

சங்க காலச்சேரர்தம் எல்லைகள் கொங்கத்தின் எல்லைகளேயாகும். ஆனால் பிற்காலத்தில் உருவாகிய கொல்லம் கேரள வர்மாக்கள் சமஸ்கிருதத்திற்குக் கேரளாவில் முக்கியத்துவம் அளித்ததால், அங்கு தமிழ் அ்ழிந்தது. ஆகையால் அப்பகுதிகள் தனியாட்சி பெற்றன. சங்க, பக்தி காலச் சேரர்கள் (சேரமான் பெருமாள், குலசேகரர் ஆகியோர்) கரூரினின்றே ஆட்சி புரிந்தனர். ஆனால் இவர்கள் ஆட்சி முடிந்தவுடன், கேரள வர்மாக்கள் கிளர்ச்சி மூலம் கொல்லத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கேரளத்தில் தனியாட்சி நிறுவினர்.

 மன்னர்கள்

சேர நாட்டை ஆண்ட அரச வம்சத்தினர் சேரர்கள் எனப்பட்டனர். சங்க நூல்கள் பலவற்றில் சேர மன்னர்கள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. மிகப் பழைய சங்க நூல்களில் ஒன்றாகிய பதிற்றுப்பத்து பத்து சேர மன்னர்களைப் பாடிய பாடற் தொகுப்பு ஆகும். இதில் ஒவ்வொரு சேர மன்னன் பற்றியும் பத்துப் பாடல்கள் உள்ளன.

 நகரங்கள்

கரூர் அல்லது வஞ்சி என்று அழைக்கப்பட்ட நகரம் சேர நாட்டின் தலை நகரமாக விளங்கியது. முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன. சேர நாட்டின் இன்னொரு புகழ் பெற்ற துறைமுகம் தொண்டியாகும்.

No comments:

Post a Comment