எந்திரன் பற்றி விமர்சித்த அனைவரும் , அதிகபடியான செலவுகள் ஒரு பேனா நான்கு வெள்ளை தாழ் , அல்லது ஒரு இலவச ப்ளாக் மட்டுமே ! எந்திரன் ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒரு அனுபவம்.தொழில் நுட்பத்தில் இன்னமும் பெரிய அளவு நிபுணத்துவம் வளராத ஒரு நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள், இன்று செய்நேர்த்தியில் முன்னிலையில் இருக்கும் ஹாலிவுட்டுக்குச் சவால் விட்டுள்ளனர், எந்திரன் என்ற படத்தின் மூலம். இதை ஒரு ரஜினி ரசிகனின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக எடுத்துக் கொள்ளாமல்,இதுவும் ஒரு சாதனை என்று எடுத்துகொள்வோம் ,
விமர்சித்ததில் அதிகபடியானோர் ,
"காதில் பூ சுற்றவில்லை, ஒரு பூந்தோட்டத்தையே நம் முதுகில் வைத்து கட்டி அனுப்புகிறார்கள் படத்தின் முடிவில். ஒன்று முழு நீள ஆக்ஷன் படமாக இருக்கவேண்டும் இல்லை தத்ரூபமான படமாய் இருக்க வேண்டும். இது ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் கதையாக இருக்கிறது. சுருங்க சொல்லப்போனால் சங்கர் பிள்ளையார் பிடிக்க போய் குரங்காகிப் போனது."
"தமிழ் செண்டிமெண்டும் ஹாலிவுட் கிராபிக்சும் சேர்ந்தால் அதுதான் எந்திரன். வழக்கம்போல எல்லா ஹாலிவுட் படங்களிலும் இருக்கும் அதே தீம் தான் கதைக் கரு."
படம் மொக்கை , ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்றுதான் தன் விமர்சனத்தை வைக்கிறார்கள் நாம் அனைவரும் ஒன்றை சிந்திக்கவேண்டும் ஒரு செயலையோ அல்லது ஒரு மனிதரையோ விமர்சிக்க நமக்கு ஓர் தகுதி வேண்டும் ,
நாம் என்ன ஹாலிவுட் இயக்குனரா? அல்லது பாலிவுட் இயக்குனரா ? இல்லை கோலிவுட்டி லாவது ஒரு படம் இயக்கி இருகிறோமா ? இல்லை முயற்சியாவது செய்துள்ளோமா?
ஏதோ ஒரு விசயத்தை சாதித்தவர் என்றால் நாம் அவர்களை விட ஒரு துளியாவது அவர்களுக்கு மேல் சாதித்திருக்க வேண்டும் , இது எந்திரன்க்கு மட்டுமல்ல , நன்மை விட ஒரு படி மேல் சாதித்த அனைவருக்கும் பொருத்தும் . கலைஞர் , காந்தி , ஸ்ரீகாந்த் , அப்துல்கலாம் , காமராஜர் ,ரஜினி , ,கமல்,விவேக்,இளையராஜா , ரகுமான் , ஜெயமோகன் என ஏதோ ஒரு துறையில் சாதித்தவர்களை விமர்சிகும்பொழுது ,
நம் தகுதியையும் சாதனைகளையும் சற்று எண்ணி பார்த்து விமர்சிப்போம் என்ற முடிவுக்கு வந்தால் , வீண் பேச்சு வெளியேறும், சாதனைகள் சபையேறும்..
பின்குறிப்பு :- இது சில்வண்டு விமரசகர்களுக்கு மட்டுமே பொருத்தும்.
மிக அழகான விமர்சனம்! சின்னதாக உள்ளதே!
ReplyDeleteஎந்திரன் விருப்பமா, நிபந்தனையா?
ReplyDeleteஎந்திரன் நீங்கள் பார்க்கப் போகும் சினிமா அல்ல, பார்த்தே ஆகவேண்டிய ஒரு நிபந்தனை. உழைத்துக் களைத்த அலுப்பின் வார இறுதியில் ஏதோ ஒரு சினிமா பார்ப்பது உங்கள் வழக்கமாக இருக்கலாம். அந்தப் படம் பிடித்திருந்தால் சிந்தனையில் சில மணிநேரங்கள் நீடித்து விட்டு அகன்றுவிடும். சமூக உரையாடலில் அதற்கு மேல் ஒரு சினிமாவுக்கு இடமில்லை.
மக்களது சொந்த வாழ்க்கைக்குரிய அறிவைத் தாண்டி பொது அறிவின் அளவுகோலாக சினிமாதான் இருக்கிறது.
சினிமாவிற்கும் ஆக்கிரமிப்புக்கும் என்ன சம்பந்தமென்று தோன்றலாம். உங்களது தனிப்பட்ட வெறுப்பு விருப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு உங்களது நேரம், பொருள், சிந்தனையை ஒரு விசயம் அடித்து வீழ்த்துகிறது. ஆம். எந்திரன் உங்கள்மேல் நிகழ்ந்து வரும் ஆக்கிரமிப்பு. கலையின் பெயரால் பணத்தின் வலிமையால் உங்களை எதிர்த்து நடத்தப்படும் போர்!ஒரு நாட்டின் பணம் மட்டுமல்ல அதன் மக்களது பயன்பாட்டு நேரமும் இப்படி வீணே செலவழிக்கப்பட்டால் அதன் இழப்பு என்ன?
முதலில் எந்திரன் பற்றிய செய்திகள், என்னென்ன விதத்தில், எத்தனை மாதங்களாய் உங்களை படர்நது வருகிறது, யோசித்து பாருங்கள்.
“ஹாலிவுட்டிற்கு இணையான தமிழ்ப்படம், தொழில் நுட்ப ரீதியில் தமிழக சினிமாவின் மைல்கல், 150 (190 என்றும் சொல்கிறார்கள்) கோடியில் தயாராகும் பிரம்மாண்ட பட்ஜெட் படம், அவதார் திரைப்படக் குழுவினர் வேலை செய்யும் படம்”, முதலான வெத்துவேட்டு பிரகடனங்கள், புள்ளிவிவர பிதற்றல்கள்….பத்திரிகைகளில், இதழிகளில், தொலைக்காட்சியில், நட்பு அரட்டையில், இணைய செய்தித்தளங்களில், பதிவுகளில், சேட், பேஸ்புக், யூடியூப், பஸ், டிவிட்டர்…. மொத்தத்தில் உலக தமிழ் மனங்களில் எந்திரன் பற்றிய துணுக்குச் செய்திகள் ஏராளம். இவற்றை நாடிச் செல்லவில்லையென்றாலும், இவற்றில் நீங்கள் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்ற உண்மை உங்களின் தன்மானத்தை சீண்டினாலும் மறுக்க முடியாதே ?
கோடம்பாக்கத்தில் இப்போதெல்லாம் மதுரையிலிருந்து கனவுகளுடன் வந்திறங்கி தயாரிப்பாளர்களிடம் மதுரை தமிழில் கதை சொல்லும் உதவி இயக்குநர்களை காண இயலாது. பொறியியல், மருத்துவம், மேலாண்மை முதலான உயர்கல்வி படித்த மேட்டுக்குடி இளைஞர்களே சங்கர் முதலான கார்ப்பரேட் இயக்குநர்களிடம் உதவியாளர்களாய் சேரமுடியும். இந்த போக்கு வெகுவேகமாக பரவி வருகிறது. இனி எதிர்கால இயக்குநர்கள் தயாரிப்பாளர்களிடம் கதையை சொல்லி வாய்ப்பு கேட்க இயலாது. மாறாக படம் அள்ளப்போகும் வசூல் குறித்த மேலாண்மை திட்டத்தைத்தான் கச்சிதமாக தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.வசூல் செய்யும் ‘கலையில்’ கதைக்கு என்ன கலைச்சேவை வேலை இருக்கமுடியும்?