தொகுப்புகள்

Search This Blog

Tuesday, October 19, 2010

புதிதாக ஊறும் இரத்தம் உடலுக்குப் பொலிவுதரும்


  • இந்தியாவில் நூற்றுக்கு ஒருவர் ஆண்டுக்கு ஒரு முறை இரத்ததானம் செய்தால் கூட விபத்துக்களினால் இரத்தம் கிடைக்காமல் ஏற்படும் இறப்புகளைத் தவிர்க்கலாம். சாதாரணமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம். 18 லிருந்து 60 வயதுக்குட்பட்டோர் அனைவரும் இரத்ததானம் செய்யலாம். இரத்ததானம் செய்வதால் உடல் சோர்வோ உடலுக்கு எவ்விதமான தீங்கோ எற்படுவதில்லை.தானம் செய்யவும் தகுதி வேண்டும்.(1). 18 வயது முதல் 60 வயது வரை ஆண், பெண் இருபாலரும் இரத்ததானம் செய்யலாம்.(2). வலிப்பு, சர்க்கரை நோய், மலேரியா, மஞ்சள்காமாலை நோயுள்ளவர்களும் கர்ப்பிணிப் பெண்களும் இரத்ததானம் செய்யக்கூடாது.(3). அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆறு மாதத்திற்குப் பிறகு தான் இரத்ததானம் செய்யவேண்டும்.(4). நம் உடலில் 5 முதல் 7 லிட்டர் வரை இரத்தம் உள்ளது. இதில் 300 மி.லி. இரத்தம் மட்டுமே தானமாகப் பெறப்படுகிறது. வலியோ சிரமமோ இல்லாமல் 10 நிமிடத்தில் இரத்தம் எடுக்கப்படும்.(5). உடல் நலத்தோடு உள்ள ஒருவர் மூன்று மாதங்களுக்கொருமுறை இரத்ததானம் செய்யலாம். புதிதாக ஊறும் இரத்தம் உடலுக்குப் பொலிவுதரும்.(6). எத்தனை முறை இரத்தம் கொடுத்தாலும் ஆரோக்கியம் கெடுவதில்லை.

No comments:

Post a Comment