கடவுள் பெயரை சொல்லி கொண்டு !
காவி உடையை அணிந்து கொண்டு !
மக்கள் நிலையை புரிந்து கொண்டு !
சில போலிகள் இங்கு அலைவதுண்டு !
வாயை திறந்தால் லிங்கம் வரும் !
கையை விரித்தால் விபூதி வரும் !
கண்ணி பெண்ணை அணைத்த கரம் !
கொடுத்துவிடுமாம் பிள்ளை வரம் !
பெண்ணே உனக்கு ஏது தோஷம் !
அவன் போடுகிறான் காவியில் வேஷம் !
அவனுடன் நீ போடாதே கோஷம் !
உன் வாழ்க்கை ஆகிவிடும் நாசம் !
கவி:- என் கணவர் -ஆ.பாபு
உங்கள் கவிதையில் இந்து மத துவேசம் தான் தெரிகிறது.பெரியார் காலத்தில் மூட பழக்கங்கள் அதிகம் இருந்ததால் அவர் ஹிந்து மதத்தில் உள்ளவர்களை எதிர்த்து குரல் கொடுத்தார். ஆனால் இப்பொழுது ஒரு சிலர் ஹிந்து மதத்தை துவேசம் செய்ய பெரியார் கொள்கையை கையில் எடுத்துள்ளார்கள். christianity இல் போலிகள் இல்லையா? இயேசு ஒருவரே உலகை காப்பவர், அவரை பின்பற்றினால் கைகால்கள் குணமாகும், குழந்தை பிறக்கும், குருடனுக்கு பார்வை கிடைக்கும் என்று வெள்ளை அங்கி போட்டு போதிக்க வில்லைய?தங்களை தலைவராக கொண்டவர்களில் ஹிந்து மதத்தினரும் உண்டு. அவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேசாதிருங்கள். அடிமைத்தனம் இருந்தால் எதிர்த்து குரல் கொடுங்கள். நீங்களும் பெரியார் ஆவீர்கள். மத துவேசம் வேண்டாம் . நான் எந்த மதத்தையும் பின் பற்றுபவன் இல்லை. நாடு நிலையானவன். நன்றி.
ReplyDeleteஇப்படிக்கு
தமிழன் - DMK தொண்டன்.