பெண்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கு. வீட்ல ஒரு குடும்பப் பெண்ணுக்கு பிரச்சினைகள் எக்கச்சக்கமா இருக்கு. கணவன், மனைவி பிரச்சினை, மாமியார், மருமகள் பிரச்சினை, நாத்தனார் பிரச்சினை, குழந்தைகள வளர்க்கறதுல பிரச்சினை, பக்கத்துல வீட்ல பிரச்சினை. இதனால் அவர்களுக்குள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துடுது. நாம படிச்சிருந்தா, இப்படி ஆயிருக்காதே, இப்படி உட்கார்ந்திருக்க வேண்டியிருக்காதேன்னு அவங்களுக்குள்ள எக்கச்சக்கமான மன வருத்தங்கள், மன ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யுது. இத பக்கத்து வீட்ல சொன்னா, யார் கிட்டயாவது சொல்லி மாட்டி விட்ருவாங்க. இல்ல, நம்மள பார்த்து சிரிப்பாங்க. நம்மளப்பத்தி தாழ்வா நினைப்பாங்கன்னு எண்ணம் இருக்கலாம். இல்ல, வெளி ஆளுங்ககிட்ட சொன்னா அவங்க, அதை சொந்தக்காரங்ககிட்ட சொல்லிட்டா, நாளைக்கு அவங்க முகத்தில முழிக்கணுமே என்ற பயம் இருக்கலாம். அதனால, சாமியார்கிட்ட போறாங்க. அவங்க எதிர்பார்க்கிறது, தன்னை எந்தக் குறையும் சொல்லாம, இல்லம்மா கவலைப்படாதே; எல்லாம் சரியாய் போயிடுமுங்கிற ஆறுதலைத்தான். இந்த ஆறுதலை சாமியார் சரியா சொல்றதுனாலதான் அவங்ககிட்ட போறாங்க.
நம்ம இதிகாசங்கள்ல பாத்தீங்கன்னா குழந்தை எப்படி பொறக்கணும்னு வெட்ட வெளிச்சமா சொல்றதில் இராமாயணத்துல உதாரணம் எடுத்துக்கிட்டோம்னா, பாயாசம் கொடுத்தாங்க, அந்த பாயாசத்தை உட்-கொண்டதுனால குழந்தை பொறந்ததுன்னு சொல்றாங்க. அவங்க பாயாசம்னு சொல்றது எதைங்கறத அறிவியல் தெரிஞ்சவங்களால புரிஞ்சிக்க முடியும். ஏன்? லட்டுன்னு சொல்லலே. ஏன்? பாயாசம்னு சொன்னாங்க. பாயாசம்ங்கிறது இன்னொரு விதமான மாற்று உபயோகமுள்ள வார்த்தைங்கிறது நமக்கு புரியுது. ஆனா, சாதாரண மனிதர்கள் என்ன நினைப்பாங்க. உண்மையிலேயே சாமியார் பாயாசம் கொடுத்ததுனாலதான் குழந்தை பொறந்திச்சுன்னு நினைப்பாங்க.
இந்த மாதிரி நம்ம கலாச்சாரத்துல நிறைய மூடநம்பிக்கைகள் இருக்கறதுனால, இது அதிகமாக பெருகிகிட்டு இருக்கு. அதுமட்டுமல்ல, குழந்தை இல்லாத பெண்ணை இந்த சமுதாயம் பார்க்கிற விதமும் அவங்கள டெஸ்பரோட்டாக்கி, எப்படியாவது குழந்தை பொறந்தா போதுங்கிற சூழ்நிலைக்கு தூண்டப்பட்டு, சரி, சாமியார் தவறாக நடந்து கொண்டாலும் பரவாயில்ல - இப்படியாவது குழந்தை பொறந்தா போதுமுங்கிற எண்ணமும் பெண்களுக்கு வர்றதுக்கு வாய்ப்பு இருக்கு. குழந்தை இல்லாத பெண்களும் சாதாரண மனிதர்கள்தான் அவங்களுக்கும் வாழறதுக்கு எல்லா உரிமைகளும் இருக்கு. எந்த தகுதியும் குறைஞ்சு போயிடலேங்கிற பரந்த மனப்பான்மை நமக்குள்ள இருந்ததுன்னா, குழந்தை இல்லாத பெண்களை நல்ல விதமா இன்னும் மரியாதையோட நாம நடத்துனும்னா இந்த மாதிரி ஒரு அவசர கதியில போயி எப்படியாவது குழந்தை பெத்துக்கணும்ங்கிற எண்ணம் இல்லாம போயிடும்.
No comments:
Post a Comment