தொகுப்புகள்

Search This Blog

Thursday, November 25, 2010

படிக்கவில்லையா -அந்த குழந்தை டாமிதான்

பெற்றோர்களே! ஆசிரியர்களே! 

உங்கள் குழந்தைகளும், மாணவர்களும் படு சுட்டிகளே என்பதை பல தருணங்களில் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அவற்றை ஒரு கணம் நினைவு படுத்தி அசை போட்டுப் பாருங்கள்;. அத்தகைய 'சுட்டித்தனம்' குழந்தைகளுக்கு அவசியம். அவர்களின் எதிர்கால வெற்றிக்கு அவர்களிடம் கொட்டிக் கிடக்கின்ற புதுப்புது சிந்தனைத் திறன்தான் பெரிதும் உதவும். அவற்றை அள்ளி அள்ளி வெளிக்கொணர வேண்டுமே தவிர கிள்ளி எறிந்து விடக் கூடாது.
 (இவ்வளவு விளையாடு பொருட்கள் இருக்க எங்கள் கலைநிதி எதை எடுக்கிறார் பாருக்ங்கள்)

சில சமயங்களில் நமது குழந்தைகள் நமது எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தவாறு 'அடக்கம் ஒடுக்கமாக' நடந்திட மாட்டார்கள். அப்போதெல்லாம் பெரியவர்கள் நாம் என்ன செய்வோம்? நமது பழங்கதைகளைத் துவங்கி விடுவோம். அந்தக் காலத்தில் நாங்களெல்லாம் இப்படியா இருந்தோம். கையைக் கட்டி வாயைப் பொத்தி நில் என்றால் நிற்போம். உட்கார் என்றால் உட்காருவோம். நீங்களும் இருக்கிறீர்களே என்று நீட்டி முழக்கத் துவங்கி விடுவோம். நமது பழங்கதைகள் (குடயளா டீயஉம) அவர்களுக்கு சுவைப்பதில்லை. குழந்தைகள்தானே - அவர்களுக்கு என்ன தெரியும் என்று நினைக்காதீர்கள். பெற்றோர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் வேறு உங்கள் குழந்தைகள் வேறு. நீங்கள் வாழ்ந்த காலம் வேறு. அவர்கள் வளர்கின்ற இன்றைய காலம் முற்றிலும் வேறு. நமது பெற்றோர் நம்மை வளர்த்தது போல நாம் நமது குழந்தைகளை நிச்சயமாக வளர்த்திட முடியாது. கூடாது!!



எனவேதான் சொல்கிறோம்.இன்றைய குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவது என்பது ஒரு பெரிய சவால் ஆகும். அதற்கு நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டியது நமது பொறுப்பு!


எனக்கு தெரிந்த சில வழிகள் 


காலையில் கிளம்புவது  அவர்கள் வேலை. அதற்கு உற்சாகம் அளிப்பது மட்டுமே நம் வேலை என்று இருக்க வேண்டும். மிகவும் மெதுவாக சாப்பிடுகிறார்கள். என்றால் அவர்களை சரியான நேரத்திற்கு சாப்பிட உற்சாகப்படுத்தினால் போதும். மாறாக நீங்களே ஊட்ட ஆரம்பித்தால் அவர்களுக்கு நாமாக கிளம்ப வேண்டியதில்லை. நாம் எவ்வளவு மெதுவாகச் செய்தாலும் அம்மா கிளப்பிவிடுவார்கள் என்றாகி விடும்.
காலை வேளையில் மட்டும் பிடித்தமான உணவு வகைகள் கொடுப்பதன் மூலம் அதிக நேரம் எடுப்பதை தவிர்க்கலாம்.
காலையில் குறுகிய நேரத்தில் அதிக வேலைகள் இருப்பதால் அடுத்த நாள் வேலைகளை இரண்டாகப் பிரித்து முதல் நாளே செய்து வைத்து விடக்கூடிய வேலைகளை முடித்து விடுவீர்கள்தானே. அதே போல ஹோம் – ஒர்க் செய்யாமல் படுக்கக்கூடாது என்று முடிவு எடுத்து விடுங்கள். இதனால் ஸ்கூல் கிளம்பும் போது ஹோம்-ஒர்க் எழுதிக் கொண்டு இருந்து சாப்பிடாமல் உங்களை படுத்தமாட்டார்கள்.
மாலையில் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலை அவர்களை விட்டே எழுத வையுங்கள். அதை அவர்களின் அறையில் ஒட்டச் செய்யுங்கள். உதாரணத்திற்கு:
1. பள்ளியிலிருந்து வந்ததும் முகம் கை கழுவுதல்
2. அரை மணி நேரம் விளையாட்டு
3. ஹோம் ஒர்க் செய்து முடித்தல்
4. கையெழுத்து வாங்குதல்
5. யூனிபார்ம் எடுத்து வைத்தல்
6. பள்ளிக்குத்தேவையானதை டைம் டேபிள் படி எடுத்து வைத்தல்
checking of  to do list என எழுதி ஒட்டுங்கள்.
இதைச் செய்ய ஆரம்பித்த சில நாட்களுக்கு 1ஐ செய்துவிட்டாயா 5 ஐ செய்துவிட்டாயா என்று நட்பான குரலில் நினைவூட்டுங்கள்.
உங்கள் குழந்தை சோம்பேறி அல்ல
பள்ளிக்கு என்றால் தான் நிதானமாக கிளம்புகிறார்கள். இதுவே டூர் என்றால் எவ்வளவு வேகமாக எடுத்து குளித்து உண்டு நம்மை அவசரப்படுத்துகிறார்கள். இந்த வேகம் எங்கிருந்து வந்தது என்றாவது யோசித்தது உண்டா?
டூர் என்ற ஆர்வத்திலிருந்து வந்தது இல்லையா. அந்த வகை வேகம் ஒவ்வொரு நாள் காலையிலும் ஏற்பட வேண்டுமென்றால் பள்ளி என்பது அவர்களுக்கு பிடித்த இடமாக வேண்டும். கல்வி என்பது இனிக்க வேண்டும்.

 அப்படியும் படிக்கவில்லையா -அந்த குழந்தை டாமிதான் 

அது ஒரு நாலு வயதுக் குழந்தை. ஆசை ஆசயாய் அந்தக் குழந்தையை அலங்காரம் செய்து பள்ளிக்கூடம் அனுப்பினாள் அம்மா. அந்தக் குழந்தைக்கு கொஞ்சம் காது மந்தம். ‘டாமி’ என்பது குழந்தையின் செல்லப் பெயர். மனம் நிறைய கனவுகளுடன் அந்தக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய தாயாருக்கு நெஞ்சு நிறைய சோகங்களை பரிசளித்தார் ஓர் ஆசிரியை. மூன்று மாதம் பள்ளிக்கூடம் சென்று வந்த அந்தக் குழந்தையின் சட்டைப்பையில் ஒரு காகிதத்தை திணித்து அனுப்பியிருந்தார் ஆசிரியை. “படிப்பதற்கு இலாயக்கற்ற முட்டாள் உங்கள் டாமி. இவனை இனிமேல் பள்ளிக்கு அனுப்பித் தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று அதில் எழுதியிருந்தது. குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு அந்தத் தாய் சொன்னாள், “என் மகன் அறிவாளி. நானே படிக்க வைப்பேன். அறிவாளி ஆக்குவேன்” என்று ஆவேசமாக அறிவித்தாள். “படிக்கலாயக்கில்லை” என்று முத்திரை குத்தப்பட்ட அந்த பையனைப் பற்றி, அவன் கண்டுபிடிப்புகள் பற்றி இன்றைக்குக் கூடப் பிள்ளைகள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த முட்டாள் டாமிதான் 1093 கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன். பள்ளிக்கூடம் போகாத பையனைப் பற்றி பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக இன்று பாடம் நடக்கிறது போதுமா? சாதாரண மனிதர்களே அசாதாரணர்கள்.
எடிசனுடைய அறுபத்து ஏழாவது வயதில் அவருக்கு நேர்ந்த விபத்து தாங்கக்கூடியதே அல்ல. பாடுபட்டு அவர் உருவாக்கிய பல லட்சம் பொறுமான அவரது ஆய்வுக்கூடம், தொழிற்சாலை பற்றி எரிந்தது. இன்ஷீரன்ஸ் தொகையோ அதிகம் வராது. பற்றி எரியும் தொழிற்கூடத்தைப் பார்த்து எடிசன் சொன்னார்.“நல்லது. என் தவறுகள் யாவும் எரிந்து போயின. என் பிழைகள் யாவும் கருகிவிட்டன. இந்த அழிவிலும் ஒரு நன்மை இருக்கிறது. கடவுளுக்கு நன்றி. இனி ஒரு புதிய தொடக்கம் உண்டு” என்றார். இந்த தீ விபத்து நடந்த மூன்றே வாரத்தில் அவர் ‘போனோகிராப்’ என்பதைக் கண்டுபிடித்தார்.
 இன்னும் சிலபேர் செய்கிற தவறான விஷயம் என்னவென்றால் குழந்தையை அன்பாக வளர்ப்பதென்றால் அது கேட்டதையெல்லாம் வாங்கித் தருவது என்று நினைக்கிறீர்கள். இது முட்டாள்தனம். முதலில் உங்கள் குழந்தையையே நீங்கள் புத்திசாலித்தனமாகப் பார்ப்பதில்லை. உங்கள் குழந்தையைப் போதிய அறிவோடு நீங்கள் பார்ப்பீர்களேயானால், அந்தக் குழந்தை கேட்டதையெல்லாம் வாங்கித் தருவது முட்டாள்தனம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்கு அன்பு என்று பெயர் சுமத்துகிறீர்கள். குழந்தையை எப்படி நீங்கள் வளர்க்க வேண்டுமென்றால் அதைக் காட்டில் விட்டாலும், சமூகத்தில் விட்டாலும் ஆனந்தமாக இருக்க வேண்டும். அப்படித்தான் வளர்க்க வேண்டும். குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். உங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் பதட்டமும், கோபமும், அச்சமும், பொறாமையும் அரங்கேறிக் கொண்டே இருக்குமானால் இவற்றைத்தான் அது பழகும். இதற்குத்தான் வீட்டில் செய்முறைப் பயிற்சி குழந்தைக்குக் கிடைக்கிறது. எனவே நல்ல முறையில் குழந்தையை வளர்க்க வேண்டுமானால், நீங்கள் முதலில் உங்கள் தன்மையை மாற்றிக் கொள்ள வேண்டும். அன்புமயமான- ஆனந்தமான- அமைதியான ஒரு வாழ்க்கை வாழ்பவராக உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களையே நீங்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள முடியவில்லையென்றால், மிகவும் சக்திவாய்ந்த உங்கள் குழ்ந்தையை என்ன செய்ய முடியும்? உங்கள் பதட்டங்கள், உங்கள் கோபங்கள் போன்ற அபத்தமான குணங்கள் உங்கள் குழந்தைக்கும் வரும். குழந்தைமீது உள்ளபடியே அக்கறை இருக்குமானால். நீங்கள் முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

"எனக்கு இக்கட்டுரை எழுத உதவிய குழந்தை நல மருத்துவர்களுக்கும் , குழந்தை வளர்ப்பு புத்தகங்களுக்கும் , பல பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்"  

8 comments:

  1. ஆஹா..இது என் பெற்றோருக்கான பதிவு?..எனக்கும் எதிர்காலத்தில் உதவும்..

    நல்ல பதிவு..தொடருங்கள்..

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Dear Nelson,

    I read both "கடவுளைக் கைது செய்த விஞ்ஞானிகள்" and this latest article about how to bring up a child....but it is not fair to compare...if you agree with Edison's science and here are some of my questions...(do not mistake me my friend for targeting Christian, since u happen to be a X'ian i am posting this questions....)

    Since you believe in Newton's science...I hope you believe in Radiometric dating and carbon dating by which it is scientifically established that the universe is at least 13.5 Billion Years old and the Earth is 4.5 Billion years old, where as according to Christianity the world is only 6000-10000 years old and Chapter of Bible's genesis theory states that the Tree, Light, Animals, space, plants were all created in 6 days...

    The available biological evidence of DNA scientifically proved that all living things in the earth are made (evolved) from single cell as proposed by Charles Darwin and it has been widely accepted all over the world by all biologists.

    As a believer of both Newton's science and Christianity, i am asking you do you agree with the science of carbon and radiometric dating system or Bible's Theory of Genesis...???

    Answer only to this question?

    Hope I have not hurt you, if I did, I really apologize to you...

    And I am in the processing of creating a Blog that will answer all the fundamental questions....Please do visit my Blog

    http://amthangamani-cosmos.blogspot.com

    ReplyDelete
  4. It is me again Nelson, My answer for Newton's question is........

    At the time of Newton's era, it is quite normal to believe in God because there were no answers to all the questions raised by the man but now we do have answers for most of the questions, if not all, at least we can say humans have answered all the questions raised by all the Religions in the world.

    Today we do have answers for everything from How electricity works to why Earth rotates and revolve around the sun and we are exploring the stars and galaxies....and looking deep beneath the atoms....

    And what I am trying to accomplish is that even if there is God or creator, it is certainly not the God that we pray or worship…..All I wish there is a real God

    ReplyDelete
  5. ya amthagamani you are right

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. dear Nelson,

    Thank you my friend, i think we both are in the same boat, your explanation is really prompting and encouraging and I do agree with your views....i really mistook for a X'ian who adamantly believes that world is created in 6 days, fortunately you are not!!!! This apply to all the religious fanatics who believes in irrational doctrines and logic.

    I bow my head for your acceptance to the universality of all religions...

    I certainly do agree with what you have said about Darwin....because he himself was not sure of many things at his time, but i believe now it has been elucidated...though still debatable...

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete