சமுக உறவில் தேடுங்கள்

Loading

Wednesday, November 17, 2010

1G 2G 3G புருஞ்சுங்கங்க ஜி

படம் பார்த்து உண்மையை புரிந்துகொள்ளுங்கள்.. 


சுருக்கமா சொல்ல முயற்சிக்கிறேன்.
1ஜி, 2ஜி, 3ஜி - விஷயங்களில் கொஞ்சம் குழம்பியிருக்கிறீர்கள் அல்லது நீங்கள் நினைப்பது சரியென்று நினைக்கிறீர்கள்.

1ஜி - அனலாக் வாய்ஸ் சிஸ்டம்.

2ஜி - டிஜிட்டல்

3ஜி - டிஜிட்டலில் கூடுதல் வசதிகள் (வீடியோ கால், மெசேஜிங் போன்றவை)

ஓக்கே.

2ஜி பரவலான பிறகு 1ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று நினைக்கிறீர்களா?

3ஜி பரவலாகும் போது 2ஜிக்கு அவசியமே இருக்கப் போவதில்லை. 2ஜி 2 வருடத்துக்குள் ஒழியுமா, 5 வருடத்துக்குள் ஒழியுமா என்று ஜோசியம் சொல்ல முடியாது. கலர் ஸ்க்ரீன் மொபைல் நம்மை எவ்வளவு வேகத்தில் ஆக்கிரமித்தது? இந்தே வேகத்தை முன்கூட்டியே கணக்கிட முடிந்ததா?

2ஜி = சிறிய ஓட்டை

3ஜி = பெரிய ஓட்டை

வீடியோ மொபைல் சர்வீஸ் = பெரிய பூனை

வாய்ஸ் மொபைல் சர்வீஸ் = சின்ன பூனை

இரண்டு பூனைகளும் நுழைந்து வெளியேற ஒரே ஒரு ஓட்டை போதும். எனவே 2ஜி விரைவில் அதற்கான தேவையை இழந்துவிடும். புரிகிறதா?

ப்யூச்சரில் மவுசில்லாத பிசினஸில் ஒரு கோடியே 75 லட்சத்தை எவனும் கொட்ட மாட்டான் சார்.


பாயிண்ட் நெ.1 : CAG ரிப்போர்ட், பயனீயர் பத்திரிகையின் கட்டுரை, இத்யாதி, இத்யாதியெல்லாம் ராசாவை குற்றவாளி என்று சொல்ல போதுமானதல்ல. அவர் யாரிடமாவது ‘பேரம்’ நடத்தி, பணம் கைமாறியதா என்பதை நிரூபித்தால் மட்டுமே அவரை ஊழல் செய்ததாக குற்றம் சாட்ட முடியும்.

பாயிண்ட் நெ. 2 : இங்கே மக்கள் பேசும் லெவலுக்கு யோக்கியதையை கடைப்பிடிக்க வேண்டுமானால் ஷேர்மார்க்கெட், ரியல் எஸ்டேட் போன்ற பல தொழில்களை இழுத்து மூட வேண்டியதுதான்.

பாயிண்ட் நெ. 3 : இந்த விவகாரத்தில் ‘தில்லு-முல்லு’களுக்கு வாய்ப்பிருக்கிறது. ஆயினும் நடந்ததற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

பாயிண்ட் நெ. 4 : தோழர்கள் இந்த மின்காந்த அலைவரிசை சமாச்சாரம் பற்றி கொஞ்சம் கூடுதலாக படிக்க வேண்டும். ஏற்கனவே நம் நாட்டில் கிட்டத்தட்ட 10 பிளேயர்கள் ஸ்பெக்ட்ரமில் இருக்கிறார்கள். ராசா காலத்தில் விற்கப்பட்ட அலைவரிசை ராணுவத்திடம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த கூடுதல் அலைவரிசை. இதன் மூலம் கூடுதலாக 3 பிளேயர்கள் வர வாய்ப்பிருந்தது. இன்றுவரை யூனிநார் மட்டுமே வந்திருக்கிறார்கள்.

பாயிண்ட் நெ. 5 : 2001ல் கணக்கிடும் பொழுது தற்போதைய தொகை குறைவாக இருந்தாலும் போட்டியாளர்கள் அதிகமானால் விலை குறையுமென்பது அனைவரும் அறிந்த ஒன்றே... 

பாயிண்ட் நெ. 6 : இதில் மேலும் அலைக்கற்றை பயன்பாட்டிற்கு இருந்தாலும் கண்டிப்பாக கொடுக்க வேண்டியதில்லை .நேரடியாக 3ஜி சென்றிருக்கலாம் .

2ஜி, 3ஜி என்பதற்கெல்லாம் ரொம்ப குழம்ப வேண்டாம். அது அடுத்தடுத்த வெர்ஷன் மாதிரிதான். 3ஜி என்றால் அதில் வெறும் வீடியோதான், வாய்ஸ் கால் இருக்காது என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
தற்போது 
BSNL 3G video call சேவை ஒரு நிமிடத்திற்கு 60 பைசா ( ஊழல் நடக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் BSNL ஒரு பொதுத்துறை நிறுவனம். அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ). டாட்டா டோகோமோ 5 பைசா / செகண்ட் = 3 ரூபாய் / நிமிடம். மூன்று ரூபாய் மிக அதிகம் தான்.ஸ்ஸப்பா.... இதுக்கு மேலயும் எளிமையா புரியவைக்க முடியுமான்னு தெரியலை
 -நன்றி- யுவா  


1 comment:

  1. Excellent argument, This is what I m arguing with my friends. Even I mentioned current failure of vodafone, airtel on 2G in revenue wise. They still believing Raja has looted this country.

    ReplyDelete