தொகுப்புகள்

Search This Blog

Monday, November 8, 2010

தேடல்


தொலைத்தவை தேடுவது உலக இயல்பு,
தொலைக்காதவற்றையும் தேடிக்கொண்டு இருப்போர் மத்தியில் இன்று நாம்,
மனிதம் தேய்ந்துபோய் பணம் பண்ணும் எண்ணம் மட்டும் மேலோங்கி நிற்கும்,
இந்த புதுயுகத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்..

நிம்மதியாக இரவில் உறங்கி காலையில் கவலையற்று எழுவது நம் கனவுகளில் மட்டுமே,
அனைத்தும் இருந்தும் இல்லாதது போல் ஒரு வெறுமை,
உயிராக நேசிக்கும் சிலரைக்கூட சில நேரம் சந்தேகத்துடன் பார்க்கிறோம்,
யாரென்றே தெரியாத சிலரை முழுக்க நம்புகிறோம்,
உண்மை, நம்பிக்கை இவற்றையும் தேடுகிறோம்..

நாம் செய்த நல்லவை எல்லாம் மறந்து, செய்யாதவற்றை பற்றி
பேசி,குற்றம் சொல்லும் மாந்தர் நடுவில் திணறுகிறோம்
பேசாத சில வார்த்தைகளுக்காகவும், பேசியவைக்காகவும் வருந்துகிறோம்
என்ன பேசுவது- வார்தைகளை தேடுகிறோம்..

அன்போடு சமைத்த அனைத்திற்கும் தனிருசி உண்டு,
பணம் அத்தனையும் கொட்டிக் கொடுத்தாலும்,
பிரியமாக அமர்ந்து பேசி உணவு பரிமாற,புசிக்க
யாருக்கும் நேரம் இல்லை, மனமும் இல்லை,
எதனை உண்டாலும் calorie கணக்கு பார்க்கும் கூட்டம் ஒரு பக்கம்,
நினைத்தவை உட்கொள்ள ஒருசாராருக்கு யோகம் இல்லை- காரணங்கள் எத்தனையோ,
எதன் தேடல் இது என்று சொல்வது..

தேடல்கள் பலவாயினும் முதலில் நம்மை நாமே தேடி தெரிந்துக் கொள்ளுதல் வேண்டும்,
அதன் பிறகு பணமோ,தேவைகளையோ தேடலாம்,
நேரம் போய் கொண்டே இருக்கிறது,
இந்த பதிவை படித்து 1 நிமிடப் பொழுது கழிந்து விட்டது,
தேடலை தொடர்வோமாக ... நம்மைப் பற்றிய தேடலை.

Deekshanya...

No comments:

Post a Comment