தொகுப்புகள்

Search This Blog

Thursday, August 31, 2017

நீல திமிங்கலம் - Blue whale

நீல திமிங்கலம்
அப்படி இது என்ன  விளையாட்டு ? ஒரு மனிதனின் உளப்பிணி சவாலான விளையாட்டு என்று தோன்றுகிறதா? அங்கு சுற்றி இங்கு சுற்றி இன்று மதுரை மண்ணிலும் தன் கோர கால்களை ஊன்றியிருக்கிறது..
அதைப் பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்வோம். இது 50 சவால்களை உள்ளடக்கிய ஒரு ஆன்லைன் விளையாட்டு, சிறிது சிறிதாகக் பணி (task) வழங்கப்பட்டு ஐம்பதாவது நாளில் தற்கொலை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது..
ஒரு வியக்கத்தக்க கேள்வி என்னவென்றால், தற்கொலையை முடிவாக கொண்ட விளையாட்டை பலரும் ஏன் இவ்வளவு ஆர்வமாக விளையாடுகிறார்கள் என்பதுதான்..
பிரச்சனை என்னவென்றால் விளையாடிற்கு  அப்பாற்பட்டு நம் மனநிலையில் உள்ளது என்பதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.. நீலத் திமிங்கிலம் போன்ற விளையாட்டுகள் பல உள்ளது F57, Wake Me Up போன்ற விளையாட்டுக்களும் உள்ளடக்கம். இன்றைய சமூகத்தில் சமூக வலைதளங்களின்  பங்களிப்பை நம் வாழ்விலிருந்து புறக்கணித்துவிடமுடியாது, அவ்வாறான சமூக வலைத்தளங்களில்  பலவீனமானவர்களை பார்த்து  வலை விரித்து, நாசூக்காக அவர்கள் உள்டப்பிக்கு அணைத்து அழைத்துச் செல்கிறது...

அங்கு உங்களுக்கு சில கேள்விகள் கேட்கப்படுகிறது?

மேற்பார்வையாளர்:- உங்கள் நீல திமிங்கலம் பற்றிய நிலைத்தகவலை நான் முகநூலில் கண்டேன், எதற்காக நீங்கள் அந்த விளையாட்டை விளையாட வேண்டும்?

விளையாடுபவர் :-  அதன் மீது ஓர் விருப்பமும் ஆர்வமாக இருக்கிறேன்..  வாழப் பிடிக்கவில்லை..

மேற்பார்வையாளர்:- என்னால் உங்களை நம்ப முடியவில்லை, உங்கள் உடம்பில் மூன்று கோடுகள் போட்டு, காயங்களை ஏற்படுத்தி  எனக்கு தீர்க்கமான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

விளையாடுபவர் இந்தப் புகைப்படங்களை அனுப்பிவிட்டால் அவருடைய பலவீனத்தைப் பயன்படுத்தி மிக எளிதாக அவரைத் தன் வலையில் சிக்க வைக்கிறார் மேற்பார்வையாளர்.

பிறகு ஒவ்வொரு பணியாக வழங்கப்படுகிறது.. அந்தப் பணியைச் செய்து முடித்ததற்கான ஆதாரங்களை படங்களாகவும் வீடியோவாகவும்  அனுப்ப சொல்லி சேமித்து வைக்கிறார் மேற்பார்வையாளர்.. ஒரு கட்டத்தில் personal நம்பர் முதல் அந்தரங்க புகைப்படங்கள் வரை  விளையாடுபவர்களே அனுப்பக் கூடிய சூழலுக்கும் கொண்டு செல்கின்றனர்.. அதன்பிறகு விளையாட்டைப் பாதியில் நிறுத்த நேர்ந்தால்  அந்த ஆதாரங்களை வைத்து மிரட்டவும் செய்கிறார்கள்..

இதில் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், மற்ற விளையாட்டுகளை போல கூகுள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்தோ, அல்லது ஒரு இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விளையாட கூடிய விளையாட்டு அல்ல..  ஆகவே நம் மத்திய மாநில அரசுகள்  இதை கண்காணிப்பதில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.. சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளையும் அடையாளம் தெரியாத நபர்களின் கணக்குகளையும் கண்காணிப்பதில் சற்று முனைப்புகாட்ட வேண்டும்.. நம் செய்கைக்கு எல்லாம் அரசாங்கத்தையே குறை சொல்வதும் முறையல்ல. இந்த விபரீதமான விளையாட்டுக்கு அடிமையான நபர்களை சார்ந்திருக்கும் பெற்றோர்களும் நண்பர்களும் அவர்களை தீவிரமாகக் கண்காணிப்பது மட்டுமே இதற்கு  ஒரு தீர்வாக அமையும்..

இந்த விளையாட்டைக் கண்டு பிடித்தவர் சொன்ன ஒரு அதிர்ச்சி தகவலுடன் நிறைவு செய்கிறேன்.. இந்த சமூகத்திற்கு எந்த உபயோகமும் இல்லாத  பதர்களை நான் அழிக்கிறேன்...

உங்கள் சொந்த வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு, இந்த சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து இந்த சமூகத்தின் மீதும் அடுத்த  தலைமுறையின் மீதும் ஒரு உண்மையான அக்கறை இருக்குமானால் இது போன்ற விபரீத விளையாட்டுகளில் ஈடுபாடும் என்னம் உங்களுக்குப் தோன்றாது என்பதே என் தீர்க்கமான முடிவு.
இப்படிக்கு
உங்கள்
ஆ.பாபு

No comments:

Post a Comment